29 ஜன., 2011

தமிழர்களின் எழுச்சி.. #tnfisherman...


"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுத்துப் பெயின்"

வண்டியில் ஏற்றும் சுமை மயிலிறகே ஆனாலும் குறிப்பிட்ட அளவினைத் தாண்டும்போது வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பது குறள்.

இந்திய அரசின் கோழைத்தனமும் சுயநலமும் நிறைந்த 'இறையாண்மை' வண்டியில் தொடர்ந்து ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பது மயிலிறகல்ல- தமிழ்மீனவனின் உயிர். இதோ முறியத் துவங்கி இருக்கிறது இறையாண்மை அச்சு!

தமிழக மீனவன் இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு இறந்ததும். இத்தனை நாள் இல்லாது இணைய உலகில் திடீரென ஒரு எழுச்சி நெருப்பாக பற்றிக்கொள்ளும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. சமூகக் கோபமும், அக்கறையும் சராசரி இந்தியனிடம் குறிப்பாக தமிழனிடம் இல்லாமல் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நண்பர் TBCD அனுமன் வால் தீயென பற்றவைத்த சிறுநெருப்பு இன்று உலகம் முழுதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ் ஈழத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இன அழிப்பு உச்சகட்டத்தை அடைந்தபோது இந்திய ஊடகங்கள் அதை திட்டமிட்டே மறைத்தன. அப்போது இப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கும். நம் இப்போதாவது விழித்துக்கொண்டோமே...

இப்படித் தொடர்ந்து ட்விட்டுவது இரண்டொரு நாளில் குறைந்துபோகும் என்றுதான் கருணாநிதி முதலான அரசியல் சுயநலங்கள் கணக்குப் போட்டிருக்கும். ஆனால் உலகின் அத்தனை ஊடகங்களையும் திரும்பிப்பார்க்க வைத்த இணையதள நண்பர்கள் அனைவருக்கும் என் சல்யூட்.

இப்படி ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் மாற்றம் நிச்சயம் வரும்.இந்த போலி அரசியல் வியாதிகளையும் நம்மால் துடைத்தொழிக்க முடியும்.

"நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாடொறும் நாடு கெடும்"

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். 

இது சம்பந்தமான பதிவுகள்... ( இணைப்புகள் விடுபட்டிருந்தால் தயவு செய்து பின்னூட்டங்களில் தெரியப்படுத்துங்கள்)#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ


மீனவர்களுக்காக டிவிட்டர் நெருப்பு! #tnfisherman

#tnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்?


ட்விட்டரில் நடக்கும் போராட்டம்!!!!!#tnfisherman


#tnfisherman மெளனசாட்சியின் மூன்று கவி தைகள்


மீனவர்களுக்காக காகித ஆயுதம் செய்வோம்

தண்ணீரிலும் கண்ணிரிலுமே வாழ்கை.


மீனவ நண்பன் - டிவிட்டருக்கு வாருங்கள் #ட்ன்பிஷேர்மன்இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?

30 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

போராடுவோம்...
See,
தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா!?

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

சக்தி கல்வி மையம் சொன்னது…

உணர்வுள்ள.. தமிழர்களே..இப்பிரச்சனையை உலகலவில் பிரபலபடுத்த..இதன் தொடர்புள்ள அனைத்து பதிவுகளுக்கும் ஓட்டு போடுங்கள்.

எல் கே சொன்னது…

தொடர்ந்து போராடுவோம்

மாணவன் சொன்னது…

நாம் அனைவருமே நம்மால் முடிந்த வரை பங்கெடுத்துகொண்டு இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்...

நன்றி அண்ணே உங்களின் பங்களிப்புக்கு...

மாணவன் சொன்னது…

//மீனவ நண்பன் - டிவிட்டருக்கு வாருங்கள் #ட்ன்பிஷேர்மன்//

//
முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!//

அண்ணே, இந்த இரண்டு பதிவுகளின் இணைப்புகளும் சரியாக லிங்க் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன் தளம் திறக்கவில்லை... முடிந்தால் சரி செய்யுங்கள்.. நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போராடுவோம் தொடர்ந்து போராடுவோம்.....
இந்த விசியத்தை தமிழக குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். காரணம் அவர்களுக்கு ஒன்றுமே இன்னும் தெரியவில்லை ஆகையால்தான் சில நாதாரிங்க ஜெயிச்சி ஆள வந்துர்ரானுங்க....

ஈரோடு கதிர் சொன்னது…

சிங்களவனிடம் தமிழ் மீனவன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டும் பலியாகும் மீனவனுக்கு வெறும் 5 லட்சம் காசோலையோடு கடமையை முடிக்க நினைக்கும், கடிதங்களோடு மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் கண்ணாமூச்சியாடும் தமிழக அரசினைக் கண்டித்து.... விருது பட்டியலில் உள்ளவர்களைக் கலைமாமணி விருதுகளைப் புறக்கணிக்கக் கோருவோம்

Jana சொன்னது…

இந்திய அரசின் கோழைத்தனமும் சுயநலமும் நிறைந்த 'இறையாண்மை' வண்டியில் தொடர்ந்து ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பது மயிலிறகல்ல- தமிழ்மீனவனின் உயிர்.


