9 ஆக., 2010

இந்தியா - பயோடேட்டா

ஒரு மாறுதலுக்காக இந்தவார பயோடேட்டா சக பதிவர் தம்பி விந்தை மனிதன் எழுதியிருக்கிறார்.. மிகுந்த சமூக கோபம் உள்ள இவரின் சமீபத்திய கவிதைப் பார்வை என்னை வியக்க வைத்த ஒன்று...

பெயர்                                   : இந்தியா
  

இயற்பெயர்                        :
 
ஜம்புத்வீபம் என்கிற நாவலந்தீவு
தலைவர்                             : தற்போது சோனியா
துணை தலைவர்              :மன்மோகன் சிங்
மேலும் 
துணைத் தலைவர்கள்    :அம்பானி, டாட்டா, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி போன்ற மிகப்பெரும் தொழில் அதிபர்கள்
வயது                                   : சிந்துச்சமவெளி நாகரீகம் தோன்றியது முதல் தோராயமாக 5000 ஆண்டுகள்
தொழில்                              : மேற்குலக நாடுகளுக்கு சேவை செய்வது
பலம்                                     : 100 கோடி மக்கள்
பலவீனம்                             : மதவாதம், ஊழல்
நீண்ட கால சாதனைகள்        : பங்களாதேஷிற்குப் பிரசவம் பார்த்தது
சமீபத்திய சாதனைகள்           : நவீன அனுமனாய் ஈழம் கொளுத்தியது
நீண்ட கால எரிச்சல்                : சீனா
சமீபத்திய எரிச்சல்                   : தண்டகாரண்யம்
மக்கள்                                          : வாக்குச்சாவடி செல்பவர்கள் மட்டும்
சொத்து மதிப்பு                          : பன்னாட்டு நிறுவனங்களுக்கு பங்குவைத்தது போக மிச்சமிருந்தால்...
நண்பர்கள்                                  : முன்பு சோவியத், இன்று அமெரிக்கா
எதிரிகள்                                      : இனவாரி, மொழிவாரி தேசியம் பேசுபவர்கள் 
ஆசை                                           : தெற்காசியாவின் தாதாவாக
நிராசை                                       : இலங்கையில் ஏகபோகம்
பாராட்டுக்குரியது                   : முன்பு அணிசேரா நாடுகளின் தலைவன்...தற்போது????
பயம்                                             : மாவோயிஸ்ட்டுக்கள்
கோபம்                                        : எல்லையில் நீளும் பாகிஸ்தானின் வால்
காணமல் போனவை              : காந்தியம்
புதியவை                                    : கேத்தான் தேசாய்கள் பரவலானது
கருத்து                                        : மொத்தம் ஐநூற்றிச் சொச்சம் மாவட்டங்களில் 150 மாவோயிஸ்ட்டுக்கள் கட்டுப்பாட்டிலாம்.... அப்போ ஆப்பா??!!
டிஸ்கி                                          :இந்தியா தனது வல்லரசுக் கனவுகளை விடுத்து நூறுகோடி மக்கள்வளத்தை முறைப்படுத்தி செழுமைப்படுத்தும் வேலைகளில் இறங்கினால் அடுத்த நூற்றாண்டு முதல் உலகத்தின் அசைக்க முடியாத தலைவன்!


49 கருத்துகள்:

நேசமித்ரன் சொன்னது…

நல்லா எழுதியிருக்கார் விந்தை மனிதன்


என் வாழ்த்துகள்

dheva சொன்னது…

விந்தை மனிதன் ...விவரமாகவே சொல்லியிருக்கிறார்...

பதிவில் பகிர்ந்ததிற்கு நன்றி செந்தில்!

பனித்துளி சங்கர் சொன்னது…

உண்மைகளை மீண்டும் உரைக்க சொல்லி இருக்கிறது இந்த பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே

Karthick Chidambaram சொன்னது…

வல்லரசு கனவுதான் பெரிய பிரச்சனை. சரியான பதிவு.

vasu balaji சொன்னது…

good one sir!

