28 ஆக., 2010

தமிழீழம் இன்றும் -நாளையும்...


முள்ளிவாய்க்கால் முடித்துவிடவில்லை தமிழனின் தலை எழுத்தை, இன்று வரைக்கும் புகைந்து கொண்டேயிருக்கும் சந்தேகங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. அடிமைத்தனம் உடைக்க முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இன்னும் தீவிரமாக அது வேறு வடிவம் எடுத்து விடகூடாது என்பதில் சிங்களவர்களை விடவும் இந்திய தேசியவாதிகளும், தமிழ் நாட்டின் சோனியாவின் அடிவருடிகளும் தீவிரமாக இருக்கின்றனர்.

பிரபாகரன் என்ற ஒற்றை ஆளுமையின் கீழ் மட்டுமா ஈழத்தின் சுதந்திரம் இருந்தது. அத்தனை குழுக்களும் தடுமாறி, திசைமாறி எதிராளியின் குண்டி கழுவ சென்று விட்டபின், ஈழம் அமைந்தால் அது பிரபாகரனின் தலைமையில்தான் அமையும் என மாறிவிட்டது பிரபாகரனின் தவறா? புலிகளை காரணம் காட்டியே பிழைப்பை நடத்தி வந்த டக்ளஸ் மற்றும் கருணா கும்பல்கள் இப்போது சொந்த நாட்டிலேயே முகாம்களில் கைதிகளாய் அடைபட்டு கிடக்கும் எம் இனப் பெண்களை கூட்டி கொடுத்தல்லவா பிழைப்பை தொடர்கிறார்கள்.

இப்போது புதிதாக ஒருத்தன் கிளம்பியிருக்கிறான் தான் பிரபாகரனையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்ற முயன்றால் நெடிலனும், கேஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என புதிய திரைக்கதை எழுதுகிறான். மேலும் இந்தியாவின் தலைவர்களையும் அதிலும் ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் ஈழ ஆதரவு தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்கிறது அந்த பேட்டி.

பிரபாகரன் மற்றும் அவரின் குடும்பமே இல்லை என்றாகிவிட்டபின், மீண்டும் மீண்டும் அதை சொல்லித்தான் பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது. இந்த அடிவருடிகள் கிடைக்க கூடிய உரிமையும் குழிதோண்டி புதைத்து ஓட்டு மொத்த இலங்கையையும் சிங்கள மக்களுடையதாக மாற்றிவிட்டுதான் மறு வேலையே பார்ப்பார்கள் போல. இந்த நாய்ப் பிழைப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.

கண்முன் நடக்கும் அநியாங்களை காணப் பொறுக்காதே தற்கொலை படையாக மாறி சிங்களனை பயங்காட்டி தனக்கென தேசம் ஒன்றை உருவாக்கி அதனை உலகின் மிக சிறந்த உதாரணமாக வழி நடத்தினர். ஆனால் இந்தியாவில் காங்கிரஸ் அரசு வந்தபிறகு ராஜபக்சே அதனை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு ஓட்டு மொத்தமாய் உலகை தன் பக்கம் வைத்துக் கொண்டு கோரத்தாண்டவம் ஆடியபோது அதனை கவனிக்காத மாதிரி கண்களை மூடிக் கொண்ட இந்திய ஊடகங்கள் இப்போது சேவாக்கின் சதம் தவறியதற்கு பொங்கி எழுகிறீர்கள். 

அடுத்து கூட்டணி காங்கிரசுடன் வைத்துக் கொள்ள இரண்டு பெரிய(?) திராவிட கட்சிகளும் போட்டி போடுகின்றன, ஆட்சியையும், தொழிலையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான், மற்றபடி இங்கிருக்கும் தமிழன் பற்றியே அவர்களுக்கு கவலை இல்லை. இலங்கை தமிழன் செத்தால் என்ன? இருந்தால் என்ன? மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் தனக்கென பிடித்தாலும் பிடிக்காவிட்டலும் தன்னை மிகப்பெரிய அளவில் நேசிக்கும் தமிழர் கூட்டம் இருக்கிறது என்று தெரிந்துமே காங்கிரஸ் மாதிரி தமிழ்நாட்டில் காணமல் போய்க் கொண்டிருக்கிற கட்சிக்கு கலைஞர் பயப்படுவது. காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த ஒரு உண்மையான தொண்டனின் உறுப்பினர் படிவம் வரை பறித்துக் கொண்டீர்கள் நீங்கள். ஆனால் அங்கு மேடைக்கு மேடை முழங்கும் இளங்கோவனையும், கார்த்தியையும் யாரும் கண்டிக்கவே இல்லை.

