19 ஜூலை, 2010

பிரணவ் மிஸ்ட்ரி - விரலசைவில் உலகை அசைத்த இந்தியன்..

குஜராத் மாநிலத்தின் சிறிய நகரமான பலன்புரில் கிறிஸ்னா மிஸ்ட்ரி, நயனா ஆகியோரின் மகனாக பிறந்த இந்த ஆராய்ச்சிப் புலிக்கு இரண்டு சகோதரிகள் உண்டு. இளங்கலை பட்டமாக கணினி அறிவியல் பயின்றபின் முதுகலை பட்டத்தை மும்பை IIT யில் பயின்றவர். அதன்பின் மைக்ரோசாப்ட் நிர்வாகத்தில் ஆராய்ச்சியாளர் பிரிவில் வேலைக்கு சென்றார். இப்போது MIT மீடியா லாபில் Ph D படிக்கிறார்..

படிக்கும் நாள் முதலே ஆராய்சிகளில் கவனம் செலுத்தியவர், இவர் சூரியனின் திசைகளெல்லாம் ஏன் சூரியகாந்தி பூக்கள் திரும்புகின்றன என ஆய்வு செய்து செயற்கையாக அதைபோல் ஒரு தகடை உருவாக்கினார். அந்த ஆய்வு இப்போது சோலார் தகடுகளில் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக பயன் தருகிறது. சூரியனின் கதிர்கள் நேரடியாக படும்போதுதான் அதிக ஆற்றல் கிடைப்பதால் இவரின் ஆராய்ச்சி மிகுந்த பயன் அளிக்கிறது.

மௌஸ் பயன்படுத்தாமல் கணினியை இயக்குவது. குழந்தைகளுக்கான 2+2=4 ஆய்வு போன்றவை பயன் மிக்கவை..

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இவர் கண்டுபிடித்த இணையத்தை எப்படி, எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.. கணினியின் துணையின்றி அதனை பயன்படுத்தும் விதம் பற்றி அவரின் வீடியோவை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.. இதில் உலகமெலாம் அவரை பற்றிய வியப்பே அதனை எல்லோரும் பயன்படுத்தும் விதமாக OPEN SOURCE ஆக தருகிறேன் என்று சொன்னதுதான்..

OPEN SOURCE என்ற விஷயத்தை அறிமுகபடுத்தியவரே இதைக் கேட்டதும் பெருமைப்பட்டிருப்பார்.. 

பிரணவ் மிஸ்ட்ரி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் இன்னொரு தொழில்நுட்ப  புரட்சியாளன்..

அவரின் வலைத்தளம் சென்று அவசியம் பாருங்கள்..


TED ல் அவரின் பேச்சு... The thrilling potential of SixthSense technology...

29 கருத்துகள்:

ஜில்தண்ணி சொன்னது…

இதுவரை பிரனவ் மிஸ்டரி அதாவது pranav mystery என்று தவறாக புரிந்து கொண்டிருந்தேன்,நல்ல வேலை இப்பவாவது தெரிந்து கொண்டேன்

அவரின் வலைதளத்தை பார்த்தேன்,எவ்வளவு கண்டுபிடிப்புகள்
வியப்பூட்டும் மனிதர்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி செந்தில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்னை விட புத்திசாலியா அந்த ஆளு?

Udayakumar Sree சொன்னது…

எந்த ஒரு முதலாளியின் கைப்பாவையாய் ஆகாமல் சுதந்திர மென்பொருள் தருவேன் என்று கூறியது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் இது போல் இன்னும் நிறைய இளைய மூளைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லாத் துறைகளிலும் கால் பதிக்க முயன்று கொண்டும் சிலர். ஆனால், நடக்க முடியாவிட்டாலும், வழிவிடாமல் செயற்கை நாற்காலியில் சென்றாவது எல்லா இடங்களிலும் பெருசுகளே வியாபித்திருக்கிறார்கள். என்ன செய்ய?

சௌந்தர் சொன்னது…

மௌஸ் பயன்படுத்தாமல் கணினியை இயக்குவது. குழந்தைகளுக்கான 2+2=4 ஆய்வு போன்றவை பயன் மிக்கவை.//

இந்த பதிவு பகிர்வுக்கு ரொம்ப நன்றி...தல நம்ம செந்தில் அண்ணனும் ஓரு ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்

யாசவி சொன்னது…

என்னாது காந்தி தாத்தா செத்துட்டாரா?

சும்மா தாமதம் ஆனதற்காக !

எனினும் ப்ரணவ் போன்றவர்கள் எவ்வளவு எழுதினாலும் அதற்கு தகுதியானவர்களே

Ahamed irshad சொன்னது…

இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்..

Ahamed irshad சொன்னது…

அதிகம் பேர் பார்க்ககூடிய வலைத்தளங்களில் இதுவும் ஒன்று..

நாடோடி சொன்னது…

ப‌கிர்விற்கு ந‌ன்றி செந்தில் அண்ணா.. இவ‌ரை ப‌ற்றி ப‌டித்திருக்கிறேன்..