முனியாண்டி பெ. சொன்னது…

Good and Real one

vinthaimanithan சொன்னது…

என்னைக் கவுரவப்படுத்தியதற்கு நன்றி அண்ணா!
பிரசவ அறைக்கு வெளியில் எதிர்பார்ப்புக்களோடு நின்று கொண்டிருக்கும் தகப்பனின் நிலையில் இருக்கிறேன்!

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

விந்தை மனிதரே .. கலக்கல் ... வெகு அருமை ... தோழர் செந்திலோடு போட்டியிடும் திறன் கொண்ட டேட்டா கலக்ஷன் ...

vinthaimanithan சொன்னது…

டேட்டா மட்டும்தான் என்னோடது... ஃபோட்டோ அண்ணனோடது. எப்பிடித்தான் புடிக்கிறாரோ! மாஞ்சு மாஞ்சு எழுதுனத எல்லாம் ஒத்த ஃபோட்டோல அமுக்கிட்டாரே மனுசன்!

வினோ சொன்னது…

போட்டோ... அண்ணனின் ரசியம்... விந்தை மனிதன் ... உண்மைகளை அருமையா சொல்லியிருக்கிறீர்கள் ...

ஹேமா சொன்னது…

படத்தைப் பார்க்க முடியவில்லை செந்தில்.
பாராட்டுக்கள் விந்தையருக்கு.

மாயாவி சொன்னது…

அண்மைய செயல்பாடு,
ஸ்ரீலங்காவும் சீனாவும் சேர்ந்து சீவிய ஆப்பில் தானே ஏறி உட்கார்ந்தது!!

எல் கே சொன்னது…

ஒரு சில காரனங்குல்க்காக எதிர்மறை வாகு தருகிறேன் முதன் முதலாக

Unknown சொன்னது…

விந்தை மனிதரே .. கலக்கல் ...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

உண்மைகளை அருமையா சொல்லியிருக்கிறீர்கள் ...

பெயரில்லா சொன்னது…

விந்தை மனிதனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி....சொன்னமாதிரியே கவிதைப்பார்வைல கலக்கி இருக்கார்....

"பாரத் மாதா கீ ஜே!"

///////அரிசில புழு இருக்கா
புழுவுக்குள்ள அரிசி இருக்கா
ஆராய்ச்சி பண்றான்
அழுக்கு கோமணத்தோட

இரண்டாயிரத்தி இருவதுல
இந்தியா வல்லரசாம்
எழுதி மாயுறாரு
கலாம் அய்யரு////////////////

அப்படீன்ன்னு இன்றைய இந்தியாவின் நிலையைப் பிரதிபலிக்கிறார் தனது வசீகரிக்கும் வார்த்தைகளால்...

புகைப்படம் மற்றும் பகிர்தலுக்கு நன்றி செந்தில் அவர்களே!

காமராஜ் சொன்னது…

நிஜமான கோபம்.
கவிதைக்கோபம்.
அறச்சீற்றம்.
என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
ரோஷம் என்றுகூட.
நம்பிக்கை
பெரிதாகிக்கொண்டே வருகிறது.

ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.

லெமூரியன்... சொன்னது…

\\வயது : சிந்துச்சமவெளி நாகரீகம் தோன்றியது முதல் தோராயமாக 5000 ஆண்டுகள்....//
என்ன கொடுமை இது....
இந்தியாவிற்கு வயது ஐம்பதுதான் தோழனே...அதற்க்கு முன் எங்கும் எவரும் இதை ஒரு தேசமாகவோ அல்லது ஒரு பெயரிலோ அழைக்கப்பட்டது இல்லை....
ஏன் இப்பொழுதும் நமது அரசியல் சாசனம் இந்திய என்று குறிப்பிடுவதில்லை..
இந்திய கூட்டமைப்பு(indian union) என்றே குறிப்பிடப் படுகிறது...
ஆதலால் இந்திய துணைக் கண்டம் என்று உலக நாடுகளால் பார்க்க படுகிறது..!

