1 நவ., 2010

வ - குவாட்டர் கட்டிங் - தமிழ்ப் பெயரா?...

தி.மு.க வெற்றி பெற்றதும் அறிவித்த முக்கியமானவற்றில் தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதுதான். தமிழ்த் திரைத்துறையினர் உடனே கலைஞரை பல்லக்கில் தூக்கி வைத்து புகழ்பாடினர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பால் கோடம்பாக்கத்தில் பரம ஏழைகளான சாப்பாட்டுக்கே சிரமப்பட்ட தயாரிப்பாளர்களும், கதாநாயகர்களும் அதன்பின்தான் தங்கள் வறுமை நிலையில் இருந்தே மீண்டார்கள். இதற்குள் தமிழகத்தின் விடிவெள்ளி சூப்பர் ஸ்டார் நடித்த "சிவாஜி" படம் பெயரிடபட்டுவிட்டது. இதற்க்கு வரிவிலக்கு உண்டா என பத்திரிகை உலகம் கவலைப்பட்டு எழுதியபோது சிவாஜி என்பது பெயர்ச்சொல் எனவே அதனை தமிழ்பெயராக ஏற்றுக்கொள்ளலாம் என தமிழ் கூறும் நல்லுலகை காப்பாற்றினார் கலைஞர்.

கலைஞரை தூக்கிவைத்து கொண்டாடிய திரையுலகத்துக்கு பின்னால்தான் புரிந்தது, கலைஞர் திட்டமிட்டே வரிவிலக்கை கொண்டுவந்தார் என்பது, தற்போதைய தமிழ் திரையுலகை மொத்தமாக ஆட்சி செய்வது கலைஞர் குடும்பத்தினர்தான். அதனால் தங்கள் குடுமபதினர் நலனுக்காகவே வரிவிலக்கை கொண்டுவந்ததை அறிந்த கோடம்பாக்கத்தினர் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமல் புழுங்கினர். சென்ற வார ஆனந்த விகடனில் இயக்குனர் அமீர் வெளிப்படையாகவே இனி கோடம்பாக்க கதவுகள் ஊரிலிருந்து கனவுகளோடு வரும் இளைஞர்களுக்கு திறக்காது என பேட்டியளித்தார். இவ்வளவுக்கும் அவரின் அடுத்த படத்தை தயாரிப்பவர் தென் சென்னையின் தி.மு.க மாவட்ட செயலாளர் அன்பழகன். சமீபத்தில் நடந்த இயக்குனர்கள் சங்கத்தின் விழாவுக்கு கலைஞரை அழைப்பதற்கு நிறைய இயக்குனர்கள் விருமபவில்லை என்று செய்தி கசிந்துள்ளது. கூடிய விரைவில் தேர்தல் வர இருப்பதாலும், நிறைய இயக்குனர்கள் அ.தி.மு.க அனுதாபியாகிவிட்டதாலும் இந்த மாற்றம்.

விசயத்துக்கு வருவோம் "வ- குவாட்டர் கட்டிங்'" படத்திற்கு தெரிந்தே முதலில் குவாட்டர் கட்டிங் எனப் பெயர் வைத்தனர். படம் இசைவெளியீட்டு விழாவுக்கு முன்னர்தான் "வ" என்ற தலைப்பை வைத்து அதன் கீழே குவாட்டர் கட்டிங் என எழுதினார்கள். இன்றுவரைக்கும் ஊடகங்களில் "வ- குவாட்டர் கட்டிங்" என்றே விளம்பரம் வருகிறது. அதிலும் கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி. சிரிப்பொலி போன்ற கலைஞரின் குடும்பத்துக்கு சொந்தமான தொலைகாட்சிகளில் அதிகம் விளம்பரம் செய்யப்படுகிறது. இப்படி இருக்க சமீபத்தில் வெளிவந்த "ஒச்சாயி" திரைப்படத்துக்கு அது தமிழ்ப் பெயர் இல்லையென்று வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டது தமிழக அரசு. ஒச்சாயி என்பது தென்தமிழகத்தில் குலதெய்வமாக வழிபடும் கடவுளின் பெயர். இதற்க்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்த பிறகும் அரசு தன் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. அந்தப்படம் வெளிவந்து சரியாக ஓடக்கூட இல்லை. 

சிவாஜி, பாஸ் என்கிற பாஸ்கரன், வ குவாட்டர் கட்டிங் போன்ற தூய தமிழ்ப் பெயர்களுக்கு வரிவிலக்கு அளிக்கிற தமிழக அரசு. தாங்கள் வரிவிலக்கு அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை, அதற்க்கென்று தனியாக அரசு செயலாளர் இருக்கிறார். அந்த துறையினர்தான் முடிவு செய்கிறார்கள் என இன்று விளக்கம் வெளியிட்டுள்ளது. எனகென்ன சந்தேகம் என்றால் இந்த துறையே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வராதா என்ன?.

