thanks : the hindu |
இந்த இரவு
மிக விரைவாய் முடிந்து கொண்டிருக்கிறது
இதற்கு முந்தைய நாளின் பகலில்
நீ எனக்களித்த வாக்குறுதியை நம்பி
என் வாழ்வை துவக்கி வைத்தவர்களை
முடிவாக்கி
உன்னுடன் ஒரு புதிய வாழ்வை துவங்கப்போகிறேன்
நாம்
நம் காதலில் உறுதியாக இருந்தோம்
நம் உறுதியில் அவர்கள் எதிர்ப்பின் பலம் தெரிந்தது
நாம் பலவீனமானவர்கள்
நம் காதல் பலமானது
பலவீனமான நாம்
பலமான நம் காதலை நம்பி
ஒரு
புதிய வாழ்வினை துவங்கப்போகிறோம்
இந்த இரவு முடிவதற்குள்
நான் என் வாழ்வின் முதல் அடியை
துவங்கப்போகிறேன்
எனது வீட்டில் தங்கள் மேல் உள்ள அதீத
நம்பிக்கையில்
உறங்கிக்கொண்டிருக்கின்றனர்
இன்னும் சற்று நேரத்தில் நீ வந்துவிடுவாய்
சுவர்க்கோழிகள் பயமுறுத்தும் இந்த ராத்திரியின் முடிவில்
ஒரு துக்கம் அரங்கேறும்
அவர்கள் என்னைத்தேடலாம்
தொலைத்து தலைமுழுகிவிட்டதாக
ஆறுதல் தேடிக்கொள்ளலாம்
ஆயினும்
இத்தனை வருட பந்தத்தை அறுத்த
இந்தக்காதலை
என் தலை முறை அனுபவிக்கும்
தவறாகவும்
சரியாகவும்
சமயங்களில்
வாழ்வின் பாடமாகவும்..
6 கருத்துகள்:
எமக்குப் பலமான தெய்வீகமான காதல் வரும் தலைமுறைக்குச் சரியான பாடத்தைக் கொடுக்குமா.அருமையான வார்த்தைகளோடு ஒரு கவிதை !
அறுத்த இந்தக்காதலை என் தலை முறை அனுபவிக்கும் தவறாகவும் சரியாகவும் சமயங்களில் வாழ்வின் பாடமாகவும்
அருமையான படைப்பு
இரு நிலைகளையும் மிக அழகாகச் சொல்லிப் போகும்
விதம் மிகவும் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
ஃஃஃஇந்த இரவு முடிவதற்குள்
நான் என் வாழ்வின் முதல் அடியை
துவங்கப்போகிறேன் ஃஃஃஃ
எழப்போகிறோம் என்ற நம்பிக்கையே என்றும் எழ வைக்குமல்லவா...
சிறப்பான வரிகள் சகோ....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
"..இத்தனை வருட பந்தத்தை
அறுத்த இந்தக்காதலை
என் தலை முறை அனுபவிக்கும் .."
மனசை ஏதோ செய்ய வைக்கும் வரிகள்.
நல்ல படைப்பு
மெளனம்
அண்ணா கவிதை அருமை ..........
கருத்துரையிடுக