16 மார்., 2012

சதுரங்க முத்தங்கள்....

சதுரங்கப் பலகையில் 
எதிரெதிர் அமரும்போது 
நீ கவனமாக 
தேர்தெடுக்கும் வெள்ளைக்காய்கள்
ஒரு போதும் ஜெயித்ததில்லை 
நான் விரும்பித் தோற்பதை ..
.
குதிரைகள் வீழும்போது 
உன் கண்களுக்கு தப்புவதில்லை 
எனது பிஷப்புகளும் 
ஆமென்.. 

கொடுத்தாலும் வாங்கினாலும் 
முத்தங்களுக்காய் பலியான 
சிப்பாய் நான்.. 

செக் வைத்த இறுமாப்பில் 
நீ 
வெற்றிச் சிரிப்பை
காற்றில் பரவவிட்டபோது 
உறைந்துபோன முத்தங்களால் 
இந்த கவிதை தன்னையே 
இன்னொரு முறை 
எழுதத்துவங்கியது ..

அடுத்த ஆட்டம் 
இன்னும் சிறிது நேரத்தில் 
ஒரு 
செவ்வகப் பலகையின் மேல்..
நான் ராஜாவாகவும் 
நீ ராணியாகவும் 
நான் ஜெயிக்க நீ தோற்க 
நீ ஜெயிக்க நான் தோற்க..

8 கருத்துகள்:

Unknown சொன்னது…

Simple and Super..

Unknown சொன்னது…

Simple and Super..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகு

ஹேமா சொன்னது…

ஒரு
செவ்வகப் பலகையின் மேல்..
ராஜாவாக ராணியாக
ஜெயிப்பதையும் தோற்பதையும் ரசித்தபடி கவிதை தன்னையே
இன்னொரு முறை
எழுதத்துவங்கியது...அழகு !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Superb sir !

உணவு உலகம் சொன்னது…

வெற்றிகள் இங்கே தோல்வியினால் உருவாகிறது. அழகாய் சொன்னவிதம் அருமை.

Manimaran சொன்னது…

அருமை..ரொம்ப உணர்வுப் பூர்வமாய் இருக்கிறது...

பெயரில்லா சொன்னது…

சிங்கப்பூர், மலேசியா..பொண்ணுங்க பாவம். அண்ணாத்த வேற புல் பார்ம்ல இருக்காரு டோய்!!