11 நவ., 2010

அரசியல் போதைக்கு ஆறு கோடி ஊறுகா...

சாக்கடைப்புழுக்கள்   
நெளியிற அரசியல்...
மேதாவி வியாக்கியானம்

கட் அவுட் பட்டங்களில்
சிரிக்கிறார்கள்
தொண்டர்களின் கடவுளர்

வட்டம், சதுரம்
ஒன்றியம், ஊராட்சி
சிறுதெய்வப் படைக்கு
ஊரெல்லாம் பூசை
கொள்கைக் கிடாவெட்டு
மணக்குது கவிச்சி

தேவாசுரப் போட்டி
மத்தாய்ச் சுற்றும் மக்கள்
கடைவது அமுதமல்ல
ஆட்சி...
கரன்சி பலத்தில் கனஜோர்

'சேவை' செய்ய வந்தாங்களாம்
பலகாரத் தூளாச்சும்
பந்திக்கு மிஞ்சுமா? 


ஓட்டுக்கு ஆயிரம்
பாட்டுக்கு நூறுநாள் வேலை 
இலவச டி.வி
எப்பவாச்சும் கொஞ்சம் கரண்ட்டு
ரூவாக்கு கிலோ அரிசி

ரத,கஜ,துரக பதாதிகள்
ரம்மி சேருமான்னு
தாத்தா வெயிட்டிங்

வாய்தா போடு கோர்ட்டுக்கு
வண்டிய எடு கொட நாட்டுக்கு
கும்பகர்ணன் தங்கச்சிக்கு
'கை கொடுக்கும் கை' கனவுக்கு அவசரம்

"ஹே!ஹே! பத்து சீட்டு பதினைஞ்சு ரூவா...
போனா வராது பொழுதுபட்டா கெடைக்காது"
பொழப்ப  கடைவிரிக்கும் போலி கேப்டன்

மவனுக்கு ராஜ்யசபா
மத்தவனுக்கு பூஜ்யசபா
மருத்துவரு கண்ணு
மகசூல்மேல

ஈழத்துப் பொணமெல்லாம் எங்களுக்கே சொந்தம்
அழுக அழுக அரசியல்ல லாபம்
திருமா கணக்கு
வருமா சரியா?

காமராஜர் படத்துக்கு
ஈழத்து எலும்புமாலை
ஆட்சில பங்கு கேட்க
அன்டிராயரைக் கிழிச்சிக்க
ஐயோ பாவம் .... காங்கிரசு 

வெதைக்கலன்னாலும் வெள்ளாம
வீட்டுக்கு வரும்...
சலவ நோட்டு, மூக்குத்தி,
சொப்புக்கொடம்

மணக்குற பிரியாணியோட
மெதக்கலாம் டாஸ்மாக்குல

கலைஞ்சரு, செயா,
சன்னு, விஜய்
சேனல மாத்திக்க
செவத்தோரம் பாய்விரிச்சி
கவுந்தடிச்சி படுத்துக்க

நாடு போவட்டும் நாசமா
நாலாவது ரவுண்டுக்கு ஊறுகா எங்கடா?

51 கருத்துகள்:

Arun Prasath சொன்னது…

எனக்கே வடை, படிச்சிட்டு வரேன்

Arun Prasath சொன்னது…

அனல் பறக்குது தல.....

RVS சொன்னது…

//நாடு போவட்டும் நாசமா
நாலாவது ரவுண்டுக்கு ஊறுகா எங்கடா? //
சுள்ளுன்னு ஏறுது செந்தில்!!!

Unknown சொன்னது…

காரம் தூக்குது பாஸ் ...அருமை அடி எண்டா அடி !!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

காரம் சும்மா தூக்குது..

எல் கே சொன்னது…

செம காரம்

பெயரில்லா சொன்னது…

//ரத,கஜ,துரக பதாதிகள்
ரம்மி சேருமான்னு
தாத்தா வெயிட்டிங்//

ஹா ஹா... அண்ணா கலக்கல்..

தமிழ்நாட்டு அரசியல போட்டு தாளிச்சிருக்கீங்க... ஒரு ஸ்பெசல் சல்யூட் அண்ணா...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

செம்ம தாக்கு தாக்கியிருக்கறீங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

//கலைஞ்சரு, செயா,
சன்னு, விஜய்
சேனல மாத்திக்க
செவத்தோரம் பாய்விரிச்சி
கவுந்தடிச்சி படுத்துக்க//

சரியான தாக்கு தாக்கியிருக்கீங்க...

