16 நவ., 2010

நடிப்புச் சுதேசிகள்...


நடிக்கத்தான் வேண்டியிருக்கறது 
எல்லோரிடமும் 
எல்லா சமயங்களிலும்..

மனதுக்குள் குரூரத்தை புதைத்தவாறே 
சில புன்னகைகளை 
தாமதமாக வரும்போது 
மனைவிக்காக காரணங்களை 
கடன் கேட்டு வரும் நண்பனிடம் 
தன் இருப்பின் நிலைமையை
மேலாளரிடம் விடுப்புக்கான காரணத்தை 
இப்படியாகவும்..

சமயங்களில் 
செல்லுபடியாகா நடிப்புகளில் 
கை கொடுக்ககூடும் சில வசனங்கள்
எப்புடி உங்களால மட்டும் முடியுது 
தலைவரு சொன்னா மீற முடியுங்களா?
அண்ணன யாருன்னு நெனச்சே 
இப்படியாக சமாளிக்கலாம்..

எனக்கு நடிக்கவே தெரியாது 
பொய் சொல்றவங்கள கண்டா ஆகாது 
நான் யாருக்காகவும் என்னை விட்டுகொடுக்க மாட்டேன் 
இப்படியானவை மட்டுமே 
இப்போதெல்லாம் நடிப்பில் பின்னுகின்றன .. 

37 கருத்துகள்:

ஈரோடு கதிர் சொன்னது…

வாழ்க்கையே நடிப்பாய்

Unknown சொன்னது…

//நடிக்கத்தான் வேண்டியிருக்கறது
எல்லோரிடமும்
எல்லா சமயங்களிலும்..//
//இப்படியானவை மட்டுமே இப்போதெல்லாம் நடிப்பில் பின்னுகின்றன ..//

Unknown சொன்னது…

//தலைவரு சொன்னா மீற முடியுங்களா?//

இதுல ஏதாவது நிகழ்கால அரசியலின் உள்ளர்த்தம் இருக்குதா?

தமிழ் உதயம் சொன்னது…

எதை தொட்டாலும் அதை கவிதையாக்கி விடுகிறிர்கள். நன்றாக உள்ளது.

அன்பரசன் சொன்னது…

//மனதுக்குள் குரூரத்தை புதைத்தவாறே
சில புன்னகைகளை//

சூப்பர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எனக்கு நடிக்கவும் தெரியாது. பொய் சொல்லவும் தெரியாது ஏன்னா சத்தியமா நான் ரொம்ப நல்லவன்..

VELU.G சொன்னது…

உண்மைதான் நண்பரே

Jerry Eshananda சொன்னது…

போட்டோ சூப்பரப்பு.

ராஜ நடராஜன் சொன்னது…

தொடர் கவிதைகளா?சொல்வதற்கு எளிதாக இருக்கிறதென்பதலா?

தேவன் மாயம் சொன்னது…

நல்ல வரிகள் ! தொடருங்கள்!

Unknown சொன்னது…

வாழ்க்கை ஒரு நாடக மேடை. நாமெல்லாம் நடிகர்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நடிப்புச் சுதேசிகள் உண்மையின் பிரதிபலிப்பு.
நல்லாயிருக்கு.

Madhavan Srinivasagopalan சொன்னது…

//சத்தியமா நான் ரொம்ப நல்லவன்.. //

me too

அருண் பிரசாத் சொன்னது…

அண்ணே, சமீபமா பதிவுலகுல நடக்கற சண்டைக்கும் கடைசி பத்திக்கும் சம்பந்தம் இல்லையே #டவுட்டு

:)

க ரா சொன்னது…

எப்புடி உங்களால மட்டும் முடியுது !

Sriakila சொன்னது…

ஹா..ஹா..

a சொன்னது…

//நடிக்கத்தான் வேண்டியிருக்கறது
எல்லோரிடமும்
எல்லா சமயங்களிலும்..//
amanko...

vasu balaji சொன்னது…

அந்த லாஸ்ட் பார்ட் செம:)

nis சொன்னது…

ம்ம், சில இடங்களில் நடிக்க வேண்டிய கட்டாயமாகிறது ;(((

ராம ராஜ்யம் சொன்னது…

வணக்கம் தங்களின் கவிதை தமிழ் ப்ரபஞ்சம் தளத்தில் தங்கள் பெயரிலயே மீள்பதிவு செய்துள்ளோம்


http://alltamilblognews.blogspot.com/2010/11/blog-post_7675.html

ஹேமா சொன்னது…

ம்...உண்மைதான் செந்தில் !

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நல்லாயிருக்கு....

அருண் சொன்னது…

அப்போ இன்னைக்கு தேதியில நடிப்புல பின்றவங்க அதிகமாயிட்டங்கனு நினைக்கிறன்.

காமராஜ் சொன்னது…

சூடாக இருக்கிறது.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எல்லாம் நடிப்பு...

சிவராம்குமார் சொன்னது…

மனசுக்குள்ள இருக்கிறது மட்டும்தான் வார்த்தையா வரும்னு இருந்தா எப்படி இருக்கும்????

Arun Prasath சொன்னது…

எல்லாம் மாயா, சாயா..... சாயா... மாயா

என்னது நானு யாரா? சொன்னது…

பல நெருக்கடிகள் மாந்தர்களுக்கு.. அதனால் நடிப்பு அவசியமாகிறது. உள்ளும் புறமும் வெள்ளையாகிவிட்டால் நடிப்புக்கு அவசியம் ஏது. காந்தி மாதிரியாக, காமராஜர் மாதிரியாக, கக்கன் மாதிரியாக, அன்னைத் தெராசா மாதிரியாக....

அந்த முயற்சி அனைவருக்கும் வாய்க்கட்டும்!!!

vinthaimanithan சொன்னது…

உலகம் ஒரு நாடகமேடை...அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்ற ஷேக்ஸ்பியரின் கவிதைவரி ஞாபகம் வருகின்றதண்ணா. நாடகம் முடிந்ததும் திரைவிழும். வேறு ஒப்பனைகளோடு வேறொரு களத்தில் வேறு வேஷங்கள்... என்னமோ எனக்கும் கவிதை எழுதணும்போல இருக்கு!

செல்வா சொன்னது…

//இப்படியானவை மட்டுமே
இப்போதெல்லாம் நடிப்பில் பின்னுகின்றன//

இந்த வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..!!

க.பாலாசி சொன்னது…

சரிதானுங்க... பட்டுன்னு சொல்லிட்டீங்க...

PB Raj சொன்னது…

உலகமே நாடக மேடை

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்லாயிருக்கு செந்தில். கடைசி வரிகள் மிக அருமை.

மாணவன் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் அருமை

தொடரட்டும் உங்கள் பணி

ஹரிஸ் Harish சொன்னது…

//அருமை

தொடரட்டும் உங்கள் பணி//

vasan சொன்னது…

Very realistic