7 ஜன., 2011

பயோடேட்டா - மன்மோகன் சிங் ...


பெயர்                                   : 'மண்ணு' மோகன் சிங்
இயற்பெயர்                        : மன்மோகன் சிங்
தலைவர்                             : சோனியா மற்றும் முன்பு புஷ், இப்போது ஒபாமா
துணை தலைவர்             : சிதம்பரம் வகையறா
மேலும்
துணைத் தலைவர்கள் 
   : அலுவாலியா, சிவசங்கர் மேனன், 

                                                       எம்.கே. நாராயணன், ஜோசப் 
வயது                                   : ஓய்வெடுக்க போக வேண்டிய வயது 
தொழில்                              : தலையாட்டுவது, நீட்டிய பேப்பரில் 
                                                  கையெழுத்துப் போடுவது 
பலம்                                     : சிறந்த சோனியா பக்தர்
பலவீனம்                             : வாங்கிய பட்டங்களை மறந்து போனது
நீண்ட கால சாதனைகள்     : ரூபாய் நோட்டில் கையெழத்து போட்டது 
சமீபத்திய சாதனைகள்        : எவ்ளோ ஊழல் ( "எனக்கு வாய்த்த       
                                                 அமைச்சரவை சகாக்கள் எவ்வளவு திறமைசாலிகள்!!!")

நீண்ட கால எரிச்சல்           : சிவப்புத் துண்டு போடுபவர்கள்
சமீபத்திய எரிச்சல்             : ராகுலின் பிரதமர் ஆசை 

மக்கள்                                        : எவ்வளவு 'அடிச்சாலும்' தாங்குகிறவர்கள் 
சொத்து மதிப்பு                      : தலைப்பாகை மட்டும்தான் வெளியில் 
                                                          தெரிகின்றது
நண்பர்கள்                               : மல்ட்டிநேஷனல் கம்பெனிக்காரர்கள்,
                                                         உலகவங்கி (கந்துவட்டி கந்தசாமி?!)
எதிரிகள்                                   : முக்கியமா மகாத்மா காந்தி (பின்னே சுதேசி, 
                                               கதர்னு சொன்னா எப்படி நாட்டை  ஃப்ளாட் போடுறது???) 

ஆசை                                        : நோபல் பரிசு
நிராசை                                    : அடுத்த ஜனாதிபதி
பாராட்டுக்குரியது             : பூதக்கண்ணாடி வச்சு தேடிப்பாத்தாலும் கிடைக்கல 
பயம்                                          : அடுத்து எந்த ஊழல் பத்தி வெளியாகுமோ
கோபம்                                    : ஹி..ஹி..அப்படியே பொத்துகிட்டு வந்தாலும் 
                                                       தாடி,மீசையைத்தாண்டி வெளியே வராது

காணமல் போனவை            : மனித நேயம்
புதியவை                                    : பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
கருத்து                                         :ஒரு நாட்டின் தொன்மையை காக்க வேண்டிய 
                                                          பதவியில் இருந்துகொண்டு மொத்த நாட்டையும் 
                                                         அந்நிய சக்திகளிடம் விற்றுகொண்டிருப்பது
                                                         எதிர்கால இந்தியாவை எங்கு போய் நிறுத்துமோ?
டிஸ்கி                                          : நாட்டை தன் உயிருக்கும் மேலாக நேசிக்கும் 
                                                          வீரமான ஒரு இனத்தில் பிறந்தவரா நீங்கள்?

45 கருத்துகள்:

க ரா சொன்னது…

ranakalam :)

Ram சொன்னது…

அதிகம் படித்த பிரதமர் மன்மோகன் அவர்கள்.. மாறான வழியில் நாறிகொண்டிருக்கிறார்.. அமெரிக்காவின் இந்திய உளவாளி.. இந்தியாவின் நிர்வாகி.. து...

தினேஷ்குமார் சொன்னது…

அண்ணா சுயவிவரம் அருமை....

எனக்கு ஒரு வருத்தம் அண்ணா தாங்கள் ஏன் என் தளத்துக்கு வரமருக்கிறீர்கள் என் எழுத்துக்களில் குற்றமிருந்தால் சொல்லுங்கள் அண்ணா ஏக்கங்களுடன் தங்கள் வருகையை எதிர்நோக்கும் பாலைவன பட்சி நான்.....

Unknown சொன்னது…

//சொத்து மதிப்பு : தலைப்பாகை மட்டும்தான் வெளியில் தெரிகின்றது//
சூப்பர்!
செம கலவரமா இருக்கு பாஸ்! :-)

ராஜவம்சம் சொன்னது…

ரத்தின சுருக்கமான பய டேட்டா வாழ்த்துக்கள் நண்பா.

Madhavan Srinivasagopalan சொன்னது…

சிம்ப்ளி செம..

செங்கோவி சொன்னது…

’மண்ணு’ மோகன் சிங்...ஹா..ஹா...அருமை.

