ஆற்றாமையாகத்தானிருக்கும்
எனக்கு..
கையேந்தும் பெரியோர்களை
சிறு பிள்ளைகளை
பெண்களை பார்க்கும்போதெல்லாம்
கடவுளை கொன்றுபோட..
அரசுப் பேரூந்தின் நடத்துனர்கள்
ஏழை வயசாளிகளை
ஒருமையில் விளிக்கும்போது
என்ன மனித நேயமென..
புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட
பின்னும்
முகாம்களில் தவிக்கும்
சகோதரங்களை நினைத்து
புத்தனும் செத்துப் போனான் என..
தெரு வண்டி வியாபாரியிடம்
பத்து ரூபாய்க்கு கை நீட்டும்
போலீஸ்காரன் நிலை நினைத்து
இதுவா கடமை? என..
கடவுளை
எனக்கு..
கையேந்தும் பெரியோர்களை
சிறு பிள்ளைகளை
பெண்களை பார்க்கும்போதெல்லாம்
கடவுளை கொன்றுபோட..
அரசுப் பேரூந்தின் நடத்துனர்கள்
ஏழை வயசாளிகளை
ஒருமையில் விளிக்கும்போது
என்ன மனித நேயமென..
புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட
பின்னும்
முகாம்களில் தவிக்கும்
சகோதரங்களை நினைத்து
புத்தனும் செத்துப் போனான் என..
தெரு வண்டி வியாபாரியிடம்
பத்து ரூபாய்க்கு கை நீட்டும்
போலீஸ்காரன் நிலை நினைத்து
இதுவா கடமை? என..
கடவுளை
இனம்பிரித்து வணங்கும்
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..
ஓட்டுக்கு காசு வாங்கி
தேர்தல் முடிந்தபின்னர்
ஐயோகோ
ஆட்சி சரியில்லை எனும்
மக்களை நினைத்து
உன் உரிமை இதுவா என..
தெரு நாய்களைப்போலத்தான்
வாழ்கிறோம்
ஆயினும்
கவுரவத்துக்கு ஒன்றும்
குறைச்சல் இல்லை..
19 கருத்துகள்:
படிக்கச் சங்கடம் கொடுத்தாலும்
மிகச் சரியான ஆதங்கம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
//
கடவுளை கொன்றுபோட..
//
இருக்கிற விஷயங்களையே பார்க்க முடியவில்லை
விட்டுவிடுங்கள்
இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத ஒன்றை நாம் ஏன் எடுத்துக்கொண்டு அதன் மீது ஏன் பழிபோட வேண்டும்
விட்டுவிடுங்கள்
ஆதங்கம் மிக்க அருமையான கவிதை
எனக்கு வா---- வா--- யா வருது...
இப்ப இங்க கும்முரதா...இல்லை...
கமுக்கமா போறதா ...
தெரியலையே....
ஹங்..ஹங் ...
(கமல் ஸ்டைல்-ல படிக்கவும்)
அண்ணே வணக்கம். நல்ல கவிதையோ சுமார் கவிதையோ கவிதை கவிதை தான், அதை ரசிப்பதற்கு கூட உயர்தர ரசனை வேண்டும். அது நமக்கு இல்லையே, இன்று கூப்பிடுறேன்னு சொன்னீங்களே. என்னாச்சு நாளைக்கா?
அருமை
//தெரு நாய்களைப்போலத்தான்
வாழ்கிறோம்
ஆயினும்
கவுரவத்துக்கு ஒன்றும்
குறைச்சல் இல்லை..//
உறுத்துகிறது செந்தில்...
இன்று நாட்டில் நடக்கும் பல விஷயங்களை கையாலாகாதனத்தோடு தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது
/கடவுளை
இனம்பிரித்து வணங்கும்
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென//
இவ்வரிகளை எழுத வேண்டுமென அண்ணனை இயக்கிய வடபழனி பிராஞ்ச் இறைவா போற்றி!
மனிதனைப் படைச்ச கடவுளே ஓடி ஒளிஞ்சிருக்கிறார்.எங்க தேடிப்பிடிக்கிறது.பிடிச்சாச் சொல்லுங்கோ செந்தில் என் பங்குக்கும் ஒரு அடியாவது குடுக்கவேணும் !
மதிப்புக்குரியதாய் பொற்றுகிறேன் இக்கவிதையை... பாராட்டுக்கள் தோழர்.
/* கடவுளை
இனம்பிரித்து வணங்கும்
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென */
சரிங்க உலக மகா புத்திசாலி...
/* கையேந்தும் பெரியோர்களை
சிறு பிள்ளைகளை
பெண்களை பார்க்கும்போதெல்லாம்
கடவுளை கொன்றுபோட..
*/
அவங்கள கையேந்த வச்சது மக்களாகிய நாம் தான்
நம்மோளோட கையாலாகாத தனத்துக்கு
நாம தான் தூக்குல தொங்கணும்...
அத விட்டுட்டு கடவுள கொல்றாராம்...
/* தெரு நாய்களைப்போலத்தான்
வாழ்கிறோம்
ஆயினும்
கவுரவத்துக்கு ஒன்றும்
குறைச்சல் இல்லை..
*/
இது ஒரு நியாயமான கருத்து....
/* கடவுளை
இனம்பிரித்து வணங்கும்
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..
*/
உருவாக்கி உயிர் கொடுத்தவனையே இல்லை என்று
சொல்லும் துரோகிகளை விட, முட்டாள்களை விட...
இனம் பிரித்து வணங்குபவன் ஒரு படி மேல் தான் நண்பரே...
@siraj
what a wonderful words. u continue..
// கையேந்தும் பெரியோர்களை
சிறு பிள்ளைகளை
பெண்களை பார்க்கும்போதெல்லாம்
கடவுளை கொன்றுபோட..
தெரு நாய்களைப்போலத்தான்
வாழ்கிறோம்
ஆயினும்
கவுரவத்துக்கு ஒன்றும்
குறைச்சல் இல்லை..//
செருப்பால் அடித்தது போல் சொல்லி இருக்கின்றீகள் செந்தில்!
தெரு நாய்களைப்போலத்தான்
வாழ்கிறோம்
ஆயினும்
கவுரவத்துக்கு ஒன்றும்
குறைச்சல் இல்லை..
அருமை .
உண்மை கொஞ்சமல்ல நன்றாகவே சுடுகிறது
அருமை
கருத்துரையிடுக