15 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் - 22

நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நிர்பந்தகளோடு வாழ வேண்டியிருக்கிறது. நம்முடைய லட்சியங்களை சில சமயங்களில் முகவரி படத்தில் வரும் அஜித் மாதிரி ஒதுக்கி வைத்துவிட்டு வாழ வேண்டி வந்துவிடுகிறது. எல்லா சமயங்களிலும் நம் லட்சியத்தை தூக்கி பிடிக்க முடிவதில்லை. இருபத்தியொரு வயதில் நாம் காணும் கனவுகள் மெல்ல மெல்ல காலம் கடந்தபின் வெறும் கனவாகவே ஆகிவிடுகிறது.

எனக்கு மிகவும் பிடித்தமான அண்ணன் பாலா அவர்களின் வாழ்க்கை இப்படித்தான் திசை மாறிபோனது. சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என சென்னை வந்த அவர் அதன் பல்வேறு சிக்கல்களை கண்டபின் இது நமக்கு தற்சமயம் ஒத்துவராது என மீண்டும் ஊருக்கு வந்துவிட்டார், சிலருக்கு அதிர்ஷ்டம் பிறக்கும்போதே வாய்க்கும் அப்படி ஒரு சிலரில் அண்ணனும் ஒருவர், எனக்கு தெரிந்தவரை மிகவும் பாசமான அம்மா, அப்பா அவருக்கு கிடைத்தனர், தம்பி சாமிதுரை சற்று பிடிவாதமானவர் ஆனால் அவரும் மிகுந்த பாசக்காரர், இப்படி ஒரு அற்புதமான குடும்பத்தில் பிறந்துவிட்டு தன் லட்சியத்தை குடும்பத்திற்காக அவர் விட்டு கொடுத்ததால் எனக்கு இப்போதும் அவர் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.

இடையில் சிங்கபூர் வந்தார், அங்கு தன் நண்பரின் சிபாரிசில் வந்ததால் தன் நண்பரின் பெயர் கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காகவே பிடிக்காமலே அங்கு வேலை பார்த்தார். உலக அறிவு அதிகம் அறிந்தவர் ஒரு சின்ன கிராமத்திற்குள் சென்று முடங்கிவிட்டரே என்ற வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு, மேலும் அவரை சென்னையிலேயே என்னுடன் தங்கிவிடசொன்னேன் ஆனால் ஊருக்கு சென்றுவிட்டார், அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்ற வருத்தம் எனக்கு உண்டு.

அவர் அடிக்கடி சொல்வார் தன்னை யாராலும் ஜெயிக்கமுடியாது என்று, ஏன் அண்ணா என்று கேட்டால் தான் எப்போதும் தோற்றுபோக தயாராயிருக்கிறேன் என்பார். ஆனால் அவரை நிறைய நபர்கள் எதிரியாக நினைப்பது உண்டு, ஆனால் அவர் யாரையும் எதிரியாக நினைத்து கூட பார்க்க மாட்டார், அவருக்கு கோபம் வந்து நான் பார்த்தது இல்லை.

அவருடைய தம்பி குமார் என்னுடன் சென்னையில் இருக்கிறார், தன் நேர்மைக்காகவே நிறைய விசயங்களை இழந்தவர். தன் குடும்பத்தின் பெயர்கெட்டுவிடக்கூடாதே என இப்போதும் தன் நேர்மையை காப்பாற்றுபவர், ஆனால் இவர் மீதும் எனக்கு வருத்தம் உண்டு சமூகத்தின் கட்டமைப்பை நன்றாக உணர்ந்தபின்னும் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்.

அண்ணன் பாலாவுக்காக மற்றும் நண்பன் வர்கோத்தமனுக்காக நிச்சயம் நான் படம் தயாரிக்கலாம் என்றிருக்கிறேன், அனேகமாக அடுத்த வருட நடுவில் அதற்க்கான அறிவிப்பு வரலாம், எனக்கும் படம் இயக்குவதில் ஆர்வம் உண்டு என்றாலும் முதலில் நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுத்தபின் அடுத்து நான் இயக்குவேன், அது நிச்சயம் நல்ல தரமான கலை படைப்பாக இருக்கும்.

அதில் நண்பர் சிங்கப்பூர் துரைராசுக்கும் நல்ல வேடம் கொடுக்கவேண்டும், அவரும் கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக திரையுலகில் ஒரு நல்ல கேரக்டருக்காக முயற்சி செய்கிறார், ஆனால் இப்போதுதான் "நான் அவனில்லை" இரண்டாம் பாகத்தில் ஒரு சிறிய ரோல் கிடைத்திருக்கிறது, ஏற்கனவே "தோட்டா" வில் நல்ல ரோல் செய்திருந்தார் ஆனால் அது நிறைய பேருக்கு தெரியவில்லை

எனவே நானும் நண்பர் சிங்கப்பூர் ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து படம் தயாரிக்கலாம் என்றிருக்கிறோம். நல்ல தரமான படங்களை நிச்சயம் தருவோம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

2 கருத்துகள்:

தமிழ். சரவணன் சொன்னது…

//அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்ற வருத்தம் எனக்கு உண்டு.//

ஆம் நூறு சதவிதம் உண்மை...

தமிழ். சரவணன் சொன்னது…

//இவர் மீதும் எனக்கு வருத்தம் உண்டு சமூகத்தின் கட்டமைப்பை நன்றாக உணர்ந்தபின்னும் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்.//


ஆம் உண்மைதான் ஆட்டோவிற்கு ஆன செலவைக் கூட மிகச்சரியாக கணக்கு வைத்துகொடுத்துவிடுவார்... இவர்போல் மனிதர்கள் இருப்பதும் கிடைப்பது அரிது... ஆனால் இவர் நேர்மையால் சம்பாதித்த விசயங்கள் கோடிஸ்வரன்களை விட அதிகம் (உங்களைப்போல)