26 நவ., 2010

எங்கே போகிறது இந்தியா? பகுதி - ஒன்று ...

தினமும் ஒரு ஊழல், சில கொலைகள், நிறைய திருட்டு, மோசடி இப்படி  நாம் படிக்கும், பார்க்கும் செய்திகள் இம்மாதிரியான விசயங்களுக்கு நாம்  பழகிவிட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது. எப்ப பணம் வாங்கிகொண்டு ஓட்டுபோட தயாராக இருந்தோமோ அப்போதே நமக்கு இதை எல்லாம் தட்டிக்கேட்கும் அதிகாரமும் கைவிட்டுப்போயவிட்டது. மிகப்பெரிய ஜனநாயக நாடு என இன்னும் எத்தனை நாளைக்கு பெருமையாக சொல்ல முடியும் என நினைக்கிறீர்கள். அரசியல் பலமும், அதிகார பலமும் இப்போது நீதியையும், ஊடகத்துறையும் வலைத்துவிட்டன. தமிழகத்தில் இருக்கும் எல்லா ஊடகங்களும் அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள் அல்லது அவர்கள் பிடியில் இருக்கின்றன. அதனால் ஒரு ஒழுங்கான செய்திகூட இப்போது வருவதில்லை. நமக்கென்ன என்று எல்லோரும் ஒதுங்கிக்கொண்டு விட்டோம். காரணம் கட்டுங்கடங்காமல் போன விலைவாசியினால் நமக்கு யோசிக்கவே நேரமின்றி பணத்தின் பின்னால் நாம் ஓடிக்கொண்டு இருப்பதுதான்.

சுதந்திரம் வாங்கியபின் காந்தி சொன்னார் காங்கிரசை கலைத்துவிடுவோம் என, அதற்கு ஒத்துகொள்ளாத தலைவர்கள் நேரு தலைமையில் இந்தியாவை ஆள ஆரம்பித்தார்கள், இந்திரா வரைக்கும் ஓரளவுக்கு நன்றாகத்தான் நடந்தது. ஆனால் ராஜீவ் காந்தி பதவிக்கு வந்ததும் இந்தியா இப்படி தரங்கெட காரணம் ஆனார். ஒரு இத்தாலி பெண்மணியை மணந்தவருக்கு எப்படி இந்திய தேசத்தின் மீது அக்கறை இருந்திருக்க முடியும். அன்றைய சந்தர்ப்பம் அவரை முடிசூட வைத்தது,. இந்திரா ஒதுக்கி வைத்திருந்த அனைவரும் சந்தர்ப்பம் பார்த்து ராஜீவுடன் கரம் கோர்த்தனர். இந்திய தேசத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை, இந்திரா உருவாக்கிய புலிகள் இயக்கத்தினரை மலையாளிகளின் வழிகாட்டுதலால் சிங்களனுக்கு ஆதரவாக களமிறங்கி தன்னையே இழந்தார் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்திக்குப் பின் காங்கிரஸ் பின்னுக்கு போகத் துவங்கியது. பாரதிய ஜனதா எழுச்சியுர ஆரம்பித்தது. பிரியங்காவை முன்னிறுத்தி காங்கிரசார் அரசியல் பன்ன விரும்ப, பிரியங்கா ஒதுங்கிக்கொண்டு தம்பி ஆளாகும்வரைக்கும் அன்னையை முன்னிறுத்தி தான் பின்னால் இருந்துகொண்டார். முட்டாள் பி.ஜெ.பி காரர்கள் சரியான நேரத்தில் எடுத்த தவறான முடிவுகளால் மீண்டும் கட்டமைக்க முடியாத இடத்திற்கு தள்ளப்பட்டனர். இத்தாலியை பிறப்பிடமாக கொண்ட சோனியாவுக்கு இந்தியாவின் மீது எப்படி அக்கறை இருக்கும். வாய்ப்பு கிடைத்து தனக்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். மீண்டும் மலையாளிகளின் உதவியுடன் தமிழினத்தை பூண்டோடு அழிக்க உதவினார். அந்த நேரத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டிய நாம் மௌனம் காக்க, காங்கிரஸ் புண்ணாக்குகள் இந்திராவின் மரணத்திற்கு காரணமான இனத்தின் நபரை பிரமதர் ஆக்கி அழகு பார்க்கிற புடுங்கிகள் அன்னையின் மனம் குளிர ராஜீவ் படுகொலை பற்றி பேசி விசுவாசத்தை காட்ட அடித்துகொண்டனர். 