மிக ஆழமான வரிகள்..

*இலங்கை இராணுவம் சுடவே இல்லை..
*இவர்கள் ஏன் எல்லை தாண்டிப்போகிறார்கள்?
*எங்களுக்கு யார் செத்தால் என்ன?
*இதுவும் ஒரு அரசியல்தான்
*இதுவும் புலிச்சார்பு..

இப்படி பேசிக்கொண்டு பல ஈனப்பிறப்புக்களும் நம் மத்தியிலே தமிழர்கள் என்று வாழ்வதுதான் அதைவிட பெரியவேதனை தோழா!

சில உணர்வுகளையும் சோகங்களையும்கூட அரசியல் என்று ஏழனம் செய்பவர்களையும், எட்ட நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும், இதை அரசியலாக்க முற்படுபவர்களையும் அந்த கடலுக்கே அனுப்பி சூடுவாங்க செய்யவேண்டும்.

ஈழத்தில் அல்ல, தமிழ்நாட்டு கடலில் அல்ல..உலகில் எந்த மூலையிலும் தமிழன்மேல் கைவைத்தால் முழுத்தமிழினமும் ஒருமித்து எப்போது ரௌத்திரம் கொள்கின்றதோ..அப்போது நிற்சயமாக உலகம் தமிழனுக்கு கீழேதான்.

உமர் | Umar சொன்னது…

இன்று மேலும் பலரும் இடுகைகளை இடத்தொடங்கியுள்ளனர். இன்னும் சிலர் தங்களது வேறு தலைப்பிலான இடுகையிலும் கூட தமிழக மீனவர்களுக்கு ஆதரவான விஷயங்கள் பற்றி எழுதியுள்ளனர். அதனால், முழுமையாக தொகுப்பது என்பது சாத்தியமா என்று தெரியவில்லை. நான் பார்த்த இடுகைகளை இங்கு இடுகின்றேன். உங்கள் தொகுப்பில் இல்லாவிட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

http://manguniamaicher.blogspot.com/2011/01/blog-post_28.html

http://tamilfuser.blogspot.com/2011/01/blog-post_27.html

http://kummacchi.blogspot.com/2011/01/blog-post_28.html

http://neechalkaran.blogspot.com/2011/01/tnfisherman.html

http://valaimanai.blogspot.com/2011/01/blog-post_28.html

http://blog.eesh.co.in/2011/01/all-in-all-tnfisherman.html

http://www.tamilpaper.net/?p=2399

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12640:2011-01-26-03-28-17&catid=1:articles&Itemid=264

http://masivakumar.blogspot.com/2011/01/blog-post_28.html

http://masivakumar.blogspot.com/2011/01/to-dr-manmohan-singh-prime-minister-of.html

http://new.vikatan.com/news.php?nid=861

http://new.vikatan.com/news.php?nid=864

http://www.vinavu.com/2011/01/28/tnfisherman/

http://www.luckylookonline.com/2011/01/save-tn-fisherman.html

http://www.nandhaa.com/2011/01/tnfisherman.html

http://networkedblogs.com/dz9Gu

http://thavaru.blogspot.com/2011/01/tnfisherman.html

http://kalvetu.blogspot.com/2011/01/tnfisherman.html

http://kalvetu.blogspot.com/2011/01/tnfishermen-tnfisherman.html

http://thamiziniyan.com/?p=992

http://punnagaithesam.blogspot.com/2011/01/tnfisherman_28.html

http://vivasaayi.blogspot.com/2011/01/tnfisherman-march-twitter.html

http://shanthru.blogspot.com/2011/01/blog-post_28.html

http://thillumullu2011.blogspot.com/2011/01/blog-post_28.html

http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_29.html

http://kumarikantam.blogspot.com/2011/01/blog-post_5041.html

http://kumarikantam.blogspot.com/2011/01/blog-post_28.html

http://www.vinavu.com/2011/01/29/tn-fisherman-campaign/

http://athirai.blogspot.com/2011/01/blog-post_29.html

http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_29.html

http://enpakkangal-rajagopal.blogspot.com/2011/01/blog-post_29.html

இவற்றுள் பல பதிவர்கள் இரண்டு இடுகைகளும் கூட இட்டுள்ளனர்.

பல்வேறு இணைய இதழ்களும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.
அவற்றை நான் இங்கு அளிக்கவில்லை.

நீங்கள் கொடுத்திருக்கும் சில இணைப்புகள் சரியாக இயங்கவில்லை. formatting சரியில்லாமல் உள்ளது. அனைத்து பதிவுகளின் தலைப்புகளையும் ஒரே அளவிலான எழுத்துகளில் இட்டால் நன்றாக இருக்கும்.

.

வினோ சொன்னது…

தொடர்ந்தது போராடுவோம்...

செ.சரவணக்குமார் சொன்னது…

நம் மீனவ சொந்தங்களுக்காக இணைய நண்பர்கள் தொடங்கியிருக்கும் இந்த அறப்போராட்டத்தை இன்னும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

ஹேமா சொன்னது…

இந்த வேகம்தான் வேணும் !

