10 ஜூலை, 2010

சினிமா வியாபாரம்- புத்தக விமர்சனம்

கலை தொன்றுதொட்டு நம் உணர்வில் கலந்துவிட்ட ஒன்று.. ஒரு காலத்தில் புராண நாடகங்களாக வீதிகளில் நடிக்கப்பட்டது, பின் வளர்ச்சி கண்டு சினிமாவாய் மாற்றம் பெற்றது.. கருப்பு வெள்ளை காலம்தொட்டு இன்றுவரை சினிமாவால் வென்றவர்கள் பெரும்பாலும் நடிகர்கள் மட்டும் இயக்குனர்களே..

A.V.M போன்ற வெகு சில தயாரிப்பு நிறுவனங்களை தவிர மிக பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் வீதிக்கு வந்த கதைகள் நிறைய உண்டு.. அதற்கான காரணங்கள் சில நேரங்களில் வேறாக இருந்தாலும், சினிமா எனும் தொழில் அதன் முதலாளிகளை ஏன் வாழ வைப்பதில்லை..?

திரைக்கு வந்து நன்கு ஓடி சம்பாதித்து கொடுத்த படங்கள் சொற்பமே. திரைக்கு வந்து ஓடாத படங்கள்தான் அதிகம், இன்னும் கொடுமை திரைக்கே வராத படங்கள், தொடங்கிவிட்டு முடிக்க முடியாத படங்கள்.

இதெற்கெல்லாம் இந்த வியாபாரத்தை அனைவரும் சரியாக அனுகாததுதான்.. இத்தனை வருட இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சினிமாவிற்கு இருக்கும் வியாபார நுணுக்கங்களையும், வழிமுறைகளையும் பற்றி சொல்லக்கூடிய ஒரு புத்தகம் முதன் முறையாக வந்திருக்கிறது. அது நம் சக பதிவரான கேபிள் சங்கர் எனும் சங்கர் நாராயண் எழுதிய "சினிமா வியாபாரம்" புத்தகம். 

கிழக்கு பதிப்பகம் எப்போதும் மிக சரியான புத்தகங்களை மட்டுமே வெளியிடுவார்கள். அந்த வகையில் எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்க முடியாத புத்தகம் இது. தன் சொந்த அனுபவங்களுடன் பகிர்ந்து கொள்வதால் நாமே நேரிடையாக அதனை அனுபவித்தது போன்ற உரைநடை. பெரும்பாலும் தமிழ் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களை அதன் வியாபார வகைகளை மட்டும் அலசுகிறார். அடுத்த பதிப்பில் இன்னும் விரிவாக அனைத்து இந்திய மொழிகள் மற்றும் ஹாங்காங் சினிமா பற்றியும் சொல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

இன்றுவரை ஒரு சினிமா எடுக்க தயாராய் இருக்கும் ஒரு தயாரிப்பாளர்கள்  அந்த சினிமாவை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என தெரியாமல்தான் இருக்கின்றனர் .அவர்கள் அனைவருக்கும் தேவையான முக்கியமான கையேடு "சினிமா வியாபாரம்".

தன் வலைபக்கத்தில் தொடராக அவர் எழுதியபோதுகூட அது இத்தனை பிரபலம் ஆகவில்லை. இப்போது வெளிவந்த மிக சிறிய கால கட்டத்திலேயே பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. சினிமா சம்பந்தப்படாத நம் போன்ற சாதாரண ஆட்களும் படிக்க வேண்டிய வியாபார நுணுக்கங்கள் அடங்கிய புத்தகம்.

புத்தகத்தில் உள்ளவற்றை நான் பேசவில்லை. காரணம் அது படிக்கும்போது உங்கள் பார்வையின் கோணத்தை தீர்மானிக்க வேண்டும், என் பார்வை, என் அனுபவம் உங்களுக்கும் வரவேண்டும் எனில், நீங்கள் அவசியம் புத்தகம் வாங்கிப் படியுங்கள்..

