28 பிப்., 2011

போராடு .. பொங்கியெழு ... புரொபைலை ஒளிச்சுவை ....


உள்நாக்கும்
உலர்ந்துபோக
உக்கிரமாய் வெயிலெரிக்க...
கோடை விடுமுறை
மின்சாரத்துக்கும் சேத்துதானாம்
கிராமங்களில்..

தேர்தல் திருவிழா
உடுக்கு ஒலியெழுப்ப
இடுப்புவேட்டி அடகுவெச்சி 
சீட்டுக்கு தீபாராதனை...
வெதவெதமா துண்டுபோட்டு
கரைவேட்டி சாமியாடி 
"போடுங்கம்மா ஓட்டு
ரெண்டாயிரத்தப் பாத்து..."
மந்திர சத்தத்துல
மயங்கி நிக்கும் ஆடுங்க..

ஐயாவுக்கோ,
அம்மாவுக்கோ, 
அவங்க குடும்பம் முழுசுக்குமோ 
இன்னொருக்கா எடங் கெடைக்கும் 
அரசாங்கக் கட்டிலுல..

உனக்கென்ன கெட்டுப்போச்சு?
பதிவெழுத குப்பை கூளம்
பல ஆயிரம் 
பாக்கி இருக்கு
ஹிட்டடிச்சா போதுமய்யா 
எவங்கெட்டா என்ன போச்சு!..

இன்னொரு சாகித்யம் 
பதிவுலக சாமர்த்தியம் ..

ஒளிஞ்சுக்கோ!
மறைஞ்சுக்கோ!!
சேற்றை வாரி எறிஞ்சுக்கோ!!!..

43 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

nice.,

சக்தி கல்வி மையம் சொன்னது…

பாராட்டுக்கள்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

மாலை வணக்கம்..

சக்தி கல்வி மையம் சொன்னது…

ரெண்டாயிரத்தப் பாத்து ---- நீங்களே முடிவெடுத்தா எப்படி...

சக்தி கல்வி மையம் சொன்னது…

உனக்கென்ன கெட்டுப்போச்சு?
பதிவெழுத குப்பை கூளம்
பல ஆயிரம்
பாக்கி இருக்கு
ஹிட்டடிச்சா போதுமய்யா
எவங்கெட்டா என்ன போச்சு!.. ////
பதிவுலகம் மொத்தத்தையும் இப்படி சொல்லரது நல்லயில்லை சார்...
நீங்கள் சொல்லுகிறபடி ஒரு சிலர் இருக்கலாம் ... இது நம் தலையிலே மண் அள்ளி கொட்டுவது போல் இருக்கு...

dheva சொன்னது…

//ஒளிஞ்சுக்கோ!
மறைஞ்சுக்கோ!!
சேற்றை வாரி எறிஞ்சுக்கோ!!!//

அசரிரீ மாதிரி ஒலிச்சுட்டே இருக்கு காதுல....!

vinthaimanithan சொன்னது…

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்,

அன்லிமிட்டெட் இண்டர்நெட் கனெக்க்ஷனும், கம்ப்யூட்டரும் இருந்தால் 'பொங்கலாம்' என்று ப்ரொஃபைல் இல்லாமலும், முகம்காட்டும் ஆண்மையில்லாமலும், வெறுமனே நானும் 'பொங்கி'தான் என வீராப்பு பேசும் வெத்துவேட்டுக்களும், சும்மானாச்சுக்குத் தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் நிற்க வேண்டும் என 'பொங்கி'ப் பதிவெழுதி, பொட்டியை அணைத்தவுடன், களப்பணியாவது கருமாந்திரமாவது என ஓடி ஒளியும் ப்ரொஃபைல் இருக்கும் புண்ணாக்குகளும்....

அண்ணன் கவுஜயை ரவுண்டு கட்டி கும்முமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...

(அடுத்தடுத்து ரவுண்டு கட்டும் கவுஜைகளையும் அண்ணன் எழுத்தயாராக இருக்கிறார் என்றும் செய்தி வட்டாரங்களின்மூலம் அறியப்படுகிறது!)

பொங்கிக்கோ... பொங்கிக்கோ!
போனா வராது! பொழுதுபட்டா கெடைக்காது!

Unknown சொன்னது…

கொடும கொடுமன்னு போனா அங்கே ரெண்டு கொடுமே..........ஆடுசான் ஹி ஹி!

vinthaimanithan சொன்னது…

அருமை, சிறப்பு, சூப்பர், :), நல்லாருக்கு வகையறா கமெண்டுகளைக் கூச்சநாச்சமின்றிப் போட்டுச்செல்லும் டெம்ப்ளேட்டர்களுக்கும், அடுத்தவன் பதிவில் தன் பதிவுக்கு லிங்க் கொடுக்கும் 'வெளம்பர மச்சான்ஸ்'க்கும், மொய் கொடுத்து மொய் வாங்கும் 'கல்யாண, காதுகுத்து, கருமாதி ஃபீவர்' பிடித்தவர்களுக்கும்....

