29 ஏப்., 2013

அப்பா!...

KR.பன்னீர்செல்வம்
கே.ஆர்.பி என்று எங்கள் ஊர் பெரிசுகளால் அழைக்கப்படுகிற கே.ஆர்.பன்னீர் செல்வத்தேவர் அவர்கள் நேற்று காலை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மூளையில் ஒரு முக்கிய நரம்பின் பாதிப்பால் தன் கடைசி மூச்சை நெருங்குகிறார் என தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் இன்று மாலை அறிவித்து விட்டார்கள்.

கிட்டதட்ட 90 வயதுக்குமேல் இருக்கும் அவர் தன் சிறிய வயதிலேயே  தகப்பனாரை இழந்து மிகுந்த போராட்டத்தில் தன் இளைய வாழ்வை கடந்தவர். மிகுந்த செல்வ செழிப்பு இருந்தாலும், அக்கா, தம்பி, தாயாருடன் ”கடுமையான விவசாயியாக திகழ்ந்தார்” என பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஊரின் மிகப்பெரிய செல்வாக்குடைய எனது அம்மாவின் அப்பாவான சாமியார் என்கிற ஜெகதீசத்தேவர் அவர்கள் தானே முன்வந்து தனது இரண்டாவது மகளான எனது அம்மா சந்தானலட்சுமியை திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்த சாமியார் என்கிற ஜெகதீசத்தேவர் பற்றி வாட்டாகுடி இரணியன் சரித்திரத்திலும், நமது கலைஞரின் “நெஞ்சுக்கு நீதியிலும்” சில செய்திகள் இருக்கிறது.

இளைமையிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இனைத்துக்கொண்ட எனது தந்தையார் இன்றுவரை அதே இயக்கத்தில் இருக்கிறார். திருமதி. இந்திராகாந்தி அவர்களின் போது மட்டுமே அவர் அழுது நான் பார்த்திருக்கிறேன். அவர் அம்மா இறந்த அன்று கூட அவர் அழவில்லை. என் வீட்டில் ஒரு பக்கம் ராஜீவ்காந்தி படமும் இன்னொரு பக்கம் பிரபாகரன் படமும் இருக்கும். என் வீட்டிற்கு அப்பகுதி காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி வருவார்கள். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு வீட்டிற்கு வரும் காங்கிரஸ்காரர்கள் பிரபாகரன் படத்தை அகற்ற சொன்னபோது அது சின்னப்பையனுக்கு பிடித்த விசயம் என மறுத்துவிட்டார்.

ஒருமுறை எனக்கு பணம் கொடுக்கனுன்னு ஒருத்தனை ஆள் வைச்சு தூக்கிட்டு வந்திட்டோம். அப்ப அவன் எனது தந்தையாருக்கு போன் செய்ய அவரோ என்னை “காசு தரலேன்னா தூக்கிட்டு வருவியா?. ”இது தப்பான விசயம், மொதல்ல அவன விடுன்னு!” சொன்னார்.

அதன்பிறகு ஒருநாள் ”தம்பி கடன் கொடுப்பதாக இருந்தால், திருப்பி தரலேன்னா கூட பரவாயில்லை அப்படின்னா மட்டும் கொடு”  அதேபோல “கடன் வாங்குவதாக இருந்தால், திருப்பிக்கொடுக்கும்போது வாங்கும்போது இருக்கும் அதே மனநிலையில் இருக்க வேண்டும் “ என மகாபாரதக்கதையை உதாரணம் காட்டி அறிவுரை சொன்னார்.

2002 ஆம் ஆண்டு எனது தயாருக்கும், எனது மனைவிக்குமான கருத்து வேறுபாட்டில் நான் வீட்டைவிட்டு வெளியேறியபோது அவர் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கவில்லை. மேலும் நான் சம்பாதித்த பணத்தை தன் மற்ற பிள்ளைகளுக்கு கொடுத்தார். நிலத்தின் மீதான வருமானம் உள்ளிட்ட எதுவும், எப்போதும் எனக்கு தரவில்லை. அந்த வருத்தம் எப்போதும் அவர்மீது எனக்கிருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் நண்பர் ஒருவர் என்னிடம் அப்பா அது பற்றி பேசியதாக சொன்னார். நான் எப்படியும் சம்பாதித்து பெரிய ஆள் ஆவேன் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும். அதனால்தான் மற்ற பிள்ளைகள் மேல் காட்டிய அக்கறைய என்னிடம் காட்டவில்லை என்று சொன்னதாக சொன்னார். 