கிடைக்குமிடம் :
கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை ,
ஆழ்வார்பேட்டை,
சென்னை -18.

டிஸ்கவரி புக் பேலஸ்,
மேற்கு கே.கே.நகர் 
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
சென்னை - 78.

விலை - ரூ 70.00

19 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice Post

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

padichittu varen

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அண்ணே உங்க செலவுல எனக்கு ஒரு புக் வாங்கி அனுப்புங்க. விமர்சனம் அருமை. தேங்க்ஸ் அண்ணா, தேங்க்ஸ் கேபிள் அண்ணா

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

நல்லா இருக்குங்க :-))

காமராஜ் சொன்னது…

அறிமுகத்துக்கு நன்றி.

Unknown சொன்னது…

படிச்சிடுவோம். சரி. உங்கள பாதித்த சினிமாக்கள் பற்றி எழுதப்போவதாக சொன்னீர்களே. அது எப்போ?

vinthaimanithan சொன்னது…

என்னமோ ரொம்ப அவரசத்துல எழுதுனமாதிரி தெரியுதுங்க்ணா....

அப்பாலிக்கா இப்ப பாத்து எனக்கு 'வின்னர்' ப்ரொடூசரு வேற கியாபத்துல வந்து தொலைக்குது... பாவம் ஊரெல்லாம் அந்த படத்த பாத்து சிரிக்க, அந்தாளு மட்டும் அழுதுனேகீறாராம்...

கேபிள் அண்ணாத்த குயிக்கா படம் எடுக்க வாழ்த்துவோம்...

ஹேமா சொன்னது…

நல்ல பதிவும் அழகான படமும்.

Karthick Chidambaram சொன்னது…

நல்ல விமர்சனம். இன்னும் படிக்கவில்லை.
இன்னும் கொஞ்சம் அதிகமா அலசி இருக்கலாம்.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

எனக்கு சினிமா பிடிக்காதுதான் இருந்தும் அத்தொழிலின் வியாபார நுணுக்கங்கள் மற்ற தொழிலுக்கு பயன்படும் ஆதலால் கண்டிப்பாக வாங்கிபடிகிறேன். எனக்கும் சமுக சிந்தனை உள்ள புத்தகம் எழுத வேண்டும் என்ன ஆவல் உள்ளது. அவை சீக்கிரம் நிறைவேறும் என்றே நினைக்கிறேன்...நன்றி.. வணக்கம்...!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பதிவு...

ரமேஷ் வீரா சொன்னது…

ஒரு நல்ல பயனுள்ள பதிப்பு அண்ணா , முடிந்தால் எனக்கு சில புத்தகங்கள் அனுப்புங்கள் அண்ணா ,,,,,

நாடோடி சொன்னது…

க‌ண்டிப்பா ப‌டிக்கிறேன் ... ப‌கிர்விற்கு ந‌ன்றி.

Cable சங்கர் சொன்னது…

நன்றி தலைவரே..

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
அண்ணே உங்க செலவுல எனக்கு ஒரு புக் வாங்கி அனுப்புங்க. விமர்சனம் அருமை. தேங்க்ஸ் அண்ணா, தேங்க்ஸ் கேபிள் அண்ணா//

அண்ணனா ரீப்பிட்டு.........

ஜில்தண்ணி சொன்னது…

கண்டிப்பா படிக்க வேண்டிய புத்தகம் தான் :))

படிச்சிடுவோம் !!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

விமர்சனம் அருமை ....

புத்தகமும் அருமை .....

Gayathri சொன்னது…

கட்டாயம் படிக்கரேன்.படிச்சுட்டு சொல்ரேன் பகிர்வுக்கு நன்றி.
முடிந்தால் படித்து உங்க கருத்துக்களை எழுதுங்க.
http://funaroundus.blogspot.com/

Admin சொன்னது…

நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றிகள்.