சரி இனி ஈழம் மலருமா? என்பது இங்கு அனைவருக்கும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு நமக்கு விரிவான பார்வை வேண்டும், வெறுமனே நம்பிக்கையில் பிரபாகரன் இருக்கிறார் என்று அவரை தேடுவதைவிட அவர் நேசித்த நாம் நேசித்த தமிழ் மக்களை அகதியாக்கி சிறையில் வைத்திருக்கும் கொடுமைகளை அகற்ற பாடுபட வேண்டும். இங்கு கலைஞர் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார், இவர் ஆள்வதால் நாம் இந்த அளவுக்காவது நம் உணர்வுகளை வெளிபடுத்த முடிகிறது. அதனால் இவருக்கு நாம் மன நெருக்கடியை தராமல், நமகென்று இருக்கும் ஒரே மூத்த தலைவரான கலைஞரை வைத்தே இதனை நாம் நகர்த்த வேண்டும். 

இந்தகருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம், வைகோ மற்றும் நெடுமாறனால் பேசத்தான் முடியும், வேறெந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடும் அளவுக்கு தொண்டர் பலம் இல்லாதவர்கள் இவர்கள். ஜெ ஒரு சந்தர்ப்பவாதி அவரை நம்பினால் கேட் வரைக்கும் கூட நம்மால் போக முடியாது. இருக்கிற சூழ்நிலையில் கலைஞரை விட்டால் இதற்க்கு சரியான ஆளும் தமிழகத்தில் இல்லை. சீமானுக்கு உணர்ச்சி வசப்பட்டு பேசத் தெரிகிற அளவுக்கு அரசியல் தெரியவில்லை. எனவே ஒரே வழி கலைஞரை ஆதரிப்பதே.

வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு கலைஞரை ஆதரிக்க சொல்வது கசப்பை தரலாம். ஆனால் நிலைமையை நன்கு ஆராய்ந்தால் அதுதான் சரியான வழி. தமிழர்களின் இப்போதைய தேவை தனி ஈழம் அல்ல, சம உரிமை, அதனை பெற்று விட்டாலே இன்று உலகம் முழுதும் பரவி தொழிலில் கொடிகட்டிபறக்கும் ஈழ மக்கள் தங்கள் வியாபாரத்தை மீண்டும் இலங்கையில் ஏற்படுத்தி நமக்கென யூதர்கள் மாதிரி எல்லைகளை விரிவாக்கி சிங்களனை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். எதிர் பாதையில் நடை போடுவதைவிட இன்றைக்கு நம் மக்கள் நிம்மதியாக மூன்று வேலை உணவாவது சாப்பிடுவார்கள்.

நாம் வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் இருந்துகொண்டு தனி ஈழம்தான் நமது லட்சியம், பிரபாகரன் நிச்சயம் உயிரோடு இருக்கிறார், அவர் கண்டிப்பாக தமிழ் ஈழம் பெற்று தருவார் என பேசுவதும். இங்கிருக்கும் தலைவர்களை நாடு கடந்த தமிழீழ தனியரசை ஏற்படுத்தியவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும். அங்கு ஒரு வேலை உணவுக்கு திண்டாடும் மக்களை மேலும் பாதிக்கவே செய்யும். 

எனவே லட்சியங்களை சற்று தூர வைத்துவிட்டு எதார்த்தங்களை ஏற்றுக் கொண்டு அங்கிருக்கும் மக்களின் மனநிலையோடு நம்மை பொருத்திப் பார்த்து அவர்களுக்கான இப்போதைய சுதந்திரம் மற்றும் மீள்குடியேற்றம் இவற்றை மட்டுமே பேசினால். கருணா, டக்ளஸ், கே.பி.மற்றும் இங்கு அதனை வைத்து பிழைப்பை நடத்தும் பெரும்பாலோருக்கு சிங்களனே ஆப்படிப்பான்.

வேண்டுகோள் : எனது பெரியம்மா (அம்மாவின் அக்கா௦) வியாழன் அன்று தனது என்பதாவது வயதில் இவ்வுலகை நீங்கியதால் இந்த வாரம் முழுதும் எல்லோருடைய பதிவுகளையும் படிக்க முடியாது போய்விட்டது.மொபைலில் நிறைய பதிவுகளை சரியாக படிக்க முடியவில்லை, எனவே ஓட்டு மட்டும் போட முயல்கிறேன். கூடுமானவரைக்கும்  எனது பதிவை கிடைத்த இடைவேளையில் இணைய மையத்தில் சென்று பதிவேற்றுகிறேன்.. மீண்டும் அடுத்த வாரம் முதல் ஆட்டத்துக்கு வந்து விடுவேன்..

60 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

naan 1st

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

உங்கள் கோபம் நியாயமானதே,

செல்வா சொன்னது…

//அடுத்து கூட்டணி காங்கிரசுடன் வைத்துக் கொள்ள இரண்டு பெரிய(?) திராவிட கட்சிகளும் போட்டி போடுகின்றன, //
அதுவேணா அப்படித்தான் அண்ணா ..

