24 டிச., 2011

நான் - நீ - அவன் ...


நீ அப்படியே 
என்னைப்போல் இருந்தவன்
ஒரு சில 
மாற்றுக்கருத்துகள் தவிர்த்து
உனக்கும், எனக்கும் 
நிறைய ஒற்றுமைகள் உண்டு 
அவன் அப்படியல்ல 
நம்மிலும் வேறானவன் 
முரண்பாடுகளின் மூட்டை 
உனக்கு அவனை 
பிடிக்கவே பிடிக்காது 
எனக்கு அப்படியல்ல 
எதிராளியையும் ரசிப்பவன் நான் 
அவன் நம்பிக்கைகள் 
அவனுக்கு 
எனது கருத்துக்கள் எனக்கு 
ஆனாலும் 
உனக்குப் பிடிக்காத அவனை 
நான் அவனை நேசிப்பதால் 
நீ 
என்னையும் வெறுக்கத் துவங்குகிறாய்,
இப்படியாக 
யாவருக்குமே 
சிலரை சிலரால் 
வெறுக்கவோ, நேசிக்கவோ 
செய்யும்படி ஆகிறது..

3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
நேசிப்பதற்கும் வெறுப்பதற்க்குமான
காரணங்கள் மிகச் சரியாக இல்லையென்றாலும் கூட
மிகச் சரியாக நாமே கற்பித்துக் கொள்கிறோம்
ஏனெனில் சிலரை ஏனோ நேசிக்கிறோம்
சிலரை ஏனோ வெறுக்கிறோம்
சிந்தனையை தூண்டிப் போகும் அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் த.ம 1

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

சசிகலா சொன்னது…

சிலரை சிலரால்
வெறுக்கவோ, நேசிக்கவோ
செய்யும்படி ஆகிறது..
அருமையான பதிவு.