செம்மொழி மாநாட்டுக்கு முன்பு தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டும் என தீர்மானம் கொண்டுவந்து அதனை கட்டாயமாக கடைபிடிக்க வைத்தார்கள். அதற்கான தமிழ்ப் பெயர்களையும் தேர்ந்தெடுத்து தந்தார்கள் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தூய தமிழ்ப் பெயர்களில் கடைகளின் பெயரைப் பார்க்கிறபோது மனதிற்கு நிறைவை அளித்தது. ஆனால் அதக்குபின் அந்த கடுமை என்ன ஆனது என்று தெரியவில்லை, மற்ற மாவட்டங்களில் இன்னும் அது செயலுக்கு வரவில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரை அரங்குகளின் முதலாளிகள் வரி கட்ட வேண்டாம் என்று சொல்வதும். டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு ஆரோக்கியத்துக்கு உதவும் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி தராமல் இருப்பதும் தமிழகத்தை எந்த வகையில் மேம்படுத்தகூடும்  என்று தெரியவில்லை.

தமிழக அரசு திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே நியாயமான விசயம் இல்லை. அதுவும் ஒரு தொழில் என்று வரும்போது அதற்கான அரசாங்க வரியை வசூலிப்பதுதான் நியாயம். ஒரு அரசு வேலை செய்யும் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நபரின் சம்பளம் தரும்போது வரியைப் பிடித்துக்கொண்டுதான் தருகிறார்கள். இவர்கள் யாரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கவில்லை, சம்பாதிக்கவும் இல்லை. அப்படி இருக்க கோடிகள் புரளும் துறையான சினிமாத்துறைக்கு மட்டும் வரிவிலக்கு தருவது ஒருதலைபட்ச்சமானது.

இப்போது சொல்லுங்கள் வ குவாட்டர் கட்டிங் தமிழ்ப் பெயரா?..

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்...   

46 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

"வ" என்பது தான் அந்த படத்தின் பெயர்
குவாட்டர் கட்டிங் என்பது subtitle தணிக்கை குழு சான்றிதழ் என்ன பெயர் வைக்கிறார்கள் பார்ப்போம்

PVS சொன்னது…

sir, please see now the news now...all films gets taxfree...

Unknown சொன்னது…

நன்றி PVS .. பிரச்சினை வரும் என்று தெரிந்துதான் மீண்டும் அறிவிப்பு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

இப்படி சினிமாவுக்கு வரிவிலக்கு அளிப்பது சரியான செயல் இல்லை என்பதும் என் கருத்து..

எல் கே சொன்னது…

எந்தப் படமாக இருந்தாலும் வரி செலுத்த வேண்டும். அதில் மாற்றம் இருக்கக் கூடாது

க ரா சொன்னது…

கேளிக்கை விசயங்களுக்கு வரி விதிக்காமல் இருப்பது அதி முட்டாள் தினம்...

Beski சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Beski சொன்னது…

வ என்றால் 1/8 - அதாவது கால் பங்கில் பாதி - அதாவது குவாட்டரில் பாதி - அதாவது குவாட்டர் கட்டிங் - என்று அர்த்தம் எனக் கேள்விப்பட்டேன். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தமிழ் வல்லுநர்கள் யாரிடமாவது இதைக் கேளுங்கள்.

மற்றபடி நீங்கள் சொல்லுவது போல ஆயிரக் கணக்கில் மாதச் சம்பளம் வாங்கும் நம்மிடம் வரியைப் பிடித்துக்கொண்டு, கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களிடம் விட்டுவிடுவது வயித்தெரிச்சல்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சாதாரண மக்களிடம் தான் வரி பிடுங்குவார்கள் ..........
சினிமாவுக்கு வரி விதிப்பு அவசியம் .........கலைஞரின் தமிழ் பற்று ஊர் அறிந்த விஷயம் .........தமிழர்களுக்காக உணவிரதம் இருந்த தலைவர் இவர் அல்லவா ?....எப்ப என்ன நடிப்பு .........

அன்பரசன் சொன்னது…

//சௌந்தர் சொன்னது…
"வ" என்பது தான் அந்த படத்தின் பெயர்
குவாட்டர் கட்டிங் என்பது subtitle தணிக்கை குழு சான்றிதழ் என்ன பெயர் வைக்கிறார்கள் பார்ப்போம்//

நானும் இதையே நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எல்லாம் சால்ஜாப்புதான்,டைட்டில் அக்மார்க் ஆங்கிலக்கலப்பு,பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேக்குது....