செல்வா சொன்னது…

//இங்கு கலைஞர் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார், இவர் ஆள்வதால் நாம் இந்த அளவுக்காவது நம் உணர்வுகளை வெளிபடுத்த முடிகிறது.//
உண்மைதாங்க. கலைஞர் இப்பொழுது ஒரு சூழ்நிலைக்கைதிதான்..
// சீமானுக்கு உணர்ச்சி வசப்பட்டு பேசத் தெரிகிற அளவுக்கு அரசியல் தெரியவில்லை//
இது எல்லோருக்குமே தெரியுமே .. அதாவது ஒன்றை ஆதரிக்கிறோம் என்பதற்காக அடுத்தவர்களை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பதில் என்ன நியாயம் இருந்துவிட முடியும் ..
உங்கள் பெரியம்மா இறந்ததற்கு எனது அனுதாபங்கள்..விரைவில் வாருங்கள் ..

சௌந்தர் சொன்னது…

எனவே ஒரே வழி கலைஞரை ஆதரிப்பதே.///

இதை நான் வழிமொழிகிறேன்

Jey சொன்னது…

செந்தில் உங்களின் இந்த பதிவின் ஆதங்கமே என்னுடையதும்...

முல்லிவாய்க்கால் சம்பவத்திற்கு முன், தமிழ் நாட்டின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நான் ஒரு கடிதம் அனுபினேன். அதன் பிரதியை தேடி அதை ஒரு பதிவாகப் போடலாம் என்றிருக்கிறேன்.

சோனியாவின், தனிப்பட்ட கோவம் சரியானதெனினும், அது ஒட்டுமொத்த இந்தியாவின் கோபமாக மாற்றியது துரதிர்ஷ்டவசமானது..., அதற்கு நாமும், தமிழ் நாட்டை ஆளும் வர்க்கமும் மெளன சாட்சிகளாகிப் போனது கேவலமானது..., ஈழத்து தொப்புள் கொடி உறவுகளுக்கு நம்மை என்றும் கடனாளிகளாக்கிய நிகழ்வு நிகழ்ந்து விட்டது..., இனியாவது அதை சரி செய்யும் விதத்தில் நமது செயல்பாடுகள் அமையவேண்டும்...

Jey சொன்னது…

//வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு கலைஞரை ஆதரிக்க சொல்வது கசப்பை தரலாம். ஆனால் நிலைமையை நன்கு ஆராய்ந்தால் அதுதான் சரியான வழி.///

இதில் எனக்கு கடுமையான மாற்றுக் கருத்துகள் உண்டு செந்தில். துரோகிகளுக்கு எந்தக் காலத்திலும் ஆதரவழிப்பது மிக மோசமான முன்னுதாரனமாகவே அமையும். ஈழம் விசயத்தில், கருணாவுக்கும், கலைஞர் கருனானிதிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.

கலைஞர் ஈழம் மக்களுக்காக போராடவில்லை என்பது என் வாதம் அல்ல, சரியான நேரத்தில், உறுதியான ஆதரவு தேவைப் பட்ட காலத்தில் தன் சுயநலத்திற்காக, ஒட்டு மொத்த ஈழ மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதே என் கருத்து.

சின்னப்பயல் சொன்னது…

உணர்வுகளை வெளிப்படுத்த உதவினாலும்
அதன் விளைவுகளை அனுமதிப்பதில்லை.

Jey சொன்னது…

//இங்கு கலைஞர் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார்,///

என்ன சொல்கிறீர்கள் செந்தில்,”சூழ்நிலைக் கைதி” குடும்ப ஆதாயத்திற்காக மத்திய அரசு தமிழர்களுக்கு செய்த அநீதியை கண்டு கொள்ளாமல் இருந்தார், இதில் உட்சபட்ச சுயநலம்தான் இருக்கிரது, சூழ்நிலைக்கைதி என்று சொல்வது அவருக்காக சப்பை கட்டுவது போல் உள்ளது.

// இவர் ஆள்வதால் நாம் இந்த அளவுக்காவது நம் உணர்வுகளை வெளிபடுத்த முடிகிறது//

ஜெ ஆட்சிக்காலத்தை விட இப்போதுதான் மாற்றுக் கருத்துகள் கொண்டவர் மீது குண்டர் ப்டை அதிகம் தாக்குதல் நடைபெறுகிரது..., வியாபாரத்தன்மையை மீறி வெளிவரும் செய்திகளே இதற்கு சாட்சி.(உடனே நான் ஆதிமுக தொண்டன் என்று யாரும் முத்திரை குத்திவிடாதீர்கள்... புண்ணியமாப் போகும்)

Jey சொன்னது…

உங்கள் எனது பெரியம்மாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இறங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Asiya Omar சொன்னது…

நல்ல எழுதறீங்க செந்தில்.எப்படியாவது எம் மக்கள் நிம்மதியாக இருந்தால் சரி.
பெரியம்மாவீன் மறைவுக்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன்.

