27 நவ., 2010

நந்தலாலா - இசைத்தாலாட்டு ....

முதலில் இளையராஜாவின் பாதம் தொட்டு வணங்கிவிட்டு இந்த விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கிறேன். என் வாழ்நாளில் முதல்நாள் முதல் ஷோ படம் பார்த்துவிட்டு அதே படத்தை அடுத்த ஷோவும் பார்த்த ஒரே படம் நந்தலாலா மட்டும்தான். தமிழ் சினிமாக்களில் குளோசப் காட்சிகளைப் பார்த்து பார்த்து வெறுப்படைந்து இருந்த எனக்கு முதல் முறையாக முழுக்க லோ வைட் ஆங்கிளில் பெரும்பாலான காட்சிகள் நகர்வதும், ஒரு காட்சிக்குள் படத்தின் தொடர்புள்ள காட்சிகளை கண்ணுக்கு உறுத்தாமல் புகுத்தியுள்ள விசயமும் தமிழ் சினிமாவுக்கு புதியது.

தமிழ் படங்களில் பொதுவாக முகத்தை டைட் குளோசப்பில் காட்டிதான் வசனங்கள் தெறிக்கும், ஆனால் கால்களை வைத்தே அஞ்சாதே படத்தில் ஒரு சீனை நகர்த்திய மிஸ்கின் இந்த படத்தில் பெரும்பாலான ஷாட்டுகளை கால்களின் மூலம் புரிய வைத்திருப்பார். நிமிடத்திற்கு முப்பது கட் வைக்கும் ஆண்டனி போன்றவர்கள் நிச்சயம் இந்தப்படத்தை பார்த்து திருந்தட்டும். ஒரே ஷாட்டில் நீளமான காட்சிகளை வைத்து கதை சொல்வதும். கதை அடுத்த நகர்விற்கு போகும்போது நிலையான ஷாட்டுகளின் மூலம் நம்மை படத்திற்குள் இழுதுப்போடுவதும் முழுக்க முழுக்க இந்திய சினிமாவுக்கு புதியது.

இந்த படத்தின் மூலம் ராஜா யாராலும் எட்ட முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டார். படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது ராஜா மட்டுமே. தேவையான இடங்களில் மட்டும் தன்னை நிறுத்தி வசனங்களால் விவரிக்க முடியாத காட்சிகளை தன் இசையால் ரசிகனுக்கு சொல்வது அடடா.... அடுத்து ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஒரே இடத்தில் கேமராவை நிறுத்தி வைத்து கேரக்டர்களை நகரவிட்டு எடுத்ததும், கேரக்டரும், கேமராவும் அசையாமல் ஸ்டில் போட்டோவை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும், கேரக்டர்கள் நகரும்போது அவர்கள் முன்னும், பின்னும், டாப், மட்டும் லோ வைட் ஆங்கிளிலும் நம்மை கதையோடும், கேரக்டர்களோடும் ஒன்றசெய்வதும் மகேஷ் முத்துசாமி அவர்களை தோளில் தூக்கி வைத்து பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது. அதேபோல் டிராட்ஸ்க்கி மருதுவின் கண்களை ஏமாற்றும் கலைவடிவம், தேர்ந்த எடிட்டிங் என எங்கும் குறை சொல்ல முடியாத உழைப்பு.

இது ஜப்பானிய மொழி ( Kikujiro (1999) by Takeshi Kitano )  தழுவல் என்றாலும், முற்றிலும் நமது கதைக்களனில்தான் படம் நகர்கிறது. வழி நெடுக சந்திக்கும் நபர்கள். அவர்களையும் உயிரோட்டமாக காட்டியது என முற்றிலும் மாறுபட்ட கதைக்களன். சிறுவன் அகி யாக நடித்த அஸ்வத்தின் கன்னங்களில் ஆயிரம் முத்தங்கள் தரவேண்டும். ஒரு தேர்ந்த அந்த வயதிற்கே உரிய புத்திசாலித்தனம் தனது அம்மாவை பாசமான பிம்பத்துடன் தேடி அலைவது என பையன் கலக்கியிருக்கிறான். பாஸ்கர் மணியாகவே நம்மை பார்க்க வைத்துவிட்ட மிஸ்கின் காலை தொட்டும் வணங்குகிறேன். மனிதன் என்னமா வாழ்திருக்கார். ஒரு கையில் நழுவும் பேண்டை பிடித்தபடி நடக்கவும், ஓடவும், சுமந்தவாறே ஓடவும் நிறைய சிரமப்பட்டிருப்பார். 


