22 ஜூலை, 2010

தற்கொலை செய்துகொண்டவனின் கடிதம்..

ஒற்றை வரியில் 
எண்ணற்ற கேள்விகள் கொண்ட
கடிதம் ஒன்றை படிக்க 
நேர்ந்தது..

பிம்பங்களின் வழியே கண்ட 
கற்பனைகளின் எல்லைக் கோடுகளையும் 
கடந்து சென்றது 
அது.

உண்மைகள் நிறைந்தது என்று 
பொய் சொன்னவன் கொடுத்த 
நம்பிக்கைகளை போல் அல்ல அது 
உண்மை..

அனுபவங்களை தொகுத்து 
புத்தகங்களாய் போட்டவன் 
விற்க முடியாத அனுபவங்களை 
எடைக்கு போடுகிற சோகம் இல்லை 
அது.

காதலை புறக்கணித்தவளை 
டாஸ்மாக்கில் 
கோப்பைகளை பகிர்கிற மாதிரி 
கேலிகளால் பிதற்றுகிரவனின் 
வார்த்தைகளைப் போலவும் இல்லை 
அது.

சுய வாக்குமூலம் அது 
"என் சாவிற்கு யாரும் காரணமல்ல"  

காரணமற்ற சாவை 
எழுத வேண்டிய அவசியத்தை 
எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..

பதிலை  
முடிவாய் தந்தவனை 
தேடிகொண்டிருக்கிறேன் 
அனைவரிடத்திலும் 
கேள்விகளாய்.

46 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

//பதிலை
முடிவாய் தந்தவனை
தேடிகொண்டிருக்கிறேன்
அனைவரிடத்திலும்
கேள்விகளாய்//

நல்லாயிருக்கு நண்பா

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்லாயிருக்கு Senthil

தமிழ்குறிஞ்சி சொன்னது…

செந்தில்,
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது படைப்பு எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
ஆசிரியர்,
தமிழ்குறிஞ்சி

தோழி சொன்னது…

"என் சாவிற்கு யாரும் காரணமல்ல"
காரணமற்ற சாவை எழுத வேண்டிய அவசியத்தை எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..

நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

உண்மைகள் நிறைந்தது என்று பொய் சொன்னவன் கொடுத்த நம்பிக்கைகள்//

அனுபவங்களை தொகுத்து புத்தகங்களாய் போட்டவன் விற்க முடியாத அனுபவங்களை எடைக்கு போடுகிற சோகம்//

நல்ல கவிதை.

சௌந்தர் சொன்னது…

ரொம்ப நல்ல இருக்கு அண்ணா

Ranjithkumar சொன்னது…

"டக் டக் டக்....."

என்ன னு பாக்குறீங்களா நான் கை தட்டிய ஒலி இது....

ஜில்தண்ணி சொன்னது…

அருமையான கவிதை :)

vinthaimanithan சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சி மனசுக்குள் புகுந்து உலுக்கிய ஒரு கவிதைண்ணா! ரொம்ப நல்லாருக்கு.... அப்புறம் வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணாலாமே?

அருண் பிரசாத் சொன்னது…

அருமையான கவிதைங்க

Riyas சொன்னது…

நல்ல சிந்தனை அருமை..

VELU.G சொன்னது…

//சுய வாக்குமூலம் அது
"என் சாவிற்கு யாரும் காரணமல்ல"
//

அப்படியென்றால் யாரோ காரணமாகத்தான் இருக்கிறார்கள். சொல்ல விருப்பமில்லை அவ்வளவுதான்

உண்மைகள் நிறைந்தது என்று பொய் சொன்னவன் கொடுத்த நம்பிக்கைகளை போலத்தான் இருக்கிறது


கவிதை அருமை செந்தில்
வார்த்தைகளில் விளையாடியிருக்கீறீர்கள்

vasu balaji சொன்னது…

ஆமாங்க செந்தில். பதில் எழுப்பும் கேள்விகள் நிறைய.நல்லாருக்கு

முனியாண்டி பெ. சொன்னது…

//
காரணமற்ற சாவை
எழுத வேண்டிய அவசியத்தை
எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..
//


அவன் சாவுக்கு காரணம் இல்லாமல் இல்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது அவன் கடிதம் என்பதை இவ்வாறு கூட சொல்லமுடியுமா?