பிரச்சினை முடிந்து விட்டது, விடுதலைபுலிகளும் இல்லை என்று ஆனபின் இன்னும் ஏன் சமஉரிமை கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டிய இடத்தில் இருந்த கலைஞர் சரியாக அதே நேரத்தில் தன் குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவி வேண்டி டெல்லியில் தவம் கிடந்தார். ஆனால் வெட்கமில்லாமல் இன்னும் அங்கு மின்வேலி முகாமுக்குள் கிடப்பவர்கள் பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் இரண்டாம் முறை பொறுப்பேற்றவுடன் வரிசையாக அதன் வண்டவாளங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. போன ஆட்சியில் போடப்பட்டு செயல்படுத்தப்பட்ட சேது சமுத்திர திட்டம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் இப்போது எந்த நிலைமையில் இருக்குன்னு தெரியல. வாஜ்பாயின் திட்டமான தங்க நாற்கர திட்டத்தை செயல் படுத்தி அதனை தங்களின் திட்டமாக விளம்பரம் போட்டுகிட்டாங்க. அடுத்து தெலுங்கானா பிரச்சினை, அதற்காக போராடியவர்கள் வரும் தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள், அதற்கடுத்து தண்டகாரண்யா பிரச்சினை, இன்றைக்கு பெரும்பாலான மாவட்டங்கள் நக்சலைட்டுகளின் கட்டுபாட்டில், இன்றுவரைக்கும் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இழுத்தடிக்கின்றனர். வீரப்பனை சுட்டுகொன்ன  விஜயகுமார் பொறுப்பேற்று இருக்கிறார், அனேகமாக நக்சலைட்டுகளை பூண்டோடு ஒழிக்கும் திட்டம் தயாராகி கொண்டிருக்கும். இப்ப ஆந்திரா, கர்நாடக இரண்டையுமே கட்சி வேறுபாடின்றி ரெட்டி சகோதரர்கள் கையில் வைத்திருக்கின்றனர். 

மும்பையில்  தீவிரவாதிகள் தாக்குதலின்போது பலியான கார்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கி போலியானது என விசயம் கசிந்தபோது பல்லிளித்த அரசு, சசிதரூர் விசயத்தில் மவுனம் காத்த அரசு அவர் ராஜினாமாவுடன் எல்லாம் முடிந்து போகும் என நினைத்தால், அதற்கடுத்து கல்மாடி, இவரால் இந்தியாவின் ஒட்டுமொத்த மானமும் விமானம் ஏறியது. அடுத்து அசோக் சவான், இப்ப ராசா, நாளைக்கு யாரோ. இதற்கிடையில் கர்நாடாகாவில் எடியூரப்பா இதுவரைக்கும் பதவியை பிடித்து தொங்கிகொண்டிருக்கிறார். பி.ஜெ.பி இந்த விசயத்தில் மவுனம் காப்பது ஆச்சர்யமான விசயம் இல்லை.  இன்றைய தேதியில் தமிழகத்தின் அதிகார மைய்யங்கள் கணக்கில் வராத அளவுக்கு இருக்கிறது,. முதல்வரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் எல்லா இடங்களிலும் பரவி மன்னராட்சி நிலையை மறுபடி கொண்டு வந்திருக்கிறார்கள். எதிர்கட்சியாக இருந்து தட்டிக்கேட்க்க கூடிய பலத்தையும், அதிகாரத்தையும் பெற்ற ஜெயலலிதா கொட நாட்டில் தூங்குகிறார். ராமதாஸ் தன் மகனுக்கு ராஜயசபா சீட் கொடுத்தால் கட்சியை கலைத்துவிட்டு தி.மு.க.வில் சேர்ந்துவிடுவார். விஜயகாந்த் விருத்தகிரி படத்தில் பிசியாக இருந்துகொண்டு கூட்டணிக்கும், பெட்டிக்கும் மச்சானை அனுப்புகிறார். வைகோ, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் அறிக்கைகளை இப்ப யாரும் மதிக்கிறது இல்லை.இன்றைக்கு இதுதான்  தமிழ்நாட்டின் நிலைமை. 

