24 ஆக., 2010

குளக்கரையில்.....

இரவுகளை சேகரித்துக் கொண்டிருந்த அந்தியில் 
கூடு திரும்பிய பறவைகளின் பாடல் ஒளியின் கீழுள்ள 
குளத்தில் வந்தமர்ந்த நிலவின் அழகில் பொறாமையுற்ற 
அல்லியும், தாமரையும் தன் அழகை மெருகூட்ட 
நட்சத்திர ஆகாயம் பற்கள் உதிரும்படி சிரிக்க 
படிக்கட்டில் வந்தமர்ந்த உன்னை 
மேகம் எட்டிப்பார்க்க 
நிலா கோபித்துக் கரையேற 
அல்லியும், தாமரையும் உனைப்பார்த்து தலைவணங்க 
உன்னருகில் நானும் வந்து அமர்ந்தவுடன் 
சற்றே நின்ற பறவைகளின் பாடலில்  
இரவு நம்மை முழுவதுமாய் மறைத்துக்கொண்டது...

28 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

இந்தக் கவிதையை மூச்சிவிடாம படிக்கனுமா தல...

vasu balaji சொன்னது…

கவிதை படிக்கையில்
மூச்சு முட்டுது.

விந்தையின் வித்தியாசக் கவிதைக்கு வெயிட்டிங்:)

ஆதவா சொன்னது…

இது ஒரு நல்ல கவிதைங்க செந்தில்.
படித்த நேரம் ரம்மியமோ என்னவோ, ஒரு மாயபிம்பமாக என்னை நினைத்து நான் அமர்ந்தேன்.
கவிதை உணரப்பட்டது!

இதை நீங்கள் விஞ்ஞானக் கவிதையென்றும் எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு!

இரவுகள் சேகரிக்கும் அந்தி - புத்தகம்.. புத்தகம் பலவற்றின் சேகரிப்பு, அல்லது தொகுப்பு.
அதன் வாசிப்பு (’பறவைகளின் பாடல்) பிரதிபிம்பமாக குளத்தில் அமர்ந்து
அல்லி மற்றும் தாமரை போன்ற மிதவைத் தாவரங்களைக் கள்ளியாக்கி, அழகு திருடப்பட்டு
ஆகாயப் புள்ளிகள் ஒளி கொட்டியபடி
உன்னைப் பார்க்க..

என்னால் கலைக்கப்பட்டது அத்தனையும்!!

மறைந்து போன இரவு. கரைந்து போன வாசகன்.
வாசகனின் வாசிப்பு பிம்பங்களே இவ்வரிகள்!!!

தொடருங்கள் செந்தில்!!

Unknown சொன்னது…

நடுவுல நிறுத்தி யோசிக்க கூடாதோ...?

VELU.G சொன்னது…

வித்தியாசமாக இருக்கிறது செந்தில்

நல்ல முயற்சி

Unknown சொன்னது…

நன்றி ஆதவா..

உங்கள் பார்வை எனக்கு மிகுந்த வியப்பை அளித்தது ... உங்களுக்கு என் பாராட்டுக்கள்...

பெயரில்லா சொன்னது…

//இரவுகளை சேகரித்துக் கொண்டிருந்த அந்தியில் //
கண் முன்னே இரவு விரிகிறது அண்ணா.. அருமை!

//நட்சத்திர ஆகாயம் பற்கள் உதிரும்படி சிரிக்க //
:)))

//நிலா கோபித்துக் கரையேற //
நிலவுக்கு எப்போதுமே பொறாமை தான்! ;)


//சற்றே நின்ற பறவைகளின் பாடலில்
இரவு நம்மை முழுவதுமாய் மறைத்துக்கொண்டது //

செம டச்சிங்..
இதமான கவிதை அண்ணா!

வினோ சொன்னது…

அண்ணே வணக்கம்.. கவிதை வேறு ஒன்றை நியாபகப் படுத்துகிறது...

Unknown சொன்னது…

நல்ல முயற்சி.

அருண் சொன்னது…

கவிதைய நிறுத்தாம வாசிக்கிறது புதுசா இருக்கு.
நல்லா இருக்கு
அட நல்லா இருக்குப்பா
அட நல்லாதானே இருக்கு.

சசிகுமார் சொன்னது…

சார் எனக்கு கவிதை பற்றி அந்த அளவுக்கு தெரியாது ஆனால் உங்களுடைய கவிதைகள் எண்ணை போன்று உள்ளவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக எளிதாகவும் நன்றாகவும் உள்ளது நண்பரே.

