4 ஜன., 2012

நான் கெட்டவன்...


"உ" பதிப்பக நிறுவனர் திரு.உலகநாதனின் மூன்றாவது படைப்பாக வந்திருக்கும் "நான் கெட்டவன்" இரண்டு குறுநாவல்களையும், பத்து சிறுகதைகளையும் உள்ளடக்கியது. இதில் நான் கெட்டவன் என்கிற குறுநாவல் ஒரு அருமையான குறும்படத்திற்கான கதை. கதையின் முடிவில் ஒரு பிரபலமான எழுத்தாளனுக்கு நேரும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது தன் இளைய வயது சம்பவங்களால் தன்னை கெட்டவன் என ஒரு பொதுவான பேட்டியில் சொல்லப்போய் அது அவன் வாழ்வில் எத்தகைய முடிவை தந்து செல்கிறது என்பதை மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார்.

"குறை ஒன்று உண்டு"  எனும் இரண்டாவது குறுநாவலில் ஒரு அலுவலகம், அந்த நிறுவனத்தின் முக்கியமான டெண்டர் விசயம் எதிர் நிறுவனத்துக்கு கசியும்போது சம்பந்தப்பட்ட அலுவலர் பொறுப்பாவதும், அதனால் ஏற்படும் குளறுபடிகளும், அவன் வாழ்வில் வந்த வீணாவின் காதலும் இறுதியில் ஒரு கொலைகாரனாக மாறத்துணிந்த அவன். மனதில் இருந்த மாறாத காதலினால் என்ன முடிவு எடுக்கிறான் என்பதாக முடிகிறது. இதில் கதாநாயகனின் மனநிலையில் நாமும் இருப்பதே கதாசிரியனின் வெற்றி.

"கதிர்" இந்த சிறுகதையை முடிக்கும்போது ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறார்.

"கோபுவின் காதல் கதை"யில் கதையின் நாயகி தன் மனதை இருபது வருடங்கள் கழிந்தபின் வெளிக்காட்டுகிறாள். காதலில் நண்பர்கள் சொல்வதைக்கேட்டு அவசரப்படக்கூடாது என்பதை அறிவுறுத்தும் கதை. பொதுவாக நிறையபேரின் வாழ்வில் இந்தக் காதல் கடந்து போயிருக்கக் கூடும்.

"சாரிங்க எனக்கு வேற வழி தெரியல" அசத்தலான முடிவுடன் கூடிய இந்தக் கதை. ஒரு அடியாளின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகிறது.

"முனுசாமி சிரித்தான்" சற்றே பெரிய கதை இது, ஏழ்மைக்கும், பணக்காரத்தனத்துக்கும் உள்ள இடைவெளியில் நகரும் கதை. ஒரு சாதாரண குடிசைவாசியான முனுசாமி தன் கோபத்தை வெளிக்காட்டும் விதம் பொதுவானது. முடிவு  நல்ல வெடிச் சிரிப்பு...

"அமுதா" கல்கியில் வெளிவந்த இந்த கதையின் நாயகன் நிச்சயமாய் உலகநாதன்தான் என்பதை முதல் பாராவில் அவரே மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார். காதலுக்கு நிறம் ஒரு தடையாக நின்றபோது வாழ்வே துயரமாக மாறிய ஒரு பெண்ணின் கதை.

"சவால்" வறுமை நிறைந்த ஒரு எழுத்தாளனின் கதை. கடைசியில் வறுமையே ஜெயிக்கிறது.

"சேகர் அண்ணா" தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாமலே இருப்பதற்கு தன் சித்திதான் காரணம் என்றாலும், தன் நேர்மையை விட்டுக்கொடுக்காத சேகர் அண்ணா மிக உயர்ந்து நிற்கிறார்.

"மரண தண்டனை" ஒரு நல்ல திரைக்கதை ஆனால் நீதிபதியின் தீர்ப்புக்கான காரணம் சரியாக இல்லை. கதாசிரியனின் பார்வையில் சேகர் நியாயமாக காட்டப்பட்டாலும், இந்தக் கதை முழுமையாக இல்லை.

"ராஜன்" இந்தக் கதையும் ராஜனையும் அவன் காதலையும் சுற்றி நகர்ந்தாலும் விதி தன்னை ஒரு உயர் அதிகாரியாகவும், ராஜனை ஒரு டாக்சி டிரைவராகவும் மாற்றிவிட்டது என சொன்னவிதம் அருமை.

"வீடு" ஒரு ஏழையின் சொந்த வீட்டுக்கனவையும் அது நிஜமாகியபோது அவரிடம் இருந்து பறிபோகும் அந்த வீடு அவர்க்கும், அவர் குடும்பத்துக்கும் என்னவிதமான முடிவை தருகிறது என்பதே கதை. மிக நீண்ட நேரம் இந்தக் கதையில் என்னை விடுவிக்கமுடியவில்லை. இந்த தொகுப்பிலேயே மிகச்சிறந்த சிறுகதை இதுதான்.

பாராட்டுக்கள் உலகநாதன்..

புத்தம்:                   "நான் கெட்டவன் " 
விலை:                  ரூ. 70
வெளியிட்டோர் : "உ" பதிப்பகம் 

புத்தகம் டிஸ்கவரி புக் பேலசிலும், புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலசின் பிரத்யோக விற்பனை அரங்கிலும் கிடைக்கிறது.
 

8 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

நேற்றைய பதிவுக்கு மாங்கு மாங்குன்னு கமெண்ட் போட்டவங்க, எதிர் பதிவு போட்டவர்ன்னு யாருக்கும் பதில் சொல்லாம டபக்குன்னு அடுத்த பதிவை போட்டீங்க பாருங்க... அங்கதான் நீங்க ஒரு பிரபல பதிவர்ன்னு நிருபிக்கிறீங்க... வாழ்த்துகள்...

Sivakumar சொன்னது…

யோவ்.. பிரபாகரா..இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லாம எதுக்கு கமன்ட் போட்ட?

iniyavan சொன்னது…

நன்றி தலைவரே.பேச வார்த்தைகள் வரவில்லை.

Yaathoramani.blogspot.com சொன்னது…

புத்தக அறிமுகம் அருமை
வாங்கிப் படிக்க முயல்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்
த.ம 2

VANJOOR சொன்னது…

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

******
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2.
மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
**********
…….2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********

சசிகலா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Jana சொன்னது…

வணக்கம் நண்பா.. நீண்ட நாட்களின் பின்னர்.
புதுவருட வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

தொடரும் நட்சத்திர வாழ்த்துகள் செந்தில் !