ஜோதிஜி சொன்னது…

விந்தை மனிதன் வியக்க வைத்த நபர் தான். பெற்ற தாக்கம் அதிகம். இது போன்று அறிமுகம் நன்று.

லெமூரியன் கருத்தைப் பார்த்தீர்களா?
அவர் எழுதுவது குறைவு. உருவாக்கும் தாக்கம் மிகப் பெரிது.

வல்லரசு என்ற ஆசை இந்த வல்லூறுகளிடம் இருந்து கிடைக்குமா செந்தில்.

லெமூரியன்... சொன்னது…

தனித் தன்மையுடைய பல இனங்கள் ஓரிடத்தில் வாழ்வது மிக அரிது...
அப்படி வாழக் கூடிய பட்சத்தில் தங்களின் அடையாளங்களை பாதுகாக்க ஒவ்வொரு இனமும் பாடுபடும்..

அடையாளங்களை மறந்தோ அல்லது மறுத்தோ..
ஓரினம் அல்லது ஓர் நாடு என்று அடையாளபடுத்துவது அழகல்ல..!

நமது நாடு என்பது தமிழ் நாடு...
சில பல கட்டாயங்களுக்காக தற்காலிகமாக நாம் சேர்ந்திருப்பது இந்தியக் கூட்டமைப்புடன்...என்று கொள்ளலே எதார்த்தம்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

super post na

Mohamed Faaique சொன்னது…

இந்த புகைப்படம் இந்தியாவுடையது அல்ல.. பிலிப்பைன்ஸ் உடையது....

Kousalya Raj சொன்னது…

யதார்த்தமான வரிகள்...! விந்தை மனிதனின் வார்த்தைகளை கொணர்ந்த நண்பர் செந்தில் அவர்களுக்கு நன்றிகள்...இருவருக்கும் வாழ்த்துக்கள்....

ஒரு கேள்வி இருவரிடமும்....???

வல்லரசு வல்லரசு என்கிறார்களே அப்படினா என்ன.....விளக்குவீர்களா.....??!!

சௌந்தர் சொன்னது…

மிகவும் அருமையா சொல்லி இருக்கிறார் விந்தை மனிதன்க்கு வாழ்த்துக்கள்...நன்றி செந்தில் அண்ணா...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பகிர்ந்ததிற்கு நன்றி

Unknown சொன்னது…

1.தன் சொந்த நாட்டை எள்ளி நகைப்பது, தற்பொழுது, ஃபேஷன் ஆகி வருகிறது! தனி மரம் எப்போதும் தோப்பாகாது! தனியே சென்று சாதிப்பது, பூகோள ரீதியில், நமது நாட்டின் எந்த பகுதிக்கும் சாத்தியமல்ல! அப்படியே சென்றாலும், இன்னொரு அயலானுக்கு, பணிந்தே இருக்க வேண்டும்!

2.சொந்த நாட்டை கேவலப்படுத்தும் அளவுக்கு, உம்மைப் போன்றோருக்கு சுதந்திரம், இங்கே மலிவு!

3.தொழிலதிபர்கள் மட்டும், இங்கே வாழுவதில்லை! இலவசங்களும் அடித்தட்டு மக்களை, இங்கு நல்ல முறையில், வாழ வைத்துக் கொண்டுதான் இருக்கிறது!

4.சில மாநில அரசியலாரின் கையாலாகாதத்தனமே, மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்குக் காரணம்! வங்க செங்கொடிகளின், ஊக்குவிப்பு மேலும் ஒரு காரணம்! தமிழகத்தைப் போல, ஆந்திர ராஜசேகர ரெட்டியைப் போல, கடுமையான நடவடிக்கை எடுத்தால்,மாவோ தீவிரவாதம் நசுக்கப்பட்டு விடும்!

