16 டிச., 2011

"பெண்கள்"...


ஆண்களுக்கு, பெண்கள் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் வசீகரமானவர்கள். ஆனால் பெண்களுக்கு, ஆண்கள் அப்படியல்ல பெரும்பாலும் அடிமைகளாகத்தான் பாவிப்பார்கள். அதாவது அடங்கிப்போகிற மாதிரி ஆளுமைக்கு மாறுவது. மிகச்சுலபமாக வரும். அவர்களின் கண்ணீர் சாதிக்க முடியாததையும் சாதித்துக்கொடுத்துவிடும். பாட்டியாக, அம்மாவாக, மனைவியாக, சகோதரிகளாக, தோழிகளாக, மகளாக எல்லா வடிவங்களிலுமே பெண்கள், ஆண்களை அரசாளப் பிறந்தவர்கள். ராகுல சாங்கிருத்யாயனின் "வால்காவிலிருந்து கங்கைவரை" படிப்பதற்கு முன்பாக நானும் பெண்களை ஆராதிக்கும் ஒரு சமகால ஆணாகவே இருந்தேன். என் காதல்களும் அப்படியானதுதான். நான்கு மூத்த சகோதரிகளுக்குப் பிறகு ஒரு அண்ணனும் அதன்பிறகாக நான் கடைக்குட்டியாக பிறந்ததால் அண்ணன் வரம் வாங்கி வந்தவனாகவும் நான் போனசாக கிடைத்தவனாகவும் கொண்டாடப்பட்டதில் நான்கு வயதுவரைக்கும் எனது நீண்ட முடிக்கு சடைபின்னி என்னையும் ஒரு சகோதரியாக பார்த்த என் அக்காள்களின் மனப்பான்மையே பிற்காலத்தில் என்னை பெண்களிடம் இருந்து தூரமாக வைத்தமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பொதுவாகவே என் காதல் தோழி கீதாஞ்சலி இறந்தபிறகு பெண்களுடனான எனது சிநேகம் இப்போதைய மலையாளிகள் தமிழர்களை பார்ப்பதுபோல் அவ்வளவு விரோதமாக இருந்தது. அதிலும் நண்பர்களுடன் பேங்காக் சென்று தங்கியபோது தங்கும் அறைகள் போதாமால் என் அறைக்குள் நண்பன் ஒருவன் அவன் இன்ஸ்டன்ட் காதலியை அழைத்துவந்து சல்லாபித்துக்கொண்டிருந்தான். வெளியில் பெய்த பேய் மழை  நான் அந்த முக்கல், முனகலை காதில் வாங்காமல் பார்த்துக்கொண்டதால், அறைக்கு வெளியே தாய்லாந்தின் சோம பானத்தில் திளைத்துக் களித்துக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்து கட்டிப்பிடித்தாள் ஒரு குட்டி. முழுவதுமாய் போதை ஆக்கிரமித்திருந்த அவள் மூளைக்கு அவளின் நிர்வாணம் அறியப்படாது போகவே அந்த திறந்த வராண்டாவில் என்னை வீழ்த்த நினைத்த அவளை செவுளில் ஓங்கி அறைந்தேன். தாய்லாந்தில் பெண்களை அதிலும், காமம் தின்பதற்கு கூட்டி வந்த அழகிகளை அடித்தால் நம்மை வெட்டி நெருப்பில் வாட்டி தங்களின் போதைக்கு சைட் டிஷாக ஆக்கிக் கொள்வார்கள் தாய்லாந்து மாமாக்கள். அவளுக்கு நான்  விட்ட அறையால் போதை ஒரு கோப இடைவெளியை அவளுக்குத் தரவே கத்தி கூப்பாடு போட்டாள். நல்ல வேளையாக மழையால் வீட்டுக்குப்போகாமல் காத்திருந்த என் தாய்லாந்து நண்பன் ஓடி வந்தான். அவன் அவளை விசாரித்துவிட்டு அவன் பங்க்குக்கு ஒரு அறை விட்டான். அவனுக்கு என்னைப்பத்தி தெரியும். நான் எப்போது பேங்காக் போனாலும் என் பயண நிரல்களை அவன்தான் பார்த்துக்கொள்வான். நான் அங்கு எப்போதும் அங்குள்ள பெண்களை தொட்டது கிடையாது. சோமபானம் மட்டும்தாம், அதிலும் வித விதமான சோமபானங்களையும், அங்கு பிரத்யோகமாக கிடைக்கும் உயிரின அவியல்களையும், வறுவல்களையும் விரும்புகிறவன். என்னோடு உடன் வருகிற நண்பர்களுக்கு மட்டும்தான் அழகிகள். கீதாஞ்சலியின் மரணத்துக்குப் பின் மற்ற பெண்கள் அனைவரும்  எனக்கு ஒரு சக உயிரினம் மட்டுமே.

