18 ஜன., 2011

சித்தன் வாழ்க்கை...

மதுச்சாலைகளின்
சிறிய வெளிச்சத்தில் 
சிதறிய குப்பைகளின் மேல் 
சகிக்க முடியா மேசையில் 
இட நெருக்கடியை பகிர முடியாது 
நின்றவாறே எப்போதும் ..

கூடுதல் விலைக்கு 
விற்பவனின் பரம்பரையை 
ஏலம் விட்டான் ஒருவன்,
போலி சரக்கு தந்த 
ஆள்வோரை இன்னொருவன்..

கடைக்கு வெளியே 
இறைவனை நாடி 
புதிய வகை யோகாவை 
பயின்றுகொண்டிருந்தான் ஒருவன்,
கடவுளிடம் பேசிக்கொண்டு 
இன்னொருவன்..

சகித்துக்கொண்டுதான் 
வாழவேண்டியிருக்கிறது 
ஆள்பவர்களையும் 
அல்லக்கைகளையும் 
சமயங்களில் என்னையும்..

20 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

"என்னையும்." என்கிற ஒரு வார்த்தை
எதை எதையோ நினைவுறுத்திப் போகிறது
வாழ்த்துக்கள்

ஆர்வா சொன்னது…

சகித்தல் மட்டும்தான் வாழ்க்கையை இலகுவாய் மாற்றுகிறது..

அருமையான பதிவு

'பரிவை' சே.குமார் சொன்னது…

//சகித்துக்கொண்டுதான்
வாழவேண்டியிருக்கிறது
ஆள்பவர்களையும்
அல்லக்கைகளையும்
சமயங்களில் என்னையும்//

intha oru para ayiram arththam solkirathu anna.

சக்தி கல்வி மையம் சொன்னது…

நல்ல கவிதை படிக்கும் போது மனது ஒர் நிமிடம்.!!!!
இந்தக் கவிதை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு,

Jana சொன்னது…

//சகித்துக்கொண்டுதான்
வாழவேண்டியிருக்கிறது
ஆள்பவர்களையும்
அல்லக்கைகளையும்
சமயங்களில் என்னையும்..//

Top Superb...

பெயரில்லா சொன்னது…

யாரையும் சபிக்க முடியாத
ஊமைகள்...
நமது
எழுத்து போதையில்
இவற்றை
நாமும் உளறிக்கொண்டு
போவதான்
வேதாந்தம்...
என்ன செயவது?
நம்
பாதை எங்கே செல்கிறது...

Unknown சொன்னது…

மதுக்கடைகள் என்பதை தாண்டி இப்போது மதுச்சாலையாக புதிய பரிமாணமே வந்து விட்டதா?
மதுச்சாலைகளின் முடிவு முட்டுச்சந்து கல்லறை தானே..கல்லூரி சாலைகள் பெருகலாம் மகிழ்ச்சியே... மதுச்சாலைகள் பெருகினால்....

Unknown சொன்னது…

//சகித்துக்கொண்டுதான் வாழவேண்டியிருக்கிறது ஆள்பவர்களையும் அல்லக்கைகளையும் சமயங்களில் என்னையும்..//
சமயங்களில் என்னையும் என்பதை இங்கே குறிப்பிட வேண்டிய காரணம் புரியவில்லையே...

ஒரு வேளை மது வாங்க போன இடத்தில் தான், கவிதை வாங்கி வந்தீர்களோ?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சகிக்கத்தான் வேண்டி இருக்கு வேற என்னத்தை சொல்ல....

சசிகுமார் சொன்னது…

கச்சிதமான வரிகள் அண்ணா

வினோ சொன்னது…

/ சகித்துக்கொண்டுதான்
வாழவேண்டியிருக்கிறது
ஆள்பவர்களையும்
அல்லக்கைகளையும்
சமயங்களில் என்னையும்.. /

அண்ணா உங்களையும் இணைச்சுட்டீன்களே ?

பொன் மாலை பொழுது சொன்னது…

// சகித்துக்கொண்டுதான்
வாழவேண்டியிருக்கிறது//


சிரித்துவிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

ஜோதிஜி சொன்னது…

படத்தில் இருப்பவருக்கு

பாரதி சொன்ன

நேர் கொண்ட பார்வை இருக்கு
கை நீட்டும் துணிச்சல் கூட இருக்கு
ஆனா நெஞ்சுல உள்ள மஞ்சாசோத்த மட்டும் காணலையோ?

vinthaimanithan சொன்னது…

சரி சரி ரொம்பத்தான் சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்க... இதோ ரெண்டு நாள்ல ஓடியாந்துடறேன்... போயிறலாம் மதுச்சாலைக்கு :)))))

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

அருமை அருமை. மிகவும் ரசித்தேன் .

vivasayee சொன்னது…

நண்பரே.வணக்கம்!
இந்த கொடுமையையும் பாருங்கள்
http://greenindiafoundation.blogspot.com/2011/01/blog-post_4480.html

பாரதசாரி சொன்னது…

மிக அற்புதம் தோழரே!ஒரு முன்னால் வாடிக்கையாளன் என்ற வகையில் என்னால் தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது.

ஹேமா சொன்னது…

அதுவும் அந்த நேரத்தில் சகிக்கிறார்களே உங்கள் ”சகி”க்கள்.பாவம் !

Philosophy Prabhakaran சொன்னது…

அடடே... என்னவொரு சமூக சிந்தனை...