26 நவ., 2011

தலைவன்...

இருக்கிறான் தலைவன்
பிரபாகரன்
நீ நம்படா நம்பு!

ஈழத் தமிழினம் வாழப்
போர்க்களம் கிளம்படா கிளம்பு!

தன் மானத் தமிழரின்
தலைமையில் போர் தொடக்கு!

சிங்கள வெறியன்
திமிர் அடக்கு!

ஈழம் தமிழர்கள் தாய்மண்
இல்லையாம் மகிந்தா குதிக்கிறான்!

இறந்து விழுந்த நம் தமிழர்
பிணங்களை காலால் மிதிக்கிறான்!

காலம் அழைக்குது!

ஈழம் அழைக்குது!

கடலைத் தாண்டுவோம்!

களத்திலே ஈழ நிலத்திலே
நாமும் நெருப்பைத் தூண்டுவோம்!

சிறுத்தை படை ஈழப் புலிகள் படை
இரண்டும் ஒன்றுதான் கிளம்பு!

சினந்து புயல் நெஞ்சில் சுமந்து
கிளம்படா!சிதறட்டும் கொழும்பு!

வெறுத்து வாடா உன் உயிரை
நெஞ்சிலே புயலைத் தூக்குவோம்!

வெறியர் சிங்களர் கொடியர்
சூழ்ச்சிகள் சிதறத் தாக்குவோம்!

உலகில் என்றைக்கும் புலிகள்
ஓய்ந்ததாய் வரலாறில்லையே!

உறுமி எழும்கடல்
அலைகள் ஓயுமா?

இல்லை!
இல்லையே!
கலகம் இல்லாமல்
உலகம் திருந்தாது!

களப்போர் ஆடுவோம்!
கயவர் சிங்களர் படையை
வென்று நாம் வாகை சூடுவோம்!

- காசி ஆனந்தன்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நான் சமீபத்தில் ஜெர்மன் சென்றிருந்தேன் அங்கு எனது நண்பர் ஓரிடத்திற்கு
சென்று வரலாம் என்று என்னை அழைத்து சென்றார் ஒரு படகில் நீண்ட பயணத்திற்கு
பிறகு ஒரு கப்பலை அடைந்தோம் அது ஒரு மிக பெரிய சரக்கு கப்பல் அதில் நிறைய
கன்டய்னர்கள் இருந்தன என்னை ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு அருகில்
இருந்த கன்டய்னருள் சென்றார் 3மணி நேரம் கழித்து திரும்பி வந்தார் அங்கிருந்த
சூழ்நிலையே அசாதாரணமாக இருந்தது இரண்டு மூன்று பேர் துப்பாக்கியோடு
சுற்றி கொண்டிருந்தனர் பிறகு வந்த படகிலேயே திரும்பினோம் . எதற்காக
வந்தோம் என்றே எனக்கு தெரியவில்லை மெல்ல நண்பரிடம் கேட்டேன்
யாருக்கும் சொல்லக்கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு
சொல்ல ஆரம்பித்தார் நான் இப்போது பார்த்து திரும்பியது பொட்டுஅம்மானை தான்
என்றார் தேசிய தலைவரும் உயிரோடு தான் இருக்கிறார் என்றார் அந்த வகையில்
சிங்களவர்களுக்கு பயம் வந்திருப்பது நியாயமே மேலும் விபரம்
சொல்ல இயலாத நிலையில்இருக்கிறேன் விரைவில் முழு விபரம்
தருகிறேன்

SURYAJEEVA சொன்னது…

என்ன நடக்குதுன்னே புரியலையே...