3 ஜன., 2014

வார்த்தைகள்...நான் உனக்கான
சொற்களை
சேகரித்துக் கொண்டிருந்தேன்
அந்தியில்
கூடடையும் பறவைகளின்
உரையாடல்கள் புரியுமா உனக்கு?
அத்தனை
கூப்பாடுகளையும் கடந்து
தன் இருப்பை
தனித்த மொழியில் அவைகளால்
புரிந்து கொள்கிற
புரிய வைக்கிற வித்தைகளை
என் வார்த்தைகள் தருமா உனக்கு?
எனினும்
ப்ரத்யோகமான அன்பிற்கு
மவுனமே ப்ரதானமானது
நாம் சந்தித்தபோது
மவுனமே
நம்மை கடவுளாக்கியது..

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மௌனம் சிறந்த மொழி...

வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

கவிதை சிறப்பாக உள்ளது.

வாழழ்த்துக்கள்.....


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

கவிதை சிறப்பாக உள்ளது.

வாழழ்த்துக்கள்.....


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

aavee சொன்னது…

மௌனத்தின் மொழிகள் எப்போதும் இனிமையானது..

'பரிவை' சே.குமார் சொன்னது…

மௌனமே சிறந்த மொழி...
அருமை அண்ணா...