அடுத்து படம் முழுதும் வந்து கொண்டேயிருக்கிற தனித்தனி பாத்திரங்கள். எல்லோரும் தங்கள் பங்கினை வெகு சிறப்பாக செய்து இருக்கிறார்கள். அத்தனை பேரையும் பற்றி எழுத இந்தப்பதிவு போதாது. ஸ்னிக்தா, ரோகினி, இருவருமே நிறைவாக செய்து இருக்கிறார்கள். ஒரு குப்பை படத்தை 150 கோடியில் எடுத்து, அதனை ஹாலிவுட்டுக்கே சவால் என்று சொல்லிகொண்டவர்கள் இந்தபடத்தை பாருங்கள். இதுதான் நிஜமான ஹாலிவுட்டுக்கு இணையான படம். இந்த வருடத்தின் அத்தனை விருதுகளையும் பெறப்போகும் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


இந்தப் படத்தின் விமர்சனம் படிக்கும் அனைவரும் தயவு செய்து திரையரங்கில் சென்று படத்தை பாருங்கள். அதுதான் இன்னும் இதுபோன்ற ஆரோக்கியமான தமிழ் சினிமா வர வழிவகுக்கும்.  

53 கருத்துகள்:

Cable சங்கர் சொன்னது…

இம்பாக்டிலிருந்து வெளிவரவில்லை போலிருக்கிறதே எனக்கும் அஃதே..

Philosophy Prabhakaran சொன்னது…

கதையை வெளியிடாமல் நாசூக்காக எழுதியிருக்கிறீர்கள்... நான் நாளை பார்க்க இருக்கிறேன்...

a சொன்னது…

நல்ல படம்............ விமர்சனங்கள் படத்தை பார்க்க தூண்டுகிறது...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

விமர்சனங்கள் படத்தை பார்க்க தூண்டுகிறது...

கூடிய விரைவில் பார்த்து விட வேண்டியது தான்...

க ரா சொன்னது…

இங்க படம் வருதான்னு தெரியல...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ரொம்பவே அனுபவித்து எழுதி இருக்கீங்க! பார்க்க வேண்டும்.

மாணவன் சொன்னது…

அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்...

//இந்தப் படத்தின் விமர்சனம் படிக்கும் அனைவரும் தயவு செய்து திரையரங்கில் சென்று படத்தை பாருங்கள். அதுதான் இன்னும் இதுபோன்ற ஆரோக்கியமான தமிழ் சினிமா வர வழிவகுக்கும். //

நிச்சயமாக ஆரோக்கியமான தமிழ் சினிமா வர நாமும் பங்கெடுத்துக்கொள்வோம்...

மாணவன் சொன்னது…

//முதலில் இளையராஜாவின் பாதம் தொட்டு வணங்கிவிட்டு இந்த விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கிறேன்//

அருமை அண்ணே,
படத்திற்கு உயிரே ராஜாதான் என்று உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது

விரைவில் பார்க்க வேண்டும்...

மாணவன் சொன்னது…

//இந்த படத்தின் மூலம் ராஜா யாராலும் எட்ட முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டார். படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது ராஜா மட்டுமே. தேவையான இடங்களில் மட்டும் தன்னை நிறுத்தி வசனங்களால் விவரிக்க முடியாத காட்சிகளை தன் இசையால் ரசிகனுக்கு சொல்வது அடடா.... //

சமீப காலமாக ராகதேவனின் இசை அவ்வளவாக பேசப்படவில்லை என்று குறைகூறிக் கொண்டு இருந்தார்கள்,
இது ராகதேவனின் வெறியர்களாகிய எங்களுக்கும் ஒரு குறையாகவும் சற்று வருத்தமாகவும் இருந்தது,

இதற்கெல்லாம் தனது இசையால் பதிலடி கொடுத்து ராஜா தன்னை யாரென்று மீண்டும் நிருபித்துவிட்டார் ராஜா ராஜாதான்...

சிறந்த படைப்பும் கதைக்களமும் அமைந்தால் இசையில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது ராஜாவின் பலம்...