எப்போது நீங்கள் உங்கள் எழுத்து எப்போதும் ஆச்சிர்யம்

Chitra சொன்னது…

காரணமற்ற சாவை
எழுத வேண்டிய அவசியத்தை
எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..


..... ஆழமான வரிகள்..... அதிகம் யோசிக்க வைக்கும் வரிகள்..... மரணத்தின் வழியை காணச் செய்த வலியின் காரணங்கள், கேள்விகளாய்...... ம்ம்ம்ம்....!

ஜீவன்பென்னி சொன்னது…

கடைசிக்கேள்விக்கு பதில யாரால சொல்லமுடியும். இங்க கை எல்லாரையும் நோக்கில்ல இருக்கு.

dheva சொன்னது…

சாவுக்கு யாரும் காரணமல்ல...
பிறப்புக்கும் யாரும் காரணமல்ல!

Jackiesekar சொன்னது…

போட்டோ சூப்பரு...

ரோஸ்விக் சொன்னது…

என் சாவிற்கு யாரும் காரணமல்ல"
காரணமற்ற சாவை எழுத வேண்டிய அவசியத்தை எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..

அருமையான வினா...

அடிச்சு ஆடுங்க செந்தில்... :-)

செல்வா சொன்னது…

//அனுபவங்களை தொகுத்து
புத்தகங்களாய் போட்டவன்
விற்க முடியாத அனுபவங்களை
எடைக்கு போடுகிற சோகம் இல்லை
அது///
அருமை ..!!
கவிதை நல்லா இருக்கு அண்ணா ..!!

ஜோதிஜி சொன்னது…

இனிமேல் எதிர்காலத்தில் புகைப்படம் கோர்க்கும் போது உங்கள் நினைவு தான் வரும் போலிருக்கு?

நேசமித்ரன் சொன்னது…

நன்றாக இருக்கிறது செந்தில் சார்
இன்னும் கொஞ்சம் எடிட் செய்தால் இன்னும் நன்றாக வந்திருக்கலாம் :)

சமீபத்திய கவிதைக்ளில் உங்களின் ஒரு படி மேலான வரிகள் கொண்டதாய் இருக்கிறது இது

ஹேமா சொன்னது…

இப்போ கொஞ்சம் முதல்தான் இந்தக் கவிதையை குறிஞ்சியில் படித்தேன் செந்தில்.பின் ஒரு சிறுகதையும் வாசித்தேன்.தற்கொலைக்குக் காரணம் அன்பு வைத்தவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் செய்கிற துரோகம்தான் !கதையில் காட்டிக் கொடுக்கவும் முடியாமல்,தொடர்ந்தும் அவர்களோடு வாழப்பிடிக்காமல்தான் இப்படியான தற்கொலைகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

கவிதை அருமை செந்தில்..

க ரா சொன்னது…

நல்லாயிருக்குங்க. பதில் கிடைக்காத கேள்விகள் (:

Kousalya Raj சொன்னது…

மிக உருக்கம்....

ஹேமா சொன்னது…

செந்தில் இப்போ....இப்போ கேட்டுக்கொண்டிருக்கிறேன் GTBC இலண்டன் தமிழ் வானொலியில் இந்த உங்கள் கவிதையை.சொல்லமுடியாத சந்தோஷமாயிருக்கிறது.ஆனால் உங்கள் பெயர் சொல்லவில்லை !தலைப்பையும் "தற்கொலை செய்துகொண்டவளின் கடிதம்"எனச் சொல்கிறார்கள் !

அன்புடன் நான் சொன்னது…

காரணமற்ற சாவை
எழுத வேண்டிய அவசியத்தை
எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..//

இது மிக சரியான கேள்வி....
பதில்?

