22 ஜன., 2011

கருப்பன் உத்தரவு ...



வலக்கை அரிவாளும், 
இடக்கை பாதி உடைந்தும் 
பரி மீதேறி,
பைரவர் துணையோடு 
ஊர்க்காப்பான் கருப்பன்..

பூட்டாத உண்டியலும் 
உடைந்த மண்குதிரைகளும் 
உயர்ந்த கான்க்ரீட் குதிரைகளும் 
காலி குவாட்டர் பாட்டில்களும் 
மீதி சுருட்டுக்களோடும் 
வயல்வெளியின் நடுவே 
ஒற்றைப்பனைமர
காக்கைகளின் வசிப்பிடத்தின் கீழே 
கருப்பன் சந்நிதி..

சாமியாடி குறி சொல்லும் 
சண்முகம் சித்தப்பா குரலில் 
தலைகட்டுக்கு ரெண்டென 
கருப்பு  சாமியின் கட்டளைக்காய் 
வருஷம் தவறாமல் கிடாவெட்டு..

முதல் மொட்டை,
காதுகுத்து 
பிணி நீக்கும் 
வரட்டி சாம்பலில் 
கருப்பன்  மகிமை..

பங்காளியை போட்டுத்தள்ளி 
சிறை சென்ற சண்முகம் சித்தப்பா 
இப்போதும் சொல்கிறார், 
எல்லாம் கருப்பன் உத்தரவு..

36 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

ஒரு கவிதையை படித்து முடித்து உடம்பு சிலிர்த்து போவது இதுவே முதல் முறை. நன்றி செந்தில்.

ரதி ஹேமாவுக்கு இதை சமர்ப்பிக்கின்றேன்.

dheva சொன்னது…

" கருப்பன் உத்தரவு...."

இந்த வார்தைக்குப் பின்னால இருக்கும் ஆழமான உண்மைகளை எடுத்து பத்து பாகம் எழுதலாமே செந்தில்...

அடர்த்தியான கவிதை செந்தில்....!

டக்கால்டி சொன்னது…

அருமையான வரிகள்...இறுதி வரிகளில் இருக்குங்க இந்த கவிதையின் ஜீவன்.

Unknown சொன்னது…

என்னச் சொல்ல மண்ணு வளம்,... .

iniyavan சொன்னது…

அருமையா இருக்கு தலைவரே!

இறுதி வரிகள் சூப்பர்.

Unknown சொன்னது…

கிராமமென்ன நகரமென்ன எங்கெங்கும் விரவி கிடக்கிறது.
கருப்பன் மட்டுமல்ல... இன்னும் நிறைய மிச்சமிருக்கிறது..., சொல்லுவதற்கு உத்தரவு கிடைக்க வேண்டுமோ?

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிதையை படித்து முடித்ததும் உடம்பு சிலிர்த்தது நிஜமே..

சார் நான் இருக்கேன்..

http://sakthistudycentre.blogspot.com/

Unknown சொன்னது…

இதன் நகரத்து வேர்சன் கிடைக்குமா?

Unknown சொன்னது…

//இதன் நகரத்து வேர்சன் கிடைக்குமா?//

எழுதிட்டாப் போச்சு ...

மாணவன் சொன்னது…

நல்லாருக்குண்ணே கவிதையின் கடைசி வரிதான் டச்சிங்....

Unknown சொன்னது…

நல்லா இருக்குங்க...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பங்காளியை போட்டுத்தள்ளி
சிறை சென்ற சண்முகம் சித்தப்பா
இப்போதும் சொல்கிறார்,
எல்லாம் கருப்பன் உத்தரவு..///


ஜெயில்ல தின்ன களியும் கருப்பன் உத்தரவு....

க ரா சொன்னது…

நல்லா இருக்குண்ணே :)

தினேஷ்குமார் சொன்னது…

கருப்பன் உத்தரவு காத்திருக்கும் தருணங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான வரிகள்

Jana சொன்னது…

அருமையான வரிகள்.. வார்த்தைகளிலேயே கறுப்பனின் கம்பீரம்!!
அதுசரி..இந்த பதிவுகூட கறுப்பன் உத்தரவுபடிதானுங்களா?