Jey சொன்னது…

/// வைகோ மற்றும் நெடுமாறனால் பேசத்தான் முடியும், வேறெந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடும் அளவுக்கு தொண்டர் பலம் இல்லாதவர்கள் இவர்கள்.///

தேர்தலில் நிற்கும் நேர்மையனவர் எப்படியும் தோற்பார்கள், அதனால் நாம் ஜெயிக்கப்போகும் கழிசடைகளுக்கு ஓட்டுப் போடலாம் என்கிறீர்களா?.

Jey சொன்னது…

செந்தில் நான் இங்கு இட்ட பின்னூட்டங்களை, எனது மாற்றுக் கருத்துகளாக மட்டும் எடுத்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு உங்களின் மாற்றுக் கறுத்துகளை கடுமையாக எழுதிக் கொள்ளுங்கள்.

ஆனால், இதை தனி மனித தாக்குதலாக மட்டும் தயவு செய்து பாவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

யாசவி சொன்னது…

செந்தில்

முதல் 6 பாரா உங்களுடன் ஒரு சதவீதம் கூட வேறுபடவில்லை. என மனசாட்சி எழுதியது போல இருந்தது.

அதற்கு பிறகு உள்ளது......


சொல்வதற்க்கு இல்லை :!

'பரிவை' சே.குமார் சொன்னது…

செந்தில்...
உங்க ஆதங்கம் நியாயமானதுதான்.
கலைஞரைதான் நம்ப வேண்டும்... ஆனால் அவர் அவரது குடும்பத்தாருக்கு பதவி வேண்டி காங்கிரஸிடம் மண்டியிட்டு நிற்பதற்கே நேரமில்லை. அவராவது நம் மக்களுக்கு உதவுவதாவது...

கேட்டால் உண்ணாவிரதம் என்பார்... இல்லையேல் லெட்டர் எழுதுகிறேன் என்பார். நம் இனத்தின் மானம் காக்க நல்ல தலைவர் இன்னும் வரவில்லை என்பதே என் எண்ணம்.

பெரியம்மா ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ubaskaran சொன்னது…

u r wrong

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

உங்கள் பெரியம்மா இறந்ததற்கு எனது அனுதாபங்கள்..விரைவில் வாருங்கள் ..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//சௌந்தர் கூறியது...
எனவே ஒரே வழி கலைஞரை ஆதரிப்பதே.///

இதை நான் வழிமொழிகிறேன்//

வழிமொழிகிறேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உங்கள் எனது பெரியம்மாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இறங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

அன்று (in the year 2009) குறைந்த பட்சம் ஒரு கோடி பேர் தமிழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி இருந்தால் இன்று சரித்திரம் வேறாய் இருந்திருக்கும். இதை முதல் அமைச்சரால் சுலபமாக சாதித்து இருக்க முடியும்..

அதை விடுத்தது கடிதம் எழுதுகிறேன் தந்தி அடிக்கிறேன் மூணு மணி நேரம் உண்ணா நிலை இருக்கிறேன் என்றால் இதற்கு பெயர் என்ன ... மக்களை காக்கும் போராட்டமா அல்லது நாடகத்தின் நிகழ்ச்சி நிரல்களா ?

உலகத்தில் எங்காவது தந்தி மூலமாக போராட்டம் செய்து கேள்வி பட்டிருக்கிறீர்களா ? இதை செய்த ஒரே ஆள் நீங்கள் குறிப்பிடும் சூழ்நிலை கைதி மட்டுமே !!

பரிதவிக்கும் தமிழர்களுக்கு நம் ஆதரவும் நல்ல பாதுகாப்பும் வேண்டும் என்பதில் என்னுள் எவ்வித வேறுபாடும் இல்லை.. இதை கருணாநிதியால் தர முடியும் என்பதற்கு "சூழ்நிலை கைதி" என்ற இரு வார்த்தைகளை கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்கிறீர்களே ..... நியாயமா இது ?

மடியும் மக்களை சரியான நேரத்தில் காத்திருந்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் சூழ்நிலை கைதியின் வாரிசுகளுக்கு ஆதரவு தர சித்தமாய் இருப்பேன். இப்பொழுது அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறேன் ..

மாற்று கருத்திற்கு மன்னிக்கவும் ..

என்னது நானு யாரா? சொன்னது…

உலக அரங்கில் இந்த பிரச்சனையை கொண்டு செல்ல எந்த ஒரு முயற்ச்சியும் நடப்பதாக தெரியவில்லை. அதுதான் சரியான சாத்தியகூறு! வேறு என்ன வழி இருக்கிறது தோழர்களே?

சசிகுமார் சொன்னது…

??????????????

dheva சொன்னது…

ஈழ தேசத்தின் விடியல் என்பது ஒரு பிரபாகரனோடு நின்று விடாது.....அவரின் ஈழ தேசம் பற்றிய கனவுகளை தேக்கிதான் பிறக்கிறது ஒவ்வொரு உண்மையான தமிழனின் வித்துக்களும்.....

