18 நவ., 2010

மழை நாட்கள்..

நீ யாரோ
நானும் யாரோ
சந்திப்புக்கு சற்றுமுன் வரைக்கும்..

நீ என்னையும்,
நான் உன்னையும் 
சந்தர்ப்பங்களால் உருவான 
சந்திப்புகள்..

நீ எனக்கு  முதல் பெண் அல்ல,
நானும் உனக்கு  முதல் ஆண் அல்ல,.

நீயும்,
நானும் திட்டமிட்டே 
சில சந்திப்புகளை உருவாக்கினோம்.

நீ எனக்காகவும்,
நான் உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிகொண்டது மாதிரி
நடித்தோம். 
நீ என்னை மிகவும் நேசித்தாய்
நானும் அப்படிதான்.,
உயிருக்கு உயிராக என்று வைத்துகொள்ளலாம்.. 

நீ
பேச,
சாப்பிட,
உடுத்த,
பரிசளிக்க,
என சேமிப்பு கரையத்துவங்கியது..

தவிர்க்கப்பட்ட சந்திப்புகளுக்கு
நீ
சில காரணங்களை சொன்னாய்
நானும் சொன்னேன்..

நீ அடிக்கடி கோபப்பட்டாய்..
நான் விலகிச் செல்ல ஆரம்பித்தேன்
அல்லது அதை விரும்பினேன்..

நீ யாரையோ திருமணம் செய்துகொண்டாய்,
நானும் ஒருத்தியுடன் வாழ்கிறேன்..


நேற்றைக்கு முதல்நாள் மாலை 
ஒரு 
எதிர்பாரா சந்திப்பில் 
என் கைகளை நீ இறுகப்பற்றிய 
தருணத்தில் 
உணர்ந்தேன் ஒரு பழைய காதலை..

48 கருத்துகள்:

எல் கே சொன்னது…

அனைவரும் கடந்து வந்தப் பாதை

மார்கண்டேயன் சொன்னது…

மறக்க மனம் கூடுதில்லையே

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

(:...

அருண் பிரசாத் சொன்னது…

feelings...

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

மனித மணம் நெருங்கி இருப்பவர்களின் அன்பை துச்சமாக நினைக்கிறது.
எட்டி இருப்பவர்களுக்காக ஏங்குவதே, வாழ்வின் சுகத்தை தொலைக்க வைக்கிறது.

ஆர்வா சொன்னது…

//நேற்றைக்கு முதல்நாள் மாலை
ஒரு
எதிர்பாரா சந்திப்பில்
என் கைகளை நீ இறுகப்பற்றிய
தருணத்தில்
உணர்ந்தேன் ஒரு பழைய காதலை..//

ரொம்ப ஃபீல் பண்ண வெச்ச வரிகள். உண்மையிலேயே அந்த ஒரு நொடி.... வார்த்தைகளால சொல்ல முடியாது.. இது வெறும் கவிதையா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்வேன். அனுபவமா இருந்தா... ஐயாம் சாரி..

Bibiliobibuli சொன்னது…

ம்ம்ம்..... பழைய காதல்.

காதல் பழசு தான். காதலர்கள் தான் அதற்கு புதிது புதிதாய் அர்த்தமும் விளக்கமும் கண்டுபிடிக்கிறார்கள்.

மாணவன் சொன்னது…

உணர்வுகளை அழகாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை அண்ணே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

முதியோர் கல்வி காதல்?

வினோ சொன்னது…

யோசிக்க வைக்கிறீங்களே அண்ணா...

தமிழ் உதயம் சொன்னது…

இது தான் வாழ்க்கை.

Unknown சொன்னது…

கவிதை யதார்த்தம். பின்னூட்டங்களும் போலியாக பல்லிளிக்காமல் மிக யதார்த்தமாய்.....

.//நீயும்,நானும் திட்டமிட்டே சில சந்திப்புகளை உருவாக்கினோம்.//

//தவிர்க்கப்பட்ட சந்திப்புகளுக்கு நீ சில காரணங்களை சொன்னாய் நானும் சொன்னேன்..//

எது தவிக்க வைத்ததோ அதுவே தவிர்க்கவும் வைத்தது.

