9 செப்., 2010

குடித்துவிட்டு வருபவன் ..

நான் தினமும் குடிக்கிறேன்...
அளவாகவும் ..அதீதமாகவும்...
நிதிநிலைகேற்ப.

காதலாகி 
கசிந்துருகிய கல்யாணம் என்பதால் 
பொறுத்துக் கொள்கிறாள் மனைவியும்..

குடிப்பது பிடிக்கிறது
குடிக்கிறோம்...
யாரையாவது
அல்லது எதையாவது 
பிடிக்காமல் போனால்தான்
குடிக்கனுமா என்ன?

டாஸ்மாக்கில் தினசரி நீளும் கைகளில்
கோடம்பாக்கம் சினி சிட்டி
பாடும் நேரங்களில்
வெளிநாட்டிலிருந்து வந்த நட்புடன்
விவாத தளங்களில்
சிறிது மது
வெட்கம் துறக்கவும்
பேசவும்...
பாடவும்
எப்போதாவது சண்டை போடவும்
உதவத்தான் செய்கிறது ..

"தினசரி குடிக்காதீங்க"
"குடிப்பதை நிறுத்துங்க"
பாசம் பகிரும் நட்பும் ..

"குடிச்சிட்டுப்  போனா
அண்ணி ஒண்ணுமே சொல்ல மாட்டாங்களா?"
அல்லது
"யாரு சொல்லியும் கேட்கமாட்டேன்னு
அடம்புடிக்கிறீங்க"..
அல்லது
"முதல்ல உங்க வட்டாரத்த மாத்தணும் "
இப்படியாக திட்டும் நட்பும்
அறிக ..

நான் குடிப்பது..
நண்பர்களுடனும் ...
நண்பர்களாலுமே... என

27 கருத்துகள்:

என்னது நானு யாரா? சொன்னது…

அண்ணனின் கவிதை டாப்பு!
போடுங்க தாளம் மாப்பு!

ரொம்ப எளிமையா புரிகிற மாதிரி சொல்லி இருக்கிற கவிதை அருமை!

நம்ப வீட்டுக்கு வாங்க அண்ணா! நீங்க வந்து ரொம்ப நாளு ஆச்சே!

vasu balaji சொன்னது…

வெட்டி சாக்கு:)

சௌந்தர் சொன்னது…

"தினசரி குடிக்காதீங்க"
"குடிப்பதை நிறுத்துங்க"
பாசம் பகிரும் நட்பும் .////

என்ன சொல்லியும் கேட்ப்பது இல்லையே

Unknown சொன்னது…

One martini is all right. Two are too many, and three are not enough. -James Thurber
Remember: "I" before "E," except in Budweiser. -Author Unknown
If drinking is interfering with your work, you're probably a heavy drinker.If work is interfering with your drinking, you're probably an alcoholic. -Author Unknown
Alcohol is the anesthesia by which we endure the operation of life. -Bernard Shaw

வினோ சொன்னது…

அளவா அளந்து குடிக்கிறதுல என்ன தப்பு? அண்ணே நான் உங்க பக்கம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

cheers ...

மார்கண்டேயன் சொன்னது…

ரொம்ப பக்குவமா, குடிக்கிறத நியாயப் படுத்திர்கீங்க, இனிமே, 'டாஸ்மாக்', மற்றும் 'ப்ளாக்' ல,
'டேய், நான் பிரண்ட்சுக்கு தான் டா குடிக்கிறேன்' போன்ற வசனங்கள் வரலாம்,
இப்படி ஒரு நொண்டி சாக்கை கவிதையாக்கிய,

'குடி'கவி/கவி'குடி' கோமான் !!!,
குடி(செந்தில்)குமார் (???) அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் . . .

யாருப்பா அது, சோடா ச்சே . . .

ஒரு குவாட்டர் குடுங்க பா . . . தொண்ட வறண்டு போச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நான் நேத்து ketta கேள்விக்கு இன்னிக்கு பதிலா?

ஹேமா சொன்னது…

நீங்க குடிக்கிறதல அடுத்தவங்களுக்கு கஸ்டம் இல்லன்னா குடிக்கிறது தப்பில்ல செந்தில்.அதோட உங்க உடம்பு தாங்குற அளவோட நிறுத்திக்கணும்.குடிக்கிறதுக்கு சாட்டெல்லாம் சொல்லப்படாது !

Unknown சொன்னது…

The revenue from alcohol sales constitutes half of the states annual tax revenues[1]. TamilNadu ranks first among the states of India in alcohol sales by volume[2]. Indirectly KRP is contributing everyday to Tamilnadu’s growth. People who stops KRP; directly stopping Tamil’s growth. So every Indian say thanks to KRP. [1]http://en.wikipedia.org/wiki/TASMAC
[1,2]http://tasmac.tn.gov.in/Turnover.htm

PS: He is so socialistic, contributing to Singapore and Malaysia also.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப எளிமையா புரிகிற மாதிரி சொல்லி இருக்கிற கவிதை அருமை!

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

"இங்கு அட்வைஸ் செய்யக்கூடாது" என்று தன் தரப்பு நியாயம் வாதாடும் பார்வை.
நேரா சொன்னாலே கேட்காத செவிகள் எங்களுடையது..