ஒரு வகையில் உங்களின் கண்ணோட்டம் சரி என்றாலும்.....ஆளும் கட்சியினரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் போக்கு எதிர்காலத்தில் தமிழர் நலம் சார்ந்து தனது நகர்தலை நடத்தும் என்று எதன் அடிப்பட்டையில் நம்புவது.....?

உண்மைதான்...ஜெவும், வைகோவும் பல் பிடிங்கப்பட்ட பாம்புகள்.....ஆனால் அதற்காக தி.மு.க வின் மூலம் ஏதோ ஒரு விடியல் கிடைக்கும் என்பது சர்க்கரை இல்லாதா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை என்ற கதைதானே...அன்றி....அது சர்க்கரை அல்ல.....

என்னவெல்லாமோ செய்து நிகழ்த்தியிருந்திருக்கலாம்...ஆனால் செய்யாமால் போனதன் இன்றைய பின்புலம் ஏதொ ஒன்றாய் இருக்கலாம்... நாளை பிறிதொன்றாய் இருக்கலாம்....சர்வ நிச்சயமாய் இந்திய அரசியல் காட்சிகள் மாறூம்..மாறினாலும் இந்தியாவையும் தமிழ் நாட்டையும் இனி ஈழத்தமிழன் சார்ந்து இருந்து முடிவுகள் எடுப்பானென்றால்...கடைசி வரை ஈழம் கனவாகிவிடும்....


சுதந்திர ஈழத்தின் வேர்.....ஈழத் தமிழர்களின் சர்வதேச காய் நகர்த்தலிலும் இந்தியா இல்லாதா வேறு பெரிய நாட்டின் அனுதாபத்தை பெறுதலிலும்...உலகத் தமிழர்கள் எல்லாம் கைகோர்த்து அவர்களுக்கு உதவுவதிலும்தானிருக்கிறதே அன்றி....ஈழப்பிரச்சினைக்காக திமுகவை ஆதரிப்பது என்பது...சரியான வழிமுறை ஆகாது....! ஈழம் தவிர்த்து....

தமிழ் நாட்டு அரசியலுக்கு வேண்டுமானால் ஸ்டாலினின் வலுவான தலைமை ஏதேனும் மாற்றத்தை தமிழக அளவிற்கு கொண்டு வரலாம்.....ஈழத்தை பற்றிய முடிவுகளில் தமிழனின் கைகள் தேசியத்தால் கட்டப்பட்டு இருக்கிறது செந்தில்.....!


ஆக்கப்பூர்வமான கட்டுரைக்கு நன்றிகள்!

பெரியம்மாவின் மறைதலுக்கு எனது ஆழ்ந்த வருந்தங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!

dheva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vasu balaji சொன்னது…

நல்ல கருத்துகள் செந்தில். பெரும்பான்மையோர் இப்படித்தான் உணர்கிறோம். ஏதாவது வழி பிறந்தால் தேவலை.

உங்கள் பெரியம்மாவின் மறைவுக்கு வருத்தங்கள்.

dheva சொன்னது…

ஈழம் தவிர்த்து ...சம் உரிமைகளை பெற்று தருவதை இப்போதே செய்யலாமே.. நாடளும் அரசு....செய்வதில்லை என்பதை விட செய்ய முடியாது என்பதுதன் நிதர்சனமான உண்மையும் கூட.

உமர் | Umar சொன்னது…

யூர்கன் க்ருகியர் கருத்துக்களோடு உடன்படுகின்றேன்.

அன்று கருணாநிதி நினைத்திருந்தால், அந்தப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அன்று செயல்படாததற்கு ஆட்சி மட்டுமா காரணம்? மீள்கட்டமைப்புப் பணியில் வரக்கூடிய பங்கும், எண்ணெய் நிறுவனங்கள், செல்பேசி நிறுவனங்கள் அளிக்கும் அன்பளிப்புகளும் முடிவெடுப்பதில் பங்கெடுக்கவில்லையா? பிரணாப் முகர்ஜி அரை மணி நேரம் பேசியவுடனே முடிவை மாற்றும் அளவிற்கு, அன்று என்ன பேசப்பட்டது?

இனி, நாம் தலைவர்களை நம்புவதை விடுத்து, ஈழ மக்களுக்கு நம்மாலான உதவிகளை செய்து வரலாம். புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் உயர்ந்து, அந்தப் பகுதி அரசுகளிடம் அவர்கள் செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலை உயரும்போது நிச்சயம் ஈழம் சாத்தியமே!