மத்தியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவிக்கு ராகுல்தான் வருவார். இப்பவே கிட்டத்தட்ட ராகுலின் கையில்தான் காங்கிரஸ் இருக்கு, அதற்குள்ளாகவே இங்கு ஊழல் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது, அடுத்து இவரே வந்தால் என்ன ஆகும் என நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் படு தோல்வி அடையவைத்த பீகார் மக்களால் ஓரளவுக்கு நிதானத்துக்கு வருவார்கள். பக்கத்து நாடான சைனா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் தலைமை பொறுப்பை ஏற்கபோகிறது , இப்பவே காஷ்மீருக்கு தனி விசா, அருணாச்சல பிரதேசம் என்னுது என பிரச்சினைய கிளப்புது. போகப்போக நமக்கு நிறைய ஆப்பு இருக்கு. சைனா உற்பத்தி திறனை தன்னகத்தே முழுமையாக கொண்டுவந்து உலக சந்தையில் முக்கால் வாசிக்கும் மேல் ஆதிக்கம் செலுத்திகொண்டிருக்கிறது. நாமோ இன்னும் சேவைத்துறையை கையில் வைத்துகொண்டு வல்லரசு கனவுகளில் காலம் தள்ளுகிறோம். 

நாளை எதுவும் நடக்கலாம்.. இன்றே விழிப்புணர்வு பெறுவோம் ...

39 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//நாளை எதுவும் நடக்கலாம்.. இன்றே விழிப்புணர்வு பெறுவோம் ...//

நிச்சயம் நாளை எதுவும் நடக்கலாம்... இந்திய அரசியலை அப்பட்டமாக கொல்லி இருக்கறீர்கள்..

சிலர் சுயநலத்துக்காக ஒரு இனம் பாதி அளிக்கப்பட்டு விட்டது...

மாணவன் சொன்னது…

//நாளை எதுவும் நடக்கலாம்.. இன்றே விழிப்புணர்வு பெறுவோம் ...//

நிச்சயமாக...

மாணவன் சொன்னது…

//"எங்கே போகிறது இந்தியா? பகுதி - ஒன்று ..."//

சரியான பார்வை...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி..

மாணவன் சொன்னது…

இந்த படமெல்லாம் எங்கேயிருந்துதான் எடுக்கறீங்களோ?

செம கலக்கல்...

ஜோதிஜி சொன்னது…

எதிர்மறை கருத்து என்கிற விதத்தில் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் குறித்து ஆயுள் முழுக்க தினந்தோறும் ஒரு இடுகை போட்டுக் கொண்டேயிருக்கலாம் செந்தில். ஆனால் இது போன்ற பார்வையில் இந்தியாவில் உள்ள அடிப்படை கிராமம் சார்ந்த நிகழ்வுகளை, தொழில் ரீதியாக அரசாங்க உதவியின்றி வளர்ந்த மனிதர்களையும் சேர்ந்து பதிவு செய்யுங்கள். காரணம் ஊடகத்தை விட பதிவுலகத்தின் வீச்சு அதிகமானது. என் அப்பா இந்தியா என்று சொல்லிக்கொண்டு இந்தியாவை எட்டிப்பார்க்காமல் எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் உங்கள் எழுத்துக்களை படித்துக் கொண்டுருக்ககூடும்.

சசிகுமார் சொன்னது…

//முதல்வரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் எல்லா இடங்களிலும் பரவி மன்னராட்சி நிலையை மறுபடி கொண்டு வந்திருக்கிறார்கள். எதிர்கட்சியாக இருந்து தட்டிக்கேட்க்க கூடிய பலத்தையும், அதிகாரத்தையும் பெற்ற ஜெயலலிதா கொட நாட்டில் தூங்குகிறார். ராமதாஸ் தன் மகனுக்கு ராஜயசபா சீட் கொடுத்தால் கட்சியை கலைத்துவிட்டு தி.மு.க.வில் சேர்ந்துவிடுவார். விஜயகாந்த் விருத்தகிரி படத்தில் பிசியாக இருந்துகொண்டு கூட்டணிக்கும், பெட்டிக்கும் மச்சானை அனுப்புகிறார். வைகோ, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் அறிக்கைகளை இப்ப யாரும் மதிக்கிறது இல்லை//