//நீபேச,சாப்பிட,உடுத்த,பரிசளிக்க,என சேமிப்பு கரையத்துவங்கியது..//

பெண் மீது பழி?

nis சொன்னது…

இறுதியில் சோகமாக்கி விட்டீர்களே ;(((

அன்பரசன் சொன்னது…

//நீ எனக்கு முதல் பெண் அல்ல,
நானும் உனக்கு முதல் ஆண் அல்ல,.//

???

அன்பரசன் சொன்னது…

//நீ எனக்காகவும்,
நான் உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிகொண்டது மாதிரி
நடித்தோம். //

:)

அன்பரசன் சொன்னது…

//கைகளை நீ இறுகப்பற்றிய தருணத்தில் உணர்ந்தேன் ஒரு பழைய காதலை..//

பிரமாதம்.

Unknown சொன்னது…

////நீ எனக்காகவும்,
நான் உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிகொண்டது மாதிரி
நடித்தோம்.
நீ என்னை மிகவும் நேசித்தாய்
நானும் அப்படிதான்.,
உயிருக்கு உயிராக என்று வைத்துகொள்ளலாம்.. ////நேசம் உண்மையாய் இருந்தால் இந்த மாதிரி நினைப்பு வந்துகொண்டே இருக்கும்....

ஹரிஸ் Harish சொன்னது…

அனுபவம்..

சௌந்தர் சொன்னது…

இது எந்த காதல் சொல்லுங்க

என்னது நானு யாரா? சொன்னது…

எதார்தமான காதலா? கைப்பிடித்தப்பின் அங்கே மறுபடியும் காதல் வருமா? பழைய வலிகள், வேதனைகள், ஏமாற்றங்கள் எட்டிப்பார்க்கும் இல்லையா? வெறும் மலரும் நினைவுகள் தான் வரும் என்று எண்ணுகின்றேன். காதல் கீதல் எல்லாம் வராதுன்னு சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க?

'பரிவை' சே.குமார் சொன்னது…

உணர்வுகளை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.

Unknown சொன்னது…

இயல்பு நடை இனிமை

vasu balaji சொன்னது…

அதுதான் காதல். வந்துச்சோ போகவே போகாது. போச்சோ அது காதலே இல்லை. சபாஷ்.

அம்பிகா சொன்னது…

யதார்த்தமான வரிகள். அருமையா இருக்கு செந்தில்,

ஹேமா சொன்னது…

மறக்கமுடியாத அன்பு.இப்படி ஒருநிலை எவ்ளோ கஸ்டம்.
சொன்ன விதம் அழகு செந்தில் !

அலைகள் பாலா சொன்னது…

super kavithai

தினேஷ்குமார் சொன்னது…

நல்ல கவிதை அண்ணே

பெண்ணே அவள்
அவள் பேரின்ப கடல்
கண்ணே அவள்
காணாத கானல் நீர்
மணியே அவள்
மயக்கும் மல்லிகை பூ
முத்தே அவள்
முடியாத முற்றும்.............

அண்ணிகிட்ட இப்படி சொல்லி தப்பிச்சுங்க அண்ணா

Anisha Yunus சொன்னது…

//நேற்றைக்கு முதல்நாள் மாலை
ஒரு
எதிர்பாரா சந்திப்பில்
என் கைகளை நீ இறுகப்பற்றிய
தருணத்தில்
உணர்ந்தேன் ஒரு பழைய காதலை..//

இனிமை...

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கவிதை பதிவு நல்ல இருக்கு தலைவரே.....

பெயரில்லா சொன்னது…

உணர்வின் வெளிப்பாடு நல்லா இருக்கு அண்ணே

தமிழ்க்காதலன் சொன்னது…

தோழரே வணக்கம். இந்த நகர "நரநாகரீகம்" உங்கள் கவியில் அழகாய் வெளிப்படுகிறது. யதார்த்தமாய் மன உணர்வுகள் பேசப்பட்டிருக்கின்றன. நிகழ்வு மட்டும் மனம் கூசச் செய்கிறது. எங்கோ எதையோ தேடிக் கொண்டே இருக்கும் இந்த மனசுக்கு ஒரு எல்லை வாராதோ...!

