26 ஜூலை, 2013

பட்டத்து யானை

தற்போதைய தமிழ் சினிமாவின் ட்ரெண்டான காமெடியையும், கொஞ்சம் ஆக்சனையும் நம்பி களம் இறங்கியிருக்கிறார்கள். வழக்கமாக ஆக்சன் பிளாக்கிற்காக ட்விஸ்ட் வைக்க காதலைத்தான் நம்புவார்கள். இதிலும் அப்படியே..

முதலில் விஷாலுக்கு கதை தயார் செஞ்சுட்டு, சந்தானம் இப்போது வசூல் ராஜாவாக மாறியபின் கதையை சந்தானத்துக்காக மாற்றியிருப்பார்கள் போல, படத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை சந்தானமே இருக்கிறார். அதாவது படத்தின் ஹீரோ சந்தானம்தான்.
விஷால் வழக்கமான பூபதி பாண்டியன் மசாலாவுக்காக சில சண்டைகளை அனல் பறக்க போடுகிறார்.

இடைவேளைக்கு சற்று முன்பும், அதன் பின்னரும் சந்தானம் இல்லாமல் செண்டிமெண்ட் பிளாஷ் பேக் வைத்திருப்பதுதான் விஷாலுக்கான கதை.

சந்தானத்திடம் வேலை பார்க்க வரும் விஷால் மற்றும் நண்பர்களால் சந்தானம் பிரச்சினயில் மாட்டிக்கொள்ள அவரிடம் விஷால் & கோ திருச்சிக்கு சென்று ஹோட்டல் வைக்கும் யோசனை சொல்லி திருச்சிக்கு வந்தபின் சந்தானம் தனியாக சிக்கிக்கொள்ள வந்த இடத்தில் பார்த்த ஐஸ்வர்யா அர்ஜூன் மேல் விஷாலுக்கு பார்த்த மாத்திரத்திலேயே காதல் வர, அங்கிருக்கும் உள்ளூர் வில்லனுக்கும் ஐஸ்வர்யா மேல் காதல் வர இடையில் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை விஷால் எப்படி காமெடியாகவும், சண்டை போட்டும் சாமாளிக்கிறார் என்பதே கதை.

திருச்சியில் உள்ளூர் வில்லனிடம் உதவிகேட்டு அவரால் தரமுடியாமல் போகும்போது விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம் இனி படம் முழுதும் பரபரப்பாக இருக்கும் என ரசிகனின் எதிர்பார்ப்போடு இடைவேளை வருக்கிறது. ஆனால் அடுத்த காட்சியில் விஷாலின் பழைய வாழ்க்கையை காட்டுவதற்காக வரும் திரைக்கதை சலிப்பூட்டுகிறது. அதன்பின் கிளைமாக்சில் சந்தானம் வந்துதான் படத்தை நகர்த்துகிறார்.

தமனின் இசையில் கானா பாலாவின் பாடல் மட்டும் ரசிக்கும்படி இருந்தாலும் அதற்கான நடன அமைப்பு அலுத்துப்போன ஒன்று. இன்னும் எத்தனை பாட்டுக்குத்தான் லுங்கியை பிடித்துக்கொண்டு ஆடுவார்களோ?!!.

ஐஷ்வர்யா அர்ஜூன் சும்மா வந்து போகிறார். +2 படிக்கும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். படம் முடியும்வரை விஷாலிடம் காதலை சொல்லாமலே போகிறார்.

மொத்ததில் சந்தானம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து..

5 கருத்துகள்:

vasan சொன்னது…

ஐஞ்சு நிமிஷத்தில "பட்டத்து யானை"யை பார்த்தாச்சு சரி,,படிச்சாச்சு ஓகேயா...
(பட்டத்து யானை பார்க்கும் பார்வை...
வெற்றிக்கு தான்.... எனச் சொல்ல வேண்டும்)
அதற்கு நாம் தியேட்டருக்குச் சொல்ல வேண்டும்

கவிதை வானம் சொன்னது…

மொத்ததில் சந்தானம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து..நல்ல தீர்க்கமான உண்மையான விமர்சன பார்வை..நன்றி

yeskha சொன்னது…

அதுசரி, இதே கதையை தானே கொஞ்ச நாளைக்கு முன்னாடி இதே விஷாலை வச்சு "மலைக்கோட்டை"-ன்னு எடுத்தாங்க?

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லது தலைவரே...

போட்ட பணம் வந்தா சரி

'பரிவை' சே.குமார் சொன்னது…

யானைக்கு குட்டி விமர்சனம்...
அருமை....