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

ஈழம் பற்றிய அருமையான‌ அலசிய பதிவு...!என்னுடைய பதிவுகளை படித்து,நிறை,குறைகளை சுட்டிக் காட்டுங்கள் அண்ணே,

அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

Unknown சொன்னது…

3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதும் இல்லாமல் அதன் பிறகு நடந்த போர் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு மழை விட்டாலும் தூவாணம் விடவில்லை போலிருக்கிறது என்று நக்கல் விட்டவரை நம்ப சொல்கிறீர்கள்..! இவர் சொன்ன தூவாணத்தில் தான் அதன்பிறகு முள்ளிவாய்க்கால் பிணக்காடானது.

அதெல்லாம் சரி...
கலைஞரை ஆதரித்தால் ஈழம் பெற்றுவிடலாம் என்பது மிகப்பெரிய காமெடியாக தெரியவில்லையா உங்களுக்கு?

மாயாவி சொன்னது…

இனிமேல் தமிழீழத்தைப் பற்றி இந்தியர்கள் நீங்கள் கவலைப்படாதீர்கள். அதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.

எதிரியை மன்னிக்கலாம். ஆனால் துரோகியை மன்னிக்க முடியாது.

ஈழத்தமிழருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால்,
ஒரு முறை தமிழகத்தில் இருக்கும் அகதிமுகாம்களுக்கு சென்று பார்த்து வாருங்கள். அவர்களை மனிதர்களாக மரியாதையுடன் நடத்தச் சொல்லுங்கள்.

செ.சரவணக்குமார் சொன்னது…

பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் செந்தில்.

a சொன்னது…

//
தமிழர்களின் இப்போதைய தேவை தனி ஈழம் அல்ல, சம உரிமை,
//
மிகச்சரியான வார்த்தை...........

Unknown சொன்னது…

பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் நண்பரே!!!!

vinthaimanithan சொன்னது…

மாயாவியின் கருத்து நியாயமானதே! தமிழகத்தில் இருக்கும் அகதிமுகாம்களுக்கும் ஈழத்தின் முகாம்களுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கான ஐ.நா ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. ஈழமக்கள் இன்று போராடுவதற்கான மனவலுவை இழந்து நிற்கிறார்கள். தமிழகத்தமிழர்களின் உணர்வை வழிநடத்த சரியான தலைமையில்லை. விரிவாக விவாதிக்கப்படவேண்டிய விஷயமிது. ஒற்றைப்பரிணாமத்தில் எதையும் பார்ப்பதைத் தவிர்க்கலாமே அண்ணா! வரலாறு எப்போதும் ஸ்பைரலாகத்தான் மேலேறிச் செல்லும். ஈழத்தின் அடுத்தகட்ட நகர்வு பிரபாகரனுடையதும், விடுதலைப்புலிகளுடையதுமான தியாகத்தைப்போற்றி அவர்களது அரசியல்தவறுகளை விருப்புவெறுப்பின்றி ஆய்ந்து முன்னேறிச் செல்வதிலேயே அடங்கி இருக்கிறது. ஈழத்தின் படுகுழியில் இந்தியப் பெருமுதலாளித்துவம் பெற்ற பலன் என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.... கருணாநிதி குடும்பமும் இந்தியப் பெருமுதலாளிவர்க்கத்தச் சேர்ந்ததுதான்... தமிழகத்தின் எழுச்சி என்பது பழம்பெருமை பேசி வெற்றுவீரமும், ராணுவவாதமும் பேசும் அரசியல்வாதிகளிடத்தில் இல்லை. அது இன்னும் மார்க்ஸியக் கனவுகளை நெஞ்சில் ஏந்தி போராடும் துணிவோடு களத்தில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான ( கவனிக்க: ஆயிரக்கணக்கான மட்டுமே!) இளைஞர்களிடத்து இருக்கின்றது! வரலாறு எப்போதுமே ஈவிரக்கமற்றது. அது உணர்ச்சிகளையல்ல... அறிவை, அறிவால் தெளிந்தெழும் துணிவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறது

Jey சொன்னது…

//வானம்பாடிகள் சொன்னது…
நல்ல கருத்துகள் செந்தில். பெரும்பான்மையோர் இப்படித்தான் உணர்கிறோம்//

பெரும்பான்மையோர்னு சொல்லாதீங்கண்ணே, பெரும்பான்மையோர் உள்ளுக்குள்ளே குமைஞ்சிகிட்டு இருக்காங்கண்ணே.

(செந்திலோட பிளாக்ல உங்களுக்கு மாற்றுக் கறுத்து சொன்னதுக்கு மன்னிக்கவும்)

Jey சொன்னது…

//விந்தைமனிதன் கூறியது...//

பின்னூட்டங்கள் வழியாக, உங்கள் அறிமுகம் ஏற்பட்டதிலிருந்து இன்று நம்மிருவரிடையே ஒத்த கருத்து நன்றி ..ஆச்சர்யம் ஆனாலும் உண்மை...:)

