9 டிச., 2011

என் பிரியத்துக்கு உரிய முதல் எதிரியே...


எந்த 
முன் அறிமுகமும் 
இல்லாத 
நம் முதல் சந்திப்பு 
மோதலில்தான் முடிந்தது,
நீ 
உனது கருத்துகளில் 
உறுதியாய் இருந்தாய் 
நானும் 
அவ்வாறாகவே எனது கருத்துகளில் 
உறுதியாக இருந்தேன்..

முதல் முதலான 
நம் சந்திப்பு 
இனி 
முகம் பார்க்கவே மாட்டேன் 
என கடைசியாக எச்சரித்ததுடன் 
முடிந்துவிடவேண்டும் என்பதுதான் 
எனது விருப்பமாகவும் இருந்தது..

ஆனால் 
உதவிக்கு யாருமற்ற 
ஒரு சென்னை இரவில் 
நான் அழிக்க மறந்த 
உனது பெயர் 
எனது தொலைபேசி அழைப்பில் 
இம்முறை 
நாம் பழையதை கிண்டவில்லை 
உனக்கு 
ஒரு இரவு மட்டும் 
தங்க இடம் தேவைப்பட்டது 
என் வீட்டில் உனக்கு இடம் இருந்தது..

மறுநாள் காலை 
நீ செல்லவேண்டிய இடத்தையும் 
பேசப்போகும் விசயத்தையும் 
சொல்லி முடிக்கும் முன்பாக
நான் 
என் வார்த்தை யுத்தத்தை துவங்க 
இன்னொரு முறை 
இறுதியாக முடிந்தது நம் சந்திப்பு 
என 
இறுதி ஒப்பந்தம் எழுதாத குறையாக 
பிரிந்து போனோம்..

இப்போதும் 
உன் எழுத்துகளை தவறாமல் படிக்கிறேன் 
தனி மடலில் 
கண்டனங்கள் தெரிவிக்கிறேன் 
உன் மறுப்பை 
அதே கோபத்துடன் எனக்கு எழுதுகிறாய்..

உனக்குத் தெரியுமா?
நான் அதிகம் நேசிக்கும் 
முதல் எதிரி நீதான் என்பதை!..

இப்போதும் 
ஒரு இறுதி சந்திப்பினை 
இன்னொரு முறை உறுதி செய்ய 
நாளை உன் ஊர் வருகிறேன் 
மறக்காமல் பேரூந்து நிலையம் 
வந்து சேரு..

6 கருத்துகள்:

sakthi சொன்னது…

realistic

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் கவிதை, அருமை...!!!

மாலதி சொன்னது…

உங்களின் ஆக்கத்தில் ஒரு தத்துவம் இருக்கிறது ம் சிறப்பு பாராட்டுகள் .

சசிகுமார் சொன்னது…

சூப்பர் தல....

ஹேமா சொன்னது…

பிடித்தவர்களோடுதானே உரிமையோடு சண்டை போட்டுக்கொள்கிறோம்.அதோடு அன்பை இந்தவழிதான் காட்டவும் முடிகிறது !

சம்பத்குமார் சொன்னது…

வணக்கம் நண்பரே

தளத்தில் முதல் கருத்து..

பதிவுலக நிதர்சன கவிதையா நண்பரே..

கவிதை அருமை..