கவிதை கலகம் செய்யுதுங்க... பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

தமிழ் நாட்டுல வாழரத விட சாவுறதே மேல்னு நெனைச்சிருக்கலாம்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல சிந்தனை நல்ல கவிதை... வாழ்த்துக்கள்..

jothi சொன்னது…

"என் சாவிற்கு யாரும் காரணமல்ல"


நல்ல கவிதை பல அர்த்தங்கள் மறைந்து வினா எழுப்புகின்றது ................

செ.சரவணக்குமார் சொன்னது…

//காரணமற்ற சாவை
எழுத வேண்டிய அவசியத்தை
எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..//

அருமை செந்தில்.

இதுவரை எத்தனை கடிதங்கள் இப்படி எழுதப்பட்டிருக்கும்..

அர்த்தமில்லாத தற்கொலைகள், காரணமற்ற சாவுகள்..

நேசமித்ரன் சொன்னதுபோல உங்கள் சமீபத்திய கவிதைகளில் இது கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

இன்னும் நல்ல கவிதைகளை படைக்க உங்களால் முடியும் என்று தோன்றுகிறது. அருமையான மொழி கைவரப் பெற்றிருக்கிறீர்கள்.

இதைவிடவும் மேலான ஆழமான கவிதைகளை எதிர்பார்க்கிறேன். (உரிமையோடு இப்படி சொல்லலாமல்லவா நண்பரே)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//காரணமற்ற சாவை
எழுத வேண்டிய அவசியத்தை
எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..///

மனதைத் தொடும் வரிகள்...
பகிர்வுக்கு நன்றிங்க.!

நாடோடி சொன்னது…

க‌விதை ந‌ல்லா வ‌ந்திருக்கு செந்தில் அண்ணா..

சாமக்கோடங்கி சொன்னது…

எப்படியும் கண்டு புடிச்சிருவாய்ங்கன்னு தெரியும்..சொல்லாமப் போனா காட்டிக் குடுக்காத நல்ல மனசுன்னு பேர் எடுக்கலாமுன்னு இருக்குமோ..

என்ன எழவோ.. ஆனா செத்ததுக்கப்புறம் கண்டிப்பா சந்தோஷமா இருப்பான்...

தமிழ் உதயம் சொன்னது…

காரணமற்ற தன்மையே பல செயல்களுக்கு காரணமாக உள்ளது.

Karthick Chidambaram சொன்னது…

மீண்டும் உங்கள் அறச்சீற்றம்.

Unknown சொன்னது…

கொன்னுட்டிங்க.....

வினோ சொன்னது…

KPR அண்ணே கவிதை அருமை..
உங்க பதிலுக்கு கேள்வி கிடைத்ததா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல சிந்தனை...
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

தலைவரே, எதை எதையோ கவிதையா எழுதுரீஙக, என்னைப் பத்தி ஒரு கவிதை எழுதக்கூடாதா?
இப்படிக்கு,
கூகுள்

காமராஜ் சொன்னது…

அருமை செந்தில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nalla kavithai annaa

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//அனுபவங்களை தொகுத்து
புத்தகங்களாய் போட்டவன்
விற்க முடியாத அனுபவங்களை
எடைக்கு போடுகிற சோகம் இல்லை
அது.//

யப்பே...

செம்ம...

சத்தியமா நீங்க நிறைய அனுபவப்பாடங்கள் கற்றிருக்கிறீர்கள்...

Unknown சொன்னது…

http://tamil2friends.com/tamil-kavithaigal/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

ரமேஷ் வீரா சொன்னது…

காரணமற்ற சாவை
எழுத வேண்டிய அவசியத்தை
எது அவனுக்கு தந்திருக்கக் கூடும்..


பதிலை
முடிவாய் தந்தவனை
தேடிகொண்டிருக்கிறேன்
அனைவரிடத்திலும்
கேள்விகளாய்.

கவிதையின் முடிவு விடை தெரியா பல கேள்விகளின் ஆரம்பம் ...???????????????????????????????????..... அருமையான கவிதை