பவள சங்கரி சொன்னது…

அருமையான கவிதைங்க.மனதை ஒரு கணம் தீண்டிச் சென்றது. நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இதுக்கு கோனார் நோட்ஸ் எங்க கிடைக்கும் பிரதர்...

Syed Vaisul Karne சொன்னது…

இதற்கு தகுந்த தலைப்பு: "ஒரே மூச்சில்...."

பெயரில்லா சொன்னது…

புகைப்படம் மனதில் நிற்கிறது. அது வெகுநேரம் கண்களை கவிதைக்கு விடவே இல்லை.
கவிதையும் நன்றாக உள்ளது. கொஞ்சம் பிரித்து எழுதியிருந்தால் பரவாயில்லை.

Ahamed irshad சொன்னது…

வித்தியாசமான முயற்சிங்க செந்தில்.நல்லாருக்குங்க

சௌந்தர் சொன்னது…

அண்ணே கவிதை எப்படி வருது பாருங்கள்...

vinthaimanithan சொன்னது…

திருப்பிப் போட்டாதான் தோசை...
திருப்பிப்போட்டா கவிதை?! அ கவிதை!

முழுதாய் மறைத்துக்கொண்ட இரவுப்போதும்
சற்றும் நில்லாத புள்ளினங்களின் பாடலும்
சுவைகூட்டும் எப்போதும்
உன்னருகே நானும் என்னருகே நீயும்
அமர்ந்திருக்கும் குளத்தின் மலர்க்கூட்டம் தலையசைக்க
முழுமதியோ தலைமறைக்க
எட்டிப்பார்க்கும் மேகம்
மெல்ல நிகழ்ந்தேறும் படிக்கரைக் கூத்தைப்
பார்க்கும் ஆகாயப் புன்னகையில் விண்மீன்களின்
வெட்கச்சிரிப்பில் தம் அழகை
மெருகூட்டும் கமலமொன்றுடன்
சல்லாத்துணி கொண்டு மென்மை மூடும் நிலாவின் உரையாடலில்
கூடடைந்த பறவைகளின் சிறகுகளின் உரசல் விளக்கேற்ற
நம்மை நாம் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்
அந்தி இரவினைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

எஸ் பி பி போல முயற்சித்துப் பார்த்தேன் .. முடியவில்லை ... மூச்சு முட்டியபோதும் மூச்சு முட்டவில்லை ...

அப்புறம் தோழர் ...
இரண்டொரு நாளில் அலை பேசுகிறேன் ...
கோபம் கொள்ள வேண்டாம் ...

நேற்றிரவு பன்னிரண்டு ஐந்து முதல் ஒரு மணி வரை முழித்திருந்து உங்கள் பதிவுக்கு காத்திருந்தேன் ... இப்போது பதிவிடும் நேரத்தை மாற்றி விட்டீர்களா தோழர் ?!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

புரிஞ்சாப்ல இருக்கு.. ஆனா புரியல ..

என்னது நானு யாரா? சொன்னது…

///சற்றே நின்ற பறவைகளின் பாடலில்
இரவு நம்மை முழுவதுமாய் மறைத்துக்கொண்டது...///

என்ன ஒரு கவித்துவமான வரிகள்! மெய் சிலிர்கிறது!!!

தினம் ஒரு பதிவு எப்படி சாத்தியபடுகிறது அண்ணே!

நிறைய பின்னூட்டங்களும் இடுகிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்!

பெயரில்லா சொன்னது…

சந்தி,மரபு மாதிரி ஒரு ஸ்டைலா இருக்கு கவிதை?

Jerry Eshananda சொன்னது…

குளக்கரையை காதல் நிறைக்கிறது செந்தில்....

Jey சொன்னது…

செந்தில் நல்லாருக்கு.

(நமக்கு கவிதையெல்லாம் புரியாதுன்னு இவருக்கு தெரியுமா??)

ஹேமா சொன்னது…

இயற்கையோடு ஒன்றி மறைகிறது மூச்சுவிடாக் காதல் கவிதை !

ப.கந்தசாமி சொன்னது…

ஆஜர்.

செல்வா சொன்னது…

மூச்சு விடாம படிச்சேன் .. நல்லா இருந்தது ..!!

சின்னப்பயல் சொன்னது…

செந்தில்,
நான் என்னிக்கு தான் இப்டி எழுதப்போறேனோ?
உண்மை சொல்லணும்னா "பொறாமை"யாத்தான் இருக்கு...