9 ஜன., 2011

பால்யவாசனை...

எஸ்கேப் மாலில் 
எதிர்பாராவிதமாய் சந்தித்தேன் 
அவளை 
ஒரு பையன் ஒரு பெண் என 
அவளும் 
இரண்டு பையன்கள் 
என நானும்..
  
பிள்ளைகள் விளையாடத் துவங்கிவிட 
'இன்னும் நெனப்புல இருக்கா'வென்றாள் 
நெஞ்சம் பிளந்து நிரூபிக்க
அனுமனாகவா.. என்றேன்..
கலகலவென விழி விரிய 
சிரித்தவளை
விளையாட்டை நிறுத்திவிட்டு 
திரும்பிப்பார்த்தன குழந்தைகள்.. 

ஒரு கணம் 
இருவர் கண்களும் ஊடுருவ
பனிரெண்டாம் வகுப்பில் 
நுழையத்துவங்கினோம்..

28 கருத்துகள்:

Unknown சொன்னது…

Super Boss!

ஜோதிஜி சொன்னது…

ம்.... அப்புறம்?

dheva சொன்னது…

அது என்னனு தெரியல செந்தில்.........

பனிரெண்டாம் வகுப்பில் நுழையும் போது கவிதை உயிர் பெற்றுடுச்சு.........அப்டீன்ற மாதிரி எனக்குத் தோணுது.......!

வலிகள்......ஆனால் சுகமானதுதான்.!

Unknown சொன்னது…

நல்லா இருக்கு அண்ணே

Yaathoramani.blogspot.com சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு.
நினைப்பு சாவது கூட கடைசி நெருப்போடுதான்

வினோ சொன்னது…

மேலிருந்து ஒரு மாதிரியும், கீழிருந்து வேற ஒரு கவிதையாய் தெரிகிறது அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லா இருக்கு அண்ணே.

பா.ராஜாராம் சொன்னது…

ட்விஸ்ட்! :-)

நல்லாருக்கு செந்தில்.

க ரா சொன்னது…

நல்லாயிருக்குண்ணே :)

காமராஜ் சொன்னது…

செந்தில் நினவு சுழன்றடிக்க பார்த்துக்கொண்டு பேசாமல் கடந்து போகிற தருணங்களை விடவும்,இது கொஞ்சம் ஆறுதலானது இல்லையா ?

Unknown சொன்னது…

All silence,
அந்தாளும் silence; இந்தாளும் silence;
thala in Romance Mood, sorry feeling Mood..
Start music...
உங்குத்தமா...எங் குத்தமா...

Unknown சொன்னது…

ஆங்கில கலப்பிற்கு மன்னிக்கவும்.(கண்ணும், கண்ணும் கலக்கையில் மொழிகள் மட்டும் ஏன் தனிமையில்..)

கவி அழகன் சொன்னது…

supper

Unknown சொன்னது…

மறக்குமா மாமன் எண்ணம்- தூரத்துப்பாடலில் கமலஹாசன் கண்ணடிக்கிறார் கே.ஆர்.பி.யை பார்த்து...

Unknown சொன்னது…

//செந்தில் நினவு சுழன்றடிக்க பார்த்துக்கொண்டு பேசாமல் கடந்து போகிற தருணங்களை விடவும்,இது கொஞ்சம் ஆறுதலானது இல்லையா ?//
இது கொஞ்சம் சிக்கலானது இல்லையா ?

Unknown சொன்னது…

//எஸ்கேப் மாலில்
எதிர்பாராவிதமாய் சந்தித்தேன்//


கவிதையோடு அன்றைய இரவு முடியுமென்று எதிர்பார்த்தீர்கள் தானே...

Unknown சொன்னது…

உங்களுக்கு இன்னொரு பயோடேட்டா போடனும் போல தோணுதே....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லா இருக்கு அண்ணே.

ஈரோடு கதிர் சொன்னது…

நல்ல வாசனைதான்!

பனிரென்டில் - பால்ய வாசனையா?

கொஞ்சம் பழுத்த வாசனைன்னே நினைச்சுக்குறேன்!

தினேஷ்குமார் சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது…
உங்களுக்கு இன்னொரு பயோடேட்டா போடனும் போல தோணுதே....

கண்டிப்பா போடுங்க அண்ணன் கோபிக்க மாட்டார்

அண்ணா கவிதை சூப்பர்

பாரி தாண்டவமூர்த்தி சொன்னது…

உங்க கவித யதார்த்தமா, அருமையா இருக்குங்க சார்....

vasu balaji சொன்னது…

ரொம்பவே அழகும் வலியும்.:)

ஹேமா சொன்னது…

பன்னிரண்டாம் வகுப்பு - இரண்டு குழந்தைகளா !

PB Raj சொன்னது…

செந்தில்,
நிறைய காதல்கதை இருக்குமோ..
'ழ'பதிப்பகத்துக்கு கதைக்கு குறைவு இல்லை...

Best wishes....

Unknown சொன்னது…

nice..

என்றும் காதல் சுகமானதே...

Unknown சொன்னது…

அது என்ன எஸ்கேப் மால்?
கவிதையின் களத்திற்கு அதற்கும் ஏதேனும் உள்ளர்த்தம் இருக்கிறதா?

aavee சொன்னது…

நன்றாக இருந்தது. அதென்ன எஸ்கேப் மால்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ம்ம்ம்... என்னத்த சொல்ல.....?