29 செப்., 2010

இந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...


நம் கேபிள் சங்கர் தன்னுடைய வலைபக்கத்தில் இந்த சிறுமிக்கு உதவி தேவைப்படுகிறதாக எழுதியிருந்தார். அதனைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்துள்ளன. ஆனால் தேவைப்படும் தொகை பெரிது என்பதால் உங்கள் அனைவரின் உதவியும் தேவைபடுகிறது. எனவே தயவு செய்து உங்களால் ஆன சிறிய உதவியையும் தயங்காது செய்யுங்கள்..

கேபிள் சங்கர்  இந்த சிறுமியின் விபரங்களை தந்திருக்கிறார்...

இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery  செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாதுஎன்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணிலோ.. அல்லது அவரது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..

அவருடைய வங்கி கணக்கு எண் கீழே தந்துள்ளேன்... அந்த வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பலாம்.. பணம் அனுப்பியவர்கள் தங்கள் பணம் அனுப்பிய விபரங்களை அவருக்கு மின்னஞ்சலாகவும் அனுப்புங்கள். இது பின்னால் கணக்குகளை சரிபார்க்க எங்களுக்கு உதவும்..

மேலும் இந்த பதிவினை உங்கள் வலைபக்கத்தில் ஒரு நாள் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மின்னஞ்சலாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் உதவி செய்ய சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

கேபிளின் மின்னஞ்சல் முகவரி ...
 
அவரிடம் பேச: 9840332666

வங்கி கணக்கு விபரம் :
A/C NAME : SANWAS INFOTECH
A/C NO : 0077 0501 0890
ICICI BANK, ASHOK NAGAR BRANCH 

அனைவரும் இந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...

14 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

என்னால் முடிந்த உதவி நிச்சயம்.

vinthaimanithan சொன்னது…

நல்ல விஷயம்ணா! நானும் என்பதிவுல கண்டிப்பா போட்டுடுறேன்!

செல்வா சொன்னது…

என்னால் முடிந்த உதவியினை செய்கிறேன் அண்ணா ..!!

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் சொன்னது…

சிறந்த முயற்சி நண்பரே !
இது போன்று நாம் எல்லோரும் நமது தளங்களில் பல சமூக அக்கறை உள்ள பதிவுகளை வெளியிடுவதுன் வாயிலாக . பலர் பயன் பெறுவார்கள் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை .
நானும் என்னால் இயன்ற உதவிகளை செய்கிறேன் நண்பரே !
பகிர்வுக்கு நன்றி !

Ahamed irshad சொன்னது…

இயன்றவரை உதவ முயல்வோம் செந்தில் அவர்களே..

என்னது நானு யாரா? சொன்னது…

நல்ல விஷயம் அண்ணாச்சி! என்னால் என்ன முடியுமோ அதைக் கட்டாயம் செய்கிறேன் அண்ணாச்சி!

நல்ல சமூக அக்கறையோடு பதிவிட்டமைக்கு நன்றி அண்ணாச்சி!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி !

Unknown சொன்னது…

நிச்சியமாக நண்பரே என்னால் இயன்றதை செய்வேன்,இதை எனது தளத்திலும் வெளியிடுகிறேன்.

ஜெயந்தி சொன்னது…

அவசியம் செய்ய வேண்டிய உதவி. எனது ப்ளாக்கிலும் போடுகிறேன்.

Cable சங்கர் சொன்னது…

பதிவிட்டமைக்கு நன்றி தலைவரே.. விரைவில் ப்ரியா குணமடைந்துவிடுவாள் என்ற நம்பிக்கை.. ஏற்படுத்துகிறது பின்னூட்டங்கள்.. நன்றி..

அன்பரசன் சொன்னது…

கண்டிப்பாக உண்டுண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இயன்றவரை உதவ முயல்வோம் செந்தில்.

YUVARAJ S சொன்னது…

சாரு பற்றிய ஒரு வெட்டி பதிவிற்கு 50 கருத்துக்கள்!!! இது போன்ற ஒரு நல்ல விஷயத்துக்கு வெறும் 10 + கருத்துக்கள் மட்டும். நல்லா வாழுது மனித நேயம்.