தமிழ் உதயம் சொன்னது…

"வ" என்பது தான் அந்த படத்தின் பெயர்
குவாட்டர் கட்டிங் என்பது subtitle '...

என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஏமாற்ற அவர்கள் ரெடி. ஏமாற இவர்கள் ரெடி.

GSV சொன்னது…

அப்பாட அடுத்த படம் ரிலீஸ் ஆகபோகுது.....
தமில் வல்க ...
தமிலர் தலிவர் வல்க...

அந்த குரூப் எந்த படாத ரிலீஸ் பண்ணினாலும் ஆன்லைன் மட்டுமே பார்ப்போர் சங்கம்.

Ramesh சொன்னது…

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.. இளைஞர்களுக்கான கதவுகள் கோடம்பாக்கத்தில் மூடப்பட்டது மட்டுமல்ல.. தமிழகத்தில் நியாயத்திற்கான கதவுகளும் மூடப்பட்டுவிட்டன.. மக்களும் என்ன ஆனா நமக்கென்ன என்ற மனநிலைக்கு வந்து ரொம்ப வருசம் ஆச்சு.. நீங்கள் சொல்லும் நியாயமெல்லாம்.. காற்றோடுதான் கரையும்...

Paleo God சொன்னது…

தொல்காப்பியத்துல இருக்கோ என்னமோ?

ராஜன் சொன்னது…

சினிமா துறைக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் எரிச்சல் அடைய வைக்கிறது , நம் தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இன்னும் Platform வாழ்கை தான் வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள் , மழை பெய்தால் அவர்கள் எங்கு போவர்கள் , இப்போது இலவச வீடு யாருக்கு அவசியம் ! தமிழ்நாட்டில் உள்ள நிறுவனகளுக்கு / கம்பனிகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு உண்டா !

அருண் பிரசாத் சொன்னது…

நியாயமான கேள்வி...

பூனைக்கு யார் மணி கட்டுவது?

THOPPITHOPPI சொன்னது…

நான் இதை பற்றிதான் நாளை பதிவு போடலாம் என்று இருந்தேன் நீங்கள் அருமையாக சொல்லிவிட்டீர்கள் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அது இல்ல. வ குவாட்டர் கட்டிங் விட்டதும் நம்ம ஆளுங்க எல்லாம் செந்தமிழ்ல பேசுவாங்களே. அதனால தமிழ் பேசும் உணர்வை தூண்டுவதால் இது தமிழ் பெயரில் சேர்க்கலாம்.

சிவராம்குமார் சொன்னது…

கண்டிப்பாக திரைப்படங்களுக்கு வரி விளக்கு அளிக்க கூடாது.... நான் இதில் உங்கள் கட்சி!

அலைகள் பாலா சொன்னது…

மக்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கு (பெட்ரோல், மருந்துப் பொருட்கள்....) கூட அநியாய வரி போடும் அரசு, திரைப் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பது கேவலாமாக உள்ளது.

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

வரிவிலக்கு.. படம் வெளிவரும்போது எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமானாலும் டிக்கட்.. இது எல்லாவற்றையுமே மாற்ற வேண்டும் நண்பா.. இல்லை என்றால் இவர்களின் இந்தக் கூத்து தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்

pichaikaaran சொன்னது…

ஊக்கப்படுத்த வேண்டிய தொழில்களுக்கு வரி விலக்கு கொடுத்து , அவற்றை வளர்த்த பின், கடைசியாக சினிமாவுக்கும் கொடுக்கலாம்

Hai சொன்னது…

வ குவாட்டர் கட்டிங் தமிழ்ப் பெயரா?..

முதலில் ஒரு குவாட்டர் அப்புறம் ஒரு கட்டிங் அப்புறமா யோசிக்கணும் அப்பதான் புரியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

முன்னாடி டாட்டா பிர்லான்னு ஒரு படத்துக்கு டைட்டில் பிரச்சனை வந்தப்போ நாங்க டாட்டா பிர்லா இல்லைன்னு டைட்டில் வெச்சாங்க.... அதுதான் ஞாபகம் வருது!

Chitra சொன்னது…

ஒரு அரசு வேலை செய்யும் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நபரின் சம்பளம் தரும்போது வரியைப் பிடித்துக்கொண்டுதான் தருகிறார்கள். இவர்கள் யாரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கவில்லை, சம்பாதிக்கவும் இல்லை. அப்படி இருக்க கோடிகள் புரளும் துறையான சினிமாத்துறைக்கு மட்டும் வரிவிலக்கு தருவது ஒருதலைபட்ச்சமானது.

