4 பிப்., 2012

கொஞ்சம் காற்று வரட்டும்...


ஆதியில் 
இருந்த கடவுளுக்கு 
மதம் ஒரு பொருட்டேயில்லை
மொழிகள் அற்ற தேசத்தில் 
மனிதர்கள் காதலிக்கத் துவங்கினர்
விலங்குகள்
காட்டுக்கு இடம் மாறின
நதிகளின் பாதையில் 
கடவுளை நகர்த்திய மனிதன்
சில புதிய மதங்களை அறிவித்தான் 
பல மொழிகளில் 
ஒரே மதம்
பலவாகவும்..

.........................................
வால்மீகியிடம் இருந்து 
கம்பனுக்கு மொழி பெயர்கையில்
கடவுளானான் ராமன்
அரக்கனானான் ராவனன்
ராமனோ
ராவனனோ
சீதை எப்போதும் அழகிதான்
கம்பனுக்கும் 
வால்மீகிக்கும் 
எல்லா காதலனுக்கும் 
பொதுவாக
படைக்கப்பட்டவள் சீதை
பத்தினி என்பதாலும் ..
...............................................................
இரவு
வெகு நேரம் பெய்தது 
பெருமழை
விடியும் நேரம்
சுடுகாட்டில் 
சொட்டிக் கொண்டிருந்தது
வாகை மரத்திலிருந்து
தற்கொலைக்கு சாட்சியாய்
மீத மழை..
....................................................................
தவிர்க்க நினைக்கும்போதெல்லாம்
நீ தவறாது வருகிறாய்
மன்னிக்க முடியாத குற்றம்
எதுவுமில்லை என்றாலும்
ஏனோ உன்னை மட்டும் 
பிடிக்கவில்லை 
எப்போதும்..
..................................................................
சொற்கள் 
தன் கவனத்தை 
தவறவிடும் போதெல்லாம் 
நேர்ந்து விடுகிறது
ஒரு துக்க சம்பவம்..
...............................................................
எங்கெங்கோ சென்று
இறுதியில் 
இங்கே வந்தாய்
ஏற்கவும் 
மறுக்கவும் 
மனசில்லாத தினத்தில்
வந்த வ்ழியே 
திரும்பிக் கொண்டிருக்கிறாய்
வீட்டுக்குள் 
விசும்பல் சத்தம்..
.................................................
பழைய ஓட்டு வீட்டில்
பூனைகள் தூங்குகின்றன
பாழய்த்தான் போய்விட்டது
நம் காதலும்..
..........................................................
நெருப்பை புணர்ந்த சீதை
வண்ணானின் சந்தேகத்தை
உறுதிப்படுத்தினாள்..

8 கருத்துகள்:

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

கதம்பமாக உள்ளது.

//வண்ணானின் சதேகத்தை//

இது சரியா என்று பாருங்கள்.

Unknown சொன்னது…

//சதேகத்தை//

மாற்றிவிட்டேன்..

மிக்க நன்றி...

ஹேமா சொன்னது…

முதலாவது இரண்டாவது மூன்றாவதென எல்லாம் எல்லாமே நல்ல சிந்தனைகள் !

Thava சொன்னது…

நல்ல படைப்பு.நன்றி,

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் ! நன்றி !

ரமேஷ் வீரா சொன்னது…

சொற்கள்
தன் கவனத்தை
தவறவிடும் போதெல்லாம்
நேர்ந்து விடுகிறது
ஒரு துக்க சம்பவம்..





அருமையான வரிகள் அண்ணா ..............

பெயரில்லா சொன்னது…

//கொஞ்சம் காற்று வரட்டும்...//

ப்ளாக்கை நித்திக்கு வாடகைக்கு விட்ருக்கீங்களோ?