சிவராம்குமார் சொன்னது…

செம குத்து ஜி.... நல்ல பச்ச மிளகா கடிச்ச மாதிரி!!!

ஹரிஸ் Harish சொன்னது…

//நாடு போவட்டும் நாசமா
நாலாவது ரவுண்டுக்கு ஊறுகா எங்கடா? //

சூப்பர் பாஸ்

ராஜ நடராஜன் சொன்னது…

இடியாப்ப சிக்கல்.

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

//மவனுக்கு ராஜ்யசபா
மத்தவனுக்கு பூஜ்யசபா //

உண்மை... உண்மை...

செல்வா சொன்னது…

//ஓட்டுக்கு ஆயிரம்
பாட்டுக்கு நூறுநாள் வேலை
இலவச டி.வி
எப்பவாச்சும் கொஞ்சம் கரண்ட்டு
ரூவாக்கு கிலோ அரிசி///

இந்த வரிகள் அப்படின்னு கூட சொல்ல முடியாது , எல்லா வரிகளுமே இன்றைய அரசியல் நிலைவரத்த அப்படியே காட்டுது அண்ணா ..!!

மார்கண்டேயன் சொன்னது…

கொய்யால, ஜெய்ச்சிட்ட பிரண்டு நீயி . . . கலக்கு மச்சி

மாணவன் சொன்னது…

//நாடு போவட்டும் நாசமா
நாலாவது ரவுண்டுக்கு ஊறுகா எங்கடா?//

செம சாட்டையடி...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

ஈரோடு கதிர் சொன்னது…

ஊறுகா மினரல் வாட்டர்ல செஞ்சாங்களான்னும் பாத்துக்கச் சொல்லுங்க

Madhavan Srinivasagopalan சொன்னது…

RVS சொன்னது போல கடைசி இரண்டு வரிகள் செம சூப்பரு

ஹேமா சொன்னது…

அரசியல்....பேர்,புகழ்,பணம் இவ்ளோதான் செந்தில் !

அருண் பிரசாத் சொன்னது…

கடிச்சி துப்பிட்டீங்க....

ஒருத்தனையும் விடலை போல...


சபாஷ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சூப்பர் கவிதை.அரசியல்,நாட்டு நடப்பு ,சமூக விழிப்புணர்வு சாடல் சூப்பர்.ஜீ ஜிக்ஸில் பரிசு கன்ஃபர்ம்.என்னைக்கவர்ந்த வரிகள்

>>>>வாய்தா போடு கோர்ட்டுக்கு
வண்டிய எடு கொட நாட்டுக்கு>>>

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இது உங்க ஸ்பெஷல் டச் >>>மவனுக்கு ராஜ்யசபா
மத்தவனுக்கு பூஜ்யசபா>>>

அப்புறம் ஒரு டவுட் சார் அலெக்சா ரேன்க்கிங்கில் நோ டேட்டான்னு இருக்கே புரியலை

Kousalya Raj சொன்னது…

மிக சரியாக உங்கள் ஆதங்கம், கோபம் இரண்டையும் கலந்து கவிதை வடித்து இருக்கிறீர்கள்.....

ஆனால் நிதர்சனம் உணரும் போது வெறுப்பாக இருக்கிறது இந்த அரசியல்(வாதி)வியாதிகளை நினைக்கும் போது...!!

Unknown சொன்னது…

சரியான சவுக்கடி வார்த்தைகள்..
உணமையிலேயே மிக அருமை.
நிறைய யோசிக்க வைக்குது.

சரி கடைசில என்ன தான் பண்ணறது,
ஏதாவது ஒரு கொள்ளிய எடுத்து, தலைய சொறிஞ்சுக்கத் தானே வேணும்..

Unknown சொன்னது…

//'சேவை' செய்ய வந்தாங்களாம்
பலகாரத் தூளாச்சும்
பந்திக்கு மிஞ்சுமா? //
//காமராஜர் படத்துக்கு
ஈழத்து எலும்புமாலை//
//வெதைக்கலன்னாலும் வெள்ளாம
வீட்டுக்கு வரும்...//

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சூப்பர் இருக்கு செந்தில அண்ணா

க.பாலாசி சொன்னது…

சும்மா நறுக்குன்னு இருக்கு... மனசில இருக்கிற பாரம் குறைஞ்சமாதிரியும் இருக்கு...

Jerry Eshananda சொன்னது…

ஊறுகாய் சுள்ளுன்னு இருக்கு.