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃநீ யாரையோ திருமணம் செய்துகொண்டாய்,
நானும் ஒருத்தியுடன் வாழ்கிறேன்..ஃஃஃஃ
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

VELU.G சொன்னது…

எல்லாவற்றையும் இயல்பாகவே கடக்கிறது மனம்

அருமையான கவிதை வரிகள்

பவள சங்கரி சொன்னது…

மிக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்....அதுதான் உங்கள் வெற்றி எப்போதும்...வாழ்த்துக்கள் நண்பரே.

ஜெயந்தி சொன்னது…

பழைய காதல் வீரியம்மிக்கது போல.

ஜெயகாந்தன் சொன்னது…

//நேற்றைக்கு முதல்நாள் மாலை
ஒரு
எதிர்பாரா சந்திப்பில்
என் கைகளை நீ இறுகப்பற்றிய
தருணத்தில்
உணர்ந்தேன் ஒரு பழைய காதலை//

ஒருவேள அந்த காதலி: தப்பிச்சுட்டடா மவனேன்னு மனசுல நெனச்சுருப்பாங்களோ!

அடுத்த பணம் அத்தியாயம் எப்போ தலைவரே?

சசிகுமார் சொன்னது…

என் தளத்திற்கு வந்து ஆதரவு கொடுத்ததற்கு மிக்க நன்றி . திரும்பவும் பதிவு போட உங்கள் கமெண்ட்டும் ஒரு காரணமாகும்.

செல்வா சொன்னது…

//நீயும்,
நானும் திட்டமிட்டே
சில சந்திப்புகளை உருவாக்கினோம்.//

கவிதை உண்மையா இருக்கு அண்ணா ., அதிலும் கடைசி வரிகள் கலக்கல் .

vasan சொன்னது…

//இறுகப்பற்றிய தருணத்தில் உணர்ந்தேன் ஒரு பழைய காதலை..//
எனக்குள் ஒரு ச‌ந்தேக‌ம், இதுவும் காத‌லா?

rajasundararajan சொன்னது…

/பாரத்... பாரதி... சொன்னது…

//நீ பேச, சாப்பிட, உடுத்த, பரிசளிக்க, என சேமிப்பு கரையத்துவங்கியது..//

பெண் மீது பழி?/

பெண் மீது பழி, ஆமாம். ஆனால் நுவலுநர் (narrator) தன்னைத் தானே இழித்துப் பேசுகிற இடமல்லவா அது?

விலகலைக் குறிக்க வரும் மனக்கோணல் அது. மறுபக்கமும் அதுபோல் 'ஆண் மீது பழி' ஒன்று நிகழ்ந்திருக்கும். சொல்லித்தீர வேண்டுமா, என்ன?

//நேற்றைக்கு முதல்நாள் மாலை// என்பதுதான் இந்தக் கவிதையின் உச்சமானதொரு கூற்று.

என்றால், இன்று நான் நிலைமை என்ன?

ஆ ஆ!

Unknown சொன்னது…

திரு.கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கு ....

இந்த கவிதையில் நீங்கள் காட்டும் சூழலை மையமாகக் கொண்ட எமது கவிதை முயற்சி.....

மன வீடும்,. மீதமான ஒரு கண்ணாடிச் சில்லும்...

http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_19.html

உங்கள் வருகைக்கு, காத்திருக்கிறோம்...

Unknown சொன்னது…

//முதியோர் கல்வி காதல்?//

haha...

Unknown சொன்னது…

ஏன் இன்று இடுகை ஏதும் இல்லை..

மழை நாட்கள் --

மழை வலுத்து , கன மழையாகி விட்டதோ....

pichaikaaran சொன்னது…

இரு கவிதைகளுக்கு இடையில் போதிய இடைவெளி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

கவிதை நல்லா இருக்குங்க.. :-))

மணிபாரதி சொன்னது…

Submit your blog/site here www.ellameytamil.com

Learn சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்

www.tamilthottam.in

Unknown சொன்னது…

எல்லோர் வாழ்கையிலும் பொண்ணுங்க உண்டு...........................