பெயரில்லா சொன்னது…

>>> ஆன்மீகம் பல சமயம் தவறு செய்பவர்களின் கேடயமாகவே பயன்படுகிறது.

RVS சொன்னது…

செந்தில்!!! கருப்பன் அட்டகாசம். ;-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உத்தரவு......!

தமிழ் உதயம் சொன்னது…

எங்க ஊர் கருப்பனசாமியை பார்த்து வந்தது போல் உள்ளது.

Rathnavel Natarajan சொன்னது…

Arumaiyana Kavithai.
Vashththukkal.

Rathnavel Natarajan சொன்னது…

Arumaiyana Kavithai.
Vazhththukkal.

Rathnavel Natarajan சொன்னது…

Arumaiyana Kavithai.
Vazhththukkal.

Rathnavel Natarajan சொன்னது…

Arumaiyana Kavithai.
Vazhththukkal.

Unknown சொன்னது…

கருப்பன் உத்தரவு...

மதுரை சரவணன் சொன்னது…

கருப்பன் உத்தரவு வாழ்த்துக்கள் சாமியோ...!

Bibiliobibuli சொன்னது…

உடம்பில் உயிர் எங்கிருக்கிறது என்கிற விஞ்ஞானத்தையும், உலகில் கடவுள் எங்கிருக்கிறார் என்கிற மெய்ஞானத்தையும் தெளிவாய் விளக்கிவிட்டால் இங்கே பலரின் பிழைப்பில் மண் விழுந்துவிடும்.

அஞ்ஞானத்தில் மூழ்கி கிடப்பவர்களை ஆயிரம் பெரியார்கள் மறு பிறப்பெடுத்தாலும் திருத்தவே முடியாது.

Chitra சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//இதன் நகரத்து வேர்சன் கிடைக்குமா?//

எழுதிட்டாப் போச்சு ...


....கண்டிப்பாக எழுதுங்க.

முனியாண்டி பெ. சொன்னது…

நல்லதொரு கவிதை... என் கருப்பு கோயிலுக்கு போனது போல் இருந்தது.

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

nalla irukku sir

பொன் மாலை பொழுது சொன்னது…

//பங்காளியை போட்டுத்தள்ளி
சிறை சென்ற சண்முகம் சித்தப்பா
இப்போதும் சொல்கிறார்,
எல்லாம் கருப்பன் உத்தரவு..///


// ஜெயில்ல தின்ன களியும் கருப்பன் உத்தரவு....//

நாஞ்சில் மனோ

சிரித்து மாளவில்லை.

கவிதையும் அருகில் உள்ள கருப்பு வெள்ளை படமும் பிரமாதம். நல்ல பட செலெக்ஷன் தான் செந்தில்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//பங்காளியை போட்டுத்தள்ளி
சிறை சென்ற சண்முகம் சித்தப்பா
இப்போதும் சொல்கிறார்,
எல்லாம் கருப்பன் உத்தரவு..///


// ஜெயில்ல தின்ன களியும் கருப்பன் உத்தரவு....//

நாஞ்சில் மனோ

சிரித்து மாளவில்லை.

கவிதையும் அருகில் உள்ள கருப்பு வெள்ளை படமும் பிரமாதம். நல்ல பட செலெக்ஷன் தான் செந்தில்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருப்பனின் கம்பீரமாய் வரிகள்...
எல்லாம் கருப்பனின் செயல் இந்தக் கவிதை உள்பட.

Thirumalai Kandasami சொன்னது…

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.

http://enathupayanangal.blogspot.com

கோநா சொன்னது…

செந்தில் முடிவின் அடர்த்தி அழுத்துகிறது பாரமாய், ஒருவேளை இதுவும் கருப்பன் உத்தரவோ?

Kavi சொன்னது…

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி