26 செப்., 2010

திலீப சுடர்!

இந்தக் கவிதையை படைத்தது தம்பி வழக்குரைஞர் இரா.சாமிதுரை. இவர் எண்திசை எனும் வலைபக்கத்துக்கு சொந்தக்காரர்...

திலீபா !....
உமக்காக .,
ஊமைகள் அழுகிறோம்!!
இதயமற்ற  தேசத்திலிருந்து...
அந்த தேசத்தின் மன்னிப்புகளையும் ஏந்தி.

கால்நூற்றாண்டுக்கு முன்னர்
காந்தியம் புதைக்கப்பட்ட
கல்லறையின் முன்பு
தேசமென கருதி
நீ மண்டியிட்டு வேண்டினாய் !

நெருப்பை நீர் கொண்டு அணைக்க 
உன் ஊன் உருக்கி
பெருமடல் எழுதினாய்!

செவிப்பறைகள் கிழிய
நீ எழுப்பிய அழுகுரல்
என்தேசம் எங்கும் ஒலித்தது!
என் இதயமற்ற தேசத்தின்
செவிகள் ஏற்கனவே இறந்திருந்தது.

நீ  துப்பாக்கியில்
ரோஜாக்களை நிரப்பி 
புறாக்களை ஏந்தினாய!

புத்தன் பிறந்த என் தேசமோ
சிறகுகளைகொய்து
சமாதானத்தை புதைத்தது.


காந்தி பெயர் ஒட்டிக்கொண்ட
மரித்த பிணங்களிடம் வரங்கேட்டாய்!
தன் உடல் தாண்டி சிந்தை வரை
முசொலினின் வார்ப்பை தழுவிய
நேருவின் வாரிசு 
உன் உயிரை காணிக்கை கேட்டது.

மெல்ல நீ இறந்து கொண்டு இருந்தாய்...
காந்தியம் அடைக்கப்பட்ட
சவப்பெட்டியின் மூடியில்
ஒவ்வொரு நாளும் ஒரு ஆணி
அறையப்பட்டுக்கொண்டிருந்தது.

நெருப்பு
நீரை எரித்தது!
முழுவதுமாய் ஒருநாள் நீ எரிந்துபோனாய்.

 உன் உயிர்பிரிந்த நாளில் ...
 முழுவதுமாய்இறந்து கிடந்தது -
 நீ  ஆதரித்த
அனாதை காந்தியமும்.

12 கருத்துகள்:

dheva சொன்னது…

ஆழாமாய் நெஞ்சினுள் ஒர் வலி செந்தில்..... ! ஈழத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களை ஒவ்வொரு தமிழனும் தனது பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்....

உணர்வு பூர்வமான கவிதை... நன்றி... சாமித்துரைக்கும்.. உங்களுக்கும்...!

காமராஜ் சொன்னது…

மிக உருக்கமான கவிதை.கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

vinthaimanithan சொன்னது…

//அந்த தேசத்தின் மன்னிப்புகளையும் ஏந்தி.//

இந்த தேசத்திற்கு மன்னிப்பா...?

சில குற்றங்கள் மன்னிக்கப்ப்ட முடியாதவை.... மன்னிக்கக்கூடாதவை நண்பரே!

Jerry Eshananda சொன்னது…

நினைக்கிறேன்....உக்கிரத்தை தேக்கி வைக்கிறேன்.

கவி அழகன் சொன்னது…

நல்லூர் முன்றலில் இருந்து கவிதை கேட்ட நினைவுதான் வருது
தீலீபன் அண்ணா எங்கு சென்றாய்

'பரிவை' சே.குமார் சொன்னது…

உணர்வு பூர்வமான கவிதை... நன்றி... சாமித்துரைக்கும்.. உங்களுக்கும்...!

அன்பரசன் சொன்னது…

உருக்கமான கவிதை தல.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

நம்மை நிமிரச்செய்ய தன்னை விதைத்த நம்மவர் அனைவருக்கும் சிரம்தாழ்ந்த வீரவணக்கங்கள் ...