இவனுங்கள நம்பி எப்படி சார் ஓட்டு போடுவது. நான் ஓட்டளிக்க விரும்பவில்லை 49 "O" படிவத்தை கொடுங்கள் என்று கேட்டால் ஓட்டளிக்க விரும்பவில்லை என்றால் வெளியே போய்விடு அந்த படிவம் எல்லாம் கிடையாது என்று காட்டமாக பதில் வருது சார். எப்படி சார் நம் எதிப்பை தெரிவிப்பது.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//ஜோதிஜி சொன்னது…
எதிர்மறை கருத்து என்கிற விதத்தில் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் குறித்து ஆயுள் முழுக்க தினந்தோறும் ஒரு இடுகை போட்டுக் கொண்டேயிருக்கலாம் செந்தில். ஆனால் இது போன்ற பார்வையில் இந்தியாவில் உள்ள அடிப்படை கிராமம் சார்ந்த நிகழ்வுகளை, தொழில் ரீதியாக அரசாங்க உதவியின்றி வளர்ந்த மனிதர்களையும் சேர்ந்து பதிவு செய்யுங்கள். காரணம் ஊடகத்தை விட பதிவுலகத்தின் வீச்சு அதிகமானது. என் அப்பா இந்தியா என்று சொல்லிக்கொண்டு இந்தியாவை எட்டிப்பார்க்காமல் எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் உங்கள் எழுத்துக்களை படித்துக் கொண்டுருக்ககூடும்.//


சகோதரர் ஜோதிஜியை வழிமொழிகிறேன்

தல தளபதி சொன்னது…

//நாமோ இன்னும் சேவைத்துறையை கையில் வைத்துகொண்டு வல்லரசு கனவுகளில் காலம் தள்ளுகிறோம்.//

முன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் சொன்னத எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கபோல.

iniyavan சொன்னது…

செந்தில்,

நானும் நண்பர் ஜோதிஜி கருத்தை வழிமொழிகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சி சதவிகிதம் 8% சதவிகிதம் என்று நினைக்கிறேன். 10% சதவிகிதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் ஊழல் இருக்கிறது. அதையே சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

இந்தியாவைப் பற்றி எழுத நிறைய நல்ல விசயங்களும் இருக்கிறது.

தயவு செய்து நான் எழுதியதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக எடுத்துக்கொள்ளவும். பிடிக்கவில்லை என்றால் அழித்துவிடுங்கள்.

வினோ சொன்னது…

இன்னும் எழுதங்கள் அண்ணா.. நல்ல விசயங்களையும் சேர்த்து...

ராஜ நடராஜன் சொன்னது…

//இந்திரா வரைக்கும் ஓரளவுக்கு நன்றாகத்தான் நடந்தது. //

இப்பத்தான் இதுபற்றி என்னோட கடைல மறுமொழியிட்டு வருகிறேன்.அங்கே போக சோம்பேறிப்படுவர்களுக்காக:) இங்கே அதையே ரிபீட்டுக்கிறேன்.

இணைய காலத்துக்கு பின்புதான் எல்லாமே கொஞ்சம் பளிச்சின்னு தெரியுது.அதாவது இந்திராகாந்தியின் ஆட்சி காலத்துல அமெரிக்க,ரஷ்ய பனிப்போரின் காரணமாக கே.ஜி.பி.சி.ஐ.ஏ மூலமாக பரிசுன்னு குறிப்பிட்ட ஆட்களுக்கு லஞ்சம் துவங்கியதுன்னு நினைக்கிறேன்.பின் மெல்ல மெல்ல கட்டமைப்புக்களை உருவாக்க உருவாகும் திட்டங்களில் துவங்கியது லஞ்சத்தின் கரங்கள்.வெளி உலகுக்கு பொதுவாக அறிமுகமான போபர்ஸில் துவங்கியது இதன் உச்ச கட்டம்.போபர்ஸை குத்ராச்சியை தப்பிக்க வைக்கும் வரை சி.பி.ஐயின் துணையோடு காங்கிரஸ் எத்தனை தகுடுதத்தம் செய்தது என்பது தமிழர்களுக்கு மட்டும் தெரியாத ஒன்று.

ராஜ நடராஜன் சொன்னது…

//பிரச்சினை முடிந்து விட்டது, விடுதலைபுலிகளும் இல்லை என்று ஆனபின் இன்னும் ஏன் சமஉரிமை கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டிய இடத்தில் இருந்த கலைஞர் சரியாக அதே நேரத்தில் தன் குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவி வேண்டி டெல்லியில் தவம் கிடந்தார்.//

ஸ்பெக்ட்ரத்தின் காலகட்டங்களை நினைத்தால்.........

ராஜ நடராஜன் சொன்னது…

//அடுத்து தெலுங்கானா பிரச்சினை, அதற்காக போராடியவர்கள் வரும் தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள்,//

அக்காவுக்கு இப்பவே கொஞ்சம் கடிவாளம் போட்டு வைப்பது நல்லது.ஏன்னா ஸ்பெக்ட்ரம் ஒரு பாயிண்ட்ல முந்தறதுக்கு ஜெயலலிதாவுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்குது.

