12 டிச., 2011

முத்தமாவது ஞாபகம் இருக்கிறதா?...


அந்தக் கூட்டத்தில் 
நீ என்னை 
சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை 
ஆனால் 
மனதின் ஆழங்களில் இருந்து 
என்னை தோண்டிக்கொண்டிருந்தாய்!
எனக்கு 
உன்னை மிக நன்றாகத்தெரியும்
மறக்கக் கூடியவளா நீ!
மறக்க முடியுமா?
அந்த முத்தத்தை!!..

ஒரு முத்தம் 
ஒரே ஒரு முத்தம் 
அவசரகதியில் சுவாரஸ்ய முத்தம் 
அதிரடி முத்தம் 
அதிர்ந்து நீ எனை 
அறைந்த முத்தம் 
அத்தனை இன்பம் 
அத்தனை வலி 
சொல்லிவிடுவாய் என நானும் 
சொல்லாமல் பயம்காட்டி நீயும் 
நாட்களை கடத்திய முத்தம் 
இப்போதும் 
அப்படி ஒரு முத்தம் 
கிடைக்காமல் போகவைத்த 
முதலும் கடைசியுமான முத்தம்..

என்னைத்தான் ஞாபகம் இல்லை 
அந்த 
முத்தமாவது உனக்கு ஞாபகம் இருக்கா?..

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் முத்தம் மறக்காது பகிர்ந்துக்கொ்ணட இருவருக்கும்....

ராஜி சொன்னது…

என்னைத்தான் ஞாபகம் இல்லை
அந்த
முத்தமாவது உனக்கு ஞாபகம் இருக்கா?..
>>
அது ஞாபகம் இருந்தால் அடுத்த முத்தம் கிடைத்திருக்குமே...

பெயரில்லா சொன்னது…

எப்ப பாத்தாலும் நீ, ஒனக்கு, அப்ப, அங்க...அப்படி யாருகிட்டண்ணே தனியா பேசிட்டு இருக்கீங்க?