6 நவ., 2010

மழைக் காளான்கள்...

அவசரகதியில் இயங்கும் 
நகரத்தில் 
நிதானமாக பசியாறும் பிச்சைக்காரனாய் 
ஊர்ந்து செல்லும் பேருந்தின் 
கசகசப்பில் 
வழிகிறது சூரியக் குரூரம்..

எல்லா சேமிப்பு திட்டத்திலும் 
குருவி பொறுக்கும் அரிசியென
சேரும் சொத்து
திருமண விரயத்துக்கென..

மேற்ப் பார்வையாளனின்
கீழ்ப் பார்வைகளை 
கொசுக்களைப் போல் நசுக்கிவிட்டாலும் 
சமயங்களில் விரும்பத்தான் செய்கிறது 
மனசு 
ரணத்தில் அமரும் ஈயென..

தலையில் எச்சமிட்ட 
காகம் போல் 
நிகழ்ந்துவிட்டது என் 
பிறப்பு..

பிரதோஷ சிவ நாளில் 
நவக்கிரக சனிகளில் 
செவ்வாய், வெள்ளி முருகன் 
வீதி மாரியம்மன் விரதங்கள் 
பரிசீலிக்கப்படவில்லை 
என் மனுக்கள்.. 

ராஜகுமாரனும்,
சேவகர்களும் 
'ரமணி சந்திரனின்' நாயகனும் 
வலம் வரும் கனவு 
ஈசல் வாழ்க்கை..

27 கருத்துகள்:

எல் கே சொன்னது…

பணமில்லா காரணத்தினால் புலம்பும் பெண்ணோ ??

மங்குனி அமைச்சர் சொன்னது…

எல்லா சேமிப்பு திட்டத்திலும்
குருவி பொறுக்கும் அரிசியென
சேரும் சொத்து
திருமண விரயத்துக்கென..///

nice sir

Ahamed irshad சொன்னது…

கனவு ஈசல் வாழ்க்கை//

நித‌ர்ச‌ன‌ம்..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கவிதை அசத்தல்! படங்கள் எங்க இருந்துதான் எடுக்குறீன்களோ!

vasu balaji சொன்னது…

சபாஷ்!!!

நேசமித்ரன் சொன்னது…

நல்லாருக்கு தலைவரே

Unknown சொன்னது…

நல்லா இருக்குண்ணே...

PB Raj சொன்னது…

தலையில் எச்சமிட்ட
காகம் போல்
நிகழ்ந்துவிட்டது என்
பிறப்பு-

எஸ்.கே சொன்னது…

மிக நன்றாக உள்ளது சார்!

அலைகள் பாலா சொன்னது…

//எல்லா சேமிப்பு திட்டத்திலும்
குருவி பொறுக்கும் அரிசியென
சேரும் சொத்து
திருமண விரயத்துக்கென..//

unmai

அலைகள் பாலா சொன்னது…

//எல்லா சேமிப்பு திட்டத்திலும்
குருவி பொறுக்கும் அரிசியென
சேரும் சொத்து
திருமண விரயத்துக்கென..//

unmai

க ரா சொன்னது…

ஒரு பெருமூச்சுதான் விட முடியும் இந்த் கவிதைக்கு பதிலா....

அன்பரசன் சொன்னது…

//அவசரகதியில் இயங்கும்
நகரத்தில்
நிதானமாக பசியாறும் பிச்சைக்காரனாய்//

Nice.

மதுரை சரவணன் சொன்னது…

//தலையில் எச்சமிட்ட
காகம் போல்
நிகழ்ந்துவிட்டது என்
பிறப்பு..//


வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//தலையில் எச்சமிட்ட
காகம் போல்
நிகழ்ந்துவிட்டது என்
பிறப்பு..//

அருமை மாம்ஸ்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஈசல் வாழ்க்கையின் ஒவ்வொரு வரியும்
முதிர்கன்னியின் கண்ணீராய்...

என்னது நானு யாரா? சொன்னது…

கவிதை எளிமையாகவும், வளமையாகவும், இன்றைய எதார்த்த நிலையை சொல்லி இருக்கிறது. மிகவும் அருமையாகத்தான் இருக்கிறது கவிதை. நடத்துங்க உங்க ராஜாங்கத்தை! வெற்றி முரசுக் கொட்டட்டும்!

ஆனால் இந்த புலம்பல்கள் இன்னும் எத்தனைக் காலத்துக்கோ தெரியவில்லை!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நித‌ர்ச‌ன‌ம்..

ஹேமா சொன்னது…

அன்பு செந்தில் அன்பான தீபாவளி வாழ்த்துகள்.

கவிதை வாழ்வின் ஒவ்வொரு தூண்களில் முட்டித் தெறிக்கிறது.

உங்கள் கவிதைகளை அடிக்கடி இங்கே GTBC வானொலியில் புளியடி பரமசிவம் என்பவரின் நிகழ்ச்சியில் கேட்கிறேன்.போனவாரமும் ஏதோ விருந்தாளிகள்....என!சரியாக ஞாபகம் வரவில்லை.வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் சொன்னது…

காளான் கனமாய்

அன்புடன் அருணா சொன்னது…

அட!!

அம்பிகா சொன்னது…

\\எல்லா சேமிப்பு திட்டத்திலும்
குருவி பொறுக்கும் அரிசியென
சேரும் சொத்து
திருமண விரயத்துக்கென..\\
யதார்த்தம்

ராஜ நடராஜன் சொன்னது…

அப்பப்ப கொஞ்சம் கவிதை!கொஞ்சம் நம்ம நடை நல்லாயிருக்குமே:)

Unknown சொன்னது…

நல்லாயிருக்குங்க..

Jaleela Kamal சொன்னது…

நல்ல இருக்கு ஊர்வலத்துடன் படமும் நல்்் இருக்கு

செல்வா சொன்னது…

//எல்லா சேமிப்பு திட்டத்திலும்
குருவி பொறுக்கும் அரிசியென
சேரும் சொத்து
திருமண விரயத்துக்கென..
///

இது உண்மைதான் அண்ணா .,
பெரும்பாலான திருமணங்கள் இப்படியே நடக்கின்றன..
ஆனால் பல திருமணங்கள் கடன்வாங்கியும் செய்யப்படுகின்றன ..

Unknown சொன்னது…

//நிதானமாக பசியாறும் பிச்சைக்காரனாய் //
//எல்லா சேமிப்பு திட்டத்திலும் குருவி பொறுக்கும் அரிசியெனசேரும் சொத்துதிருமண விரயத்துக்கென//

அருமையான சொல்லாடல்கள்.