ராஜ நடராஜன் சொன்னது…

//ராமதாஸ் தன் மகனுக்கு ராஜயசபா சீட் கொடுத்தால் கட்சியை கலைத்துவிட்டு தி.மு.க.வில் சேர்ந்துவிடுவார்.//

அதென்னமோ உண்மைதான்:)

ராஜ நடராஜன் சொன்னது…

//ஜயகாந்த் விருத்தகிரி படத்தில் பிசியாக இருந்துகொண்டு கூட்டணிக்கும், பெட்டிக்கும் மச்சானை அனுப்புகிறார். வைகோ, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் அறிக்கைகளை இப்ப யாரும் மதிக்கிறது இல்லை.இன்றைக்கு இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. //

பழமை ஸ்டைல்ல இகிகிகீ போட்டுக்கறேன்:)

ராஜ நடராஜன் சொன்னது…

//மத்தியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவிக்கு ராகுல்தான் வருவார்.//

JPC க்கு காங்கிரஸ் சம்மதிக்காத போதே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து மன்மோகனை உட்கார வச்சிட்டு ராகுலை பிரதமர் பதவிக்கு கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுக்கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ராஜ நடராஜன் சொன்னது…

//இப்பவே காஷ்மீருக்கு தனி விசா, அருணாச்சல பிரதேசம் என்னுது என பிரச்சினைய கிளப்புது. போகப்போக நமக்கு நிறைய ஆப்பு இருக்கு. //

இலங்கை குறித்த சீனாவின் முதல் அறிக்கைக்காக அனைவரும் காத்திருங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

//சைனா உற்பத்தி திறனை தன்னகத்தே முழுமையாக கொண்டுவந்து உலக சந்தையில் முக்கால் வாசிக்கும் மேல் ஆதிக்கம் செலுத்திகொண்டிருக்கிறது. நாமோ இன்னும் சேவைத்துறையை கையில் வைத்துகொண்டு வல்லரசு கனவுகளில் காலம் தள்ளுகிறோம். //

உலக சந்தையில் சீனா தயாரிப்பு தவிர ஏனைய நாட்டுப் பொருட்களை காண்பவன் பாக்கியவான்.வளைகுடா நாடுகள் இதில் இப்பொழுதே சீனாவையே முழுதும் சார்ந்து நிற்க வேண்டிய நிலை:(

காரணம் அடிமாட்டு விலை,தரம் குறைந்ததாக இருந்தாலும்.

Bibiliobibuli சொன்னது…

//இந்திய தேசத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை,///

HAAH???

ராஜ நடராஜன் சொன்னது…

//இவனுங்கள நம்பி எப்படி சார் ஓட்டு போடுவது. நான் ஓட்டளிக்க விரும்பவில்லை 49 "O" படிவத்தை கொடுங்கள் என்று கேட்டால் ஓட்டளிக்க விரும்பவில்லை என்றால் வெளியே போய்விடு அந்த படிவம் எல்லாம் கிடையாது என்று காட்டமாக பதில் வருது சார். எப்படி சார் நம் எதிப்பை தெரிவிப்பது.//

இந்த அரச மனபாவாத்தை மாற்றுவது மிக மிக முக்கியம்.இதற்கு என்ன செய்யலாம்ன்னா பெயர் நல்லா தெரியறமாதிரி அரசு பணியாளர்களை பேட்ஜ் குத்திட சொல்லிடனும். அவர் பெயர் எழுதி தேர்தல் ஆணையத்துக்கு அவர்கிட்டேயே கையெழுத்து வாங்கி புகார் அனுப்பலாம்.போடமாட்டேன்னு சொல்லும் கில்லாடிகளுக்காகவும்,லாபிக்காரர்களுக்கும் வேண்டியாவது தேர்தல் அறை நடவடிக்கை காமிரா கண்காணிப்பு அவசியம்.

ராஜ நடராஜன் சொன்னது…

//இந்தியாவைப் பற்றி எழுத நிறைய நல்ல விசயங்களும் இருக்கிறது.//

உலகநாதன்!இந்தியாவின் நல்ல விசயங்களையும் முன்னிலைப்படுத்துவோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

:(

ஹேமா சொன்னது…

தமிழ்நாட்டுச் சிலரது தொப்புள் கொடி மட்டுமே ஈழத் தமிழர்..... மாற்றிக்கொள்வோம் செந்தில் !

