23 ஜன., 2012

வண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதை...


அவன் தன் காதலியைக் கொஞ்சி 
ஒரு கடிதம் எழுதினான்
அன்பே,
என் வண்ணத்துப்பூச்சியே
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்
ஆனால் 
சில நேரங்களில் 
நீ அனிந்து வரும் பிங்க்
சல்வாரை நான் வெறுக்கிறேன்
நீ வரும்ப்போதெல்லாம்
பரவும் வண்ணத்துப்பூச்சி வாசனையை
அது தருவதில்லை
ஊதா சுடிதார்தான் பிரமாதம்
எனவே 
என் பிரிய வண்ணத்துப்பூச்சியே 
இனி நீ ஊதாவில்தான் வரவேண்டும்..

அவள்
பதில் எழுதினாள்
டேய்! பரதேசி 
வண்ணத்துப்பூச்சியை
எனக்கு பிடிக்கவே பிடிக்காது
எனக்குப் பிடிக்காத 
நான் வெறுக்கும் பூச்சியை
எப்போது நீ நேசிக்க ஆரம்பித்தாயோ
இனி 
உனக்கும் எனக்கும் 
ஒன்றும் இல்லை 
மேலும் ஊதா நிறத்தில் 
நான் உடுத்தவே மாட்டேன்..

அதன்பிறகு 
வண்ணத்துப்பூச்சியை பார்க்கும்போதெல்லாம்
வெறுப்பான் அவன்
சோகமாவாள் அவள்..

அப்புறம் 
இந்தக்கவிதையில் வரும் 
வண்ணத்துப்பூச்சியை 
யாரும் 
நிராகரிக்கவோ
நேசிக்கவோ
நேர்ந்தால் 
நானும் 
அந்த வண்ணத்துப்பூச்சியும்
பொறுப்பில்லை..

அதே போல்
இனி எங்காவது
ஊதா தவிர 
வேறு வண்ணங்களிலும்
வரும் வண்ணத்துப்பூச்சிகளை
இனி உங்கள் காதலியோடு 
ஒப்பிடாதீர்கள்,
சில வேளைகளில்
அதே காதலியோடு
அது உங்களை சேர்த்து வைக்கும் 
அபாயம் நேரிடலாம்.. 

7 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

he...he

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

payangkara mokkai. Ungkal meethu parithaabam thaan varukirathu

rajamelaiyur சொன்னது…

பாவம் வன்னத்துபுச்சி பிரியர்கள்

நாய் நக்ஸ் சொன்னது…

லொள் ...லொள்..லொள்..லொள்...

ஹேமா சொன்னது…

வித்தியாசமான காதல் சிந்தனை.அருமை செந்தில் !

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஊதா தவிர
வேறு வண்ணங்களிலும்
வரும் வண்ணத்துப்பூச்சிகளை
இனி உங்கள் காதலியோடு
ஒப்பிடாதீர்கள்,
சில வேளைகளில்
அதே காதலியோடு
அது உங்களை சேர்த்து வைக்கும்
அபாயம் நேரிடலாம்..

நல்ல பயமுறுத்திறீங்க

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான கவிதை ! பாராட்டுக்கள் !