4 நவ., 2010

முன்ன, பின்ன செத்திருந்தா தெரியும்...

மரியாதை தராதவனிடம் 
உனக்கென்ன பேச்சென்றேன், 
மரியாதை கெட்டுரும் 
சும்மா இரு என்றான்..

எனக்கு எப்போதும்
ஒரு பேச்சுதான்
மறு பேச்சு பேசாம நீ கேட்டா..

அரசு மருத்துவமனை 
வராந்தாவில் 
படுக்கையற்று கிடந்தனர் 
ஒரு முன்னால் 
பணக்காரனும், அரசியல்வாதியும்..

முன்பின் செத்திருந்தாதானே 
சுடுகாடு தெரியும்,
மின் மயானத்தின் வெளியே 
சொந்தத்துக்கு தத்துவம் சொன்னது 
ஒரு பெருசு..

திருமண நாளன்று மணமகள் 
ஓடிப்போனாள்,
தப்பித்துக்கொண்டது 
மணமகனா? மணமகளா?..

37 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

கேள்விகளாக, தேடல்களாக கவிதை.

nis சொன்னது…

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நண்பரே

பெயரில்லா சொன்னது…

//மணமகனா? மணமகளா?..//
எடக்கு மடக்கு கேள்வியாவுல இருக்கு? :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அலைகள் பாலா சொன்னது…

/// அலியெனத் தெரியாமல்
போதையில்
அழைத்துப்போனவன்
இந்நேரம் என்ன ஆகியிருப்பான்..?///

போதை தெளிஞ்சுருக்கும்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஒவ்வொரு கவிதையிலும் வார்த்தைகள் விளையாடுகிறது..

அருமை மாம்ஸ் :)

Ravi kumar Karunanithi சொன்னது…

kavidhai arumai....

ஜெய்லானி சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கேள்வியின் நாயகன்! தீபாவளி வாழ்த்துக்கள்.

மாணவன் சொன்னது…

"திருமண நாளன்று மணமகள்
ஓடிப்போனாள்,
தப்பித்துக்கொண்டது
மணமகனா? மணமகளா?.."

சரியான கேள்வி

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

என்னது நானு யாரா? சொன்னது…

என்ன தீபாவளிக் கொண்டாட்டக் குஷியோ! கவிதை துள்ளுது... அருமை அருமை... அந்த அலியைக் கூட்டிக்கொண்டுப் போனவன் புதுசா ஏதாவது கத்துக்கிட்டு இருப்பான். விடுங்க பாஸ்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை அருமை சார்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மின் மயானத்தின் வெளியே
சொந்ததுக்கு தத்துவம் சொன்னது
ஒரு பெருசு..


இந்த லைனில் சொந்தத்துக்கு என வர வேண்டும் என நினைக்கிறேன்

RVS சொன்னது…

செந்தில்.. தீபாவளி சரவெடி மாதிரி கவிதை.. நல்லா இருக்கு.. ;-)

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்லா இருக்கு சார்

Unknown சொன்னது…

//இந்த லைனில் சொந்தத்துக்கு என வர வேண்டும் என நினைக்கிறேன்//

மாற்றிவிட்டேன் செந்தில் சார்.. மிக்க நன்றி ..

போளூர் தயாநிதி சொன்னது…

renduperunthan
parattugal
polurdhayanithi

Unknown சொன்னது…

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.. அனைவரின் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//அலியெனத் தெரியாமல்//
இச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். என திருநங்கைகள் கண்ணீருடன் வேண்டுகிறார்கள்.
மாற்றுவோம்; சொல்லையும் எண்ணத்தையும்...

ராஜ நடராஜன் சொன்னது…

நீங்க வித்தியாசமான படங்களை எங்கேயிருந்து புடிக்கிறீங்க.முதல்ல அதைச் சொல்லுங்க அப்புறமா பின்னூடமிடுறேன்:)

Unknown சொன்னது…

//இச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். என திருநங்கைகள் கண்ணீருடன் வேண்டுகிறார்கள்.
மாற்றுவோம்; சொல்லையும் எண்ணத்தையும்...//

இந்த சொல்லை பயன்படுத்தியமைக்கு மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன் யோகன்.. நான் அந்த பத்தியை நீக்கி விட்டேன்..