எனது மூத்த மகன் ஒரு வயதாக இருக்கும்போது ஒருமுறை ஊருக்கு அழைத்து சென்று காட்டினேன். இரண்டாவது மகன் பிறந்து நாலு வயது முடிந்துவிட்டது. இன்றுவரைக்கும் அவனை அவர் பார்க்காததுதான் அவரின் மிகப்பெரிய வருத்தம். கண் பார்வை முழுதும் போன நிலையில் கடந்த மாதம் என் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு ஊருக்கு போனபோது பத்தாண்டுகள் கழித்து வீட்டிற்கு போனேன். எனக்கு மட்டும் அவர் எதுவுமே செய்யவில்லை என வருத்தப்பட்டார். ”தான் கூடிய விரைவில் இறந்துவிடுவேன். அம்மாவை பாத்துக்க” என்றார். ”மே மாதம் லீவில் பசங்களை அழைத்து வந்து காட்டுகிறேன்” என்றேன்.  

இன்றைக்கு பிள்ளைகளை ஊருக்கு அழைத்துப்போகிறேன். ஊருக்குப்போகிறவரை அவர் உயிருடன் இருப்பாரா? எனத்தெரியாது. ஆனாலும் கிரமத்தின் அத்தனை பேரின் மதிப்புக்குரியவராக, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவராக, இன்றுவரை கிராமத்தின் அனைத்துக்கட்சி விவசாய சங்கத்தலைவராக, நல்ல பஞ்சாயத்தாராக அவர் தக்கவைத்திருக்கும் நற்பெயரை தனது பேரப்பிள்ளைகளுக்கு அவர் விட்டுசெல்கிறார்.

19 கருத்துகள்:

ரமேஷ் வீரா சொன்னது…

கவலை வேண்டாம் அண்ணா ... அருணை பார்க்கும் வரை பெரியப்பாவுக்கு ஒன்றும் ஆகாது .....

கவியாழி சொன்னது…

உங்களுக்கு உங்க அப்பாவின் ஆசி நேரில் கிடைக்கும் கவலை வேண்டாம்

வவ்வால் சொன்னது…

வருத்தமான நிகழ்வு, :-(

ILA (a) இளா சொன்னது…

என் பிராத்தனைகள்!

உணவு உலகம் சொன்னது…

நல்லதே நடக்கும். நம்பிக்கையுடன் செல்லுங்கள் நண்பரே.நானும் பிரார்த்திக்கிறேன்.

நாய் நக்ஸ் சொன்னது…

He will get well soon.....

Philosophy Prabhakaran சொன்னது…

:(

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லதே நடக்கும். நம்பிக்கையுடன் செல்லுங்கள்...

துளசி கோபால் சொன்னது…

மனம் வருத்தமாக இருக்கிறது:(

எல்லாம் இனி 'அவன்' கையில்!

பால கணேஷ் சொன்னது…

அடடா.. இந்த மாதிரி டென்ஷனோட பயணம் போறப்பவா நான் உங்களுக்கு போன் பண்ணி தொல்லை பண்ணேன்? ஸாரி தம்பி! நம்பிக்கைதான் வாழ்க்கை. அப்பா விரைவில் குணமடைவார். நம்பிக்கையுடன் சென்று பார்த்து வாருங்கள்!

rajan சொன்னது…

மனம் வருத்தமாக இருக்கிறது !

Unknown சொன்னது…

அருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.

- தமிழன் பொது மன்றம்.

CS. Mohan Kumar சொன்னது…

Take care. Will speak later.

அஞ்சா சிங்கம் சொன்னது…

:-(

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தந்தை குறித்த நினைவுகள் நெகிழ வைத்தது! நல்லதே நடக்க பிரார்த்திக்கிறேன்! நன்றி!

Unknown சொன்னது…

நல்லதே நடக்கும் .

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

:(

NAPOLEON சொன்னது…

கவலைபடவேண்டாம்.தைரியமாக இருங்கள்.

Unknown சொன்னது…

தங்கள் தந்தை நலம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவனை பிராத்திக்கின்றேன்