பகிர்வில் இணைசேர்ந்த சொந்தங்களுக்கும், தளம் அமைத்த என் சகோதரருக்கும் நன்றிகள்.

ஹேமா சொன்னது…

மனம் நல்லூர்க்கந்தனின் வாசலில் நிற்கிறது.திலீபன் அண்ணாவின் முகம் அந்த முருகனின் முகத்தில்!

அலைகள் பாலா சொன்னது…

வார்த்தை வரவில்லை.
//சில குற்றங்கள் மன்னிக்கப்ப்ட முடியாதவை.... மன்னிக்கக்கூடாதவை நண்பரே!//

ரிப்பீட்

வலசு - வேலணை சொன்னது…

நீ துப்பாக்கியில்
ரோஜாக்களை நிரப்பி
புறாக்களை ஏந்தினாய!

புத்தன் பிறந்த என் தேசமோ
சிறகுகளைகொய்து
சமாதானத்தை புதைத்தது.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

//சில குற்றங்கள் மன்னிக்கப்ப்ட முடியாதவை.... மன்னிக்கக்கூடாதவை நண்பரே!//

சத்தியமான வார்த்தைகள்.

கண்ணீரோடு பூக்கள் வைக்கிறபோது, வேறு எதுவும் செய்யஇயலா ஆற்றாமையில் எழுந்த வார்த்தைகள்.

என் நெஞ்சில் ஒருகனவு உண்டு., என்றோ ஒருநாள் உணர்வுள்ள மனிதன் இந்திய இறையாண்மை (புண்ணாக்கு) நாற்காலியில் அமரும்போது இந்த தேசத்தின் சார்பில் ஈழ உறவுகளிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

குற்றத்திற்கு தண்டனைபெற்றாலும் அது வேறு.,

குற்றத்திற்கு மன்னிப்பு கோரியே ஆக வேண்டும், அதன் முதல் வெளிபாடே என் மன்னிப்பு.

உங்கள் ஈரமுள்ள உணர்வுகள் என்றும் காக்கப்படட்டும்.

நம் குரல்கள் சில நயவஞ்சக அரசியல்பிழைப்பு வாதிகளால் நசுக்கப்பட்டு விட்டது.
நம்புவோம்... காலம் சுழலும்.

நம் பிள்ளைகளுக்கு பிழைப்போடு, உணர்வையும் சொல்லிக்கொண்டே இருப்போம். சொந்த மண்ணில் விரட்டப்பட்ட இனம் அயல் மண்ணில் எத்தனை நாள் கொண்டாடப்படும் என்பதற்கு நிச்சயமில்லை. தலைவர் வந்து மட்டுமே நம்மை மீட்க வேண்டும் என்பது ஒருவகை துரோகம்.

காலங்கள் நகர்ந்தாலும் ஏதோவொரு காலத்தில் நம் மண் மீட்கப்படும் வரை நம்பிக்கையையும்,மன உறுதியையும் ஈரத்தோடு காப்போம்.

சிங்களவன் தமிழனை விழ்த்த பல நூறாண்டு காத்திருந்தான்.

நாம் நிச்சயம் வெல்வோம்! என்று? என்பதே கேள்வி.

விதைகளை அறிவால் சென்ற இடம் எங்கும் தூவோம்.... யுதர்கள் போன்று.

நாம் வீரசிவாஜியை உருவாக்கிய அவனுடைய தாயைபோல் நம்பிள்ளைகளிடன் நம் மண்ணைப்பற்றியும்., அதன் வரலாறுப்பற்றியும்., அதன் தலைவனைபற்றியும் இப்போது மட்டுமல்லாமல்., காலங்கள் தொடர்ந்து பேசுவோம்... வெல்லும்வரை.

அன்புடன்., இரா.சாமித்துரை