13 டிச., 2011

ஏன் அப்படி செய்தாள்?...

எனக்கொரு காதல் இருந்தது 
வெயிலடிக்கும் சித்திரை மாத 
சிறு மழையென 
சட்டென என் முன் 
வந்தவள் அவள்.. 


எல்லாவற்றுக்கும் 
பதில் வாங்கும் 
வாதத்தில் தோற்க விரும்பாத 
அழுத்தக் காரியும் கூட 

அவளை 
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு  
வெறுக்கவும் தோணும்.. 

அவள் 
விரும்பும் யாவும் 
நான் விரும்ப வேண்டும் 
என எப்போதும் விரும்பும் 
பிடிவாதக்காரி..

வெட்கப்பட்டு பார்த்ததேயில்லை..

ஒரு இரவின் மத்தியில் 
அவள் அழைப்பு
எதிர்முனையில் கண்ணீர் 
எப்போதும்போல இன்னொரு நாடகம் 
என்பதாய்
தூக்க அயர்ச்சியில் தொடர்பை 
துண்டிக்க,
மறுநாள் காலை 
துயரமாய் விடிந்தது ....

6 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

உணர்வுகளின் வெளிப்பாடு
மிகச் சரியாகவும் அருமையாகவும்
அமைந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

குறையொன்றுமில்லை. சொன்னது…

கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

கரவைக்குரல் சொன்னது…

காதல் உணர்வுப்பரம்பல்களா?
கவி நடை சிறப்பு
வாழ்த்துக்கள்

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

எப்போதும்போல இன்னொரு நாடகம்
என்பதாய்//
இந்த இடத்தில் கவிதை முரண்படுகிறது.
நாடகமாய் கண்ணீர் வடிக்கத் தெரிந்தவள்
நாடகமாய் வெட்கப் படவும் செய்வாளே