மாணவன் சொன்னது…

//பெயர் : 'மண்ணு' மோகன் சிங்//

பெயரலியே தெளிவா சொல்லீட்டீங்க அருமை அண்ணே செம்ம கலக்கல்...

அன்பரசு சொன்னது…

நீங்கள் இப்படி உண்மையை எழுத கூடாது, அப்புறம் ஆட்டோ வரும் சொல்லிபுட்டேன். ஆமா இவரு காங்கிரஸ் கட்சியில எந்த கோஷ்டி, இவருக்காக யாரு ஆட்டோ அனுப்புவா?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Excellent Senthil

காமராஜ் சொன்னது…

வழக்கம்போல அசத்தல்.
இந்தப்பதிவை பாரட்டுவதைவிட படிக்கும்ப்போது எகிருகிற கோபம் எல்லோருக்கும் வரணும்.வராமலாபோகு?.வரும் வரை புத்தாண்டுவாழ்த்துக்கள் செந்தில்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வழக்கமான பாணியில்...
பெயரும், டிஸ்கியும் எல்லாம் சொல்கிறது.

Chitra சொன்னது…

வெளுத்து வாங்கிட்டீங்க....

வினோ சொன்னது…

டிஸ்கி - தான் இங்க... இன்னும் எவ்வளவு இருக்கோ :(

Bibiliobibuli சொன்னது…

என்னாது ஆசை நோபல் பரிசா!!!!!!! எனக்கு கண்ணை கட்டுதே.

"ஆசையு"ம், "பாராட்டுக்குரியது"ம் நல்லாவே ஒத்துப்போகுது.

"மண்ணு"மோகன் சிங்- இது விந்தைமனிதன் இவருக்கு வச்ச செல்லப்பெயரா!!

எல் கே சொன்னது…

//நாட்டை தன் உயிருக்கும் மேலாக நேசிக்கும்
வீரமான ஒரு இனத்தில் பிறந்தவரா நீங்கள்?//


சரியா கேள்வி

Unknown சொன்னது…

புகைப்படம், கோபம், டிஸ்கி சூப்பர்.

Unknown சொன்னது…

அசத்தி புட்டீங்க........

நாங்க நெனச்சா நாட்டோட தலைவரையும் clear (இந்திரா)பண்ணுவோம்.......நினைக்கலைன்னா சலாமும்(சோனியா) போடுவோம்..........

- இப்படிக்கு கொண்டை மோகன் சிங்

தமிழ்க்காதலன் சொன்னது…

தோழர் செந்திலுக்கு வணக்கம். உங்களின் பயோடேட்டாக்கள் பல பேருக்கு டாடா காட்டிடும் போலருக்கு. அசத்திட்டீங்க...ஓட்டு மொத்தமா இந்த தேசம் விற்க பட்டதன் ஒரே சாட்சியும், ஆதாரமும் அவர்தான். இவரை கொண்டு இத்தாலி காய் நகர்த்துகிறது. நாம் இன்னமும் தேசியப் பார்வையும், பற்றும் இல்லாமல் இருப்பதில் மனம் வேதனை அடைகிறது...

நாம் ஓரிருவர் மட்டும் குரல் கொடுத்து, மற்றவர் வேடிக்கை பார்க்காமல் அனைவரின் கரமும் சேருமானால் நம்முடைய அடுத்த தலைமுறையை அடிமை தனத்தில் இருந்து காக்க முடியும்.

ஒரு சாரார் எங்கே இங்கே நடக்கும் கொள்ளை, கொடுமை, வறுமை தாங்காமல் வெளிநாடுகளில் செட்டில் ஆக ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆக காரணம் வருமானம் மட்டுமல்ல, நம்முடைய அரசியல் அமைப்பு பிடிக்காமல், அதிகார வர்க்கத்தின் முறைகேடுகள் பார்த்து வெதும்பி போய் இவர்கள் திருந்த மாட்டார்கள் என்றெண்ணி தங்களின் இருப்பிடங்களை மாற்றும் எண்ணங்களில் பலர் இருக்கிறார்கள்.

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்...

தொடர்ந்திருங்கள்...

அன்புடன்...
தமிழ்க்காதலன்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

போட்டு தாக்குங்க ....சூப்பர் ...

உமர் | Umar சொன்னது…

இனத்தின் மாண்பு, பெருமைகளை உணர்ந்தவர்கள் இனத்தின் பெயருக்கு இழுக்கு சேர்க்கமாட்டார்கள். அதனை உணராதவர்களால்தான் இப்படி இருக்க முடியும். நம் இனத்திலும் ஒன்று இருக்கின்றதே, நாடகங்கள் நடத்திக் கொண்டு. :-(

ரமேஷ் வீரா சொன்னது…

முக்கியமா மகாத்மா காந்தி (பின்னே சுதேசி,
கதர்னு சொன்னா எப்படி நாட்டை ஃப்ளாட் போடுறது???)




