4 மார்., 2012

சின்னாத்தா...


தொரட்டிய எடுத்துட்டு காலம்பர 
ஆடுகளயும் பத்திட்டு போவும்
பெரியசாமித்தேவர் 
பொழுசாயத்தான் வருவாரு..

கெழவனும் சொத்துபத்த பிரிச்சுட்டு
வாக்கப்பட்டவ போனபின்னே 
மருமவகிட்ட கையேந்தாம 
கொல்லையில குடிசபோட்டு ஆடுகளோட 
கெடக்காரு..

தேவருக்கு தொடுப்புன்னு ஊரு சனம் பேசும் 
செல்லாயி சாதி சனம் அத்தவ 
ஊரு விட்டு ஓடி வந்து அடைக்கலமானவ,
பாம்பு புடுங்கி புருசன்காரன் செத்துப்போவ
தேவர் தரும் வெத்துலாக்கு போட்டுட்டு 
கஞ்சி காச்சி எறக்கி வப்பா...

ஒரு நா  தேவரும் பொசுக்குன்னு போவ 
பதினாறு நாளும் அழக்கூட இல்லாம 
அம்புட்டு வேலையும் ஒத்தயா பாத்து 
ஆடுகள பாத்துகிட்டு, ஆருட்டயும் பேசாம 
அங்கனயே கெடந்தா...

பதினேழாம் நாளு
கெழவனோட குடிசையும்,ஆடும் 
யாருக்குன்னு வந்தப்ப..
”செல்லாயி எங்க சின்னாத்தா மாதிரிதென்
அவளே அங்கெருந்து பொங்கி தின்னட்டும்”
எனக் கெழவனோட பெரிய மவன் சொல்ல,
பெருங்குரலெடுத்து
”நாம் பெத்த மக்கா”ன்னு ஒப்பாரி வச்சா 
சின்னாத்தா.. 

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

க ரா சொன்னது…

அண்ணே கதை நல்லாயிருக்குண்ணே.

Thava சொன்னது…

சிறப்பான எழுத்துக்களோடு நல்ல பகிர்வு..மிக்க நன்றி.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

அருண் சொன்னது…

மண் வாசனை வீசும் ஒரு பதிவு,க(வி)தை அருமை...
-அருண்-

ஹேமா சொன்னது…

மனதை நெகிழ வைத்தது வரிகள்.இப்படி ஒரு நல்லமனசுக்காரன் இருக்கானா இப்பவும் !

பெயரில்லா சொன்னது…

அசத்தல்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதை நெகிழ வைக்கிறது ! நன்றி நண்பரே !

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

எவ்ளோ பெரிய கதையை அழகா சுருக்கமா சொல்லி நெகிழ வச்சுடீங்க.