Ranjithkumar சொன்னது…

இதற்க்கு முன் இந்த வீடியோவை பார்த்து இருக்கிறேன். ஆனால் இவரை பற்றி தெரியாது. இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி..........

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

TED ல் பிரணவின் இரு உரைகளை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் ...வார்த்தைகளின்றி வியந்திருக்கிறேன் ... பதிவின் தலைப்பில் இருக்கிறது தோழர் KRB யின் தனித்துவம் !

ஜோதிஜி சொன்னது…

செந்தில் பல நாட்டு மக்களின் வலைதளத்தை பார்த்தவன் என்ற முறையில் இவரின் வலைதள எளிமை மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

யாசவி சுகமா இருக்கீங்களா?

அதுசரி செந்தில், இவர நம்ம அரசியல் வியாதிகள் விட்டு வைப்பாங்களா?

காமராஜ் சொன்னது…

நல்ல அறிமுகம் செந்தில்.பராட்டுக்குரியவர் மிஸ்ட்ரி.

VELU.G சொன்னது…

நல்ல தகவல் நன்றி

Riyas சொன்னது…

ம்ம்ம் நல்லது..

bogan சொன்னது…

நல்ல அறிமுகம்.ஓபன் சோர்ஸ் என்று அறிவித்திருப்பது உயரிய நோக்கமே.ஆனால் யதார்த்தம் என்ன?இது போல கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கும் பரவலாக புழக்கத்துக்கு கொண்டு வருவதற்கும் நிறைய ஆராய்ச்சி செய்யவேண்டும்.அதற்கு பணம் வேண்டும்.இதை பெரிய நிறுவனங்களே செய்யமுடியும்.அவை வணிக நோக்கம் இல்லாது இறங்காது.அல்லது அரசாங்கத்தை நம்பி இருக்கவேண்டும். அரசாங்கம் குறைந்தபட்சம் பிரணவ் சொல்வது என்னவென்று புரிந்துகொள்வதற்குள் உலகம் அழிந்திருக்கும்.இன்றைய உலகம் வணிகர்களின் உலகம்.போர் கூட வணிகரீதியாக லாப நட்டம் என்ற நோக்கில்தான் பார்க்கப்படுகிறது.இன்று நாம் பயன்படுத்தும் இணையம் கூட வணிக நோக்கில் ஆரம்பிக்கப் பட்டதே.கொஞ்சம் கொஞ்சமாக இன்று பரவலாகி விடவில்லையா?

ஜீவன்பென்னி சொன்னது…

இந்தியர் ஒருவர் உருவாக்கிய ஒன்று என்னும் போதே ஒரு வித பெருமிதம் உருவாகின்றது. நம்ம அரசாங்கம் கையிலதான் இருக்கு, இந்த மாதிரியான விசயத்துல நம்ம அரசாங்கம் ரொம்ப நாளா தூங்கிக்கிட்டு இருக்கு.

Unknown சொன்னது…

இவரைப் பற்றி முன்னரே அறிந்திருந்தாலும் வலைத்தளம் பற்றி தெரியாது. நல்ல அறிமுகத்திற்கு நன்றி

பனித்துளி சங்கர் சொன்னது…

இந்த செய்திக்கான விடியோ காட்சியை நானும் சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன் . அசந்து போனேன் . பகிர்வுக்கு
நன்றி நண்பரே !

வினோ சொன்னது…

KRP அண்ணே, பகிர்வுக்கு நன்றி. இது தான் முதல் தடவை பார்கிறேன்...என் நண்பர்கள் அனைவருக்கும் mail அனுப்பிட்டேன்...

http://rkguru.blogspot.com/ சொன்னது…

உங்க பதிவின் முலம் பிரணவ் மிஸ்ட்ரி தெரியபடுத்தியதர்க்கு உங்களுக்கு எங்கள் நன்றிகள்......

ஹேமா சொன்னது…

புதிய தகவல் செந்தில்.நன்றி.

Prasanna சொன்னது…

மனுஷனா இவரு :)

பெயரில்லா சொன்னது…

வீடியோவில் அவரது தன்னம்பிக்கையும்,கம்பீரமும் பிரமிக்க வைக்கிறது.இந்த இந்தியன் நமக்கு பெருமை சேர்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை

Karthick Chidambaram சொன்னது…

ஏற்கனவே இவரை பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். இந்த ஒலி பதிவை பார்த்து உள்ளேன்.பெருமைக்கு உரியவர்.

தனி காட்டு ராஜா சொன்னது…

REAL SOFTWARE ENGINEER....

செல்வா சொன்னது…

நன்றி செந்தில் அண்ணா .. அவரை பற்றி அறிந்து கொண்டேன் ..!!

ரமேஷ் வீரா சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு அண்ணா ..............நன்றி கலந்த வணக்கங்கள் அண்ணா ................

ஜெய்லானி சொன்னது…

TED ல் அவரின் பேட்டியை பார்த்த காலத்திலிருந்து இன்னும் வியப்பு அவங்க வில்லை.. உண்மையிலேயே பாராட்ட பட வேண்டிய ஆள்தான் ..

அவருக்கு காக இங்கே பதிவிட்டதில் சந்தோஷம்..!!!!!