19 ஜூலை, 2013

மரியான்...

பரத்பாலா, ரஹ்மான், தனுஷ் கூட்டணியில் வெளிவரும் படம் என்பதால் எதிர்பார்ப்புகளை நிறைய ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படம் அதனை பூர்த்தி செய்யவில்லை. ஒரு சாதாரன மீனவ கிராமத்து இளைஞனின் காதலை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் எடுத்திருக்கிறேன் என ரசிகனின் காதில் பிளாஸ்டிக் பூ வைத்து சுற்றியிருக்கிறார் பரத்பாலா.
 
வழக்கமான தமிழ் கதாநாயகர்களுக்கான இலக்கணத்துடன் தனுஷ் மீனவ கிராமத்து இளைஞனாக காட்டப்பட்டு இருக்கிறார். அவரை சின்ன வயதில் இருந்தே காதலிக்கும் பெண்ணாக ”பூ”  பார்வதியும் அவரின் காதலுக்கு உதவியாக அப்புக்குட்டியும், கூடவே இமான் அண்ணாச்சியும் இருக்க, தனுஷ் - பார்வதி காதல் பழைய எம்.ஜி.ஆர் படங்களின் பாணியில் நகர்கிறது. அதாவது நாயகியின் காதலை வறட்டு காரனத்திற்காக நாயகன் நிராகரிக்கிறார். நாயகி உதட்டில் முத்தமிடும்போது கூட நாயகன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறார். பின்பு அவரும் காதல் காதல் வயப்படுகிறார் ( கடற்கரையில் எம்.ஜி.ஆர் பாடுகிறார்), பிறகு வில்லன், அவனுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக இரண்டு வருட சூடான் வாழ்க்கை என தனுஷுக்கு கொடுக்கப்பட்டதை செய்கிறார்.

சூடானில் இருக்கும்போது ஒரு பிளாஷ்பேக் மீனவ கிராமம், தனுஷின்  காதல் என முந்தைய பாராவின் நிகழ்வுகள் முடிந்ததும். மீண்டும் சூடான்.பொதுவாகவே கப்பல் கடத்தலுக்கு பேர் போன சூடான் நாட்டில் அங்கு பிழைக்கப்போன தனுஷையும், ஜெகனையும் திடீரென சில சூடானிகளால் கடத்தப்படுகின்றனர்.  கடத்தப்பட்டதும் இடைவேளை வருகிறது. சரி இதற்குப்பிறகாவது சுவரஸ்யமாக கதை சொல்வார்கள் என நினைத்தால் படம் எப்படா முடியும் என்றிருக்கிறது.

படத்தில் சொல்லும்படியான எந்தக்காட்சியமைப்பும் இல்லை. இசை, பாடல்கள், ஒலிப்பதிவு என சராசரி படமாகவே நகர்கிறது. உமா ரியாஸ்கான், சலீம் போன்றவர்களை வீணடித்திருக்கிறார்கள். இழுவையான காதல் காட்சிகளும், புரிதல் இல்லாத மீனவன் வாழ்க்கையும், சூடானை காட்டுகிறேன் என டிஸ்கவரி சானலின் பியர் கிரில்ஸ் எபெக்டில் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டிருப்பதும்ரசிகனை ஆயாசத்தின் உச்சத்திற்கே நகர்த்திவிடுகிறது.

தனுஷ் சூடானின் கடற்கரையை வந்தடைந்ததும் ”இந்தியா வந்துடுச்சுப்பா” என தியேட்டரில் குரல் வந்ததும் நிறையபேர் கைதட்டினர். அது படம் முடியப்போகிறதே என்கிற சந்தோசத்தில் எழுப்பப்பட்டவை.

6 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

தனுஷிற்காக பார்க்கலாம்தானே??

rajasundararajan சொன்னது…

நன்றி, நூறு ரூபாய்ச் செலவைத் தடுத்ததற்கு!

vasu balaji சொன்னது…

ஒங்களையெல்லாம் சூடான்லயே எறக்கி விட்ருக்கணும்.:))

பெயரில்லா சொன்னது…

அந்த வில்லன் பயலை ஆடித்தள்ளுபடில வாங்கி இருப்பாங்க போல.

Unknown சொன்னது…

/-- தனுஷ் சூடானின் கடற்கரையை வந்தடைந்ததும் ”இந்தியா வந்துடுச்சுப்பா” என தியேட்டரில் குரல் வந்ததும் நிறையபேர் கைதட்டினர். அது படம் முடியப்போகிறதே என்கிற சந்தோசத்தில் எழுப்பப்பட்டவை. --/

கேமரா - சிறப்பாக இருந்தது. நல்ல விஷயங்களையும் சொல்ல வேண்டும் இல்லையா?

தனுஷ் மற்றும் பார்வதி சிறப்பாகச் செய்திருந்தார்கள்.அதையும் சொல்லியே ஆக வேண்டும்.

antony சொன்னது…

சூது கவ்வும்ல டாக்டர் தாதா சொல்ற மாதிரி கிளி ஜோசியன் எல்லாம் ரியல் எஸ்டேட் பண்ற மாதிரி கீரை விக்கறவன் எல்லாம் விமர்சனம் எழுதுனா இப்படி தான் இருக்கும்.( 4 வில்லு , 5 வேட்டைக்காரன், 6 குருவி, 7 ஜி , 8 வேலாயுதம் பார்க்க வைக்கணும் )ஒரு நல்ல படம் எடுத்த புடிக்காதா உனக்கு ....கமர்சியால் படமே இன்னும் எத்தன நாள் தான் பார்பிங்க... இந்த மாதிரி நல்ல படமும் பாருங்க.......