Unknown சொன்னது…

அன்பின் நண்பர்களுக்கு உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆனால் தனிப்பட்ட முறையில் என் கருத்தைதான் நான் சொல்லியிருக்கிறேன் ஈழத்துக்கு வெளியில் இருந்துகொண்டு நாம் பேசுவது வெகு சுலபம், ஆனால் அங்கிருக்கும் மக்களை பற்றி நாம் யோசிக்க வேண்டும். இன்று உலகம் மொத்தமும் தமிழனின் இன்னல்களை பாராமுகமாய் கவனிக்காமல் விட்டுவிட்டன. இனியும் தனி ஈழம் பற்றி பேசுவதும் பிரபாகரன் பற்றி பேசுவதும் விடுத்து மீள் குடியேற்றம் பற்றி மட்டும் பேசுவதுதான் இப்போதைக்கு புத்திசாலித்தனம். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவது அங்கிருக்கும் நம் இனத்தை மேலும் சிரமபடுத்தவே செய்யும்..

Jey சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது.//

இந்த விசயத்தில் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதுதான் உண்மை..., கலைஞருக்கு செம்பு தூக்குவதில், பிரச்சினையின் தீர்வு அறவே இல்லை செந்தில்...., மாறாக துக்கி எறிவதில்தான்... ஈழத்து உறவுகளின்பால், அடுத்து வருபவர்கள் கவனமாக இருப்பார்கள்.

Karthick Chidambaram சொன்னது…

அறச்சீற்றம் !?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

செந்தில்
முதலில் என் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் ...,p

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

செந்தில்
என்னக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...,மிகவும் வருந்த தக்க பதிவு இது

கருடன் சொன்னது…

பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் நண்பரே.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் நண்பரே.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சீமான் போல் உண்மையை சொன்னால் இந்த கலைஞர் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்துகிறது

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் நண்பரே

vinthaimanithan சொன்னது…

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி! இவ்ளோ பேரு கடுப்புல கமெண்ட் எழுதி இருக்காங்க... ஆனா (நான் உட்பட) யாருமே மைனஸ் ஓட்டு போடலையே ஏன்???

ஜெய்லானி சொன்னது…

பெரியம்மா ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ssk சொன்னது…

உண்மையாக நிலைமையை உணர்ந்து எழுதி உள்ளீர்கள். வைகோ செய்தது மாபெரும் தவறு. கலைஞர் மேல் உள்ள காழ்ப்பு உணர்வில் ஜெவின் காலை பிடிக்க போய் இவ்வளவு பெரிய அநீதி நடந்து விட்டது. ஜாதியும், தனி மனித பெருமையும் தமிழர்களை ஒட்டு மொத்தமாக பிரித்து மேலும் அநீதி கிடைக்கவே வழி ஏற்படுகிறது. பிளவுகளை, பிரிவுகளை ஒதுக்கி, தமிழர்களை ஒன்று படுத்தும் சக்தி தமிழுக்கு உண்டு. தமிழரை வெறுபேற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் பல மாநிலங்கள் எல்லாம் தமிழரை புரிந்து வைத்துள்ளன. இது தனியார் கம்பெனி வரை தமிழர் தலைகுனிவு அடைய வழி செய்கிறது. மேலும் சிந்தித்து தமிழர் ஒற்றுமைக்கு வழி பற்றி எழுதுங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

//இருக்கிற சூழ்நிலையில் கலைஞரை விட்டால் இதற்க்கு சரியான ஆளும் தமிழகத்தில் இல்லை//

இதற்கு பேர்தான் விடிய விடிய கதை கேட்டு ராமனுக்கு சீதை பழமொழி என்பது.ஈழத்துக்குள் நிகழ்ந்த,நிகழும் குழறுபடிக்கு பலகாரணங்கள் இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்த வரை முல்லிவாய்க்கால் திசை மாறிப்போனதுக்கு ஒரே காரணம் கருணாநிதியின் நாற்காலிக் கனவும் ஆளுமையுமே.

நிகழ்வுகளை மட்டும் வைத்தே ஒரு வரலாற்றை எடை போடவும் கணிக்கவும் இயலும்.தற்போதைய சூழலில் உங்கள் இடுகை வரும் தேர்தலுக்கு தி.மு.கவிற்கு சில ஓட்டுக்களைப் பெற்றுத்தர மட்டுமே பயன்படும்.ஈழம் குறித்த சட்ட மன்ற தீர்மானம்,மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம்,தொடர்ந்த பாராளுமன்ற தேர்தலின் சதுரங்கம்,பார்வதி அம்மாள் விமான நிகழ்வு,பினாங்கு முதல்வர் இந்தியா வர தடை,சீமான் சிறையடைப்பு,ராஜபக்சேவின் மாலையிடலுக்கு பின்பும் தொடரும் மக்களின் அவதி வாழ்க்கை,மீன்வர்கள் துப்பாக்கி சூடு,அடி,உதை,கிருஷ்ணாவின் தமிழக மீனவர் குறித்த கருத்து,மத்திய அரசின் நிலைப்பாடு என 2008ம் வருடத்தில் துவங்கி நிகழ்வுகளை மே 19 2009 வரையும் அதனைத் தொடர்ந்து இன்று வரையும் கணிப்பிட்டால் தோன்றுவது என்னவென்று பின்னூட்டம் காண்பவர்களின் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

பதிவர்களுக்கு திட சிந்தனை தா தமிழ்மண்ணே!

