6 ஆக., 2010

பதின்மம்...

நன்றி : The Hindu 
ராத்திரிகளின் ரகசிய பக்கங்களில் 
சுவர்க் கோழிகளின் கிறுக்கல்களாய் 
காமத்தின் சித்திரங்கள்...

ரசிக்கத்தான் வேண்டியிருக்கிறது 
படத்தின் இடையிடையே காட்டப்படும் 
பழைய நீலங்களை...

இரண்டாம் காட்சி முடிந்து 
நீளும் பின்னிரவில் 
வழித்துணையாய் கூடவரும் 
கார்த்திகை நாய்கள்..

மனக் கதவுகளின் இடைவெளியில் 
கிறங்கும் பதின்மத்தின் ஆர்வம் 
விரல்களால் சுயம் தேடும்..

சொப்பனங்களின் நடுவில் 
நனையும் உடைகள் 
விடியலில் அசத்தும்...

இக்கவிதையின் ஊடே 
கிளர்த்தலின் விதிகள் 
தளர்த்தப்படுகின்றன...

47 கருத்துகள்:

நேசமித்ரன் சொன்னது…

செந்தில் எனக்கு பிடிச்சிருக்கு இந்த வெளிப்பாடு

இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமோன்னு ஒரு எண்ணம்

அப்பாதுரை சொன்னது…

துணிச்சலான எழுத்து. சுயம் தேடும் - நயமான சொல்லாட்சி.
படத்துக்கும் கவிதைக்கும் தொடர்பு உண்டா?

நசரேயன் சொன்னது…

உண்மை

Jey சொன்னது…

அண்ணே, கவிதை எனக்கு புரியல. படம் நெறய செய்தி சொல்லுது...
ஓட்டு போட்டாச்சி..:)

யாசவி சொன்னது…

செந்தில் எப்படி இந்த மாதிரி போட்டோ எல்லாம் கிடைக்குது?

முழுநேரமாக வேலை செய்கிறீர்களோ?

ஒரு நாள் நேரில் சந்திப்போம்

Unknown சொன்னது…

புகைப்படம் மிக அருமை. (அதற்கென தனியே ஒரு கவிதை எழுதலாம்).

கவிதையில் ஏதோ விட்டுப்போனதுபோல் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..........

க ரா சொன்னது…

பின்றீங்க தல...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

// கார்த்திகை நாய்கள்.. //
புரிந்துகொள்ள முடியவில்லை தோழர் ...

ம்ம்ம் ..
இன்றைய பதின்மர் உங்கள் வரிகளை தாண்டி எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றனர் தோழர் ...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

//கருத்துரை மதிப்பிடல் இயக்கப்பட்டது. அனைத்து கருத்துரைகளும் வலைப்பதிவின் ஆசிரியரால் ஏற்கப்படவேண்டும்.//

நீங்களுமா தோழர் ?!!

முனியாண்டி பெ. சொன்னது…

புகைப்படம் மிக அருமை எங்க புடுசிங்க.

dheva சொன்னது…

எழுத்திலே ஒரு வகை இருக்கிறது செந்தில், தனக்காக எழுதுவது, அடுத்தவருக்கு எழுதுவது, அரசியல் எழுதுவது, ஆன்மீகம் எழுதுவது என்று.......ஆனால்

இவை எல்லாம் தாண்டி எல்லாவற்றிலும் இருக்கும் எதார்த்தத்தை எழுதுவது என்பது சத்தியத்தை சொல்லும் ஒரு கலை...

பதின்மங்களில் ஒரு மிகப்பெரிய வசீகரம் இந்த காமம். எத்தனையோ பேர் எழுதிய பதின்மங்களில் வெளியுலகத்திற்காக ஒரு மெப்பனைக்கான எழுத்தாக பார்த்த நான்...உங்களின் பதின்மத்தில் உண்மையிலேயே மிகைப்பட்ட ஆண்களின் பதின்மம் பார்த்தேன்.

சில வரிகள் பலரை உறுத்தலாம்....ஆனால் உறுத்துவதுதானே உண்மை...!


என்னால் முழுமையக ரசிக்க முடிகிறது செந்தில் என்ற பொய்முகம் இல்லாத மனிதனை!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

பதின்மத்தைப் பற்றி ஒரு மாறுபட்ட ஆனால் உண்மையான பக்கத்தைப் பற்றிய கவிதை.

ஜில்தண்ணி சொன்னது…

///ஆர்வம் விரல்களால் சுயம் தேடும்..
சொப்பனங்களின் நடுவில் நனையும் ////

உண்மை அண்ணே
புரிகிறது,எல்லாமே பதின்மத்தில் நடப்பவை தானே

ரொம்ப நல்லாயிருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான வெளிப்பாடு..

பதின்ம உணர்சிகள் பற்றி கூறும் இந்த கவிதை பலருக்கு புரிய வாய்ப்பில்லை..

அருண் பிரசாத் சொன்னது…

வித்தியாசமாதான் யோசிக்கறீங்க தல

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மிக அருமை

vasu balaji சொன்னது…

நிர்வாணம். சத்தியம்.

vinthaimanithan சொன்னது…

அமைதியாய்க் காதோடு பேசும் கவிதைநடை நல்லாருக்குண்ணே

//இக்கவிதையின் ஊடே
கிளர்த்தலின் விதிகள்
தளர்த்தப்படுகின்றன//

எப்பிடி?............ எப்டி எப்டி எப்டி?

