16 நவ., 2011

நினைவோ ஒரு பறவை ...


நள்ளிரவில் 
பின் தொடரும் 
பேய்க் கதைகளாய் 
துரத்துகிறது 
நீ 
விட்டுச்சென்ற காதல்..

சிறு தூறல் மண்வாசமென 
மனப் பிம்பங்களின் நேசமிகுதி 
உன்னைப் போலவே பார்க்கும்
உருவங்களில் தெரிகிறது.
தேவதை போலவும், 
பிசாசை போலவும் ..

மது ராத்திரிகளின் 
விடியும் நேரத்தில் 
மறக்காமல் வந்து விடுகிறாய் நீ
கூடவே 
சில பிசாசுகளும்..

அறியப்படாத 
நபர்களின் மரணமென  
உன் திருமண நாள் எனக்கு,
கரி நாள்..

உன் கணவனுக்கும் இருக்கலாம் 
என்னைப்போல் ஒரு கதை,
பிசாசுகளின் கதை ...

நினைவின் ஓட்டைகள் 
வழியே 
வழியும் மதுவை குடிக்கும் 
சிறகை இரவல் கொடுத்த பறவை,
போதையின் உச்சத்தில் 
எழுதிக்கொண்டிருக்கும்,
பிசாசுகளின் கவிதை ...

3 கருத்துகள்:

Paleo God சொன்னது…

நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது .// :))

rajamelaiyur சொன்னது…

//சிறு தூறல் மண்வாசமென
மனப் பிம்பங்களின் நேசமிகுதி
உன்னைப் போலவே பார்க்கும்
உருவங்களில் தெரிகிறது.
தேவதை போலவும்,
பிசாசை போலவும் ..
//
அழகான வரிகள்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கவிதை அருமை.