அடுத்த வருடம் தேசிய விருது நிச்சயம் ராஜாவுக்கு உண்டு

இசைஞானியை குறை சொல்பவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக்கொள்கிறோம்:

”நத்திங் பட் இளையராஜா”
NOTHING BUT ILAYARAJA

காமராஜ் சொன்னது…

அன்பின் செந்தில்....
மிகவும் பூரிப்பாக இருக்கிறது.

வர்த்தகம் என்று சொல்லிக்கொண்டு சாக்கடையை அள்ளி விற்கும் நிலை இருக்கிற இந்த நாட்களில்,
குண்டூசியைக்கோடி ரூப்பாய்க்கு விற்கிற வாங்குகிற இந்த நாட்களில்.ஒரு அசலான கலைப்படைப்பு வருவது கேள்விக்குறியகிறது.அல்லது அதை
அங்கீகரிப்பதும் அரிதாகிறது.மிஸ்கின் குறித்த உங்கள் பார்வை அழகு.இளையராஜா இந்த காலத்தில் கொண்டாடப்படவேண்டிய ஆனால் கொண்டாட மறந்த இசைக்கலைஞன். இந்த விமர்சனம் படம் பார்க்கிற ஆவலைத் துரிதப்படுத்துகிறது. பார்த்துவிடலாம் செந்தில்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

படத்தை பார்க்கத் தூண்டும் அருமையான விமர்சனம்.

ஜோதிஜி சொன்னது…

உங்கள் தெளிவான பட விமர்சனத்தை விட உங்கள் நண்பர் கொடுத்த முதல் பின்னோட்டம் தான் ஆச்சரியம்.

PB Raj சொன்னது…

ஒரு குப்பை படத்தை 150 கோடியில் எடுத்து, அதனை ஹாலிவுட்டுக்கே சவால் என்று சொல்லிகொண்டவர்கள் இந்தபடத்தை பாருங்கள். இதுதான் நிஜமான ஹாலிவுட்டுக்கு இணையான படம்.

உங்கள் கருத்துதான் என் கருத்தும்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

விமர்சனங்கள் படத்தை பார்க்க தூண்டுகிறது...

Asiya Omar சொன்னது…

நல்ல விமர்சனம்.படங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு இல்லை.பார்ப்போம்.

Unknown சொன்னது…

மிக உணர்ச்சிவசப்பட்டு எழுதி உள்ளீர்கள். நிச்சயம் இது நல்ல படம்.

இது போன்ற சிறு பட்ஜெட் படங்கள் வெளி மாநிலங்களில் வெளியாவதில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நானும் பாக்க போரனே

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

பார்த்துவிடுவோம்..!!!

jayaramprakash சொன்னது…

"ஒரு குப்பை படத்தை 150 கோடியில் எடுத்து, அதனை ஹாலிவுட்டுக்கே சவால் என்று சொல்லிகொண்டவர்கள் இந்தபடத்தை பாருங்கள். இதுதான் நிஜமான ஹாலிவுட்டுக்கு இணையான படம். இந்த வருடத்தின் அத்தனை விருதுகளையும் பெறப்போகும் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்" mika sariyaka yezhuthiullirkal nanpare.Nan netre poka irunthen mazhaiyal pokavillai kandippaka indru parthu vitukiren.

Unknown சொன்னது…

சரியான விமர்சனம்...

Chitra சொன்னது…

இந்த படத்தின் மூலம் ராஜா யாராலும் எட்ட முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டார். படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது ராஜா மட்டுமே. தேவையான இடங்களில் மட்டும் தன்னை நிறுத்தி வசனங்களால் விவரிக்க முடியாத காட்சிகளை தன் இசையால் ரசிகனுக்கு சொல்வது அடடா....

.... Of course, he is a legend.

Unknown சொன்னது…

super!:))
waiting for DVD! :(

தமிழ் குமார் சொன்னது…

என்ன செந்தில் நம்ம ராஜாவின் BGM பற்றி தெரியாதா????சும்மா கலக்கி இருப்பார் ......முதலில் இப்படி ஒரு கதை களத்தை தமிழ் மக்கள் ரசிப்பார்கள் என்று நம்பி படம் எடுத்த மிஸ்கினுக்கு நன்றி.சும்மா காட்சிக்கு காட்சி அனைத்து வாத்யகருவிகளையும்
கதற விடுவது BGM ஆகாது.வளரும் இசை அமைப்பாளர்கள் இந்த படத்தின் BGM யை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

BGM --------------- Background Maestro

vinthaimanithan சொன்னது…

யப்பா! 150 கோடி குப்பையாகிவிட்டது என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களே!