அடுத்த ரவுண்டுக்கு கேஆர்பியார் ரெடியாகிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் அறிந்து உஷாராக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


"உட்றா உட்றா சூனா பானா! இதையெல்லாம் பாத்தா தொழில் செய்ய முடியுமா!"

க ரா சொன்னது…

anna unga kita neraya pesa vendiiruku .. time illama poche (:

பாட்டு ரசிகன் சொன்னது…

"போடுங்கம்மா ஓட்டு
ரெண்டாயிரத்தப் பாத்து..."

இன்றை சமுக அவலம் அருமை..
உங்கள் கோவம் கவிதைகளில் தெரிக்கிறது..

பாட்டு ரசிகன் சொன்னது…

///எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

Unknown சொன்னது…

//"போடுங்கம்மா ஓட்டு
ரெண்டாயிரத்தப் பாத்து..."//

வாக்களிக்கும் இயந்திரமாக கூட இருந்து விடலாம் ஆனால் பணத்திற்கு வாக்களிக்கும் இயந்திரமாக (மனிதனாக) இருந்து விடக்கூடாது.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த சமூக அவலத்தை கவிதைகளில் வெளிக்காட்டி சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்..

Unknown சொன்னது…

கவிதையை விட, கவிதைக்கு கோனார் உரை எழுதிய விந்தை மனிதனின் விளக்கம் "நச்" # கூட்டணி.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த பதிவுலம் அதிக பின்னுட்டங்கள் பெறவும்.. தமிழ்மணம், இண்டிலி போன்றவற்றில் பிரபல படுத்தவும் மட்டுமே போராடிக் கொண்டு இருக்கிறது..

சினிமாவை பற்றி போட்டால் 1000 2000, பேர் படிக்கிறார்கள் சமூக விழிப்புனர்வு.. அவலம்.. பிரச்சனை என்று பதிவு போட்டால் 50 தாண்ட மாட்டேன் என்கிறது..

இனி தங்களைப் போல் அதிகபட்ச பதிவுகள் தரமானதாக, சமூகத்திற்கு தேவைனயாதை மட்டுமே தர முயற்சித்து கொண்டிருக்கிறேன்..

ஆனால் பதிவுலம் சமூக பார்வையோடு திரும்ப வேண்டும் ..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சனிக்கிழமை நட ந்த பதிவர் கூட்டம் பற்றி எனக்கு தெரியாது தெரிந்திருந்தால் கண்டிப்பாக கலந்திருப்பேன்..
அடுத்த முறை கண்டிப்பாக சந்திப்போம்..

Jana சொன்னது…

Shabaash...

Unknown சொன்னது…

மற்றவர்கள் மாறவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் # எல்லோரும் என்பதில் நானும் சேர்த்தி..

மாணவன் சொன்னது…

//ஹிட்டடிச்சா போதுமய்யா எவங்கெட்டா என்ன போச்சு!..
இன்னொரு சாகித்யம் பதிவுலக சாமர்த்தியம் ..
ஒளிஞ்சுக்கோ!மறைஞ்சுக்கோ!!சேற்றை வாரி எறிஞ்சுக்கோ!!!..///

நல்லா சொன்னீங்க... சாட்டையடி வரிகள்...

settaikkaran சொன்னது…

தூளுங்கோ....தூள்! :-)

Unknown சொன்னது…

சில சமயங்களில் எங்களைப்போன்ற புதிய பதிவர்கள் தான் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்று நினைத்திருந்தேன். பிரபல பதிவர்களுக்கும் அதே கதி தானா?

அம்பிகா சொன்னது…

\\"போடுங்கம்மா ஓட்டு
ரெண்டாயிரத்தப் பாத்து\\
யதார்த்தம்.

செ.சரவணக்குமார் சொன்னது…

ஆகா.....

ஹேமா சொன்னது…

செந்தில்...எப்பவும் சும்மா திட்டுறீங்க கோபப்படறீங்க !

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

பதிவுலகம் என்பது ஒரு பூ மாதிரி. அது வாசம் தரும். மோசம் செய்யாது. நீர் ஊற்றி வளர்ப்போம். சமுதாயம், கலாசாரம் காப்போம். என் போன்ற பெண்கள் தங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா?

vinthaimanithan சொன்னது…

அய்யோ பிரியா, இம்புட்டு அப்பாவியாவா இருப்பீக! தமிழ்ப் பதிவுலகம் பூவுன்னு சொல்லிப்புட்டியளே! இது சாதாரண ஊருல்லப்பா... இங்க கொழாயத் தொறந்தா தண்ணி வராது, ரத்தந்தான் வரும். ர்ர்ர்ர்ரத்தபூமி! :)))

சரி பரவால்ல! ஆசப்பட்டுட்டீய! சட்டுபுட்டுனு ஒரு ப்ளாக்க ஆரமிச்சி தமிழ்மணப்பட்டைய போட்டு கெளப்புங்க கச்சேரிய. தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும் :))))

a சொன்னது…

அட்றா சக்க....

sathishsangkavi.blogspot.com சொன்னது…

கலக்குங்க...

