நேற்று 05.01.2012 மாலை 5 மணிக்கு சென்னையில் 35 வது புத்தகக் கண்காட்சி இனிதே துவங்கியது. வார நாட்களில் தினமும் மாலை 3 மணிக்கு துவங்கி இரவு 9 மணிக்கு நிறைவடையும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் காலை 11 மணிக்கு துவங்கி இரவு 9 மணிக்கு நிறைவடையும். மொத்தம் 682 அரங்குகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு,ஃப்ரென்ச் மொழிகளில் புத்தகங்கள் கிடைக்கும். நுழைவுக் கட்டணம் பெரியவ்ர்களுக்கு ரூ.5 ம், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அனுமதியும். அனைத்து புத்தகங்களுக்கும் 10% விலைக்கழிவு தருகிறார்கள்.
புத்தகக் கண்காட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதித்து இருப்பதால் வீட்டில் இருந்தே தேவையான பைகளை எடுத்துச்செல்லுங்கள். மேலும் பல நல்ல ஆலோசனைகளை நண்பர் சிராஜ் வழங்கியிருக்கிறார். அவசியம் படித்து பின்பற்றுங்கள்..
எங்கள் “ழ” பதிப்பக ம்ற்றும் உலகநாதனின் “உ” பதிப்பக புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும் இடங்கள்..
1. அரங்கு எண் : 161,162, ராஜகுமாரி பப்ளிகேஷன்
2. அரங்கு எண் : 334 டிஸ்கவரி புக் பேலஸ்
மாலை ஆறு மணிவாக்கில் அரங்குக்குள் நுழைந்தபோது பைக் கட்டணமாக ரூ.10 கேட்டார்கள். ஆனால் முதல்நாள் மட்டும் அரங்கினுள் நுழைய இலவசமாய் அனுமதித்தார்கள். புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு, வாகனங்களுக்கு கட்டணம் விதிப்பது சரியான செயல் இல்லை. பபாசி தொடர்ந்து இந்த தவறை செய்கிறது.
அடுத்து நேற்று கூட்டம் அவ்வளவாக இல்லை. பதிவர்கள் லக்கி, அதிஷா இருவரும் முன்னமே வந்து அரங்கத்தை சுற்றிவந்தனர், அதன்பின் கேபிள் வந்தார். மேலும் பபஷா, கே.வி.ஆர், ராஜகோபால் ,தினேஷ், சங்கர், மயில் ஆகியோரும் வந்திருந்தனர். பபாஷா & கோ லயன் காமிக்ஸ் தொகுப்பை வாங்கியிருந்தனர், அவர்களின் உதவியால் மீனாட்சி புத்தக நிலையத்தில் ( அரங்கு எண் : 422) சுஜாதாவின் அத்தனை புத்தகங்களையும் சல்லிசாக வாங்க முடிந்தது. சுஜாதாவின் புத்தகங்கள் இதற்கு அடுத்தபடியாக விசா பதிப்பகத்தால் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. என்னுடைய பசங்களுக்காக கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். மயில் சு.வெங்கடேசனின் ”காவல் கோட்டம்” புத்தகத்தை வாங்கினார். தமிழினி காவல் கோட்டம் புத்தகம் வாங்குபவர்களுக்கு ஒரு இலக்கியவாதி ஜோல்னாப் பையை வழங்குகிறது.
நேற்று நிறைய கடைகளில் புத்தகங்கள் அப்போதுதான் வந்து இறங்கத்தொடங்கின. சாப்பாட்டுக்கடைகளும் அவ்வளவாக திறக்கப்படவில்லை நான்கு போண்டா ரூ. 50 க்கு விற்பதாக நண்பர் சொன்னார். கேபிளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் நண்பர் தன்னுடைய கவிதைப் புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்தார். வரும் சனியன்று நாகரத்த்னா பதிப்பகம் சார்பாக ஒரு கவிதை புத்தகம் வெளியிட இருக்கிறார். எனவே இனி அவர் நிறைய எண்டர் கவிதைகள் எழுதி உங்களை என்கவுண்டர் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
கிழக்கு இந்தமுறை தனது அரங்கங்களை தனித்தனியாக வைத்திருக்கிறது. இந்தவருடம் அவர்கள் சில புத்தகங்களை மட்டுமே வெளியிட்டதால் அங்கு கூட்டம் குறைவே. உயிர்மையில் ஓரளவு கூட்டம் இருந்தது. இந்தவருடம் உயிர்மையில் நான் வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் அதிகம்., கீழைக்காற்று இம்முறை அதிக புத்தகங்களை வைத்திருக்கிறது, குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகம் இருக்கிறது. இம்முறை சி.டிக்கள் விற்பனையும் வந்திருக்கிறது. அதிகம் கல்வி சம்பந்தமான சி.டிக்கள்தான், ஹாலிவுட் படங்களும் கிடைக்கிறது..
9 கருத்துகள்:
ரைட்டு...
நான் 14-01-2011 சனி அன்று வருவதாக உத்தேசித்துள்ளேன்..
அன்னைக்கு பார்க்கலாம் தலைவரே...
சிராஜ் அழைத்தான். நானும் வரவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன். பார்க்கலாம்.
கே.ஆர்.பி,
தெளிவாக சொல்லியுள்ளீர்கள், சி.டி விற்பனை எப்போதும் உண்டு ஆச்சே, டவ் மல்டி மீடியா , இன்ன பிறர் எல்லாம் டிவிடிக்கள் விற்பார்கள் வழக்கமாக. திரைப்பட சிடிக்கள் தான் புது வரவு என நினைக்கிறேன்.
நல்ல அறிமுகம் நண்பரே... எனது பதிவின் லிங்க் கொடுத்ததற்கும் நன்றி....
புத்தக கண்காட்சி என்னைப்போல புத்தக வெறியர்களுக்கு பெருவிருந்தே 2009 கண்காட்சியில் 400 கிலோ புத்தகம் வாங்கி ஏர்போட்டில் அதிக டக்ஸ் கட்டி கொண்டுவந்து சேர்த்த நினைவுகள்...
இன்னிக்கு ஏன் வரலை தலைவா?
/நான்கு போண்டா ரூ. 50 க்கு விற்பதாக நண்பர் சொன்னார்//
இன்பர்மேஷன் இஸ் வேர்ல்ட்!
-அன்னவெறி கண்ணையன்.
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me
கருத்துரையிடுக