12 ஜூன், 2013

காசு..பணம்..துட்டு..money..MONEY...

Photo : KRP Senthil
புன்னகையை தவறவிட்ட
ஒருவனின் தாயை 
அர்ச்சனை செய்த
வார்த்தைகளை பகிர்பவனிடம் 
இரண்டு மாத அறைவாடகை 
தர வேண்டும் 

பொதுக் கழிப்பிடத்தில் 
அவசரத்திற்கு நுழைந்தவனாய்
அனுதினமும்
ஓடி ஒளிகிறேன்

குறை தீர்க்கும் சாமி
மீடியேட்டர் ஐயர்
வாசல் பிச்சைக்காரன்
என் 
செருப்பை களவாண்டவன்
இன்றைய நாள்
இனிய நாள் அல்ல

மன வீட்டில் உலவும் 
புலி  ஒன்று 
பசிக்கு புற்களை மேய்கிறது
அம்மா உணவகமே
அமிர்தம்

கனவுப்பறவையொன்று 

எச்சமிட்ட விதை 
வளர்ந்து கனியாகி  
இன்றைய என் போதைக்கு 
ஊறுகாய் ஆனது..

கூடடையும் 
பறவைகள் அறிவதில்லை 
இரைக்கு காத்திருக்கும் 
பாம்புகளை....

4 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மன வீட்டில் உலவும்
புலி ஒன்று
பசிக்கு புற்களை மேய்கிறது
அம்மா உணவகமே
அமிர்தம்//

ஹா ஹா ஹா ஹா சரி சரி....

rajasundararajan சொன்னது…

அம்மா உணவகம் என்பது தாய்வீடுதானே? 'அம்மா' உணவகம் என்று இன்றைக்கு இருக்கும் நாளைக்கு இல்லை எனும் தற்காலிக விசயங்கள், கவிதைக்குள் வந்தால், காலாகாலத்துக்கும் அர்த்தம் தரும் வாய்ப்பு உள்ளதோ?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கவிதை! நன்றி!

பட்டிகாட்டான் Jey சொன்னது…

Arumai. Elimai.

Tha.ma..2


a/c : 0268485834
bank : acbci
branch : vadpalni.

diski : kaasi...thuttu...panam... money...money...so no oosi vote...:-))