VELU.G சொன்னது…

போட்டு தள்ளுங்க பாஸ்

Jackiesekar சொன்னது…

அருமை, சிறப்பு, சூப்பர், :), நல்லாருக்கு வகையறா கமெண்டுகளைக் கூச்சநாச்சமின்றிப் போட்டுச்செல்லும் டெம்ப்ளேட்டர்களுக்கும், அடுத்தவன் பதிவில் தன் பதிவுக்கு லிங்க் கொடுக்கும் 'வெளம்பர மச்சான்ஸ்'க்கும், மொய் கொடுத்து மொய் வாங்கும் 'கல்யாண, காதுகுத்து, கருமாதி ஃபீவர்' பிடித்தவர்களுக்கும்....

அடுத்த ரவுண்டுக்கு கேஆர்பியார் ரெடியாகிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் அறிந்து உஷாராக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


"உட்றா உட்றா சூனா பானா! இதையெல்லாம் பாத்தா தொழில் செய்ய முடியுமா!"“‘///

அப்படிய வழி மொழிகின்றேன்..

Jackiesekar சொன்னது…

அன்லிமிட்டெட் இண்டர்நெட் கனெக்க்ஷனும், கம்ப்யூட்டரும் இருந்தால் 'பொங்கலாம்' என்று ப்ரொஃபைல் இல்லாமலும், முகம்காட்டும் ஆண்மையில்லாமலும், வெறுமனே நானும் 'பொங்கி'தான் என வீராப்பு பேசும் வெத்துவேட்டுக்களும், சும்மானாச்சுக்குத் தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் நிற்க வேண்டும் என 'பொங்கி'ப் பதிவெழுதி, பொட்டியை அணைத்தவுடன், களப்பணியாவது கருமாந்திரமாவது என ஓடி ஒளியும் ப்ரொஃபைல் இருக்கும் புண்ணாக்குகளும்....///

ஸ்டெயிட்டா சிக்சர் அடிக்கறது என்பது இதுதான்...

Paleo God சொன்னது…

அருமை.
சூப்பர்.
நல்லாருக்கு.

ஒரு விளம்பரம்:
அல்வாவோட ராவுகள்!!


"உட்றா உட்றா சூனா பானா! இதையெல்லாம் பாத்தா தொழில் செய்ய முடியுமா!"

:))

Paleo God சொன்னது…

for follow up!! :))

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இத இவரு சொல்றாராக்கும்.. பஸ் ல வந்து வம்பு சண்டையை வளர்த்து விட்டு ஜால்ரா பேசுற ஆளு..இந்த கேஆர்பி செந்தில்.. :))))))

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இத இவரு சொல்றாராக்கும்.. Priya Siva பஸ் ல வந்து வம்பு சண்டையை வளர்த்து விட்டு ஜால்ரா பேசுற ஆளு..இந்த கேஆர்பி செந்தில்.. :))))))

எங்கடா வம்பு நடக்கும் ஜால்ரா தட்டலாம் னு அலையுற ஆள்களில் ஒருவர் இவர்.. .


krpsenthil kumar - ஸ்டார்ட் மியூசிக்..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

f

மாரல் பொலிஸ்! சொன்னது…

@பயணமும் எண்ணங்களும்

//f//

i too...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

f நான் எல்லா பதிவிலேயும் போடுவது..

For Follow up..

மாரல் பொலிஸ்! சொன்னது…

//f நான் எல்லா பதிவிலேயும் போடுவது.. //

எல்லா எடத்துலயுமேவா?! :)))

அப்டீன்னா சரிங்க!

நீங்க நடத்துங்க :))))

Unknown சொன்னது…

தலைப்பு சூப்பர்.

மாயாவி சொன்னது…

அண்ணா,

சீக்கரம் முடிச்சுக்கோங்க ப்ளீஸ்.
உங்கள் அனைவரிடமும் எதிர்பார்ப்பது இது இல்லை. உங்கள் தனிப்பட்ட திறமையால் விழையும் கட்டுரைகளே..

Enathu Ennangal சொன்னது…

Ithuku Peru kavithaiya....Enna Koduma Senthil Ithu?...
//
அன்லிமிட்டெட் இண்டர்நெட் கனெக்க்ஷனும், கம்ப்யூட்டரும் இருந்தால் 'பொங்கலாம்' என்று ப்ரொஃபைல் இல்லாமலும், முகம்காட்டும் ஆண்மையில்லாமலும், வெறுமனே நானும் 'பொங்கி'தான் என வீராப்பு பேசும் வெத்துவேட்டுக்களும், சும்மானாச்சுக்குத் தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் நிற்க வேண்டும் //

Photo, phone no, address, ration card , pal card ithu ellam koduthathan neenga aambalanu othukuvingala...Mudiyalada saamy..