கார்த்திகை நாய்களா? மார்கழி நாய்களாண்ணே?

மொத்தத்துல பின்றீங்கண்ணே!

Cable சங்கர் சொன்னது…

enakkennavo.. padathukkum kavithaikkum sampanthamillainu thonuthu..aanaal arumaiyana kavithai

செல்வா சொன்னது…

///ஆர்வம் விரல்களால் சுயம் தேடும்..
சொப்பனங்களின் நடுவில் நனையும் ///

ரொம்ப உண்மையா எழுதியிருக்கீங்க..!!
அருமையான கவிதை அண்ணா ..!

வினோ சொன்னது…

நல்ல கவிதை அண்ணே...

நாடோடி சொன்னது…

ப‌தின்ம‌ க‌விதை ந‌ல்லா இருக்கு செந்தில் அண்ணா.....

Thenammai Lakshmanan சொன்னது…

இயல்பான பதின்மப் பதிவு இதுதான்னு நினைக்கிறேன்.. அருமை செந்தில்..

vasan சொன்னது…

ப‌தின்ம‌த்தின்'புற‌ம்'ப‌க‌லில் ப‌ஸ்ஸின் காட்சியாய்.
'அக‌ம்'அந்திமுத‌ல், அதிகாலைவ‌ரை க‌விதையாய்.
பொருத்த‌மான‌ ப‌ட‌மும், பா(ப‌)ட‌லும் தான்.
கார்த்திகை நாய் சொல்லாட‌ல் மிக‌ச்சூடாய்,KRP.செந்தில்

சசிகுமார் சொன்னது…

பதிவு நல்லாயிருக்கு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ரமேஷ் வீரா சொன்னது…

அருமையான கவிதை அண்ணா ....................... என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..................

'பரிவை' சே.குமார் சொன்னது…

//இரண்டாம் காட்சி முடிந்து
நீளும் பின்னிரவில்
வழித்துணையாய் கூடவரும்
கார்த்திகை நாய்கள்..//

அழகிய சொற்றாடல்...

கவிதை அருமை செந்தில்.

பனித்துளி சங்கர் சொன்னது…

/////ரசிக்கத்தான் வேண்டியிருக்கிறது
படத்தின் இடையிடையே காட்டப்படும்
பழைய நீலங்களை.../////

வேறு என்னதான் செய்வது . உண்மைதான் . நல்ல இருக்கு

ஹேமா சொன்னது…

ஒளிக்காத உண்மையான பதின்மம் !

மார்கண்டேயன் சொன்னது…

செந்தில், எத்தனையோ பதின்மப் பதிவுகள், எல்லாவற்றையும் தன்னுள் கொண்டிருக்கிறது உங்களின் கவிதை, வாழ்த்துக்களை சொல்ல வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்,

Riyas சொன்னது…

ம்ம்ம் உண்மை..

க.பாலாசி சொன்னது…

உண்மையைச்சொல்லும் தெளிவான கவிதை....

மங்குனி அமைச்சர் சொன்னது…

எல்லோருக்கு ஏற்படக்கூடிய உணர்வுகள்
அதை அழகாய் சொல்லி இருக்குறீர்கள்

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கவிதை அருமை தோழரே......

Radhakrishnan சொன்னது…

பதின்மத்தின் எவரிடமும் காட்ட கூடாத ஒரே ஒரு பக்கம் மட்டும் காட்டிய நல்ல கவிதை.

Guruji சொன்னது…

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

ஜோதிஜி சொன்னது…

செந்தில் சிறப்பான படங்கள் உள்ள வலைதளம் என்று எவராவது பரிசு கொடுத்தால் உங்கள் படங்கள் தான் முதல் பரிசுக்கு தகுதி பெறும்.

இரண்டு ஓட்டுகள் தான் போட முடிந்தது.

காமராஜ் சொன்னது…

இயல்பே அழகு செந்தில்.
சொல்லாமல் சொல்லுதல் இன்னும் அழகு.
கவிதைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லாதது
போலத்தோன்றும்.எனினும் இருக்கிறது.
நல்லா இருக்கு செந்தில்.

அன்பரசன் சொன்னது…

தல சூப்பர்மா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்

அருமை அருமை கவிதை அருமை - இயல்பான நிகழ்வுகளை - மற்றவர்கள் தவிர்க்க நினைக்கும் நிகழ்வுகளை எடுத்துக் காட்டிய விதம் நன்று

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

a சொன்னது…

Very nice..........

தருமி சொன்னது…

எப்படி இப்படி ஒரு படம்?

தெளிவான படம்; மிகுந்த ஆச்சரியம்!

Unknown சொன்னது…

நல்லா வந்துருக்கு தோழரே

Umapathy சொன்னது…

உண்மை சில நேரங்களில் உறைய வைக்கும்
அதற்குள் உறையாமல் உறங்கி எழுவது இந்த பதின்ம உண்மை
பாராட்டுக்கள்

ஜெயந்தி சொன்னது…

எதார்த்தத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

க்விதைக்கு 80 மார்க்.புகைப்படத்துக்கு 90 மார்க்.இந்தக்கவிதையை இன்னும் விரிவாய் எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது.

Vela சொன்னது…

உண்மை சுடும் ... மிக அருமை சகா.. வாழ்த்துக்கள்