நாங்கள் ஊதுற சங்கை ஊதுவோம் ., அப்புறம் உங்க இஷ்டம்.

செல்வா சொன்னது…

//நான் குடிப்பது..
நண்பர்களுடனும் ...
நண்பர்களாலுமே... ///

அது சரி ..!!

மறத்தமிழன் சொன்னது…

செந்தில்,

குடிங்க..அளவா குடிங்க...

நீங்க குடிகிறதுனால யாருக்கும் தீங்கு ஏற்படாதவாறு குடிங்க...

ஆனா இப்படி வெட்டி சாக்கு சொல்லாதிங்க:))

நண்பர்களுக்காக குடிக்கும் நண்பேன்டா ங்கிரங்க..ரைட்டு...

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல காரணம்

Asiya Omar சொன்னது…

நியாயப்படுத்துறீங்க கேஆர்பி.

பவள சங்கரி சொன்னது…

நானும் ஆஜருங்க.........

vinthaimanithan சொன்னது…

குடிகார பயோடேட்டா போடுறப்பவே நெனச்சேன் 'மணியோசை' மட்டும் முன்னாடி வந்திருக்குன்னு.... கரெக்டா 'யானை'யை பின்னாடியே வரவழச்சிட்டீங்க.

எதிரு...ம்ஹ்ம்... நானும் ஒரு குடிகாரன் ( அட ஒத்துக்கங்கப்பா நெசமாத்தான சொல்றேன்!)... என்னத்த எதிர்கவுஜ போட்டுட்டு! அண்ணனுக்கு ஜே!

தமிழ் உதயம் சொன்னது…

குடிப்பது தனிப்பட்ட விஷயம்.
குடியே கவிதைக்கான கருவாக மலர்ந்ததும் ஒரு விஷயம்.

உண்மைத்தமிழன் சொன்னது…

[[[நான் குடிப்பது.. நண்பர்களுடனும்...
நண்பர்களாலுமே... என]]]

ச்சும்மா சல்ஜாப்பு வேணாம்..!

இவர்களெல்லாம் நண்பர்கள் அல்ல..!

இப்படித்தான் நண்பர்களைப் பிடிக்க வேண்டுமென்பதும் இல்லை..!

இதனால் ஏதாவது ஒன்றானால் இந்த நண்பர்கள் அப்போது உடன் வர மாட்டார்கள்..!

சற்றுத் தள்ளி நின்று திருவாய் அருள்வார்கள்..!

அனுபவப்பட்டவர்கள் சொன்னால் கேட்க வேண்டும். இல்லை.. இல்லை.. அனுபவம் கிடைத்த பின்புதான் திருந்துவேன் என்றால்..?

வேறொன்றும் சொல்வதற்கில்லை..!

காமராஜ் சொன்னது…

இனி குடிக்கதவர்கள் மட்டும் தான் ஏன் குடிக்கவில்லை என்று காரணம் சொல்லவேண்டும்.தவறா சரியா என்கிற வாதமெலாம் அருதப்பழசான பட்டிமன்றத் தலைப்பு.உலகம் தண்ணீருக்கு மத்தியில்,கண்டம் மூன்று பக்கமும் சூழப்பட்டிருக்கிறது.ஊரில் தெருத்தெருவாக ஓடுகிறது.

நடுக்கடலில் வீடுகட்டியிருக்கிறோம் மீன்வாசம் பிடிக்காத பத்தியம் எப்படி சாத்தியம்.

சாப்பிடுகிற அரிசியில் மட்டுமில்லை,கலக்க வாங்கும் தண்ணிப்பாக்கெட்டிலும் அரசியல் இருக்கிறது.

ஆனால் மக்கள் எல்லாரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட்வரகள்.

velji சொன்னது…

எளிமையாய்...அருமையாய்!

Jackiesekar சொன்னது…

நேத்து அடிச்ச சரக்கு.. காலையில பயங்கர தலைவலி....பிராண்ட மாத்தனும் அண்ணே... சாரி தம்பி....

Thamizhan சொன்னது…

குடிப்பவர்களெல்லாம் குடி காரரல்ல ஆனால் குடிகாராருக்குத் தெரியுமுன் உலகுக்கே தெரியும் அவர் குடிகாரரென்று ! என்னால் நிறுத்த முடியும்
என்று சொல்பவர் நிறுத்த ஒரே வழி மருத்துவத்துடன் கூடிய ஆலோச்ணைதான்,அது வரை உயிருடன் இருந்தால் !

அன்பரசன் சொன்னது…

//நான் குடிப்பது..
நண்பர்களுடனும் ...
நண்பர்களாலுமே... என//

இது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு தல.

ரோஸ்விக் சொன்னது…

எப்புடியெல்லாம் சமாளிக்கிராங்கைய்யா...!!! ரொம்ப தெளிவுதான்....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

எதோ புரியற மாதிரியிருக்கு ஆனா ஒன்னும் புரியல..நாளைக்கு பத்து மணிக்கு கடையை திறக்கட்டும் அப்பறம் தெளிவா வந்து பதில் சொல்லறேன்...