ஈரோடு கதிர் சொன்னது…

இடுகைக்கு படம் செம பொருத்தம்!

raja சொன்னது…

HATS OFF HATS OFF...பெரிய பத்திரிகைகள் என்று சொல்லிக்..கொல்லும்.. ஆ.வி. அல்லியில் கூட இது போன்ற சொரணையுள்ள கட்டுரைகள் வந்ததில்லை..

Bibiliobibuli சொன்னது…

ஓம் செந்தில், ஹேமாவினதும் என்னுடையதும் ஒரே கருத்து தான். நிர்வாக செளகர்யங்ககுக்காக காலனியாதிக்கத்தில் இணைக்கப்பட்ட நிலப்பரப்புத் தான் "இந்தியா" என்று சொல்கிறார்கள். இதில் நாங்கள் எப்போ அதன் தொப்புள் கோடி உறவுகள் ஆனோம்???

முடிந்தால் அதை உங்கள் பதிவில் மாற்றிவிடும்படி தாழ்மையுடன் கேட்கிறேன்.

Unknown சொன்னது…

//விஜயகாந்த் விருத்தகிரி படத்தில் பிசியாக இருந்துகொண்டு கூட்டணிக்கும், பெட்டிக்கும் மச்சானை அனுப்புகிறார்//

அந்த ஒலக சினிமா இன்னும் எடுத்து முடிக்கலையா? இப்பதான் அதைப்பற்றி பதிவு போட்டேன்! :)

RK நண்பன்.. சொன்னது…

Mika Sariyana Samayathil Kachithamana Pathivu Anna.....

Intha Makkal Ennaikku Vote ku kaasu Vanguvathai Nirhuthi sariyana Aaatkalukku Kaasu Vaangama Vote Podurangalo Appothan naam pathilukku kelvi ketka mudium....

Ninaitham Romba Kastama irukku....

Maranum Ellam Maaranum...

ஜெயந்தி சொன்னது…

இப்பல்லாம் லஞ்ச வாங்குறதுக்கு யாரும் வெக்கப்படறதே இல்ல.

Unknown சொன்னது…

அருமையான நிகழ்வுப்பதிவு நன்றி.

இப்போதைய நிலை:
ஒரு அன்னையின் சபதம்:

பணநாயகம் வாழ்க, சனநாயகம் ஒழிக

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் (கனவு by இட்லி சாரி இத்தாலி அன்னை)

vinthaimanithan சொன்னது…

//தமிழ்நாட்டுச் சிலரது தொப்புள் கொடி மட்டுமே ஈழத் தமிழர்..... மாற்றிக்கொள்வோம் செந்தில் ! //

சிலரது இல்லை... பலரது...! ரதியும் ஹேமாவும் தமிழகத் தமிழரின்மேல் இவ்வளவு கோபப் படுவதன் அவசியம் புரியவில்லை! தமிழகத்தில் பெரும்பான்மை இளைஞர்கள் நெஞ்சில் ஈழத்தைச் சுமந்துதான் திரிகின்றனர். நவீன முதலாளித்துவம் மக்களை வாயில் நுரைதள்ள ஓடும் குதிரைகளாக மாற்றியபின் நுகத்தடி சுமக்கவே அவலப்பட்டு திரியும்போது அவர்களும் என்னதான் செய்வார்கள்?

இன்று யாழில் வாழ்வைக் கொண்டாட்டமாக்கித் திரியும் இளைஞர்களைவிட எங்களுக்கு உணர்வு அதிகமாகவே இருக்கின்றது சகோதரிகளே! உங்கள் கோபம் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்து பொங்குகிறது!

ஈழத்தில் இருக்கும் கோடரிக்காம்புகளை முதலில் ஒதுக்கிப் புறம் தள்ளுங்கள்!

vinthaimanithan சொன்னது…

வெறுமனே இத்தாலி அன்னையைக் குறைகூறுவதற்குமுன் இந்திய வெண்ணைகளைப் பற்றிப் பேசுவோம். "கமான் இண்டியா! கமான்" என்ற கோஷத்தின் பின் இருந்தது தேசபக்தி என்றா கருதுகிறீர்கள்?!

