எப்போதும்
எனக்கு என்ன பிடிக்கும்
பிடிக்காது என்பது அனைத்தையும்
பார்த்து பார்த்து செய்பவள் நீ
தினமும்
நள்ளிரவு தாண்டி போதையில்
கதவு தட்டும் என் இம்சையை
எனது வக்கற்றத்தனத்தை
என் ரசனையை
வீட்டில் இருக்கும்போதெல்லாம்
உன்னுடன்
ஒரு வார்த்தைகூட பேசாமல்
தோழிகளிடம் செல்போனில்
மணிக்கணக்கில் அரட்டை அடிக்கும்
என் அயோக்கியத்தனத்தை
இன்னும் ஏராளமான என் இம்சைகளை
பொறுத்துக்கொண்டு
இப்போது நம்
பிள்ளைகளையும் சேர்த்து
எங்கள் மூவரையும் சுற்றி
இயங்குகிற உன் உலகில்
உனக்கு என்ன பிடிக்கும் என
உனது முப்பத்தி இரண்டாவது
பிறந்தநாளின் முதல்நாள் அன்று
முதன்முறையாக கேட்டபோது
உங்களைத்தான்
அப்புறம்
இப்போது நம் குழந்தைகளையும் சேர்த்து
என்றாய் சிரித்துக்கொண்டே..
13 கருத்துகள்:
நல்ல கவிதை.
மனதை தொட்டுவிட்டது.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
மனைவி பத்தி கவிதை எழுதி அசத்துறீங்க . வாழ்த்துக்கள்
Online works for All என்கிற ஐ.டி யில் கமன்ட் போடுவாங்க. இப்ப தமிழ் ஆக்கிட்டாங்க போல !!
"சம்பாரிக்கலாம் " :)))
Deeeiiiiiiii
online-kara
enke irunthuda
ippadi
kilambi vareenga ????
Evvalave sonnalum
ketkga mattengala ????
Ungalai enna thaan
pannurathu ?????
Irungada varen........
மனைவியை நேசிக்கும் உங்கள் மனமும் அழகுதான்.என்றும் இதே அன்பு தொடர வாழ்த்துகள் செந்தில் !
பயபுள்ள போதைல எழுதிருக்கு....
காதலித்த பொண்ணையே கைப் பிடித்த அதிர்ஷ்ட்டசாலி நீங்கள் என்று நினைக்கிறேன்! வரிகள் அருமை!
பெண்மையை புரிந்து கொண்டமைக்கு நன்றி .
//NAAI-NAKKS சொன்னது…
பயபுள்ள போதைல எழுதிருக்கு.... //
:)))))))
Kavithai rasikkum padiya irunthathu.. :-)
மனைவி மனதை தொட்ட கவிதை????
மாம்ஸ் முன்பே பேசிய விஷயம் தான் ஆனாலும் வலிக்கின்றது
மாம்ஸ் முன்பே பேசிய விஷயம் தான் ஆனாலும் வலிக்கின்றது
கருத்துரையிடுக