இணையத்திற்குள் வந்துவிட்ட பின் ஆரம்பக் காலங்களில் கிடைத்த தோழிகளும் என பண்றே?, என்ன சாப்பிட்டே?, இப்ப என்ன கலர்ல டிரெஸ் போட்டுருக்கே என தேச வளர்ச்சிக்கான கேள்விகளை சலிக்காமல் கேட்டு என்னை கதற விட்டதால் மொத்தமாகவே ஒரு பெரிய கும்பிடாக நெடுஞ்சாண்கிடையாக கம்பியூட்டர் முன் விழுந்து வணங்கி யாருடனும் பேசக்கூடாது என தீர்மானம் இயற்றிவிட்டேன். இதில் சாட்டில் வரும் ஆண்களும் விதிவிலக்கல்ல கேள்விகள்தான் மாறும், அவிங்கலுக்கு சரக்கு போடப் போகலியா?, என்ன படம் பார்த்தே?, நீயும் வினவு ஆளா?, கேபிளோடு டெய்லி எப்புடி தண்ணி அடிக்க நேரம் கிடைக்குது? மாதிரியானதும் இன்னும் சில சிக்கலான பெண்கள் பற்றிய கேள்விகளுமாக இருக்கும். அதனால் இணைய அரட்டைக்கு நான் முகமூடி(invisible) அணிந்து வந்தாலும் கண்டுபிடித்து கூப்பிடும் சிலர்வரை யார் வந்தாலும் பின்கால் பிடரியில்பட ஓடத்துங்கிவிடுவேன்.

ஆனால் நம்ம ஆட்கள் சுவாரஸ்யமானவர்கள் பெண்கள் பெயரில் யார் வந்தாலும், அவர் என்ன வயதாக இருந்தாலும் உடனே அங்கு சென்று சலாம் வைத்து அவர்கள் வீட்டு நாய்குட்டியாக மாற விண்ணப்பம் அனுப்புவார்கள். அப்புறம் சாட்டில் வழியும் ஜொள்ளு எதிர்முனை கணினியை மூழ்கடிக்க ஆரம்பித்து இவனும் போதையில் செல்போனில் ஸ்பீக்கரில் பேசி தன் பெருமையை நிலை நாட்டத்துவங்கும் நேரத்தில் அது ஊரெங்கும் பற்றி எரியும். உடனே இணைய நாட்டாமைகள் தங்கள் சொம்புகளுடன்(ஒரிஜினல் சரவணா ஸ்டோர் சொம்புகளுக்கு மட்டும்தான் அனுமதியே) வந்து பிரச்சினையை பெரித்தாக்க, அந்த பெண்களின் கணவன்மார்களின் நிலைதான் தில்லாலங்கடியாக மாறும். அவனும் ஒவ்வொரு மொபைல் அழைப்புகளாக நோண்ட ஆரம்பித்து கணவர்கள் மாறும் அளவுக்கு போகும். இது ஒரு சிறிய உதாரணம் என்றாலும். இம்மாதிரியான அதாவது சாரு மாதிரியான புனித ஆத்மாக்கள் செய்யும் விசயங்களால் ஒட்டுமொத்தமாக நன்றாகவே எழுதும் பெண்கள் கூட சில காலங்களுக்குள் எழுதுவதை நிறுத்திவிட்டு சமையல் குறிப்புகளுக்கு மாறிவிடுகிறார்கள். எழுதுவதில்கூட நாம் அவர்களை அடுக்களை தாண்டி வெளியேவர விடுவதில்லை. 