சதுக்க பூதம் சொன்னது…

நல்ல பதிவு
//இந்திரா வரைக்கும் ஓரளவுக்கு நன்றாகத்தான் நடந்தது//
இந்திரா காந்தி ஓரளவு சோசியலிஸ்ட். இந்தி வெறியர்களையும் இந்து வெறியர்களையும் அடக்கி வைத்தவர். இந்தியா என்ற தேசம் இன்று முழுமையாக இருக்க அவர் தான் காரணம். ஆனால் அவர் காங்கிரஸ் மற்றும் இந்தியாவில் இருந்த சனநாயக institutionகளை முழுமையாக ஒழித்தவர். தனி மனித துதி பாடும் அரசியலும் அதிகார புரோக்கர்களின் ஆதிக்கத்தையும் வளர்த்தவர் அவர் தான்.ஆனாலும் அப்போது இருந்த சூழ்நிலையில் அவரால் மட்டுமே இந்தி ஆதிக்கத்தையும் முதலாளித்துவ ஆதிக்கத்தையும் ஒழித்திருக்க முடுயும்.

//அரசியல் பலமும், அதிகார பலமும் இப்போது நீதியையும், ஊடகத்துறையும் வலைத்துவிட்டன. தமிழகத்தில் இருக்கும் எல்லா ஊடகங்களும் அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள் அல்லது அவர்கள் பிடியில் இருக்கின்றன. அதனால் ஒரு ஒழுங்கான செய்திகூட இப்போது வருவதில்லை.//

இந்த பிரச்ச்னை தமிழகம் மற்றும் இந்தியாவில் மட்டும் இல்லை. உலகம் முழுதும் இது மிக பெரிய அபாயகரமான உண்மை. முக்கியமாக உலக மயமாக்கல் வந்த பின் உலகெங்கிலும் அனைத்து மீடியாவும் விரல் விட்டு எண்னும் இரு சிலரின் கைக்கு சென்று விட்டது. தற்போது நாம் எந்த செய்தியை படிக்க வேண்டும் என்று முடிவு செய்ய பட்டு அந்த செய்தி அந்த விதத்தில் நம்மிடம் தினிக்க படுகிறது. அது மட்டுமல்ல. எதிர் கருத்துக்களை கூறவேண்டியவர்கள் யார் என்பது தீர்மானிக்க பட்டு எதிர் இயக்கங்களும் கட்டுக்குள் வைக்க பட்டுள்ளன. இணைய ஊடகம் மட்டும் தான் ஓரளவு சுதந்திரம் உள்ளதாக உள்ளது. அதுவும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

இலங்கை தமிழர் நிலை குறித்து நினைத்தாலே மனது கணக்கிறது

//சுதந்திரம் வாங்கியபின் காந்தி சொன்னார் காங்கிரசை கலைத்துவிடுவோம் என, அதற்கு ஒத்துகொள்ளாத தலைவர்கள் நேரு தலைமையில் இந்தியாவை ஆள ஆரம்பித்தார்கள்,//

காங்கிரசை கலைத்தால் மட்டும்?

தமிழ்க்காதலன் சொன்னது…

சின்ன சின்ன திருடர்கள் சேர்ந்து தங்களுக்கு ஒரு "திருட்டுத் தலைவனை" தேர்ந்தெடுக்கும் அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற கதையின் தத்துவம் தான் இன்றைய இந்தியாவின் "ஜனநாயகம்" என பின்பற்றப் படுகிறது.
அவனவனுக்கு அவனவன் கவலை.
# ஒருத்தன் தன்னுடைய சொத்துக்களையும், தொழிலையும் எப்படி காப்பாற்றிக் கொள்வது என யோசித்து அதற்கேற்ற திருடனை தலைவனாக்குகிறான்.
# இன்னொருத்தன்.. தன்னோட அரசியல் வாழ்வுக்கு எவன் பிச்சைப் போடுவான் என எதிர்ப் பார்க்கிறான்.
# இன்னொருத்தன்... தன் குடும்பம் எப்படியெல்லாம் சுருட்ட முடியும் என்பதிலேயே ஆயுளை செலவிடுகிறான்.
# மக்கள் .... இந்த திருடர்களில் எவனாவது ஒரு திருடனை தலைவனாக்கிக் கொள்ள வேண்டிய தலையெழுத்தில் இருக்கிறார்கள்.
# இந்த தேசத்தில் ஓட்டளிக்க "விருப்பமில்லாதவர்களுக்கு" ஒரு வாக்களிப்பு வாய்ப்பு கொடுக்க பட வேண்டும். அதிக ஓட்டுக்கள் அங்குதான் விழும்.
# நாம் பேசிக் கொண்டிருக்காமல்...செயல்பட வேண்டும். நம்முடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கையை விற்காமல் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்.
# ஒவ்வொருவருக்கும் இந்த கடமை, பொறுப்பு இருக்கிறது. நாமெல்லாம் "மொத்தமாய்" தப்பாய் வாழ்ந்து பழக்கப் பட்டிருக்கிறோம். நம்முடைய சொந்த புத்தியை பயன்படுத்துவதில்லை. அன்னியன் சொல்வதே நமக்கு வேதம்.
# தமிழ் நாட்டில் பேசும் பேச்சாளர்களுக்கு ஆங்கில நாட்டு எழுத்தாள மேற்க்கோள் காட்டிகள் தேவைப் படுகிறது.
# நாம் திருந்துவோம்.... நாடு திருந்தும். நான் தயார்... நீங்க...?