ஜோதிஜி சொன்னது…

மணிமகுடம். படிக்கும் போதே சிலிர்த்து விட்டது.

தமிழ் உதயம் சொன்னது…

நிஜம் சுட்டது.

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃகட் அவுட் பட்டங்களில்
சிரிக்கிறார்கள்
தொண்டர்களின் கடவுளர்ஃஃஃஃ
வாசிக்கவே சிரிப்பாயிருக்கு... இவங்க திருந்தவே மாட்டாங்களா..??

ஜெயந்தி சொன்னது…

அவங்க போதைக்கு நம்மதான ஊறுகாய்.

vimalanperali சொன்னது…

சிந்தனையைக்கூட வடிவமைக்கிற கலாச்சாரம் நம்மை குறிவத்து,,,,,ஊடகங்க்கள் மூலமாக.இன்னும் பிறவற்றின் மூலமாக./

vasu balaji சொன்னது…

சம்பந்தப்பட்டவுக படிச்சா தன்னையறியாம கை தவடையைத் தடவும். என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா அடி:)))

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//கும்பகர்ணன் தங்கச்சிக்கு
'கை கொடுக்கும் கை' கனவுக்கு அவசரம்//

ஹஹஹா

சூப்பர்!

அன்பரசன் சொன்னது…

//நாடு போவட்டும் நாசமா
நாலாவது ரவுண்டுக்கு ஊறுகா எங்கடா?//

நச் தல

Chitra சொன்னது…

செம....!!

க ரா சொன்னது…

செம ரவுசு :)

தமிழ்க்காதலன் சொன்னது…

கே.ஆர்.பி வணக்கம். நல்ல சமூக சிந்தனையோடு படைத்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்கு என் ஓட்டு இலவசமா..! வாங்கிக்குங்க. நல்ல விசயங்களை தொடர்ந்து எழுதுங்கள். வந்து போங்கள்... ( ithayasaaral.blogspot.com ) மிக்க நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடி தூள் தல!

Bibiliobibuli சொன்னது…

தலைப்பு நச் என்றிருக்கிறது.ஈழத்தில் பலியானதை கவிதையில் மறக்காமல் சேர்த்ததும் அருமை.

AKM சொன்னது…

அருமை அருமை.. நாடு பக்தி உள்ளவர் மனதில் உள்ள கடுப்பை அப்படியே கொட்டி உள்ளீர்கள்..
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஏகேஎம்

சசிகுமார் சொன்னது…

அருமை செந்தில் சார்.

PB Raj சொன்னது…

நாடு போவட்டும் நாசமா
நாலாவது ரவுண்டுக்கு ஊறுகா எங்கடா

கலக்கல் கவிதை அற்புதம்

Unknown சொன்னது…

நச்சுன்னு இருக்கு..

Philosophy Prabhakaran சொன்னது…

கலக்கிட்டீங்க தலைவரே... ஆணி கொஞ்சம் அதிகமா இருந்ததால் படிக்க தாமதமாகி விட்டது... பதிவு தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் செம ஹிட் போல.... அடுத்த சி.எம் நீங்க தான் தலைவா...

VJR சொன்னது…

ரொம்ப லேட்டா படிச்சதுக்கு ஃபீல் பண்ண வெச்சுடுச்சே...

நைஸ் ஒன்.

ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்) சொன்னது…

அன்புள்ள நண்பரே
வணக்கம். என்னை உங்களுக்குத் தெரியாது. பரிச்சயம் இல்லைன்னா என்ன? பரிமாறிக்கொள்ளக்கூடாதா?
நான் காமராஜ் அவர்களின் தோழன். அவர் வலைப்பூவைப் பார்வையிடுகிறபோதுதான் நீங்கள் தட்டுப்பட்டீர்கள்.
அரசியல் போதைக்கு ஆறுகோடி ஊறுகா… “பிரமாதம்”. பிற பின்.

நா.வே.அருள்

ரோஸ்விக் சொன்னது…

அடிக்காத சரக்கையெல்லாம் கவிதையா ஊத்திகொடுத்ததுனால எங்களுக்கு ரொம்ப கிக்கா இருக்கு இந்த கவிதை.

என்னது நானு யாரா? சொன்னது…

நாலாவது ரவுண்டுக்கு ஊறுகா எங்கடா?

இப்பெல்லாம் நாலாவது ரவுண்டோட முடிச்சிக்கிறாங்களா தமிழ் குடிமகன்கள்... அப்போ சீக்கிரம் போதை தெளிய வழி இருக்குன்னு சொல்றீங்க...