....... தமிழக அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா!

காமராஜ் சொன்னது…

இதெல்லாம் உச்சக்கட்ட அநியாயங்களாக வகைப்படுத்தப்படும்.அணையப்போகும் விளக்கு பிரகாசமக எரியும்.

ராஜன் சொன்னது…

Latest தகவல் இப்போது தீபாவளி நிகழ்சிகள் விளபரத்தில் " வ " திரைப்படம் சிறப்பு நிகழ்சிகள் என்று தான் ஒளிபரபுகிறாக்கள் .

Cable சங்கர் சொன்னது…

டேய்... இடியட்.. பூல்ஸ்.. இது இப்ப தமிழாயிருச்சு.. இப்ப போய்..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எல்லாம் திமுக மயம்...

Arun Prasath சொன்னது…

தமிழ்ல பேர் வெச்சா தான் தமிழ் வளரும் அப்டின்னு தான் இந்த வரி விலக்கு கொண்டு வந்தாங்க போல. ஆமா இந்த அறிவிப்புக்கு முன்னாடி தமிழ் செத்துட்டு இருந்ததா என்ன? யாராச்சும் சொல்லுங்களேன்.

THOPPITHOPPI சொன்னது…

/// பிளாகர் Cable Sankar கூறியது...

டேய்... இடியட்.. பூல்ஸ்.. இது இப்ப தமிழாயிருச்சு.. இப்ப போய்.. /////பூல்ஸ்..

----சார் அது Fools . தமிழ்ல வரலைனா இங்கிலிஷ்லையே போடுங்க krpய ரொம்ப அசிங்கமா திட்டுற மாதிரி இருக்கு

சசிகுமார் சொன்னது…

மாதம் 5000 சம்பளம் வாங்கும் ஒரு அடிப்படை ஊழியருக்கே வரி வாங்கும் அரசே கோடியில் புரளும் இந்த சினிமாக்களுக்கு வரிவிதிப்பை ஏன் ரத்து செய்கிறாய்

pichaikaaran சொன்னது…

" krpய ரொம்ப அசிங்கமா திட்டுற மாதிரி இருக்கு"
THOPPITHOPPI அண்ணே .. கே ஆர் பியை திட்டனும்னா நேரடியா திட்டுங்க ... கேபிள்ஜி பொதுவா சொன்னதை இப்படி அவர் மேல திருப்பி விடாதீங்க.. ஹி ஹி .. ( நல்ல டெக்னிக்கா இருக்கே !! )

roomno104 சொன்னது…

aduthavar kudamba matter la thalai vedima oru quater aduchutu kupara padunga boss..

vasan சொன்னது…

இந்த‌ அர‌சிய‌ல் எஈங்க‌ள் அறியா‌த‌தா?
திமுக‌ ஆட்சிக்கு வ‌ர‌ உத‌விய‌ மிக முக்கிய‌ காரணிக‌ள்
1, ஊட‌க‌ம், குறிப்பாய் எம்ஜியார் சினிமா,
2, மாண‌வ‌ர்கள் ச‌க்தி (காம‌ராஜ‌ர், சீனிவாச‌னிட‌ம் தோல்வி)
ஆக‌, ஆட்சிக்கு வ‌ந்த‌தும்,
1, சினிமாவின‌ரை த‌ன் கைக‌ளுக்குள் போட்டுக் கொள்ளும் செய‌ல்க‌ள்
(வீடு, வ‌ரி விலக்கு, அர‌சு ப‌ட்ட‌ங்க‌ள், ப‌ணமுடிச்சு முத‌லிய‌ன. குறிப்பாய் சூப்ப‌ர் ஸ்டார்க‌ளை தன்னை புக‌ழ‌விடுவ‌து. எங்க‌ள் த‌லையே த‌லைவ‌னைப் புக‌ழுதுடான்னு ர‌சிக‌ன் ச‌ப்போர்ட் கிடைக்க்கும்)
2, காலேசு எல்லாம் சேம‌ஸ்ட‌ர் சிஸ்ட‌ம். முந்தி மாதிரி அரை ப‌ரிட்சை வ‌ரை (4 மாத‌ம்) ஃபிரியா அர‌சிய‌ல் ப‌ண்ண முடியாது. 4 மாச‌த்துக்கு ஒரு சேம‌ஸ்ட‌ர் எழுதி ஆக‌னும். அர‌சிய‌ல், ஸ்டைர்க் ப‌ண்ண‌ நேர‌ம் இல்லை. இருக்க‌க் கூடாது. முத்துகிருஷ்ண‌ன் எரிந்த‌ போது எழும்பிய மாண‌வ‌ ப‌டை, காலேஷ், ஹாஸ்ட‌ல் மூடீட்டாங்க என்ற‌தும் க‌லைந்து விட்ட‌து. சோறில்லாம‌ல்,
த‌ங்க‌ இட‌மில்லாம‌ல், மாண‌வ‌ ப‌டை வாப‌ஸாகிய‌து.