பெயரில்லா சொன்னது…

படத்தை பார்க்க தூண்டுகிறது உங்களின் எழுத்துக்கள்...

ஆனால் எதற்கு எந்திரனை இழுக்க வேண்டும்? சின்னபுள்ளை தனமா இருக்கு? ஆர்ட் படத்தையும் மாஸ் படத்தையும் ஈடு கொடுத்து பேசுவது நல்லாவா இருக்கு செந்தில்?

சரி படம் இந்த வாரம் பார்த்து விடுறேன்...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

மணிஜி சொன்னது…

நாம் ஒரு முறை இணைந்து பார்ப்போம்

மர்மயோகி சொன்னது…

ஒரு சினிமா எடுத்ததற்காக காலைத்தொட்டுகும்பிடுகிறேன் என்று சொல்லி கொண்டே இருப்பது முட்டாள்தனத்தின் வெளிப்பாடு..

சௌந்தர் சொன்னது…

இந்த படம் எப்போது வரும் என்று எதிர் பார்த்தேன் படத்தின் பாடல்கள் மேன்மையானத்து வித்தியாசமாது படமும் அப்படி தான் இருக்கும் விரைவில் பார்க்க வேண்டும்....

ராகவன் சொன்னது…

அன்பு செந்தில்,

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க!...எல்லோரும் பாராட்டுகிறார்கள்... இந்த மாதிரி எங்கேயோ ஒக்காந்துட்டு இது போல ரீவ்யூ படிச்சுட்டு மண்ட காஞ்சு போயி கிடக்குறது நரகம் செந்தில்... என்ன இது... நினச்சது செய்யமுடியாத ஒரு வாழ்க்கை... அற்புதம்... இளையராஜா... சொல்லவும் வேணுமா செந்தில்... பேசாம மௌனமா இருந்துடலாம்... இளையராஜா பக்கத்துல... மூனு புள்ளி வச்சுட்டு நகர்ந்துடலாம்...

படங்களும் அழகான தெரிவு... செந்தில் மனசு நிறைவா இருக்கும்...

அன்புடன்
ராகவன்

உண்மைத்தமிழன் சொன்னது…

நன்றி செந்தில்.. நேற்று இரவு நான் தூங்கவே இல்லை..! மனம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள் மிஷ்கினும், ராஜாவும்..!

ராஜ நடராஜன் சொன்னது…

இப்பத்தான் உண்மைத்தமிழன் கடைலருந்து வாரேன்.இப்ப நீங்களுமா?

பதிவு படிக்கல!படம் பார்த்துட்டு அப்புறமா என்ன!

இளந்தென்றல் சொன்னது…

oru nalla padathai vimarsanam pannumpothu thevai illamal innoru padathai vambuku ilukaatheergal

http://www.legacyefx.com/features/features.html

Please check this link ethu hollywoodku inayana padamnu theriyum

இளந்தென்றல் சொன்னது…

oru nalla padathai vimarsanam pannumpothu thevai illamal innoru padathai vambuku ilukaatheergal

http://www.legacyefx.com/features/features.html

Please check this link ethu hollywoodku inayana padamnu theriyum

வெங்கட் சொன்னது…

@ மர்மயோகி.,

// ஒரு சினிமா எடுத்ததற்காக
காலைத்தொட்டுகும்பிடுகிறேன்
என்று சொல்லி கொண்டே இருப்பது
முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.. //

அவர் இளையராஜா அவர்களின்
இசைக்காக தான் அப்படி சொன்னார்..

செல்வா சொன்னது…

நந்தலாலா பற்றி நானும் சில விமர்சனங்கள் படித்தேன் அண்ணா .,
படம் பார்க்க வேண்டும் ..!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நானும் படம் பார்க்கனும்

dheva சொன்னது…

எந்த பக்கம் திரும்பினாலும் நந்தலாலா பத்திதன் பேச்சா இருக்கு செந்தில்..! உங்க ஆர்டிக்கிள் படிச்சு படம் பார்க்கா முடிவு பண்ணி விசாரிச்சு கிட்டு இருக்கேன்...இங்க எப்போ ரிலீஸ் பண்றாங்கண்னு...

