26 பிப்., 2011

பதிவர் சந்திப்பு... 26/02/2011


அன்பான பதிவர் பெருமக்களே.. நாமெல்லாம் ஆங்காங்கே புத்தக கண்காட்சியிலும், புத்தக வெளியீட்டிலுமாய் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் சந்தித்துக் கொண்டாலும், எல்லோரும் ஒட்டு மொத்தமாய் சந்தித்து பல காலமாகிவிட்டது என்பதால், ஏன் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தக் கூடாது? என்று பல புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். மேற்ச்சொன்ன காரணத்தினாலும், சிங்கையிலிருந்து பதிவர் ஜோசப் பால்ராஜ் அவர்கள் வந்திருப்பதாலும், இவ்வளவு காலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த நமது  சந்திப்பு இன்று சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இன்று சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில் நம் பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. நம் சந்திப்பினூடே நம்முடன் வந்திருந்து கலந்துரையாட தென்மேற்கு பருவக்காற்று இயக்குனர் திரு. சீனு ராமசாமி வருகிறார். புதிய, பழைய,வாசக பெருமக்கள் அனைவரும் வந்திருந்து சந்திப்பை சிறப்பிக்க வேண்டுமாய் எல்லா பதிவர்கள் சார்பாய் வேண்டுகிறோம்.

இந்தப் பதிவர் சந்திப்பில் ’சென்னை வலைப்பதிவாளர் குழுமம்’ துவங்குவது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற இருப்பதால் சென்னைப் பதிவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
முதல் மாடி, கே.கே.நகர் (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நேரம் : மாலை 6 மணி
தேதி   : 26/02/11
கிழமை: சனிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி. 

பதிவர்கள் அனைவரும் தங்களது பதிவில் இந்நிகழ்வை தெரிவித்து ஒரு பதிவிட்டு சக பதிவுலக அன்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அனைவரும் வருக..வருக.. வருக..

நன்றி.. 

20 கருத்துகள்:

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் தலைவரே

THE IRON MAN! சொன்னது…

NILAVU....I know who are you.

காமராஜ் சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்.
இருக்கிற மாச்சர்யங்களைக்கலைந்து
பொதுவெளியில் பறிமாறட்டும் அன்பும் நட்பும்,கொஞ்சம்நாடும்,ரொம்ப இலக்கியமும்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள்..

சசிகுமார் சொன்னது…

என்ன சார் இப்படி தீடீர்னு சொல்லிட்டீங்க எனக்கும் அனைவரையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமா இருக்கு சார் நேரம் தான் கிடைக்கவில்லை.

VELU.G சொன்னது…

சென்னை வலைப்பதிவாளர் குழுமம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

r.v.saravanan சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நடத்துங்க மக்கா நடத்துங்க....

settaikkaran சொன்னது…

சந்திப்பு இனிதே நிகழ்ந்தேற எனது வாழ்த்துகள்! :-)

ஆயிஷா சொன்னது…

வாழ்த்துக்கள்.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

அண்ணே ... சந்திப்பு குறிச்சு ரொம்ப சந்தோசம்... நைட்டு கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு போயிடுங்க ... அக்கா திட்டும் ...

Jana சொன்னது…

வாழ்த்துக்கள்
நானும் வரவா???

செ.சரவணக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்.

Unknown சொன்னது…

சந்திப்பின் விவரங்களை விரைவில் வெளியிடவும்..எங்களை போன்றவர்களுக்கு அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

jothi சொன்னது…

ப‌திவ‌ர் கூட்ட‌ம் பெரு வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

Chittoor Murugesan சொன்னது…

அண்ணா,
ஆனந்த விகடன்ல "நம்மை" பத்தி எழுதின கட்டுரை பத்தி பேசிக்கிட்டிங்களாண்ணா?

ராஜ நடராஜன் சொன்னது…

வலைபதிவர் குழுமம் முன்னேறி செல்ல வேண்டிய ஒன்று.முன்பே உண்மைத்தமிழன் அதற்கு பிள்ளையார் சுழி போடப்பார்த்தார்.

தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.

பாட்டு ரசிகன் சொன்னது…

அடுத்த முறை கண்டிப்பாக என்னையும் அழையுங்கள்..
இந்த தகவலை இன்று தான் பார்த்தேன்..

பாட்டு ரசிகன் சொன்னது…

/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

Unknown சொன்னது…

சந்திப்பில் நிகழ்ந்தவை பற்றி செய்திகள் கிடைக்குமா?