சசிகுமார் சொன்னது…

//சமீபத்திய சாதனைகள் : நவீன அனுமனாய் ஈழம் கொளுத்தியது//

அருமை நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

vinthaimanithan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vinthaimanithan சொன்னது…

என் எழுத்துக்களுக்கு எப்போதும் ஊக்கமளித்துவரும் செந்திலண்ணா இப்போது மேலும் வெளிச்சம் காட்டியிருக்கிறார். என் உணர்வுகளை வெறுமே நன்றியறிதல் என்ற வார்த்தைக்குள் குறுக்கிவிட முடியாது. அண்ணனுக்காக எப்போதும் நெகிழும் என்னெஞ்சம்! வெறும் வார்த்தையல்ல...

லெமூரியன்... உங்கள் கருத்துக்களில் எனக்கு முழுதும் உடன்பாடு உண்டு. தேசியம் என்ற கருத்தாக்கம் பற்றி விவாதிக்க ஒற்றைப்பதிவும், பின்னூட்டங்களும் போதாது. மேலும் இந்தியக் கூட்டமைப்பு என்ற சொல்லாடலைவிட இந்திய ஏகாதிபத்தியம் என்ற சொல்லாடலையே அதிகம் விரும்புபவன் நான். இந்தப் பதிவில் கூட "எதிரிகள் : இனவாரி, மொழிவாரி தேசியம் பேசுபவர்கள்" என்று நான் குறிப்பிட்டுள்ளதைக் கூர்ந்து கவனித்தால் என் மனவோட்டம் உங்களுக்குப் புரியும்.

//நமது நாடு என்பது தமிழ் நாடு...//

தமிழ்த்தேசியம் எனக்கு உவப்பான விஷயமே! ஆனால் இன்று தமிழ்த்தேசியம் பேசுவோர் தமிழ்த்தேசியம் என்பதை எவ்வாறு வரையறுக்கிறார்கள்... தமிழ்த்தேசியம் எதை மற்றும் யாரையெல்லாம் உள்ளடக்கியிருக்கின்றது என்பதில் நிரம்பக் குழம்பிய குட்டைகளாகவே இருக்கிறார்கள். இவர்களை நம்பி மொழிவாரி தேசியம் பேசுவதன் அபாயம் எனக்குத் தெளிவாகவே புரிகிறது...

நான் உங்களை எனது தனிமடலுக்கு அழைக்க விரும்புகிறேன்


//வல்லரசு வல்லரசு என்கிறார்களே அப்படினா என்ன.....விளக்குவீர்களா.....??!!//

அது வேறொண்ணுமில்லீங்க.... நம்ம லோக்கல் பாஷையில ஏரியா தாதான்னு சொல்லுவோம்ல... அதைத்தான் இந்த நாதாரிங்க ரொம்ப டீஸண்டா சொல்லிக்கிறாங்க!

அடேங்கப்பா! ரம்மியாரே! உங்களோடு கொஞ்சம் ரம்மியாட ஆசையாத்தான் இருக்கு! இந்த தளம் ஏற்ற இடமல்ல. கட்டாயம் தேடி வர்றேன்... அய்யா லெமூரியாரே! அண்ணனை கொஞ்சம் கவனிங்க!

sudhanthira சொன்னது…

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. இதை படித்த பிறகு மக்களை பற்றி அரசு கவனம் கொள்ள வேண்டும்.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு .உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

Thenammai Lakshmanan சொன்னது…

விந்தை மனிதனின் பயோடேட்டா உண்மை. மற்றும் அருமை,,

நாடோடி சொன்னது…

விந்தை ம‌னித‌ரின் இடுகை ந‌ல்லா இருக்கு.. ப‌கிர்விற்கு ந‌ன்றி செந்தில் அண்ணா..