For sure me too watch.. Senthil!

Thanks for sharing!

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல விமர்சனம் செந்தில். படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. சந்தோஷமா இருக்கு.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பதிவுலகில் அனைவரது விமர்சனங்களுமே படத்துக்கு ஆதரவாக உள்ளது படத்தின் தரத்தை உணர்த்துகிறது.
கமர்சியல் என்ற பெயரில் வரும் படங்களுக்கு மத்தியில் இது போன்ற ஒன்றிரண்டு படங்களாவது வருவது. தமிழன் என்ற முறையில் நம்மை பெருமைப்பட வைக்கிறது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சார் வழக்கமா கட்டுரைகளீல் சமூக அக்கறை தெறிக்க எழுதும் நீங்கள் சினிமா விமர்சனம் எழுதறீங்க என்றதுமே படத்தின் தரம் தெரிந்து விட்டது.உங்க விமர்சனம் டாப் அண்ணே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தொடர்ந்து விமர்சனம் எழுதுங்க

வெற்றி நமதே சொன்னது…

//////////
மர்மயோகி கூறியது...

ஒரு சினிமா எடுத்ததற்காக காலைத்தொட்டுகும்பிடுகிறேன் என்று சொல்லி கொண்டே இருப்பது முட்டாள்தனத்தின் வெளிப்பாடு..
////////////

படிச்ச முட்டாள் பசங்க ஏதோ சொல்லிட்டு போறானுங்க விடுங்க பாஸ் இதனால உங்களுக்குத்தான் ஒட்டு கொறையும், நீங்க இப்படி சொல்லி இருக்க கூடாது.

////முதலில் இளையராஜாவின் பாதம் தொட்டு வணங்கிவிட்டு இந்த விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கிறேன். ///

அருமை!

இப்படி சொல்லி இருக்கணும். பொழைக்க தெரியாத மனுஷன்யா நீ.

காலில் விழும் அளவுக்கு அவன் என்ன செஞ்சிட்டான் . பணத்தை வாங்கி கூத்தாடிங்களுக்கு கும்மி அடிக்கிறான். ஒரு படம் சும்மா செய்ய சொல்லன் தமிழனுக்காக(ஹிஹி )?

அம்பிகா சொன்னது…

//இந்தப் படத்தின் விமர்சனம் படிக்கும் அனைவரும் தயவு செய்து திரையரங்கில் சென்று படத்தை பாருங்கள். அதுதான் இன்னும் இதுபோன்ற ஆரோக்கியமான தமிழ் சினிமா வர வழிவகுக்கும். //

நிச்சயமாக !

'பரிவை' சே.குமார் சொன்னது…

விமர்சனங்கள் படத்தை பார்க்க தூண்டுகிறது...

நிலாரசிகன் சொன்னது…

விமர்சனம் நன்று.

அன்பரசன் சொன்னது…

பாடல்கள் கேட்டேன்.
நன்றாக உள்ளன.

sweet சொன்னது…

Eppadida irukka?

பெயரில்லா சொன்னது…

விமர்சனங்கள் படத்தை பார்க்க தூண்டுகின்றது...உங்களின் எழுத்துக்களும்...

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

விமர்சனங்கள் படத்தை பார்க்க தூண்டுகிறது

S Maharajan சொன்னது…

ஒரு படத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு தகுதி உள்ள உங்களுக்கு எந்த படத்தோடு எதை செய்ய compare seiya வேண்டும் என்ற எண்ணம் இல்லாததது வருத்தமே.

//படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது ராஜா மட்டுமே படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது ராஜா மட்டுமே//


இது போன்று பல படங்கள் அவரால் மட்டுமே.........

ஜெயந்தி சொன்னது…

பார்க்க வேண்டிய படம். பாக்கணும்.

க.பாலாசி சொன்னது…

//ஒரு குப்பை படத்தை 150 கோடியில் எடுத்து//

நச்.. ஆர்வப்படுத்தும் விமர்சனம். ஒரு நல்ல கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டிது..

phantom363 சொன்னது…

super movie. loved it. :)