எது அர‌சிய‌ல், ம‌க்க‌ள் ப‌ல‌ம் என்ப‌தை முழுவ‌தும் தெரிந்து ஆடும் ச‌துர‌ங்க‌த்தில் மு.க‌. ஒரு ஆன‌ந்த்.

THOPPITHOPPI சொன்னது…

////// பார்வையாளன் கூறியது...

" krpய ரொம்ப அசிங்கமா திட்டுற மாதிரி இருக்கு"
THOPPITHOPPI அண்ணே .. கே ஆர் பியை திட்டனும்னா நேரடியா திட்டுங்க ... கேபிள்ஜி பொதுவா சொன்னதை இப்படி அவர் மேல திருப்பி விடாதீங்க.. ஹி ஹி .. ( நல்ல டெக்னிக்கா இருக்கே !! )
///////////////////////////////////


நான் நகைச்சுவைக்காக சொன்னது . நீங்க ஏல்றைய இழுத்து விட்டுட போறீங்க

ஜெயந்தி சொன்னது…

தரமான, இயல்பான கதையமைப்புள்ள படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம். (உ.ம்.) பருத்தி வீரன், களவாணி, பசங்க, பூ...

'பரிவை' சே.குமார் சொன்னது…

எல்லாம் சால்ஜாப்புதான்.

செல்வா சொன்னது…

// "ஒச்சாயி" திரைப்படத்துக்கு அது தமிழ்ப் பெயர் இல்லையென்று வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டது தமிழக அரசு. ஒச்சாயி என்பது தென்தமிழகத்தில் குலதெய்வமாக வழிபடும் கடவுளின் பெயர். //

ஒச்சாயி படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கலைன்னு நானும் கேள்விப்பட்டேன் அண்ணா ,. ஆனா எனக்கும் அந்த பெயர் புதுசுதான் ..

செல்வா சொன்னது…

//தமிழக அரசு திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே நியாயமான விசயம் இல்லை.//
இதுதான் முக்கியம் அண்ணா ., திரைப்படம் என்பதும் ஒரு தொழிலே ., அதற்க்கு எதற்கு வரிவிலக்கு என்று தெரியவில்லை .. ஆக தமிழில் பெயர் வைத்தால் அனைத்து தொழிலுக்கும் வரிவிலக்கு கிடைக்குமா ..?

ராஜ நடராஜன் சொன்னது…

//தமிழக அரசு திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே நியாயமான விசயம் இல்லை. அதுவும் ஒரு தொழில் என்று வரும்போது அதற்கான அரசாங்க வரியை வசூலிப்பதுதான் நியாயம்.//

அடைப்பான் நியாயம்.

தமிழ் பேச காசு அநியாயம்.

சில புதுப்பட பெயர்கள்.

திண்ணை காலியாகுமா?

காசே வெல்லும் 2011

Unknown சொன்னது…

எந்திரன் என்பது தமிழ் பெயரா? இருந்தும், வெறும் 150 ரூபாயில்(No spelling mistake) தயாரான இந்த படத்துக்கு, எங்க தலைவர் இந்த பரம ஏழை தயாரிப்பாளருக்கு வரி விளக்கு அளித்தார்! இப்ப பேசுங்க பாஸ்?

செல்வா..... சொன்னது…

என்னதான் பேர் வச்சாலும் நாம நினைச்சாதான் படம் ஓடும்னு அவங்களுக்கு தெரியாது .
அப்புறம் என்ன வரி விலக்கு? சொறி விலக்கு.

புலிகுட்டி சொன்னது…

"வ - குவாட்டர் கட்டிங் - தமிழ்ப் பெயரா?..."
தமிழர்களுக்கு நன்றாக தெரிந்த பெயர்கள்.”வ”என்பதும் வாட்டர் பாக்கெட்டை குறிக்கும்.எப்புடி விளக்கம்.

Unknown சொன்னது…

karunathi in kalai sevai so tax relaxation,,,

ரோஸ்விக் சொன்னது…

இதெல்லாம் நெம்ப ஓவரு ஆமா...