13 பிப்., 2012

பிப்ரவரி - 14 ...

அது 
அறியும் ஆர்வம் கொண்ட
அறியாப் பருவம்
உன் தனிமை வீட்டில் 
ஒரே ஒரு முறை மட்டும் 
காண்டம் இல்லாமல் 
அடுத்த விலக்கு வரைக்கும் 
நீ பயந்தாய்
பயம்
எனக்கும்தான்..

ஆனாலும் 
அடுத்தமுறை
நீ மறுத்துவிட்டாய்
"என்னை கட்டிப்பியா?" என்றாய்
நான் யோசித்திருந்த கணம் 
நீ அழுதாய்
காமம் 
காதலானது..


இப்போதும் 
இரவுகளில்
உன் உறங்கும் முகத்தில்
அதே காதலை
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சமயங்களில் 
விடியும் வரைக்கும்..

7 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

காதலின் பரிமாணங்கள்...

யுவகிருஷ்ணா சொன்னது…

தலைவா...

நிஜமாகவே நீங்க கவிதை எழுதத் தொடங்கிட்டீங்க :-)

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//அடுத்தமுறை
நீ மறுத்துவிட்டாய்
"என்னை கட்டிப்பியா?" என்றாய்
நான் யோசித்திருந்த கணம்
நீ அழுதாய்
காமம்
காதலானது..//

கலக்கல்...

ஹேமா சொன்னது…

காதலர் தின வாழ்த்து செந்தில் !

பெயரில்லா சொன்னது…

நீங்க எப்பண்ணே 'தலைவர்' ஆனீங்க? என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.......

பெயரில்லா சொன்னது…

இயக்குனர் பாலா கூட கொஞ்சம் 'ரொமாண்டிக்கா' பீல் பண்ணி இருப்பார். :)

சௌந்தர் சொன்னது…

சூப்பர் அண்ணா...