ராஜ நடராஜன் சொன்னது…

பெரியம்மாவின் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வினோ சொன்னது…

பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் அண்ணே..

Bibiliobibuli சொன்னது…

பதிவையும், அனைத்து பின்னூட்டங்களையும் ஒன்று விடாமல் படித்தேன். பின்னூட்டங்களில் இன்றைய தமிழ்நாட்டின் ஈழம் பற்றிய நிலைப்பாடு நன்கு புலப்படுகிறது. கருணாநிதி/தி.மு.க பற்றிய என் கருத்து ராஜ நடராஜன் சொன்னது தான். தமிழக அகதிமுகாம் பற்றிய மாயாவியின் கருத்தும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியது.

தந்தை செல்வா காலத்திலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஈழப்பிரச்சனை அன்றுமுதல் இன்றுவரை "தீர்க்கப்படாமல்" கவனமாக காத்துவருவது இந்தியா தான். புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்தியா பற்றி பேச்சு வரும்போதெல்லாம் இப்போது மறக்காமல் "சீனா" என்ற நாட்டைப்பற்றி குறிப்பிட மறப்பதேயில்லை.

செந்தில், உங்கள் பெரியம்மாவின் மறைவுக்கு என் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அலைகள் பாலா சொன்னது…

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அமைந்தால்? மீண்டும் இதே நிலைமை தொடருமே. மீள் குடியேற்றத்திற்கு கருணாநிதி என்ன செய்துள்ளார் இதுவரை?

அலைகள் பாலா சொன்னது…

பெரியம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Unknown சொன்னது…

ஏற்கனவே அவரை தானே தேர்ந்தெடுத்துள்ளோம். என்ன செய்தார். ஈழம், தமிழ் சார்ந்து நாம் வாக்களித்தால் யார் வந்தாலும் பயந்தே நல்லது செய்வான். 1500 பணத்துக்கு வாக்களித்தால் இப்படித்தான்.

AKM சொன்னது…

நினைவில் காடுள்ள மிருகத்ததை பழக்க முடியாது.. அதேபோல் நினைவு முழுவதும் துரோகமும், சுயநலமும் உள்ள இந்த தமிழனை திருத்தவே முடியாது..உலகமெங்கும் தமிழன் பரவியிருந்தும், இங்கு தமிழனிடம் மத்திய அரசை நெருக்கும் சக்தியிருந்தும்..ஒருவர் செய்வதை அடுத்தவர் தடுத்து, இன்னுமொருவர் செய்வதை மற்றவர் பழித்து..இப்படி
நினைவு முழுவதும் துரோகமும், சுயநலமும் உள்ள இந்த தமிழனை திருத்தவே முடியாது..
நானும் ஒரு தமிழன் என்று தலைகுணிந்து நிற்கிறேன்..

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

உங்கள் ஈழ பதிவு படித்தேன்., ஆனால் உடன்பாடு சிறிதும் கிடையாது.

வேட்டையாடப்பட்ட வெள்ளாடுகளுக்கு., வேட்டையாடிய ஒரு ஓநாயை நம்ப சொல்லி பாடம் எடுத்து உள்ளீர்கள்.

அது உங்கள் நிலைப்பாடு.

சரி.

அவரை "சூழ்நிலை கைதி" என்று சொல்லி உள்ளீர்கள்.

கற்பழித்தவன் கூட காமத்தின் "சூழ்நிலை கைதி"தான்., ஆனால் அவனே பஞ்சாயத்தின் தலைவர் என்பதால் அவருடன் கைகுலுக்க முடியாது.

பாதிக்க பட்டவன் மட்டுமே மன்னிக்க கூடியவன்., அவனிடம் தவறு இழைத்தவனை நியாப்படுத்த முடியாது.

மானத்திற்காக போராடியவன் மானத்தோடு சாகட்டும்.உரிமையுடன்.,

தம்பி சாமித்துரை.

ஹேமா சொன்னது…

இன்றுதான் பதிவும் பின்னூட்டங்களும் பார்த்தேன் செந்தில்.அலசலும் சிந்தனைகளும் சரியாகவே இருக்கிறது.

ஜெயந்தி சொன்னது…

இலங்கை பற்றி நீங்கள் நீங்கள் சொல்வது யோசிக்க வைக்கிறது.

உங்கள் பெரியம்மாவிற்கு எனது இரங்கல்கள்.

சூன்யா சொன்னது…

வேறு வழியில்லை என்ற வகையில் உங்களோடு உடன்படுகிறேன்....

http://soonya007.blogspot.com/2010/08/blog-post.html