15 டிச., 2011

வாழ்வும்,, வாழ்வும்...


நீலமும், பழுப்பும் 
கலந்த நிறம் கொண்ட 
மீன்கொத்திப் பறவையொன்று 
நீண்ட காத்திருப்பின் முடிவில் 
சரேலென 
பாய்ந்து கவ்விச்சென்றது
ஒரு சிறு மீனை
குளத்தில் 
திடீரென 
ஒரு பறவையின் வாழ்வுக்காய்  
கிளம்பிய வட்ட அலைகள் 
ஒரு மீனின் வாழ்வைப்போல் 
சிறியதாகி 
கரையில் முடிந்தது..

3 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

செந்தில்,
ஒரு வட்ட வடிவ அலையின் தோற்ற மறைவை
ஒரு மீனின் வாழ்வோடு ஒப்புமை படுத்திய விதம் அழகு

சிராஜ் சொன்னது…

செந்தில்,
உவமை நன்றாக உள்ளது. படம் பார்த்தபிறகு கவிதை எழுதினீர்கள் என்று நினைக்கிறேன். சரியா?

சிராஜ்

ஹேமா சொன்னது…

வட்ட அலையில் வாழ்வு.படத்திற்குத்தான் கவிதை !