"நீ ஏன் எப்போதும் பெண்களை மட்டமாகவே நினைக்கிறாய்!" என்பார் எனது சிங்கப்பூர் தோழி. "நான் உன்னை எப்போதாவது குறைத்துப் பேசியிருக்கேனா?" என்றால், இல்லை என்பாள். "பொதுவாகவே பெண்களுக்கு ஆண்கள் தங்களை ஒரு படி மேலே உயர்த்திப் பார்க்கவேண்டும் என்பதுதான் உங்களின் இயற்கை குணம். அதற்காகத்தான் இத்தனை அலங்காரமும். ஆனால் பெண்களை என் சக மனிதர்களாக பார்ப்பவன் நான். அதனால்தான் தாலி கட்டாத சுயமரியாதை திருமணம் செய்தேன் எனபது உனக்கும் தெரியுமே!, மேலும் என் மனைவிக்கும் நான் அலுவல் நிமித்தம் சந்திக்கும் பெண்களுக்கும் நான் அளிக்கும் மரியாதையும் உனக்கு தெரியும்!!. அப்புறம் ஏன் கேட்க்கிறாய்" என்றபோது, "இல்லைப்பா பொதுவாகவே நீ ஏன் பெண்களை சகோதரி என அழைக்கிறாய்? அதனால்தான் கேட்டேன்" என்றாள். உண்மைதான் பதின்ம வயதில் ஏற்பட்ட பாலியல் தொடர்புகள் வீட்டுக்கு தெரிய ஆரம்பித்தபோது, எனது தயார் என்னை அழைத்து "தம்பி நீ சிகிரெட் பிடிக்கிறே அது உன் உடம்பை மட்டும்தான் பாதிக்கும், தண்ணி அடிப்பதாக கேள்விப்பட்டேன் அது நண்பர்களையும் சேர்த்து பாதிக்கும், ஆனால் சமீபமாக பெண்கள் விசயம் பத்தி கேள்விப்பட்டேன், வேண்டாம்பா அது ரெண்டு குடுமபத்தை பாதிக்கும், அதன்பிறகு வாழ்நாள் முழுதும் நீ வருந்த வேண்டியிருக்கும்" என்றார். அதுதான் அன்றைய தினமே என்னை சிந்திக்கவைத்தது, அதுதான் இப்போதுவரை சந்திக்கும் பெண்களை சகோதரிகளாக பார்க்க வைத்தது. சகோதரி என்று சொல்லியவுடன் அவர்களுக்கு சில விஷயங்கள் தாண்டி என்னுடன் பேசுவது இல்லை. ஒரு சகோதரனாக என்னை மரியாதையான எல்லைக்குள் வைத்துப்பழக ஆரம்பித்து விடுவதால். பெண்களால் எனக்கும், என்னால் அவர்களுக்கு பிரச்சினை வருவதேயில்லை.

இன்னும் நிறைய சொல்லலாம்... இன்னொரு நாள் இன்னொரு கட்டுரையில் பேசுவோம்... 

13 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எல்லா பெண்களும் உங்கள் சகோதரியா. ஐயோ இது தெரியாமல் உங்களை இவ்ளோ நாள் அண்ணன்னு கூப்டிக்கிட்டு இருந்துட்டேனே. நான் இவ்ளோ அப்பாவியா?