அருமை அண்ணா ...... என்றுதான் என் தாய்நாட்டு மக்கள் சிந்திபார்களோ ?????????????????விடை தெரியா வினாவுடன் நாளைய தலைமுறை????????????

ரமேஷ் வீரா சொன்னது…

நம்பிக்கை துரோகம்


ஒரு கவிதை போடுங்கள் அண்ணா , இந்த தலைப்புக்கு

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

மண்ணு மோகன் சூப்பர்...

டிஸ்கி சரியான சவுக்கடி. இதுக்கே மண்ணு மோகன் பதவி விலகலாம்.

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

மண்ணு மோகன் சூப்பர்...

டிஸ்கி சரியான சவுக்கடி. இதுக்கே மண்ணு மோகன் பதவி விலகலாம்.

vasu balaji சொன்னது…

டிஸ்கிக்கே அக்ஷர லக்ஷம்:)

செல்வா சொன்னது…

//தொழில் : தலையாட்டுவது, நீட்டிய பேப்பரில்
கையெழுத்துப் போடுவது//

//பலம் : சிறந்த சோனியா பக்தர்///

வழக்கம் போலவே அருமையா இருக்கு அண்ணா , அதிலும் இந்த இரண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கலக்கல் தலைவரே

ராஜ நடராஜன் சொன்னது…

//டிஸ்கிக்கே அக்ஷர லக்ஷம்:) //

க்கும்!நச் இல்லாததற்கு பய களா(ல)ய்த்தான் தொட்டுக்கணும்:)

Sriakila சொன்னது…

// நாட்டை தன் உயிருக்கும் மேலாக நேசிக்கும்
வீரமான ஒரு இனத்தில் பிறந்தவரா
நீங்கள்?//

நச்!!!!

ஈரோடு கதிர் சொன்னது…

”காணாமல் போனவை” - மகாக் கொடுமைங்க

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

அருமை உங்கள் சுய விவரம் பாராட்டுக்கள்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

அருமை உங்கள் சுய விவரம் பாராட்டுக்கள்

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 9-வது இடம். வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

// நாட்டை தன் உயிருக்கும் மேலாக நேசிக்கும் வீரமான ஒரு இனத்தில் பிறந்தவரா நீங்கள்?///


ச்சே....அந்த வீரம் இத்தாலியின் காலில் செருப்பாகி போனது அந்த இனத்தின் ஒரு கரும்புள்ளி....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அதிகம் படித்த பிரதமர் மன்மோகன் அவர்கள்.. மாறான வழியில் நாறிகொண்டிருக்கிறார்.. ///

இங்கே வர நாறுது...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//எனக்கு ஒரு வருத்தம் அண்ணா தாங்கள் ஏன் என் தளத்துக்கு வரமருக்கிறீர்கள் என் எழுத்துக்களில் குற்றமிருந்தால் சொல்லுங்கள் அண்ணா ஏக்கங்களுடன் தங்கள் வருகையை எதிர்நோக்கும் பாலைவன பட்சி நான்.....///

குடிக்க தண்ணி குடுங்கய்யா....
இதோ நான் வர்றேன் ஓகே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//’மண்ணு’ மோகன் சிங்...ஹா..ஹா...அருமை.///

இனி "பண்ணு" மோகன்னு வரும் பாருங்க....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பெயரலியே தெளிவா சொல்லீட்டீங்க அருமை அண்ணே செம்ம கலக்கல்...///

மண்ணா போச்சு போ....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நீங்கள் இப்படி உண்மையை எழுத கூடாது, அப்புறம் ஆட்டோ வரும் சொல்லிபுட்டேன். ஆமா இவரு காங்கிரஸ் கட்சியில எந்த கோஷ்டி, இவருக்காக யாரு ஆட்டோ அனுப்புவா?///

அன்றனோ மேன்றனோ [என்ன எளவு பேரோ] சோனியாதேன்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//வெளுத்து வாங்கிட்டீங்க....//

வாங்கி வெளுத்துட்டீங்க...ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//என்னாது ஆசை நோபல் பரிசா!!!!!!! எனக்கு கண்ணை கட்டுதே.//


எனக்கு செவியும் சேர்த்து கட்டுதப்பூ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நாங்க நெனச்சா நாட்டோட தலைவரையும் clear (இந்திரா)பண்ணுவோம்.......நினைக்கலைன்னா சலாமும்(சோனியா) போடுவோம்..........

- இப்படிக்கு கொண்டை மோகன் சிங்//

அப்போ டு[து]ப்பாக்கி, இப்போ செருப்பு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//போட்டு தாக்குங்க ....சூப்பர் ...///

அருவாளை எடுலேய் மக்கா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//டிஸ்கி சரியான சவுக்கடி. இதுக்கே மண்ணு மோகன் பதவி விலகலாம்.///

இத்தாலியின் கவனத்திற்கு....