Unknown சொன்னது…

//நீங்க வித்தியாசமான படங்களை எங்கேயிருந்து புடிக்கிறீங்க.முதல்ல அதைச் சொல்லுங்க அப்புறமா பின்னூடமிடுறேன்:)//படங்கள் நண்பர்கள் அனுப்பிவைக்கின்றனர்.. கோட்டோவியங்கள் நான் இங்கிருந்து/ /http://gapingvoid.com/// பயன்படுத்துகிறேன்..

மாதேவி சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

அருண் பிரசாத் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே!

அன்பரசன் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்...

அலைகள் பாலா சொன்னது…

//அலியெனத் தெரியாமல்//
இச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். என திருநங்கைகள் கண்ணீருடன் வேண்டுகிறார்கள்.
மாற்றுவோம்; சொல்லையும் எண்ணத்தையும்...

எனது மன்னிப்பும்..

அலைகள் பாலா சொன்னது…

//அலியெனத் தெரியாமல்//
இச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். என திருநங்கைகள் கண்ணீருடன் வேண்டுகிறார்கள்.
மாற்றுவோம்; சொல்லையும் எண்ணத்தையும்...

எனது மன்னிப்பும்..

a சொன்னது…

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.......

சௌந்தர் சொன்னது…

திருமண நாளன்று மணமகள்
ஓடிப்போனாள்,
தப்பித்துக்கொண்டது
மணமகனா? மணமகளா?../////

தெரியலை தெரியலை சரி அந்த திருமணத்திற்கு வந்த ஐயர்க்கு பணம் தருவார்களா..?

vasu balaji சொன்னது…

:)). இனிய தீபாவளி வாழ்த்துகள் செந்தில்.

சிவராம்குமார் சொன்னது…

\\திருமண நாளன்று மணமகள்
ஓடிப்போனாள்,
தப்பித்துக்கொண்டது
மணமகனா? மணமகளா?..\\

செம செம!!!

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

ராஜ நடராஜன் சொன்னது…

////நீங்க வித்தியாசமான படங்களை எங்கேயிருந்து புடிக்கிறீங்க.முதல்ல அதைச் சொல்லுங்க அப்புறமா பின்னூடமிடுறேன்:)//படங்கள் நண்பர்கள் அனுப்பிவைக்கின்றனர்.. கோட்டோவியங்கள் நான் இங்கிருந்து/ /http://gapingvoid.com/// பயன்படுத்துகிறேன்.. //

முதலில் தீபாவளி வாழ்த்துக்கள்.

பூ கோர்த்தால்தான் அழகா மாலையாகுது.இடம்,பொருள்,இடுகை பார்த்து கோட்டோவியம்,படங்கள் அசத்துறீங்ண்ணா.படம் அனுப்பும் உங்கள் நண்பர்களுக்கும் அவர்கள் கலை ரசனைக்கும்,உங்கள் தொகுப்புக்கும் இன்னுமொரு வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் சொன்னது…

//"திருமண நாளன்று மணமகள்
ஓடிப்போனாள்,
தப்பித்துக்கொண்டது
மணமகனா? மணமகளா?.."//

அந்தப் பெண் யாருடன் ஒடிப்போனாளோ அவரிடம் சில மாதங்கள் கழித்துக் கேட்டுப்பார்த்தால் உண்மையை சொல்லிவிடுவார். ;-)

கதிர்கா சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நேசமித்ரன் சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

vasan சொன்னது…

//எனக்கு எப்போதும்
ஒரு பேச்சுதான்
மறு பேச்சு பேசாம நீ கேட்டா..//

எனக்கு எப்போதும்
"ஒரே" பேச்சுதான்.
SUPER KRPS.