தறுதலை சொன்னது…

தொடர்ந்து போராடுவோம். நம் கண்டணங்களை பதிவு செய்வோம். உலகின் பார்வைக்கு எடுத்துச் செல்வோம்.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

Jana சொன்னது…

பாக்கு நீரிணை சிவக்கின்றது!!
http://janavin.blogspot.com/2011/01/blog-post_29.html


யாழ்ப்பாணத்தில் இருந்து....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மிக ஆழமான வரிகள்..

ராஜ நடராஜன் சொன்னது…

செந்தில்ண்ணா!இணையதளம் மூலமாவது சாதிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

இதில் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக திரும்பிப் பார்க்கிறார்கள் என்பதால் இந்த மகிழ்ச்சியில் அவர்களுக்கும் பங்கு உண்டு.

மீனவர்கள் குறித்து தொடர்ந்து ஜாக்கி குறிப்பிட்டு வருகிறார்.தமிழகத்தில் மீனவர்களின் ஒற்றுமை மிக முக்கியம்.அந்த ஒற்றுமை பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து போய் இருக்கிறது.இல்லையென்றால் இணைய ட்விட்டரை விட சீமான் குரல் கொடுக்கும் போது இவர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தால் களத்திலேயே மக்களின் குரல் ஓங்கி ஒலித்திருக்கும்.சீமானுக்கும் தன் பாதையின் அடுத்த படியை தொடர்வதற்கு துணையாக இருந்திருக்கும்.

பதிவின் இணைப்பிற்கு நன்றி.

ராஜ நடராஜன் சொன்னது…

இலங்கை அதிகார பீடத்துக்கும்,அதன் மக்களுக்கும் தமிழகத்தின் எல்லையும்,நட்புறவும் அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற புரிதல் வேண்டும்.

இதன் புரிதல் மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் இல்லையென்று கருதமுடியாது.ஆனால் கொல்லைப்புறக் கொள்கை வகுத்துக்கொண்டு இந்தியாவின் எதிர்காலத்தை மேலும் சிக்கலில் சேர்க்கவே நினைக்கிறார்கள்.அல்லது அஜென்டாவின் கடைசிப்பக்கத்தில் தமிழக எல்லைப்புறக் காவல் பற்றி சேர்த்து விட்டு மொத்த ஊழல்களின் தினங்களில் பிரச்சினையை தீர்வுக்கு கொண்டு வர இயலாமல் தவிக்கிறார்கள் என்பேன்.

இதில் பெரும் ஆதங்கம் என்னவென்றால் தமிழக முதல்வர் தமிழக மீனவர்கள் மீனுக்கு ஆசைப்பட்டு எல்லை கடந்து விடுகிறார்கள் என்பது.ஒரு மாநில காவலனின் உடல்,மனம்,மொழி சுகாதாரமாக இருப்பது தலைமைக்கும்,அதன் மக்களுக்கும் நல்லது.

Unknown சொன்னது…

நிருபமா இலங்கை பயணம் # அந்தாளு குடுக்குற டீய குடிச்சுட்டு விஷயத்த பேசாமா வந்துராதீங்க # பிரணாப் மாதிரி. #tnfisherman #TNfisherman

Unknown சொன்னது…

வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..

raja சொன்னது…

ட்வீட்டரையும் மீறி பொதுமக்களிடம் காட்டுத்தீ போல நமது எழுச்சி பரவவேண்டும்... நண்பர்கே சகல திசைகளிலும் உங்கள் எண்ணங்களை தமிழக மீனவனின் பிரச்சினைகளை பேசுங்கள் எழுதுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடர்ந்து போராடுவோம்.

Jerry Eshananda சொன்னது…

Bravo......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தொடர்ந்து போராடுவோம்

ஜெய்லானி சொன்னது…

தொடர்ந்து போராடுவோம்

மதுரை சரவணன் சொன்னது…

போராடுவோம்.. பகிர்வுக்கு நன்றி. http://veeluthukal.blogspot.com/2011/01/blog-post_29.htmlபடிக்கவும்.

பெயரில்லா சொன்னது…

>>> என் சகோதரனை கொல்லும் பொறுக்கியை தட்டிக்கேட்காத தலைவர்கள் இந்த விருதை பெற்றுக்கொள்க! “சிறந்த பொறம்போக்கு” விருது!

Unknown சொன்னது…

//இந்திய அரசின் கோழைத்தனமும் சுயநலமும் நிறைந்த 'இறையாண்மை' வண்டியில் தொடர்ந்து ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பது மயிலிறகல்ல- தமிழ்மீனவனின் உயிர்//
:-(

'பரிவை' சே.குமார் சொன்னது…

போராடுவோம்...
தொடர்ந்து போராடுவோம்...

செல்வா சொன்னது…

நானும் டுவிட்ட ஆரம்பித்து விட்டேன் அண்ணா .

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில் - அனைத்துப் பதிவர்களின் உணர்ச்சிகளும் அரசின் கவனத்திற்கு வந்திருக்கும். என்ன செய்கிறார்கள். இதை விட முக்கிய வேலைகள் பல இருக்கின்றன அவர்களுக்கு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்