vasan சொன்னது…

/இந்தியா தனது வல்லரசுக் கனவுகளை விடுத்து நூறுகோடி மக்கள்வளத்தை முறைப்படுத்தி செழுமைப்படுத்தும் வேலைகளில் இறங்கினால் அடுத்த நூற்றாண்டு முதல் உலகத்தின் அசைக்க முடியாத தலைவன்!/
In nutshell , It is the FACT.
Let India Have an INDIAN as its HEAD.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லா எழுதியிருக்கார் விந்தை மனிதன்.

vasan சொன்னது…

ப‌ட‌ம் ஆகா,
இதைத்தான் 'ஒரே குட்டையில் ஊ(நா)றிய
ம‌ட்டைக‌ள்'ன்னு செல்றாங்க‌ளோ?

செல்வா சொன்னது…

// சமீபத்திய சாதனைகள் : நவீன அனுமனாய் ஈழம் கொளுத்தியது//
உண்மை ..!!

ஜெயந்தி சொன்னது…

விந்தை மனிதன் பயோ டேட்டாவும் அருமை.

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள், விந்தை மனிதன்!

மாப்ஸ், இந்தப் படத்துல இருக்குறது கொஞ்ச நாட்கள் கழிச்சு பழக்கமாயிடும் நமக்கு. அப்போ பாத்துக்கலாம்....ரொம்ப தூக்கம் வருது.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அட்டகாசம் தலைவரே......

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

பகிர்ந்ததிற்கு நன்றி

INDIA 2121 சொன்னது…

உண்மையான ஆதங்கம்

Bibiliobibuli சொன்னது…

சகோதரர் ராஜாராமன், அசத்திட்டீங்க போங்க!

இந்தியா வல்லரசு ஆகும் போது ஈழம் சாம்பல் மேடாகியிருக்கும்.

sakthi சொன்னது…

சமீபத்திய சாதனைகள் : நவீன அனுமனாய் ஈழம் கொளுத்தியது

இது அப்பட்டமான முகத்தில் அடிக்கும் உண்மை

விந்தை மனிதரே உங்கள் நியாயமான

கோபத்திற்கு என் வணக்கங்கள்!!!!

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

//துணை தலைவர் : மன்மோகன் சிங்//

நல்ல நச்சு...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

விந்தை மனிதன் குட் திங்கிங்..!

போட்டோ செவுலு திரும்புது...!

priyamudanprabu சொன்னது…

லெமூரியன்... சொன்னது… தனித் தன்மையுடைய பல இனங்கள் ஓரிடத்தில் வாழ்வது மிக அரிது...
அப்படி வாழக் கூடிய பட்சத்தில் தங்களின் அடையாளங்களை பாதுகாக்க ஒவ்வொரு இனமும் பாடுபடும்..

அடையாளங்களை மறந்தோ அல்லது மறுத்தோ..
ஓரினம் அல்லது ஓர் நாடு என்று அடையாளபடுத்துவது அழகல்ல..!

நமது நாடு என்பது தமிழ் நாடு...
சில பல கட்டாயங்களுக்காக தற்காலிகமாக நாம் சேர்ந்திருப்பது இந்தியக் கூட்டமைப்புடன்...என்று கொள்ளலே எதார்த்தம்..!
/////////


ஆமாம்


இதை பலமுறை என் நண்பர்களுடனான விவாதங்களில் நான் கூறியுள்ளேன். எதோ என்னை தேச(சியா) துரோகி போல பார்ப்பார்கள்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

உண்மைகள் உணரவைக்கின்றது

வால்பையன் சொன்னது…

உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கார்!

நசரேயன் சொன்னது…

//நூறுகோடி மக்கள்வளத்தை முறைப்படுத்தி செழுமைப்படுத்தும் வேலைகளில் இறங்கினால் அடுத்த நூற்றாண்டு முதல் உலகத்தின் அசைக்க
முடியாத தலைவன்!//

உண்மை