13 ஜன., 2014

ஜில் மோர் - எமது புதிய இணைய இதழ்...                                                                                    

அன்பின் நட்புகள் யாவருக்கும் வணக்கம்,

14.01.2014 - தை முதல் நாளில், தமிழர் திருநாளில் நாங்கள் ஒரு புதிய இணைய இதழை துவங்கயிருக்கிறோம்.

www.jillmore.com    www.tamil.jillmore.com


வழக்கமாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்தான் நான் எதையும் செய்வேன்.  தற்கால கடவுள்கள் மீதும் அவர்களின் மீடியேட்டர்கள் மீதும் தன் வாழ்வின் பிரச்சனைகள் தீர சுலபமான வழி தேடும் அவர்தம் பக்த ’கேடி’கள் மீதும் எப்போதும் எனக்கு அபிப்ராயங்கள் இருந்ததில்லை. எனக்கு மனிதர்கள் மீதான நம்பிக்கைகள்தான் வாழ்வின் தரிசனங்களை உணர்த்தின.

இணையம் ஒரு கட்டற்ற சுதந்திரத்தையும், முகம் தேவைப்படாத நட்பு வட்டத்தையும் எனக்கு பெரிதாக தந்திருக்கிறது.

இந்த இணைய தளங்களும் எம்முடையவையே,

www.velai.net   www.jobsforall.in   www.karpom.com   www.specsofall.com

இன்னும் நிறைய தளங்களுக்கான திட்டமிடல்கள் இருக்கின்றன. பொருளாதார சிக்கல்கள் எம்மை கொஞ்சம் நகரவிடாமல் அழுத்தினாலும்  தம்பிகள் சிவாவும், பிரபுவும் என்மேலும், தங்கள் மேலும் வைத்திருக்கும் அசைக்க முடியாத தன்னம்பிக்கை எம்மை தொடர்ந்து நகர்த்திக்கொண்டிருக்கிறது.

என் இனிய நண்பர் கேபிள் சங்கர் அவர்களுக்கு இந்தக் கணத்தில் என் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை மட்டுமல்லாது தன் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரும் நன்றாக வரவேண்டும் என எப்போதும் நினைப்பவர். முன் கூட்டியே அனைத்து விசயங்களையும் கணிக்கும் அபூர்வமான திறமையாளர். இந்தத் தளம் கைகூடுவதற்கு அவர்தான் காரனம். அவருக்கு பிரபு, சிவா சார்பாகவும் இன்னொருமுறை எனது நன்றிகள்.

தம்பிகள் சௌந்தர், ஜெயக்குமார், சுகுமார் சுவாமிநாதன், ரமேஷ், தோழி கவுசல்யா, நண்பர் உதயகுமார் ஸ்ரீ, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் கிங் விஸ்வா ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எமது தளத்தில் இருக்கும் நிறை, குறைகளை எம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

17 கருத்துகள்:

சிங்கை நாராயணன் சொன்னது…

வாழ்க வளமுடன் .....

Cable சங்கர் சொன்னது…

வாழ்த்துகள்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அருமை... தொடருங்கள்..

செங்கோவி சொன்னது…

நீங்க ஜெயிப்பீங்க தலைவரே...வாழ்த்துகள்.

Robert சொன்னது…

மேலும் வளர வாழ்த்துக்கள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

Rangs சொன்னது…

வெற்றிபெற வாழ்த்துகள் நண்பா!

shunmuga சொன்னது…

இனிய நல்வாழ்த்துக்கள் !

வவ்வால் சொன்னது…

வாழ்த்துக்கள்!

பொங்கல் & தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

இதழ் வெற்றியுடன் வலம் வர வாழ்த்து!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஜெயம் என்றும் உங்கள் கையில் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கூடவே இனிய பொங்கல் வாழ்த்துகளும்...

Admin சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

ஜில் மோர் பிரம்மாண்டமான வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள் :)

காமராஜ் சொன்னது…

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

aavee சொன்னது…

அண்ணே, உங்க "ஜில்" மோர் எல்லோருடைய தாகத்தையும் தணிக்க வாழ்த்துகிறேன்..