Bibiliobibuli சொன்னது…

ராஜாராமன் (விந்தைமனிதன்),

நாங்கள் கோபப்படுவதாக நீங்கள் தான் கற்பனை செய்துகொள்கிறீர்கள். That is your perspective/understanding. அது எங்கள் அதவறல்ல. நாங்கள் சொல்ல வந்தது ஈழத்தமிழர்கள் இந்தியா என்கிற நாட்டின் தொப்புள் கோடி உறவுகள் அல்ல என்பதுதான்.

சரி, ஒருவேளை ஒரு பேச்சுக்கு நீங்கள் சொல்வது போலவே வைத்துக்கொள்வோம். அவுஸ்திரேலியாவில் இந்தியர்கள் அடிபட்ட போது துடித்த இந்தியா, ஏன் தமிழக மீனவர்களும் ஈழத்தமிழனும் செத்துக்கொண்டிருந்தபோது துடிக்கவில்லை. நாங்கள் இந்தியாவின் so called "தொப்புள்கொடிகள்" இல்லையா??

//நவீன முதலாளித்துவம் மக்களை வாயில் நுரைதள்ள ஓடும் குதிரைகளாக மாற்றியபின் நுகத்தடி சுமக்கவே அவலப்பட்டு திரியும்போது அவர்களும் என்னதான் செய்வார்கள்? //

//ஈழத்தில் இருக்கும் கோடரிக்காம்புகளை முதலில் ஒதுக்கிப் புறம் தள்ளுங்கள்!//

உங்கள் இரண்டு கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ராணுவ அடக்குமுறை இல்லாத, உயிருக்குப் பயமில்லாத ஓர் தேசத்தில் வாழும் உங்களால் எதையும் எதிர்க்க முடியவில்லை, "நுரை தள்ளும் குதிரைகள்" என்று உவமை. ஈழத்தமிழன் ஈழத்தில் அடிமைகளை விட கேவலமாக நடத்தபடுபவன், பார்க்கப்படுபவன். They are not treated as human beings. They have been treated as "subjects". Hope you understand that. அவர்கள் "கோடரிக்காம்புகளை" ஒதுக்கவில்லை என்பது தான் உங்கள் பிரச்சனையா?

நாங்கள் சொல்வதில் ஏதாவது புரிதல் குறைபாடு இருந்தால் கேளுங்கள். அதை விட்டுவிட்டு தமிழக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று முன்முடிவாக வார்த்தைகளை கொட்டாதீர்கள் சகோதரரே.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

good post sir

ரோஸ்விக் சொன்னது…

படமும் பதிவும் பட்டையைக் கெளப்புதுண்ணே...

கலந்து கட்டி அடிங்க.

Bibiliobibuli சொன்னது…

//தமிழ்நாட்டுச் சிலரது தொப்புள் கொடி மட்டுமே ஈழத் தமிழர்.....//

ராஜாராமன் (விந்தைமனிதன்),

தமிழ்நாடு எங்கள் தொப்புள் கோடி உறவுகள் தான், மறுக்கவில்லை. அந்த, "தமிழ்நாட்டுச் சிலரது" என்கிற வார்த்தையை நான் கவனிக்காமல் விட்டது என் தவறு தான், மன்னிக்கவும்.

Unknown சொன்னது…

வெறுமனே இத்தாலி அன்னையைக் குறைகூறுவதற்குமுன் இந்திய வெண்ணைகளைப் பற்றிப் பேசுவோம். "கமான் இண்டியா! கமான்" என்ற கோஷத்தின் பின் இருந்தது தேசபக்தி என்றா கருதுகிறீர்கள்?!

-
தல இல்லன்ன வால் ஆடாது நண்பரே.

நாளைக்கே நேரு குடும்ப வாரிசுகள் காங்கிரசில் இருந்து விலகட்டும். அப்புறம் பாருங்க கூத்த!?

அப்போது நீங்க சொல்ற மத்த வெண்ணைகள் எல்லாம் உருகிவிடும்.