vinthaimanithan சொன்னது…

கற்பெனுங் கடப்பாட்டில் காதல் மிக்காராய்த் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் கேஆர்பியாரின் எழுத்துக்களைப் படித்தவுடனேயே, இனிமேல் நாமும் கற்பொழுக்கந்தவறாக் காளையெனத் திமில் குலுக்கித் திரிய வேண்டுமென ஒரு அவா அடிநெஞ்சினின்று பொங்கி வருவதே இக்கட்டுரையின் வெற்றி என்பதைக் குறிப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாகி இருந்தாலும்கூட, இதனை இன்னுமொரு கட்டுரையாகத் தொடர்வேன் என்று அவர் சூளுரைக்கும்போது ஏனோ அடிவயிற்றில் சற்று சில்லிடத்தான் செய்கின்றது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விந்தைமனிதன் சொன்னது…

கற்பெனுங் கடப்பாட்டில் காதல் மிக்காராய்த் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் கேஆர்பியாரின் எழுத்துக்களைப் படித்தவுடனேயே, இனிமேல் நாமும் கற்பொழுக்கந்தவறாக் காளையெனத் திமில் குலுக்கித் திரிய வேண்டுமென ஒரு அவா அடிநெஞ்சினின்று பொங்கி வருவதே இக்கட்டுரையின் வெற்றி என்பதைக் குறிப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாகி இருந்தாலும்கூட, இதனை இன்னுமொரு கட்டுரையாகத் தொடர்வேன் என்று அவர் சூளுரைக்கும்போது ஏனோ அடிவயிற்றில் சற்று சில்லிடத்தான் செய்கின்றது!//

யோவ் ஏன் ஏன்?

அம்பலத்தார் சொன்னது…

//"தம்பி நீ சிகிரெட் பிடிக்கிறே அது உன் உடம்பை மட்டும்தான் பாதிக்கும், தண்ணி அடிப்பதாக கேள்விப்பட்டேன் அது நண்பர்களையும் சேர்த்து பாதிக்கும், ஆனால் சமீபமாக பெண்கள் விசயம் பத்தி கேள்விப்பட்டேன், வேண்டாம்பா அது ரெண்டு குடுமபத்தை பாதிக்கும், அதன்பிறகு வாழ்நாள் முழுதும் நீ வருந்த வேண்டியிருக்கும்" என்றார். அதுதான் அன்றைய தினமே என்னை சிந்திக்கவைத்தது, அதுதான் இப்போதுவரை சந்திக்கும் பெண்களை சகோதரிகளாக பார்க்க வைத்தது//
அப்படின்னா நீங்க நிஜமாலுமே நல்லவராயிட்டிங்க?

vinthaimanithan சொன்னது…

யோவ் ரமேசு, அது பீலிங்கிய்யா! அப்டியே பொங்கி வருது!

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

ஆண் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரிந்த அருமையான அம்மா

Unknown சொன்னது…

எல்லா பெண்களும் உன் சகோதரியா??? அப்படின்னா மச்சா கட்டுரை நல்லா இருக்குப்பா!!

Unknown சொன்னது…

தல இனி சத்தியமாக கேபிள் பற்றி கேட்கமாட்டேன்

ஹேமா சொன்னது…

வாழ்வின் அனுபவங்கள் மனிதனை எவ்வளவு செம்மைப்படுத்துகிறது !

CS. Mohan Kumar சொன்னது…

Interesting topic. Your experience are unique.

சிராஜ் சொன்னது…

பெண்களை சகோதரியாய் பாவிப்பது என்பது சாலச் சிறந்த பழக்கம் தான். ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு முடியாது என்றே நான் கருதுகிறேன்.
தடுமாறும் கணங்களும் நிச்சயம் வரவே செய்யும். ஏற்றுக்கொள்வீர்களா செந்தில்?

சிராஜ் சொன்னது…

இந்த கட்டுரை ஒரு நல்ல கட்டுரை தான். அனால் அதைவிட, சிந்தை மனிதன் அவர்களின் கவிதை வடிவிலான கமெண்ட் அற்புதம்.

Sivakumar சொன்னது…

//கற்பெனுங் கடப்பாட்டில் காதல் மிக்காராய்த் தன்னை நிலைநிறுத்தி//

இந்த ராஜாராமன் இம்ச தாங்கலப்பா.